தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஆகஸ்ட் 07, 2016

புருஷனுக்கேத்த புண்ணியவதி


வாங்க மயில்வாகனம் சாப்புடுற நேரத்துல வந்து இருக்கீங்க.. உட்காருங்க இருந்து சாப்பிட்டு போகலாம்.
இன்னைக்கு என்ன மயில்சாமி வீட்ல விஷேசமா ?

ஒண்ணுமில்லை மார்கெட்டுக்கு போனேன் மீனு சல்லுசா கிடைச்சுச்சு வாங்கியாந்தேன்
நல்லது சந்தோஷம்.

ஆமா நீங்க மீன் சாப்பிடுவீங்கள்ல... ?
கடல்ல போற கப்பல், வானத்துல பறக்கிற ஃபிளைட் இது ரெண்டைத் தவிர மற்றது எல்லாத்தையும் சாப்பிடுவேன் ஹாஹாஹா....

அப்படினாக்கா, ரோட்டுல போற ட்ராக்டரை சாப்பிடுவீங்களா ?
என்ன நக்கலா ?

நீங்கதானே சொன்னீங்க, மற்றது எல்லாம் சாப்பிடுவேன்னு அதுவும் வாகனம்தானே...
ஏய்யா அதுக்காக ஒரு வாகனம் அதுவும் இரும்பு யாராவது சாப்பிட முடியுமா ?

ஃபிளைட்டும், கப்பலும் இரும்புதானே அதை மட்டும் சாப்பிட மாட்டேன்னு சொல்லவும் மற்றது சாப்பிடுவீங்களோன்னு... நினைச்சேன்.
அதுக்காக இப்படியா பறக்குற ஃபிளைட்டும், அதுக்குள்ளே இருக்கிற மனுஷனைத் தவிர மற்ற பறவைகளை சாப்பிடுவேன் போதுமா ?

அப்படினாக்கா... கழுகை சாப்பிடுவீங்களா ?
என்னையா கழுகை மனுஷன் சாப்பிடுவானா ?

அதுவும் பறக்குறதுதானே... அதனால கேட்டேன் தப்பா நினைக்காதீங்க...
சரியாப்போச்சு இதையும் சொல்லிடுறேன் வேறேதும் கேட்டுடாம கடல்ல போற கப்பல், தோணி, படகு, ஃபோட்டு, வல்லம் இதுல போற மனுஷங்களைத் தவிர மற்றது எல்லாம் சாப்பிடுவேன் போதுமா ?

அப்படினாக்கா... நீர்மூழ்கி கப்பல் ?
யோவ் அதுவும் அதோட சேர்ந்ததுதான்யா, சொல்ல மறந்துட்டேன் அதுக்காக இப்படியா ? கடல்ல உள்ள மற்ற உயிரினங்கள் அனைத்தும் சாப்பிடுவேன்.

அப்படினாக்கா... திமிங்கலத்தை சாப்பிடுவீங்களா ?
? ? ?

சொல்லுங்க சாப்பிடணும்ல நேரமாச்சு...
ஏங்க அண்ணன் ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்பத்தான் வீட்டுக்கு வந்துருக்காங்க... அவருக்கிட்டே போயி ஆயிரம் கேள்வி கேட்டுக்கிட்டு அண்ணன் கடல் பன்றியைக்கூட சாப்பிடுவாங்க, நீங்க தெருக் குழாயடியில போயி கை கழுவிட்டு வாங்கண்ணே... தங்கச்சி சோறு அலம்பிட்டு வர்றேன்...

என்று உள்ளே போனாள் வள்ளிமயில, வெளியே வந்த மயில்வாகனம் உங்க மீன் சோறே வேண்டாமடா சாமி என்று நினைத்துக் கொண்டு தனது T.V.S வாகனத்தை கிளப்பிக் கொண்டு ஃபிளைட் வேகத்தில் பறந்தார் தனது வீட்டை நோக்கி...

