ஞாயிறு, ஆகஸ்ட் 07, 2016

புருஷனுக்கேத்த புண்ணியவதி


வாங்க மயில்வாகனம் சாப்புடுற நேரத்துல வந்து இருக்கீங்க.. உட்காருங்க இருந்து சாப்பிட்டு போகலாம்.
இன்னைக்கு என்ன மயில்சாமி வீட்ல விஷேசமா ?

ஒண்ணுமில்லை மார்கெட்டுக்கு போனேன் மீனு சல்லுசா கிடைச்சுச்சு வாங்கியாந்தேன்
நல்லது சந்தோஷம்.

ஆமா நீங்க மீன் சாப்பிடுவீங்கள்ல... ?
கடல்ல போற கப்பல், வானத்துல பறக்கிற ஃபிளைட் இது ரெண்டைத் தவிர மற்றது எல்லாத்தையும் சாப்பிடுவேன் ஹாஹாஹா....

அப்படினாக்கா, ரோட்டுல போற ட்ராக்டரை சாப்பிடுவீங்களா ?
என்ன நக்கலா ?

நீங்கதானே சொன்னீங்க, மற்றது எல்லாம் சாப்பிடுவேன்னு அதுவும் வாகனம்தானே...
ஏய்யா அதுக்காக ஒரு வாகனம் அதுவும் இரும்பு யாராவது சாப்பிட முடியுமா ?

ஃபிளைட்டும், கப்பலும் இரும்புதானே அதை மட்டும் சாப்பிட மாட்டேன்னு சொல்லவும் மற்றது சாப்பிடுவீங்களோன்னு... நினைச்சேன்.
அதுக்காக இப்படியா பறக்குற ஃபிளைட்டும், அதுக்குள்ளே இருக்கிற மனுஷனைத் தவிர மற்ற பறவைகளை சாப்பிடுவேன் போதுமா ?

அப்படினாக்கா... கழுகை சாப்பிடுவீங்களா ?
என்னையா கழுகை மனுஷன் சாப்பிடுவானா ?

அதுவும் பறக்குறதுதானே... அதனால கேட்டேன் தப்பா நினைக்காதீங்க...
சரியாப்போச்சு இதையும் சொல்லிடுறேன் வேறேதும் கேட்டுடாம கடல்ல போற கப்பல், தோணி, படகு, ஃபோட்டு, வல்லம் இதுல போற மனுஷங்களைத் தவிர மற்றது எல்லாம் சாப்பிடுவேன் போதுமா ?

அப்படினாக்கா... நீர்மூழ்கி கப்பல் ?
யோவ் அதுவும் அதோட சேர்ந்ததுதான்யா, சொல்ல மறந்துட்டேன் அதுக்காக இப்படியா ? கடல்ல உள்ள மற்ற உயிரினங்கள் அனைத்தும் சாப்பிடுவேன்.

அப்படினாக்கா... திமிங்கலத்தை சாப்பிடுவீங்களா ?
? ? ?

சொல்லுங்க சாப்பிடணும்ல நேரமாச்சு...
ஏங்க அண்ணன் ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்பத்தான் வீட்டுக்கு வந்துருக்காங்க... அவருக்கிட்டே போயி ஆயிரம் கேள்வி கேட்டுக்கிட்டு அண்ணன் கடல் பன்றியைக்கூட சாப்பிடுவாங்க, நீங்க தெருக் குழாயடியில போயி கை கழுவிட்டு வாங்கண்ணே... தங்கச்சி சோறு அலம்பிட்டு வர்றேன்...

என்று உள்ளே போனாள் வள்ளிமயில, வெளியே வந்த மயில்வாகனம் உங்க மீன் சோறே வேண்டாமடா சாமி என்று நினைத்துக் கொண்டு தனது T.V.S வாகனத்தை கிளப்பிக் கொண்டு ஃபிளைட் வேகத்தில் பறந்தார் தனது வீட்டை நோக்கி...

7 ½ பதிவுக்கு வந்து தூண்டிலிட்ட நண்பருக்கு நன்றி


சாம்பசிவம்-
அதுக்காக வீட்டுக்கு வந்த விருந்தாளியை தெருக்குழாயில போயி கை கழுவிட்டு வரச்சொல்றது எந்த ஊரு பழக்கமய்யா...

