வியாழன், ஆகஸ்ட் 04, 2016

இதுதான் காதலா ?


பலரது வாழ்விலும் காதல் இடம் பெற்று தடம் மாறிப்போகின்றது காதல் வயப்படுவது உலகைப்புரிந்தோ, வாழ்க்கைச்சூழலை அறிந்தோ அல்ல ! அது ஒரு தடுக்க முடியாத, தவிர்க்க முடியாத உணர்வால் ஏற்படுகின்றது கண்ணும், கண்ணும் கண்டதும் காதல் பிறந்து விடுகின்றது யாருமே இந்தக்காதலில் வெற்றி பெற்று திருமணம் வரை செல்லவேண்டும் என்று தீர்மானித்து விட்டு காதல் வயப்படுவதில்லை காதல் வயப்பட்ட பிறகே ஜாதி, மதம், சமூகமரியாதை, படிப்புத்தகுதி, ஜாதகப்பொருத்தம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, வரதட்சிணை இந்தக்காரணங்கள் தலையெடுக்கின்றன.. எவ்வளவோ திரைப்படங்களில் பார்த்து இருப்பார்கள், கதைகளில் படித்து இருப்பார்கள், காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்து தாய்-தந்தையர்களை வரவழைத்து தலைகுனிய வைத்து இருப்பதை பார்த்து, கேட்டு இருப்பார்கள், எதிர்ப்புகளுக்கு பயந்து தண்டவாளத்தில் தலையை வைத்து தகர்த்து இருப்பார்கள், கொடைக்கானல் சென்று பாறைகளில் தங்களது திருநாமத்தை பதித்து வைத்து மலையிலிருந்து குதித்து இருப்பார்கள், நடைமுறை வாழ்வில் பலரையும் வெட்டிச்சாய்த்து வீட்டிற்கு தீ வைத்து இருப்பார்கள், ஊரே திரண்டு பல கொலைகளை நடத்தி இருக்கும் நமது காதல் இந்த வட்டத்துக்குள் வருகின்றதா ? என்பதை உணர்ந்து பார்ப்பதில்லை அதற்காக காதல் கொள்வது பாவம் என்று நான் சொல்ல வரவில்லை உலகம் தோன்றிய காலத்திலிருந்தே காதல் தோன்றி விட்டது ஆதாம்-ஏவாள் தொடுதலை உணர்ந்த பிறகே அவர்களும் காதல் செய்ய ஆரம்பித்து காதலுக்கு பிள்ளையார் சுழி போட்டார்கள் அதுவே உலகின் முதல் காதல்.

நமக்கு தெரிந்தவரோட முப்பாட்டன் முருகனே... (நான் அரசியல் பேசலைங்கோ) வள்ளியின் மீது காதல் கொண்டதில்லையா ? இதன் மூலம் ஜாதி மத உணர்வுகளை அழிக்கவில்லையா ? (அழிஞ்சுச்சா ? அழியலையோ ? நாந்தேன் உளறிட்டேனோ ?) 

அது பருவ வயதின் தன்மை நமது நாட்டில் சட்டென காதல் வயப்படும் இளைஞன் 22 வயது என்று வைத்துக் கொள்வோம் அவனுக்கு விசா எடுத்து அரபு நாட்டு அனுப்பி வைக்கின்றோம் அவனுக்கு காதல் ஏற்படும் சாத்தியம் மிகவும் குறைவு முதல் காரணம் தமிழ்ப்பெண்கள் கிடைப்பது அரிது முதலில் இவன் இயந்திர மனிதன் ஆகின்றான் எப்படி ? காலை 5:00 மணிக்கு எழுந்து வேலைக்கு சென்று இரவு 8:00 மணிக்கு அறைக்கு திரும்புகின்றான் 10:00 மணிக்கு திரும்புபவனும் உண்டு பிறகு சமைத்து, குளித்து, உறங்கி மீண்டும் காலையில் எழுந்து வாரத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை உடைகளை துவைத்து, தேய்த்து, வீட்டுக்கு கடிதம் எழுதி பிறகு விஞ்ஞான வளர்ச்சியால் டெலிபோண் பூத்தில் வரிசையாக நின்று வீட்டுக்கு பேசி மகிழ்ந்து அன்று ஒரு நாளாவது நல்ல உணவு உண்டு பிறகு விஞ்ஞான அபார வளர்ச்சியால் செல்போண், ஸ்கைப், வாட்ஸ்-அப் அதிலும் ஓவர்டைம் வரலாம் வந்தால் அனைத்தும் ரத்து சரி இவன் விடுமுறைக்கு நாட்டுக்கு வருகின்றானே அப்பொழுதும் இவன் அடக்கி வாசிக்கின்றான் காரணம் ஏதாவது பிரச்சினை வந்து காவல் நிலையம் செல்லும் சூழல் ஏற்பட்டால் முதலில் கடவுச்சீட்டு பறிபோகும் நமது விடுமுறையே இன்னும் இரண்டு வாரமே அதற்குள் குலதெய்வம் கோயிலுக்கு போய் குழந்தைக்கு மொட்டை அடிக்கணும் வரும்போதே கில்லர்ஜி போன்ற நண்பர்களிடம் கடன் வாங்கி வந்து இருக்கின்றோம் அதை அடைக்க வேண்டும் அடங்கி நடந்தால் காரியம் நடக்கும் ஆகவே சாதுவாகின்றான் இது அயல் நாட்டில் வாழும் அனைத்து மனிதருக்கும்.