7 ½ பதிவுக்கு வந்து தூண்டிலிட்ட நண்பருக்கு நன்றி


சாம்பசிவம்-
அதுக்காக வீட்டுக்கு வந்த விருந்தாளியை தெருக்குழாயில போயி கை கழுவிட்டு வரச்சொல்றது எந்த ஊரு பழக்கமய்யா...

Chivas Regal சிவசம்போ- 
அப்பத்தானே அவன் அப்படியே... போவான் புருஷனுக்கேத்த புண்ணியவதி.

காணொளி

சனி, ஆகஸ்ட் 06, 2016

கோவைக்காரர்கள், கோபக்காரர்களா ?


கோயமுத்தூர் இந்தியாவின் மான்செஸ்டர் என்று பெயர் பெற்ற நகரம் இங்கு தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது குறைந்து வருகின்றது என்றால் இங்குள்ளவர்கள் ஊரை விட்டு வெளியேறி விடுகின்றார்கள் என்று அர்த்தமல்ல ! வேறு எப்படி ? மற்றொரு பிரிவினர் கூடிக்கொண்டே வந்து தமிழர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றனர் என்று பொருள் கொள்ளவும் அந்தப்பிரிவினர் யார் ?

மலையாளிகள் ஆம் மலையாளிகளே கோவையில் எங்கு நோக்கினும் வியாபார ஸ்தலங்களின் பெயர்ப் பலகைகளில் மலையாள எழுத்துகள் ஓணம் அரசு விடுமுறை இந்த செயல்பாடுகள் எப்படி நடக்கின்றது ? தமிழன் உறங்குவதால் ஆம் நண்பர்களே... ஓணத்துக்கு அரசு விடுமுறை கொடுக்கும் அளவுக்கு பெரிய இடங்களில் சென்று பேசி காரியம் சாதிக்கும் அளவுக்கு அவர்களது வளர்ச்சி இருக்கின்றது இதனாலென்ன ? நமது குழந்தைகளுக்கும் சேர்த்துதானே விடுமுறை கிடைக்கின்றது என்று சொல்லலாம் அவர்கள் அறிவு நுணுக்கமானவர்கள், தமிழர்கள் விட்டுக் கொடுப்போம் என்ற பெயரில் ஏமாந்து விட்டு நிற்ப்போம் இன்றைக்கும் கோவையில் பல நிறுவனங்களில் உரிமையாளர்கள் மலையாளிகள்தான் அவர்கள் கேரளாவில் தொழில் தொடங்காமல் கோவையை தேர்ந்தெடுக்க காரணம் என்ன ? கோவை ஊட்டிக்கு அருகில் இருப்பதால் கேரளத்தைப் போன்று இல்லாவிட்டாலும் ஓரளவு குளிச்சியான நகரம் கேரளத்துக்கும் அருகில் உள்ளது ‘’பின்நாளில்’’ உதவும் கேரளாவில் எதற்கெடுத்தாலும் தொழிலாளர்கள் கொடி பிடிப்பார்கள் தமிழ்நாட்டில் வேலை செய்பவர்கள் வேலை நிறுத்தத்தில் அடிக்கடி ஈடுபடமாட்டார்கள் கோவையில் மலையாளப்படங்கள் வெளியிடும் அளவுக்கு மக்கள் தொகை பெறுகி விட்டது என்றால் இது அபார வளர்ச்சி இல்லையா ? 

இதையெல்லாம் சிந்திக்கும் அளவுக்கு தமிழர்களான நமக்கு பக்குவம் இல்லை என்பதே உண்மை காரணம் ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை என்ற சித்தாந்தம் கேரளாவில் தமிழன் முதல்வராக வேண்டாம் ஒரு வார்டு கவுன்சிலராக முடியுமா ? மலையாள திரைப்படங்களில் தமிழன் நாயகனாக வேண்டாம் காமெடியனாககூட முடியாது ஆனால் தமிழ் நாட்டில் வந்தேறிகளை எல்லாம் வாழவிட்டு வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று பெருமை பேசிக்கொள்கிறோம்.

