தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஆகஸ்ட் 06, 2016

கோவைக்காரர்கள், கோபக்காரர்களா ?


கோயமுத்தூர் இந்தியாவின் மான்செஸ்டர் என்று பெயர் பெற்ற நகரம் இங்கு தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது குறைந்து வருகின்றது என்றால் இங்குள்ளவர்கள் ஊரை விட்டு வெளியேறி விடுகின்றார்கள் என்று அர்த்தமல்ல ! வேறு எப்படி ? மற்றொரு பிரிவினர் கூடிக்கொண்டே வந்து தமிழர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றனர் என்று பொருள் கொள்ளவும் அந்தப்பிரிவினர் யார் ?

மலையாளிகள் ஆம் மலையாளிகளே கோவையில் எங்கு நோக்கினும் வியாபார ஸ்தலங்களின் பெயர்ப் பலகைகளில் மலையாள எழுத்துகள் ஓணம் அரசு விடுமுறை இந்த செயல்பாடுகள் எப்படி நடக்கின்றது ? தமிழன் உறங்குவதால் ஆம் நண்பர்களே... ஓணத்துக்கு அரசு விடுமுறை கொடுக்கும் அளவுக்கு பெரிய இடங்களில் சென்று பேசி காரியம் சாதிக்கும் அளவுக்கு அவர்களது வளர்ச்சி இருக்கின்றது இதனாலென்ன ? நமது குழந்தைகளுக்கும் சேர்த்துதானே விடுமுறை கிடைக்கின்றது என்று சொல்லலாம் அவர்கள் அறிவு நுணுக்கமானவர்கள், தமிழர்கள் விட்டுக் கொடுப்போம் என்ற பெயரில் ஏமாந்து விட்டு நிற்ப்போம் இன்றைக்கும் கோவையில் பல நிறுவனங்களில் உரிமையாளர்கள் மலையாளிகள்தான் அவர்கள் கேரளாவில் தொழில் தொடங்காமல் கோவையை தேர்ந்தெடுக்க காரணம் என்ன ? கோவை ஊட்டிக்கு அருகில் இருப்பதால் கேரளத்தைப் போன்று இல்லாவிட்டாலும் ஓரளவு குளிச்சியான நகரம் கேரளத்துக்கும் அருகில் உள்ளது ‘’பின்நாளில்’’ உதவும் கேரளாவில் எதற்கெடுத்தாலும் தொழிலாளர்கள் கொடி பிடிப்பார்கள் தமிழ்நாட்டில் வேலை செய்பவர்கள் வேலை நிறுத்தத்தில் அடிக்கடி ஈடுபடமாட்டார்கள் கோவையில் மலையாளப்படங்கள் வெளியிடும் அளவுக்கு மக்கள் தொகை பெறுகி விட்டது என்றால் இது அபார வளர்ச்சி இல்லையா ? 

இதையெல்லாம் சிந்திக்கும் அளவுக்கு தமிழர்களான நமக்கு பக்குவம் இல்லை என்பதே உண்மை காரணம் ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை என்ற சித்தாந்தம் கேரளாவில் தமிழன் முதல்வராக வேண்டாம் ஒரு வார்டு கவுன்சிலராக முடியுமா ? மலையாள திரைப்படங்களில் தமிழன் நாயகனாக வேண்டாம் காமெடியனாககூட முடியாது ஆனால் தமிழ் நாட்டில் வந்தேறிகளை எல்லாம் வாழவிட்டு வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று பெருமை பேசிக்கொள்கிறோம்.