Chivas Regal சிவசம்போ- 
அப்பத்தானே அவன் அப்படியே... போவான் புருஷனுக்கேத்த புண்ணியவதி.

காணொளி

46 கருத்துகள்:

 1. புண்ணியவதிக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 2. Superdealcoupon aims to provide our visitors the latest coupon codes, promotional codes from leading e-commerece stores and brands.Our goal is to create one ultimate savings destination to save you time and money every day.

  பதிலளிநீக்கு
 3. புண்ணியவதி குடும்பத்தை தலைமுழுகிட்டு போயிட்டாரே ,கையை ஏன் கழுவப் போகிறார் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி அவர்தான் வீட்டுக்கு பறந்துட்டாரே...

   நீக்கு
 4. சூப்பர் புண்ணியவதி

  விதண்டாவாதம் மிக மிகச் சிறப்பு

  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. உண்மையில் அங்கே மீன் குழம்பு என்று ஏதும் இல்லை..

  (குளம் குட்டை ஆறெல்லாம் அழித்து முடித்தாயிற்று..
  இப்படியிருக்க நல்ல மீனுக்கு எங்கே போவது?..)

  இது ஒருவகையான நூதன மோசடி..

  நல்லவேளை.. மயில் வாகனம் தப்பித்தார்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி மயில்வாகனன் தப்பிச்சதும் நல்லதுதான்.

   நீக்கு
 6. "சோறு அலம்பிட்டு வர்றேன்" - அப்படின்னா என்ன அர்த்தம்? எந்தப் பகுதில இப்படிப் பேசுவார்கள்? (விளம்புவது-பரிமாறுவது. அலம்பிட்டு-பொதுவா இதுக்கு அர்த்தம் தண்ணி விட்டு சுத்தம் செய்தல்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே எங்கள் தேவகோட்டை பகுதியில் உள்ள வழக்குச்சொல்.

   நீக்கு
 7. ஏட்டிக்கு போட்டி. கோலத்தில் போனால் தடுக்கில் போதல் தடுக்கில் போனால் கோலத்தில் போதல் போன்றவை ஓரளவுக்குப் புரிகிறது ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா ஏட்டிக்குப் போட்டிதான் ஐயா. ஐயாவின் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
  2. நல்ல நகைச்சுவை,,,,ஆனால் ஏரோப்பிளான் தண்ணீரில் கிடப்பதைப்பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது.

   நீக்கு
  3. வருக நண்பரே இப்பொழுது இது சாதாரண நிகழ்வுகளாகி விட்டதுவே...

   நீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  நல்ல நகைச்சுவை பதிவு. ரசித்துப் படித்தேன்.பேசிபேசியே வீட்டுக்கு வந்த விருந்தாளியை கடுப்பேற்றி வெளியேற்றி விட்டார்களே! புண்ணயாத்மாக்கள்தான்.இப்படியும் சிலர் இன்றளவும் இருக்கிறார்கள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இன்றைய விலைவாசிகள்தான் காரணம் என்ன செய்வது ?

   நீக்கு
 9. பதிவின் ஆரம்பத்தில் தந்துள்ள புகைப்படம் அருமை. பதிவோ வழக்கம்போல மிக அருமை.

  பதிலளிநீக்கு
 10. ரசித்தேன், ரசித்தேன் நண்பரே!

  பதிலளிநீக்கு
 11. விருந்தாளியை விரட்டுவதற்கு நல்ல தந்திரமாக இருக்கிறது.புருசனும் புண்ணியவதியும் செய்த வேலை.....ஆத்தாடி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நல்ல கணவன்-மனைவிதான் வாழ்த்துவோம்.

   நீக்கு
 12. வடிவேல் மீன் விக்கிற கதை மாதிரியில்ல ஆயிப்போச்சு...

  பதிலளிநீக்கு
 13. நானும் சோறு அலம்புவதைக் குறித்துக் கேட்க இருந்தேன். உங்கள் விளக்கத்தைப் படித்து விட்டேன். :)

  பதிலளிநீக்கு
 14. நான் கொடுத்த குறிப்பு தங்களுக்கு ஒரு பதிவிட உதவியமை அறிந்து மகிழ்ச்சி!
  வரும் விருந்தினர்களை வெளியேற்ற இது ஒரு வழி போலும்.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...