காதலைத் தடுத்த இந்த விடயங்களை ஓரமாக வைத்து விட்டு மற்ற விடயங்களை பார்ப்போம் இந்த நாட்டு சட்டங்கள் கற்பழிப்பு குற்றங்களுக்கு தூக்கு இதில் இவனைக் கொல்லவேண்டும் என்பதல்ல ! நீதி இனியும் இன்னொருத்தி கற்பழிக்கப்பட்டு விடக்கூடாது என்பதே கொள்கை. இவனைப் பிடிக்காத பெண் இவனைப் பார்த்து இவன் என்னை.... என்று கண் கலங்கினால் போதும் இவனது வரலாறு முற்றுப்பெற்று விடும் இங்கு மது அருந்தி விட்டு காரோட்டினால் 20 வருடம் ஜெயில் லைசென்ஸ் ரத்து 20 வருசம் ஜெயிலில் கிடந்த பிறகு அந்த லைசென்ஸ் இருந்தால் என்ன ? குப்பைத் தொட்டியில் போட்டால் என்ன ? நமது நாட்டில் இதைக்கொண்டு வந்திருந்தால் எத்தனையோ நடைபாதைவாசிகள் அப்பாவி மக்களின் உயிர்கள் பாதுக்காக்கப்பட்டு இருக்குமே... சில மான்களை எல்லாம் இந்நேரம் சல் சல் என்று வறுத்து எடுத்திருப்பார்களே... இதுதான் அரபுநாடு. பெண்களை நிமிர்ந்து பார்க்கும் எண்ணமே வராது அதிலும் அரேபியப் பெண்களை..... ம்ஹூம் இந்தப்பழம் புல்லரிக்கும் கண்டிப்பாக அந்த எண்ணம் தோன்றாது 20 வருசம் வாழ்ந்தவனுக்கு 40 வயதாகி விடுகின்றது இதில் தங்கைகளுக்கு திருமணம் செய்து உப்பில்லாத, சத்தில்லாத உணவுகளால் வாழ்ந்து விடுமுறைகளில் நாட்டுக்கு வந்து தனக்கு ஒரு வாரிசுக்கு முயற்சிப்பதற்கே பழனி ஏழு தலைமுறை வைத்தியர்களின் உதவி தேவைப்படுகின்றது இதில் காதலாவது கத்திரிக்காயாவது அதேநேரம் வெளிநாடு வராமல் இந்தியாவில் இருந்திருந்தால் ? தான் ஆடாவிட்டாலும் தன் தசைஆடும் என்பதுபோல இவன் சும்மா இருந்தாலும் இவனது மனது கேட்காது காரணம் நாம் இந்நாட்டு மன்னர் என்ற கெத்து இது கில்லர்ஜிக்கும் சேர்த்துதான்.

இவையெல்லாம் அரபு நாட்டின் 10 வருடங்களுக்கு முன்புவரை இருந்த நிலைப்பாடு இப்பொழுது நிலைமை மாறித்தான் விட்டது இருப்பினும் காதலுக்கு சாத்தியமில்லை ஆனால் ? கூதலுக்கு சாத்தியமுண்டு.
இவ்வளவு சொல்ற நீ காதலிச்ச லட்சணம் உண்டா ? என்றால் உண்டு அதாவது இதுதான் காதல் என்று எனக்கு விளங்குவதற்கே 4 வருடங்கள் ஆகிவிட்டது என்றால் என்னைக் காதலித்த கன்னியவள் எவ்வளவு விபரமானவள் என்றும், நான் எவ்வளவு பெரிய மண்ணு முக்குழி என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.


ப.ப.ப பதிவுக்கு முனைவர் திரு. B. ஜம்புலிங்கம் அவர்கள் தமாஷுக்காக இப்படி கேட்டு, நானும் தமாஷாக மறுமொழி கொடுத்திருந்தாலும் இதனைக் குறித்து பதிவு எழுத வைத்த முனைவருக்கு நன்றி.

சுமார் 450 வருடங்களுக்கு முன்பு நடந்த எமது இனிய சினேகிதர் ஒருவரின் காதல் உண்மைச் சம்பவம் சொல்லவா ?

37 கருத்துகள்:

 1. சொல்லுங்க அதையும் கேட்போம்.

  காதல் வரலாறு.

  பதிலளிநீக்கு
 2. காதல் பற்றி சொல்லியிருப்பது அத்தனையும் உண்மை. ஆமாம், நம் நாட்டில் ஏன் இப்படி சட்டங்கள் இல்லை? ஆமாம், அங்கெல்லாம் மனித உரிமை ஆர்வலர்கள் கிடையாதா?!! 450 வருடத்துக்கு முன்னால் நடந்த சம்பவமா? ஆரம்பிச்சுட்டீங்களா!!