ஒருமுறை 2005 என்று நினைவு கோவை வ.உ.சி பூங்காவில் எனது குழந்தைகளுடன் உட்கார்ந்திருந்தேன் சிறிது நேரம் நான் தமிழ்நாட்டில் இருப்பதுபோல் தோன்றவில்லை அபுதாபியில் ஏதோவொரு பார்க்கில் இருப்பது போன்ற உணர்வு காரணம் பார்க்கின் பராமரிப்பு அல்ல ! எங்கும் மலையாள குடும்பங்கள், மலையாள பேச்சொலிகள் இவர்கள் எவ்வளவு விரைவாக அஸ்திவாரம் இடுகின்றார்கள் நான் ஏற்கனவே சொன்னதுபோல நுண்ணிய அறிவாற்றல் உள்ளவர்கள், யாரையும் எப்படியும் ஏமாற்றி விடுவார்கள், எங்கும் நுழைந்து காரியம் சாதித்து விடுவார்கள், மென்மையானவர்கள், ஆனால் டேஞ்சரானவர்கள், தமிழர்களைப்போல சட்டென கோபப்படமாட்டார்கள், அருவாளை எடுத்து பழக்கமே இல்லாதவர்கள் அதனால்தான் உலகில் எங்கும் காரியத்தை சாதிக்கின்றார்கள் தன்னை முன்நிலைப படுத்திக்கொண்டே இருப்பார்கள் இங்கு யூ.ஏ.ஈ. நாட்டில்கூட மிகப்பெரிய தொழில் அதிபர்கள் தமிழர்கள்தான் ஆனால், முன்னிலையில் அறியப்படுபவர்கள் மலையாளிகளே காரணமென்ன ? தமிழர்கள் தான் உண்டு தன் தொழில் உண்டு என்ற குறுகிய எண்ணப்பாடுகள் மலையாளிகள் எங்கும் நமது மலையாளிகள் இருக்கவேண்டும் என்ற கொள்கையாளர்கள் இதற்கு அடிப்படை காரணம் தமிழன் தான் பேசுவது தமிழன் என்று அறிந்தும் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு இருப்பான் மலையாளி அப்படியல்ல அந்த இடத்தில் எத்தனை நாட்டு மனிதர்கள் இருந்தாலும் மலையாளியெனில் பேசுவது மலையாளமே இவர்கள் தமிழர்களைப்போல வாழ்க மலையாளம் என்ற வெட்டிக்கோஷம் இடுவதில்லை ஆனால் மலையாளத்தை வாழ வைத்துக்கொண்டு இருப்பார்கள் எங்கும், எப்பொழுதும்.

ஒருமுறை கோவை விமானநிலையம் அருகில் ஒரு உணவகத்துக்கு காலை சிற்றுண்டிக்காக சென்றிருந்தேன் உள்ளே முதலாளி முதல் தொழிலாளி வரை அனைவரும் மலையாளிகளே... என்னிடம் தமிழிலும், அவர்களுக்குள் மலையாளமும் பேசினார்கள் நான் மலையாளத்தில் பேசினேன் அவர்களுக்குள் தயக்கம் ஒருவேளை எனது மீசையும் தொப்பியும் அவர்களுக்கு ஐயத்தை உண்டு பண்ணி இருக்கலாம் உணவகத்தின் பெயர்ப் பலகையில் எழுதி இருந்தது முதலில் மலையாளமும், அடுத்து தமிழும் கொஞ்சம் சிந்திக்க வேண்டிய கட்டம் தமிழன் அன்றே சிந்தித்து இருந்தால் ? எம்ஜியார் (மலையாளி) நுழைந்திருக்க முடியாது, ஜானகியம்மாள் (மலையாளி) நுழைந்திருக்க முடியாது, அதன் வழியாய் ஜெயலலிதா (கன்னடம்) நுழைந்திருக்க முடியாது இன்னும் எவ்வளவோ தமிழர் அல்லாதவர்களும் நாற்காலி கனவுகள் காணவும் முடியாது ஓ. பன்னீர் செல்வம் (தமிழன்) ஒருவகையில் மட்டும் நான் பெருமைப்படுகிறேன்.

சரி அது கிடக்கட்டும் பலகையில் எழுதியிருந்த வாசகம் என்ன தெரியுமா ? ‘’சுவையான தஞ்சாவூர் தம் பிரியாணி கிடைக்கும்’’ இதுதான் நான் உடனே கேட்டேன் தமிழ் சமையல்காரர்கள் வேலை செய்கின்றார்களா ? இல்லை எல்லோரும் மலையாளிதான் பிறகு தஞ்சாவூர் தம் பிரியாணி எப்படி ? நீங்கள் நினைக்கலாம் அந்த வகையில் பழகிகொள்வது பெரிய காரியமில்லையே என்று இதுதான் மலையாளிகள், தமிழர்களை மட்டுமல்ல உலகில் அனைத்து மனிதர்களின் நாடித்துடிப்பை அறிந்து அவ்வகையில் பயணிப்பவர்கள் மலையாளிகள் எங்கும், எப்படியும் வளைந்து போகத்தெரிந்தவர்கள்.


முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் ஒரு பதிவில் சொல்லி இருந்தார் தமிழ்நாடு எங்களுக்கே சொந்தம் என்று பிறமொழி பேசும் மக்கள் புரட்சி செய்வதுபோல் இதை நகைச்சுவையாக பார்க்காமல் கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் நாளை இதுவும் நடக்ககூடும் என்பது விளங்கும் நாளை கோவை, கோவைக்கோடு ஆகலாம் கோவை மக்களே உஷார்.

கோவைக்காரர்களை கோபக்காரர்கள் ஆக்கி விடவேண்டாம்.

50 கருத்துகள்:

  1. உண்மைதான்... மலையாளிகள் கூட இருந்து குழி தோண்டுபவர்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  2. பிறந்து வளர்ந்து படித்தது தமிழ் நாட்டில். வேலை கிடைத்து தமிழ் நாட்டில் வளர்ந்ததைப் போன்று இருமடங்கு காலம் வாழ்ந்து கொண்டிருப்பது மலையாள நாட்டில் திருவனந்தபுரத்தில். மனைவியின் பூர்வீகம் தூத்துக்குடி என்றாலும் மனைவி பிறந்து வளர்ந்தது கோவையில். நான் என்ன சொல்ல??
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா
      உலகம் முழுவதுமே எல்லா மொழி மனிதர்களும் பொருள் தேடி பரவி இருப்பது உண்மையே.
      இதில் குறிப்பிட்ட ஒரு பிரிவு எண்ணிக்கையில் அதிகரிக்கும் பொழுது அந்த இடங்களில் பிரச்சினைகள் முளைக்க ஆரம்பிக்கின்றது

      இதே நாட்டில்கூட இந்நாட்டினரைவிட பிழைக்க வந்தவர்களே அதிக சதவீதம் இருப்பினும் பிரச்சினை வராத்தற்கு காரணம் இந்த நாட்டு சட்டங்கள் இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரபி சில குறிப்பிட்ட நாட்டு மனிதர்களுக்கு புதிய விசா தடை செய்யப்பட்டும், புதுப்பிக்கப்படும் விசா வரைமுறை செய்யப்பட்டும் பெரிய பதவி மனிதர்கள் உடனடி கேன்சல் செய்தும் அனுப்ப படுகின்றார்கள்.

      தங்களைப் போலவே நானும் இங்கே...

      நீக்கு
  3. என்னுடைய கேள்வி பதிவு சம்பந்தப் பட்டது அல்ல... பின்னூட்டம் சம்பந்தப்பட்டது. 2009 இல் வந்த பின்னூட்டத்தைப் படிக்க வேண்டிய அவசியம் இப்போதுஎன் வந்தது??!!

    :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கேள்வி விளங்கவில்லயே... 2009 பின்னூட்டம் எங்கு இருக்கின்றது ? நான் வலைப்பூ ஆரம்பித்த்தே 2010-ல் தானே... முனைவர் ஐயாவின் பின்னூட்டத்தின் தேதி 08.06.2016

      நீக்கு
  4. தங்களின் கருத்து உண்மைதான் நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துப்பகிர்வுக்கு நன்றி நண்பரே..

      நீக்கு
  5. அன்பின் ஜி..
    அருமையாகச் சொல்லியிருக்கின்றீர்கள்...

    வளைகுடா நாடுகள் முழுவதிலும் வேரூன்றிப் பரவியிருக்கும் வணிக மையங்களில் வேலை பார்ப்பவர்களில்(!...) யாருடைய எண்ணிக்கை அதிகம்?...

    எம்ஜியாரை வாத்தியார் என்றவனும் தமிழனே..