ஒருமுறை 2005 என்று நினைவு கோவை வ.உ.சி பூங்காவில் எனது குழந்தைகளுடன் உட்கார்ந்திருந்தேன் சிறிது நேரம் நான் தமிழ்நாட்டில் இருப்பதுபோல் தோன்றவில்லை அபுதாபியில் ஏதோவொரு பார்க்கில் இருப்பது போன்ற உணர்வு காரணம் பார்க்கின் பராமரிப்பு அல்ல ! எங்கும் மலையாள குடும்பங்கள், மலையாள பேச்சொலிகள் இவர்கள் எவ்வளவு விரைவாக அஸ்திவாரம் இடுகின்றார்கள் நான் ஏற்கனவே சொன்னதுபோல நுண்ணிய அறிவாற்றல் உள்ளவர்கள், யாரையும் எப்படியும் ஏமாற்றி விடுவார்கள், எங்கும் நுழைந்து காரியம் சாதித்து விடுவார்கள், மென்மையானவர்கள், ஆனால் டேஞ்சரானவர்கள், தமிழர்களைப்போல சட்டென கோபப்படமாட்டார்கள், அருவாளை எடுத்து பழக்கமே இல்லாதவர்கள் அதனால்தான் உலகில் எங்கும் காரியத்தை சாதிக்கின்றார்கள் தன்னை முன்நிலைப படுத்திக்கொண்டே இருப்பார்கள் இங்கு யூ.ஏ.ஈ. நாட்டில்கூட மிகப்பெரிய தொழில் அதிபர்கள் தமிழர்கள்தான் ஆனால், முன்னிலையில் அறியப்படுபவர்கள் மலையாளிகளே காரணமென்ன ? தமிழர்கள் தான் உண்டு தன் தொழில் உண்டு என்ற குறுகிய எண்ணப்பாடுகள் மலையாளிகள் எங்கும் நமது மலையாளிகள் இருக்கவேண்டும் என்ற கொள்கையாளர்கள் இதற்கு அடிப்படை காரணம் தமிழன் தான் பேசுவது தமிழன் என்று அறிந்தும் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு இருப்பான் மலையாளி அப்படியல்ல அந்த இடத்தில் எத்தனை நாட்டு மனிதர்கள் இருந்தாலும் மலையாளியெனில் பேசுவது மலையாளமே இவர்கள் தமிழர்களைப்போல வாழ்க மலையாளம் என்ற வெட்டிக்கோஷம் இடுவதில்லை ஆனால் மலையாளத்தை வாழ வைத்துக்கொண்டு இருப்பார்கள் எங்கும், எப்பொழுதும்.

ஒருமுறை கோவை விமானநிலையம் அருகில் ஒரு உணவகத்துக்கு காலை சிற்றுண்டிக்காக சென்றிருந்தேன் உள்ளே முதலாளி முதல் தொழிலாளி வரை அனைவரும் மலையாளிகளே... என்னிடம் தமிழிலும், அவர்களுக்குள் மலையாளமும் பேசினார்கள் நான் மலையாளத்தில் பேசினேன் அவர்களுக்குள் தயக்கம் ஒருவேளை எனது மீசையும் தொப்பியும் அவர்களுக்கு ஐயத்தை உண்டு பண்ணி இருக்கலாம் உணவகத்தின் பெயர்ப் பலகையில் எழுதி இருந்தது முதலில் மலையாளமும், அடுத்து தமிழும் கொஞ்சம் சிந்திக்க வேண்டிய கட்டம் தமிழன் அன்றே சிந்தித்து இருந்தால் ? எம்ஜியார் (மலையாளி) நுழைந்திருக்க முடியாது, ஜானகியம்மாள் (மலையாளி) நுழைந்திருக்க முடியாது, அதன் வழியாய் ஜெயலலிதா (கன்னடம்) நுழைந்திருக்க முடியாது இன்னும் எவ்வளவோ தமிழர் அல்லாதவர்களும் நாற்காலி கனவுகள் காணவும் முடியாது ஓ. பன்னீர் செல்வம் (தமிழன்) ஒருவகையில் மட்டும் நான் பெருமைப்படுகிறேன்.

