செவ்வாய், ஆகஸ்ட் 02, 2016

கிஸ்ஜியானந்தா

ஃப்ரான்ஸ் கில்ஜியானந்தா ஆஸ்ரமத்தின் முகப்புறத் தோற்றம்.

இப்பதிவின் முதல் பகுதியை படித்து விட்டு தொடர கீழே சொடுக்கவும்.

அடுத்த பௌர்ணமிவரை மல்லிகாவும், மஞ்சுளாவும் கணவர்களுக்கு தெரியாதவாறு ஸ்வாமிஜியைப் பற்றியே பேசிக்கொண்டு இருந்தார்கள் அந்த வெள்ளிக்கிழமை வந்தது காலையிலேயே குளித்து முடித்து கணவனுக்கு தோசை வார்த்துக் கொண்டு இருந்த மல்லிகாவை கணவன் சன்னாசி அவசரமாக அழைத்தான்.

அடியே மல்லிகா சீக்கிரம் வா டிவியைப்பாரு... நம்ம ஊரு ஸ்வாமி கிஸ்ஜியானந்தாவை போலீஸ் அரஸ்ட் பண்ணி பிடறியில அடிச்சுக் கூட்டிப்போறாங்க... கூடவே சீரியல் நடிகை சீலாவும் எல்லாம் மேற்படி கேஸட்டாம் பாரு 150 பேருடைய கேஸட்டுகள் சிக்கி இருக்காம், நம்ம ஊருக்காரிகள் எவ, எவ மாட்டப் போறாளுகளோ... புருஷனுக்குத் தெரியாமல் போனவளுகளா இருக்கும் வேணும், வேணும் இவளுகளை வெளக்கமாத்தால அடிக்கணும் போறவளுக புருஷனைக் கூட்டிக்கிட்டு போகவேண்டியதுதானே... ஹூம் கொஞ்ச நாளைக்கு ஊருல நல்லா கேஸட் வியாபாரம் ஓடும் எவனெல்லாம் தூக்கு மாட்டிக்கிட்டு சாகப்போறானோ... பாவம்.
கணவன் சொல்லச் சொல்ல மல்லிகாவுக்கு அடி வயிற்றைக் கலக்கியது, மகனிடம் சொல்லி அடுத்த வீட்டு மஞ்சுளாவை அழைத்து வரச்சொல்ல அவள் வரவும் சன்னாசி சொன்னான்.

வாங்க மதினி சாமியாரை பார்த்தீங்களா... இப்ப இந்த பொம்பளைங்க எல்லாம் சாணியை எடுத்து மடத்துக்குள்ளே அடிக்கிறாங்களே... இவங்களுக்கு மொதல்ல புத்தி எங்கே போச்சு ?
மல்லிகாவும், மஞ்சுளாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள் என்ன பேசமுடியும் ? மஞ்சுளாவின் மனக்கண்ணில் கிஸ்ஜியானந்தா - மேகலா கேஸட் நிழலாடிய''தூ''....

என்ன மதினி இப்படி பேயறைஞ்சது மாதிரி நிற்கிறீங்க ?
இல்லை... அது வந்து என்னோட ஃப்ரண்டுகூட ஸ்வாமிஜியை பார்க்க போகணும்னு சொல்லிக்கிட்டு இருந்தாள்... அதான்...

இன்னும் போகலையே.... ஆமா யாரு ?
அது வந்து... மல்.... மல்... இல்லை மரகதம் இன்னும் போகலை.

நல்லவேளை தப்பிச்சாங்க.... எந்த சாமி செஞ்ச புண்ணியமோ... போங்க.
மல்லிகாவுக்கு ஒருநொடி இதயம் நின்று ஓடியது நல்லவேளை நம்ம பெயரைச் உளறலை மனதுக்குள் வேண்டிக் கொண்டாள்.

''ஆத்தா வடக்குத்தெரு மகமாயி நல்லவேளை எங்களைக் காப்பாத்தினே... இன்றைக்கு ஒருநாள் தாமதிச்சு இருந்தால் எங்களோட நிலைமை ? இந்த வருஷம் களரிக்கு எம் புருஷனை அலகு குத்தி உனக்கு தேர் இழுக்க வைக்கிறேன் எல்லோரையும் நீதான் காப்பற்றணும் தாயி''

முற்றும்.

 

Chivas Regal சிவசம்போ-
இவ செஞ்ச தப்புக்கு அவன்தான் அலகு குத்திக்கிறணுமா ?
சாம்பசிவம்-
யார் குத்தினால் என்ன ? ஆத்தாளுக்கு நேர்த்திக்கடன் நிறைவேறினால் சரி.
சிவாதாமஸ்அலி-
வில்லங்கத்தார் யோசனையை கேட்டால் இப்படித்தான்.

32 கருத்துகள்:

 1. என்னமோ போங்க!..

  கிஸ்மியானந்தாவை உள்ளே புடிச்சி போட்ட வரைக்கும் சரி..
  அது என்ன.. தனிமைச் சிறை தானே!..

  ஆனாலும் பாருங்க..

  அதுக்குள்ளயும் அடுத்த தெருவுல
  ஸ்ரீலஸ்ரீ வாட் ஸப்ஜி கூகுளானந்த ஸ்வாமிகள் அருளாசி மன்றம் அப்படின்னு ஆஸ்ரமம் தொறந்துட்டானுங்க!..

  அவரு காதுக்குள்ளே இருந்து கம்பி எடுக்கிறாராம்.. அதை வளைச்சி ஜன்னல்..ல தொங்க விட்டா நெனைச்சது நடக்குதாமே!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி இவங்கெளுக்கு முடிவு இப்படித்தானே வரும்.
   ஸ்ரீலஸ்ரீ ஸ்வாமிஜி காதுக்குள்ளிருந்து கம்பி எடுக்கின்றாரா ?