    நடிகர் திலகத்தை தொந்தி கணேசன் என்றதோடு -
    அவர் நடித்த சினிமா போஸ்டர்களில் சாணியடித்து
    அரிப்பைத் தீர்த்துக் கொண்டவனும் தமிழனே!..

    திருந்தாத ஜன்மங்கள் இருந்தென்ன லாபம்!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி தங்களுக்கு நான் என்ன விளக்கம் சொல்லி விடப்போகிறேன். நன்றி ஜி

      நீக்கு
  6. ஆஹா, நான் போட்ட பின்னூட்டமா? அதை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன். புது பின்னூட்டம். கோயமுத்தூர் கேரளாவுடன் சேர்ந்தாகி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா அதற்குள் சேர்ந்து விட்டதா ? வருகைக்கு நன்றி

      நீக்கு
  7. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறின போது அங்கு ஒரு மலையாளி சாய் விற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்தார்களாம் அவர்கள் விவர முள்ளவர்கள். அது சரி உங்களுக்கு ஏன் இந்தக் காழ்ப்பு.

    பதிலளிநீக்கு
  8. வாங்க ஐயா நான்தான் முன்கூட்டியே சொல்லி இருக்கின்றேனே அவர்கள் அறிவு நுணுக்கமானவர்கள் என்பதை பலமுறை நான் பதிவுகளில் வலியுறுத்தி இருக்கின்றேன்.

    எனக்கு யார் மீதும் காழ்ப்புணச்சி கிடையாது ஐயா நான் அதிக பட்சமாக அவர்களுடனே வாழ்ந்திருக்கின்றேன் அவர்களுடன் சேர்ந்து இருந்தால் நமக்கும் விழிப்புணர்வு வரும்.

    எனக்கு தமிழர்களைவிட மலையாளிகளே அதிகம் நண்பர்கள் அவர்களே எனக்கு மலையாளம் எழுதப்படிக்க கற்றுக்கொடுத்தார்கள்.

    சில மலையாள நண்பர்கள் என்னை தமிழாளி என்றே அழைப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  9. கில்லர்ஜிக்கு வணக்கம், தாங்கள் குறிப்பிட்டது உண்மைதான் அவர்கள் எதையும் சாதிக்கும் வல்லமையுடையவர்கள். கோபத்தை வெளியே காட்டாமல் காரியத்தைச் சாதிக்கும் சித்திகள். தமிழர்களைப் போல் அல்லாமல், பிறர் காலை வாரி விடுவதில் அவர்கள் கெட்டிக்காரர்கள்; அவர்களுக்கு இடம் கொடுத்து வாழ வைப்பதில் நாம் தியாகிகள். நமக்குத்தான் இதெல்லாம் புரியதே, கண் கெட்ட பிறகு தான் இங்கு சூரிய நமஸ்காரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே விரிவான கருத்துரை தந்தீர்கள் இது தமிழகத்தில் இன்னும் பல கூட்டங்களுக்கு விளங்கவில்லையே....

      நீக்கு
  10. யாதும் ஊரே யாவரும் கேளிர்னு நீங்க இலக்கியத்தில எழுதினது தப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர். திரு. ராஜ்குமார் ரவி அவர்களின் முதல் வருகைக்கு நன்றியும், வரவேற்பும் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று அன்றே நம் முன்னோர்கள் சொல்லி வைத்து இருக்கின்றார்கள்.
      இதில் அவரவர்கள் தனது உரிமைகளை விட்டுக் கொடுக்ககூடாது என்பது எமது கருத்து நண்பரே.

      நீக்கு
  11. புத்தி உள்ளவன் எங்கும் பிழைப்பான்! :(

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    ஆழமாக சிந்தித்தும்,அனுபவங்களை அலசியும் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். விபரமான விளக்கங்கள் திகைப்பூட்டுகி்ன்றன!

    நன்றியுடன்
    கமலா ஹரஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நான் உண்மைகளை யதார்த்தமாக சொல்லிப் போக நினைப்பவன் அதையே செய்தேன் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  13. தங்களது பதிவு நூறு சதவீத உண்மை...மலையாளிகள் கௌரவம் பார்க்காமல் எந்த தொழிலையும் செய்கிறார்கள். நாம் கௌரவம் என்ற போர்வையை அல்லவா போர்த்தி கொள்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தாங்கள் சொல்வது மிகச்சரியான விடயம்.