சரி அது கிடக்கட்டும் பலகையில் எழுதியிருந்த வாசகம் என்ன தெரியுமா ? ‘’சுவையான தஞ்சாவூர் தம் பிரியாணி கிடைக்கும்’’ இதுதான் நான் உடனே கேட்டேன் தமிழ் சமையல்காரர்கள் வேலை செய்கின்றார்களா ? இல்லை எல்லோரும் மலையாளிதான் பிறகு தஞ்சாவூர் தம் பிரியாணி எப்படி ? நீங்கள் நினைக்கலாம் அந்த வகையில் பழகிகொள்வது பெரிய காரியமில்லையே என்று இதுதான் மலையாளிகள், தமிழர்களை மட்டுமல்ல உலகில் அனைத்து மனிதர்களின் நாடித்துடிப்பை அறிந்து அவ்வகையில் பயணிப்பவர்கள் மலையாளிகள் எங்கும், எப்படியும் வளைந்து போகத்தெரிந்தவர்கள்.


முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் ஒரு பதிவில் சொல்லி இருந்தார் தமிழ்நாடு எங்களுக்கே சொந்தம் என்று பிறமொழி பேசும் மக்கள் புரட்சி செய்வதுபோல் இதை நகைச்சுவையாக பார்க்காமல் கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் நாளை இதுவும் நடக்ககூடும் என்பது விளங்கும் நாளை கோவை, கோவைக்கோடு ஆகலாம் கோவை மக்களே உஷார்.

கோவைக்காரர்களை கோபக்காரர்கள் ஆக்கி விடவேண்டாம்.

வியாழன், ஆகஸ்ட் 04, 2016

இதுதான் காதலா ?


பலரது வாழ்விலும் காதல் இடம் பெற்று தடம் மாறிப்போகின்றது காதல் வயப்படுவது உலகைப்புரிந்தோ, வாழ்க்கைச்சூழலை அறிந்தோ அல்ல ! அது ஒரு தடுக்க முடியாத, தவிர்க்க முடியாத உணர்வால் ஏற்படுகின்றது கண்ணும், கண்ணும் கண்டதும் காதல் பிறந்து விடுகின்றது யாருமே இந்தக்காதலில் வெற்றி பெற்று திருமணம் வரை செல்லவேண்டும் என்று தீர்மானித்து விட்டு காதல் வயப்படுவதில்லை காதல் வயப்பட்ட பிறகே ஜாதி, மதம், சமூகமரியாதை, படிப்புத்தகுதி, ஜாதகப்பொருத்தம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, வரதட்சிணை இந்தக்காரணங்கள் தலையெடுக்கின்றன.. 

செவ்வாய், ஆகஸ்ட் 02, 2016

கிஸ்ஜியானந்தா

ஃப்ரான்ஸ் கில்ஜியானந்தா ஆஸ்ரமத்தின் முகப்புறத் தோற்றம்.

இப்பதிவின் முதல் பகுதியை படித்து விட்டு தொடர கீழே சொடுக்கவும்.

அடுத்த பௌர்ணமிவரை மல்லிகாவும், மஞ்சுளாவும் கணவர்களுக்கு தெரியாதவாறு ஸ்வாமிஜியைப் பற்றியே பேசிக்கொண்டு இருந்தார்கள் அந்த வெள்ளிக்கிழமை வந்தது காலையிலேயே குளித்து முடித்து கணவனுக்கு தோசை வார்த்துக் கொண்டு இருந்த மல்லிகாவை கணவன் சன்னாசி அவசரமாக அழைத்தான்.