   கிஸ்கோல் கம்பெனிக்காரனுக்கு தகவல் கொடுப்போம் நமக்கு கமிஷனாவது கிடைக்கும் டீல் ஓகேயா ?

   நீக்கு
 2. ஓ... நல்ல நேரத்தில் தப்பினார்கள் போங்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே வடக்குத்தெரு மகமாயி காப்பாற்றி விட்டாள்

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  நல்லவேளை! மல்லிகாவும் மஞ்சுளாவும் அதே வெள்ளியன்று வடக்குத் தெரு மகமாயி புண்ணியத்தில் தப்பித்தார்கள். ஆனால், இவர்கன் செய்த தப்புக்கு மல்லிகா புருஷனுக்குத்தான் தண்டனை போலும்! என்ன செய்வது? தாலி கட்டிய பாவம் சும்மா விடுமா?

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 4. அப்ப கூட அவங்க செஞ்ச தப்புக்கு புருஷனுக்கு தண்டனை கொடுக்கிறாங்க பார்த்தீங்களா அங்கதான் நிக்கறாங்க பெண்கள்! ஹாஹாஹா!

  பதிலளிநீக்கு
 5. என்னமோ போங்க... கதையை விரைவா முடிச்சிட்டீங்க... இன்னும் இரண்டு மூணு வாரம் ஓடும்ன்னு பார்த்தேன்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுக்கு மேலே மொள்ளமாறிப் பயலைப்பற்றி எழுத என்ன இருக்கு நண்பரே

   நீக்கு
 6. நண்பா,

  சூப்பர் தொடர். இதை நீங்கள் ஒரு நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன் எழுதி இருந்தால் உங்களுக்கும் புண்ணியம் கிடைத்திருக்கும் , இன்னும் எத்தனையோ மல்லிகாக்கள் வாழ்த்தி உங்களுக்கு கோயிலே கட்டி இருப்பார்கள்.

  வாழ்த்துக்கள்.

  கோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் நண்பரே யானை இன்றுதான் தோன்றியது.

   ஞானம்
   யானை

   ஞா...னம்
   யா...னை

   ஞா...ன...ம்
   யா....னை

   முடியலை.

   நீக்கு
 7. காஞ்சி சங்கர ராச்சாரியை தொடர்பு கொண்டு.. கிஸ்ஜியானந்தாவும் விடுதலையாகி வந்து தம் தொழிலை தொடங்குவார் நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பாக முடியும் நண்பரே நம் இந்தியாவில் மக்களாட்சியல்லவா நடக்கின்றது.

   நீக்கு
 8. மாட்டிக்காம இன்னும் நிறைய ஜீக்கள் (நீங்களும் நானும் அல்ல )திரியுதே !மஞ்சுளாக்கள் ,மல்லிகாக்கள் விழுந்து கிட்டே தானே இருக்கு :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது இன்னும் சில தலைமுறைகளாவது கடக்கும் நண்பரே.
   காரணம் பெண்கள் பக்தியில் முழ்கி விட்டவர்கள்

   நீக்கு
 9. ஹஹ ச்சே அந்தப் பொண்ணுங்க அவரைத் துரத்தும்னு பார்த்தா.....அதுக்குள்ள மாட்டிக்கிட்டாரே

  ஹஹஹ ஓ அப்ப அந்த ஐடியாதானா ...அது சரி...நீங்கள் அப்படி அரசியல்வாதிகள்கிட்ட சொன்னீங்கனா அவங்க அப்படியாச்சும் நல்லது பண்ணுவாங்களோனுதான்....ஆனா நம்மூரில அந்த சாமிங்க எல்லாம் அரசியல்வியாதிக்ளோடச் சேர்ந்து இவங்களும் வியாதி பிடிச்சு பணம் பண்ணுறாங்க...அப்படி ஒரு பதிவு போடுங்க ஜி...இதுல வில்லங்கம் எதுவும் இல்லை....ஆனா பின்னூட்டம் வில்லங்கமா இருந்தா பொறுப்பு நாங்க இல்லப்பா...ஹிஹிஹி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க இப்படியே உசுப்பேற்றி விட்டு இருக்கின்ற 3 ½ கிலோ மூளையவும் ரத்தக்களரி ஆக்கி விடுங்க....

   நீக்கு
 10. அன்றைய
  பிரேமானந்தா போல
  இன்றைய
  கில்ஜியானந்தா போல
  நாளை
  மகிழ்ச்சியானந்தா வரலாம்
  ஆனால், நம்மாளுங்க
  எப்ப தான் திருந்துவாங்களோ?

  பதிலளிநீக்கு
 11. இதைப் படிக்கையில் கூட ஒரு சாமியார் குறித்த செய்தியைத் தான் தொலைக்காட்சியில் பார்த்துட்டு இருந்தேன். ஹிஹிஹி, நடப்பு இது தான் என்று தெளிவாகச் சொல்லறீங்க! உங்களோட உன்னிப்பான கவனம் பாராட்டுக்குரியது!

  பதிலளிநீக்கு
 12. மஜ்சுளா மல்லிகா தப்பினார்கள்...அவர்களது கணவன்மார்களுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 13. கதையின் முடிவு சுபமாக இருந்தது அறிந்து மகிழ்ச்சி! இன்னும் நம் மக்கள் போலி சாமியார்களை நம்புகிறார்களே என்பதை எண்ணி வருத்தப்படத்தான் முடிகிறது.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...