      நீக்கு
  14. பெயரில்லா8/06/2016 8:47 PM

    ippothutaan enrillai 1975 idaiththerthalil oru potdhukkoottathil malaiyala arasiyalvathi oruvar malaiyalaththil pesinaar.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் திரு. இமயவரம்பன் அவர்களின் முதல் வருகைக்கும், தங்களின் கருத்துப் பகிர்வுக்கு நன்றி

      நீக்கு
  15. தமிழகம் எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பது மலையாளி நகை கடைகளும் ,மலையாளி அடகு கடைக்ளும்தான்,சில மாதங்களுக்கு முன் இந்த ஒற்றுமையை மையமாய் கொண்டு ஒரு பதிவைப் போட்டுருந்தேன் ,உங்களுக்கும் நினைவில் இருக்குமே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி நினைவு இருக்கின்றது இதை யாரும் ஆழந்து உணர்ந்து பார்ப்பதில்லை.

      நீக்கு
  16. தாங்கள் கூறியது..முற்றிலும் அனுபவ உண்மையானது..கோவை கோவைக்காடாக மாறுவதை தடுக்கவே முடியாது நண்பரே......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே அப்படித்தான் வந்து முடியும்

      நீக்கு
  17. சிந்திக்க வேண்டியது தமிழரின் கடமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  18. 1980வாக்கில் கோயம்புத்தூரில் பணியாற்றினேன். தாங்கள் கூறியனவற்றில் பல அனுபவங்களை அப்போதே கண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரின் அனுபவ கருத்துப்பகிர்வுக்கு நன்றி

      நீக்கு
  19. கேரளத்து அரசியல்...கேரளத்தில் ஒரு தொழில் தொடங்குவது கடினம் நீங்கள் சொல்லி இருப்பது போல் கொடி பிடித்தல். அதனால் அவர்கள் பல ஊர்களிலும் புகுந்து தங்கள் நிலையை நிலைநாட்டிக் கொள்கின்றார்கள்தான். தமிழ்நாட்டில் நிறைய அவர்களது பிசினஸ்....உங்களுக்குத் தெரிந்திருக்கும் சமீபத்திய மலையாளப்படம் வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கிய ஜேக்கப்பிண்டெ ஸ்வர்கராஜியம்...படத்தில் நடிகர் சாய்குமார் பேசும் வசனம்...ந்னைவுக்கு வருகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி் சாய்குமார் வசனத்தையும்சசொல்லி இருக்கலாமே..

      நீக்கு
  20. மலையாளிகள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்! கோவையில் அதிகமாகிவிட்டது போலும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சென்னையிலும் இப்படித்தானே...

      நீக்கு
  21. இது பெரிய சப்ஜெக்ட். 5 தமிழர்கள் எங்கயும் சேர்ந்து இருக்க முடியாது. பேச ஆரம்பிச்சாச்சுன்ன, திமுக, அதிமுக இன்ன பிற பிரிவு அரசியலில், அப்புறம், இந்தப் பகுதி அந்தப் பகுதி ie இவன் திருனெவேலிக்காரன், இவன் தஞ்சாவூர் என்பது, இல்லாட்ட இவன் தெலுங்கு பேசறவன் என்று பிரிவு, இவன் இந்த சாதி என்று வேற்றுமை.. இது எல்லாம் அவர்களிடமும் உண்டு.. ஆனால் அவர்கள் ஒற்றுமையானவர்கள். ஒரு மலையாளி, இன்னொரு மலையாளிக்கு அலுவலகத்தில் கெடுதல் செய்யமாட்டான். (எக்ஸெப்ஷன் உண்டு). உதவி செய்ய ஓடோடி வருவான். தமிழர்களிடம் இந்தக் குணம் எப்போதும் கிடையாது (எக்ஸெப்ஷன் உண்டு). ஓணம் பண்டிகையை அவர்கள் மலையாளி இனம் என்ற முறையில் எல்லோரும் கொண்டாடுவார்கள், வாழ்த்துப் பறிமாறிக்கொள்வார்கள். நம்ம, எது நம்ம பண்டிகை என்பதிலும், எப்போது நம் பண்டிகை என்பதிலும் அரசியலை நுழைத்து நம் பெருமையைச் சிறுமையாக்குவோம். ஒருத்தன் இன்னொருவன் மலையாளி என்று தெரிந்தால் போதும், சம்சாரிக்க ஆரம்பிச்சுடுவான். தமிழன், அடுத்தவன் தமிழன் என்று தெரிந்தால் போதும், உடனே, அவன் எந்த குருப், சாதி, இடம், மதம் என்று ஆராய்ச்சிபண்ணி, ஆங்கிலத்தில் பேச ஆரம்பிச்சுடுவான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நண்பரே மலையாளியையும், தமிழனையும் குறித்து மிகவும் அற்புதமாக புரிந்து வைத்து இருக்கின்றீர்கள் அதற்காகவே எமது இராயல் சல்யூட்