அடியே மல்லிகா சீக்கிரம் வா டிவியைப்பாரு... நம்ம ஊரு ஸ்வாமி கிஸ்ஜியானந்தாவை போலீஸ் அரஸ்ட் பண்ணி பிடறியில அடிச்சுக் கூட்டிப்போறாங்க... கூடவே சீரியல் நடிகை சீலாவும் எல்லாம் மேற்படி கேஸட்டாம் பாரு 150 பேருடைய கேஸட்டுகள் சிக்கி இருக்காம், நம்ம ஊருக்காரிகள் எவ, எவ மாட்டப் போறாளுகளோ... புருஷனுக்குத் தெரியாமல் போனவளுகளா இருக்கும் வேணும், வேணும் இவளுகளை வெளக்கமாத்தால அடிக்கணும் போறவளுக புருஷனைக் கூட்டிக்கிட்டு போகவேண்டியதுதானே... ஹூம் கொஞ்ச நாளைக்கு ஊருல நல்லா கேஸட் வியாபாரம் ஓடும் எவனெல்லாம் தூக்கு மாட்டிக்கிட்டு சாகப்போறானோ... பாவம்.
கணவன் சொல்லச் சொல்ல மல்லிகாவுக்கு அடி வயிற்றைக் கலக்கியது, மகனிடம் சொல்லி அடுத்த வீட்டு மஞ்சுளாவை அழைத்து வரச்சொல்ல அவள் வரவும் சன்னாசி சொன்னான்.

வாங்க மதினி சாமியாரை பார்த்தீங்களா... இப்ப இந்த பொம்பளைங்க எல்லாம் சாணியை எடுத்து மடத்துக்குள்ளே அடிக்கிறாங்களே... இவங்களுக்கு மொதல்ல புத்தி எங்கே போச்சு ?
மல்லிகாவும், மஞ்சுளாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள் என்ன பேசமுடியும் ? மஞ்சுளாவின் மனக்கண்ணில் கிஸ்ஜியானந்தா - மேகலா கேஸட் நிழலாடிய''தூ''....

என்ன மதினி இப்படி பேயறைஞ்சது மாதிரி நிற்கிறீங்க ?
இல்லை... அது வந்து என்னோட ஃப்ரண்டுகூட ஸ்வாமிஜியை பார்க்க போகணும்னு சொல்லிக்கிட்டு இருந்தாள்... அதான்...

இன்னும் போகலையே.... ஆமா யாரு ?
அது வந்து... மல்.... மல்... இல்லை மரகதம் இன்னும் போகலை.

நல்லவேளை தப்பிச்சாங்க.... எந்த சாமி செஞ்ச புண்ணியமோ... போங்க.
மல்லிகாவுக்கு ஒருநொடி இதயம் நின்று ஓடியது நல்லவேளை நம்ம பெயரைச் உளறலை மனதுக்குள் வேண்டிக் கொண்டாள்.

''ஆத்தா வடக்குத்தெரு மகமாயி நல்லவேளை எங்களைக் காப்பாத்தினே... இன்றைக்கு ஒருநாள் தாமதிச்சு இருந்தால் எங்களோட நிலைமை ? இந்த வருஷம் களரிக்கு எம் புருஷனை அலகு குத்தி உனக்கு தேர் இழுக்க வைக்கிறேன் எல்லோரையும் நீதான் காப்பற்றணும் தாயி''

முற்றும்.

 

Chivas Regal சிவசம்போ-
இவ செஞ்ச தப்புக்கு அவன்தான் அலகு குத்திக்கிறணுமா ?
சாம்பசிவம்-
யார் குத்தினால் என்ன ? ஆத்தாளுக்கு நேர்த்திக்கடன் நிறைவேறினால் சரி.
சிவாதாமஸ்அலி-
வில்லங்கத்தார் யோசனையை கேட்டால் இப்படித்தான்.

திங்கள், ஆகஸ்ட் 01, 2016

கிஸ்ஜி ப்ரமோதா முஷாபி நமீந்ராயணா யாஹூஜி


ஏண்டி மல்லிகா, நம்ம ஊரு மடத்துக்கு வந்து இருக்காரே... ஸ்வாமிஜி கிஸ்ஜியானந்தா அவரைப்போயி பார்த்துட்டு வருவோமா ?
நீ வேற எம்புருஷன் எதுக்கெடுத்தாலும் சந்தேகப்படுவாரு, அவரைப்போயி பார்த்துக்கிட்டு... ய்யேன் உனக்கு இப்ப என்ன பிரச்சனை ?