      நீக்கு
  22. கில்லர்ஜி-சென்னையில் இன்னும் பல பிரச்சனைகள் உண்டு. எந்தக் கடைக்குப் போனாலும், உங்களுக்கு ஹிந்தி தெரிந்திருந்தால், சுருக்கா வேலையை முடித்துக்கொள்ளலாம். அடையார் ஆனந்த பவனிலுருந்து எங்கெங்கும் ஹிந்தி வாலாக்கள். தமிழர்களெல்லாம் எங்கு சென்றுவிட்டார்கள் என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்த தமிழர்கள் எல்லாம் அமெரிக்காவுக்கு படையெடுப்பதில் குறி வைக்கின்றார்கள், படிக்காதவர்கள் அரபு நாடுகளுக்கு செல்கின்றார்கள் நண்பரே

      நீக்கு
  23. எங்கள் தாத்தா சிறுவயதில் திருவனந்தபுரத்தில் நகைகடை வைத்து அங்கே செட்டில் ஆகி விட்டார்கள் . நான் பிறந்த்து அங்குதான். என் மாமா அங்குதான் இன்னும் இருந்து வருகிறர்கள். தமிழர்கள் நிறைய திருவனந்தபுரத்தில் இருக்கிறார்கள்.

    நீங்கள் சொல்வது போல் கோவையில் நிறைய மலையாளி இருப்பது உண்மைதான். முன்பு கேரளா போல் குளிர் , பசுமை இருந்ததால் கோவையில் குடியேறி இருப்பார்கள்.

    மதுரை வெப்பம் என்பதால் கொஞ்சம் பேர்தான் இருக்கிறார்கள் போலும் மலையாளிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆனால் அவரவர்கள் தங்களது உரிமையை இழந்து விடக்கூடாது இதுவே எமது கருத்து.

      நீக்கு
  24. சற்றே தாமதமாக வருவதில் பல கருத்துரைகளையும் சேர்த்து படிக்க முடிந்தது. :)

    தில்லியிலும் இப்படி நிறைய பேர் உண்டு. அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை நம்மிடம் இல்லை என்பது தான் வருத்தமான விஷயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி நம்மிடம் ஒற்றுமை இல்லைதான்.

      நீக்கு
  25. நான் திருவண்ணாமலையில் இருந்த சொற்ப காலத்தில் தெலுங்கில் சினிமா போஸ்டரை பார்த்து இந்த அளவு தெலுங்கர்கள் இங்கே இருக்கிறார்களா? என்று ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் அல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வந்தாரை வாழ வைத்து விட்டு நாம் தெருவில் நிற்கின்றோமே...

      நீக்கு
  26. நமது அரசியல் சாசனம் தந்திருக்கும் அடிப்படை உரிமைகளில் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சென்று குடியேறும் உரிமையும் ஒன்று. எனவே இதை தடுக்க இயலாது. ஆனால் குறிப்பிட்டோர் நாம் இடத்திற்கு வந்து நம்மை ஆதிக்கம் செய்வதை தடுக்க முயற்சிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஆதிக்கம் உண்மை இதையே நான் எதிர்கிறேன்.

      நீக்கு