  தமிழ்மணம் இன்னும் சப்மிட் செய்யப்படவில்லை! Will vote later!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே இங்கு ஷரியத் என்னும் இஸ்லாமிக் சட்டமே செயல் பாட்டில் உள்ளது இதற்குள் மனித உரிமை, மாட்டு உரிமையெல்லாம் கொண்டாடி வரமுடியாது வந்தால் அவர்களே முதல் பலியாவார்கள்.

   இதன் காரணமாகவே இங்கு பிழைக்க வந்த பெண்கள்கூட நள்ளிரவில் தனியாக டாக்ஸியில் ஏறிப்போக முடிகின்றது.

   நீக்கு
 3. இதுதான் காதல் என்று விளங்குவதற்கே நான்கு வருடங்களா
  ஆகா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே எமது லட்சணம் இப்படித்தான் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 4. அன்பின் ஜி..

  ATM - ல பணம் எடுத்து எண்ணிப் பார்ப்பதற்குள் இடுப்பெலும்பு இற்று விடுகின்றது..

  இதில் - காதலாவது.. கத்தரிக்காயாவது!..

  அது தான்.. இது தான்..னு புரியறதுக்குள்ளே எல்லாத்தையும் இழந்து விடுகின்றோம்.. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் உள்பட!..

  அரபு நாட்டு சூழ்நிலை புரியாம - சித்த வைத்திய பரம்பரைக்கிட்ட பணத்தை இழந்த அப்பாவிகளோட நிலைமை அதுக்கு மேலே!..

  வயத்தெரிச்சல் தான் மிச்சம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி
   தங்களுக்கு தெரியாததையா நான் சொல்லி விடப்போகிறேன். உண்மையான வார்த்தை.

   நீக்கு
 5. 450 முந்தைய காதலா...???அதுவும் உங்கள் சிநேகிதரின் காதலா...?? சொல்லுங்கள்.. சொல்லுங்கள்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே சினேகிதர்தான் வருகைக்கு நன்றி

   நீக்கு
 6. அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் காதல் என்பது உங்கள் பாணியில் காதல் பற்றிச் சொல்லிப் போனது அருமை பதிவில் காணும் படத்தை நான் என் பொஅதிவு ஒன்றில் பகிர்ந்திருக்கிறேன் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா காதலைப்பற்றி பலரும் பல விதமாக புரிந்து கொண்டார்கள் என்பதும் உண்மைதான்.
   இப்படம் எனக்கு இணையத்தில் கிடைத்ததே... வருகைக்கு நன்றி

   நீக்கு
 7. காதல் என்பது நல்ல விஷயம்தானே ஜி! அதுவும் பக்குவப்பட்டக் காதல் என்றால். ஆனால் வெறும் இன்ஃபேச்சுவெஷன் என்றால் நல்லதல்ல...உண்மையான காதல் என்பது வற்றாத ஊற்று. எப்போதுமே நிலைத்திருக்கிம்.

  நம்மூரில் காதல் என்று சொல்லி பல விதங்களில் தவறாகப் பயணிக்கின்றது. மட்டுமில்லை உண்மையான காதல்கள் சாதி அது இது என்று கௌரவக் கொலைகள் வரை செல்லுகின்றன. அதற்காகவாவது சட்டங்கள் வர வேண்டும்...மற்றபடி உண்மையான காதலுக்கு எந்த அவமரியாதையும், சட்டமும் எதிர்ப்பும் கூடாது ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நம்நாட்டில் காதல் என்பது தவறான செயலாகவே இன்றும் கருதப்படுகின்றது காதலுக்கு முன் நமது காதலுக்கு அக்கீகாரம் கிடைக்குமா ? என்று ஆராய்ந்து பார்த்து ஒவ்வொருவரும் காதலிக்கத் தொடங்கினால் நிச்சயம் வெற்றி பெறும்.

   காதலிக்கத் தொடங்கும் பெண்கள் முதலில் நமது குடும்பத்தினர் ஆதரிப்பார்களா ? என்பதை நிச்சயம் நினைத்துப் பார்க்கவேண்டும் காரணம் தனது தாய்-தந்தையரின் குணம் எல்லா பெண்களும் அறிந்தவர்கள்தானே... ஆகவே அந்த வட்டத்தைக் கணக்கிட்டு பிறகு காதலனை தேர்வு செய்வது மிகமுக்கியம்.

   நீக்கு
 8. தமிழ்மணம் என்னாச்சு...சப்மிட் செய்து பார்த்தும் பலனில்லை

  பதிலளிநீக்கு
 9. தங்களின் காதல் அனுபவம் பற்றி பகிர்ந்து கொள்ளலாமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தோற்ற காதலே என்றும் நிலைத்து நிற்கும் நான் சினேகிதரின் காதலைச் சொல்கிறேன் விரைவில் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 10. அங்கேயும் பெண்கள் கஷ்டப்படுவதாகச் சொல்கிறார்கள்! என்னவோ போங்க! இந்தக் காதல் என்பது எப்படி வரும்னு எனக்கு இன்னமும் ஆச்சரியம் தான்! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக இங்கு வேலையில் இருக்கும் கஷ்டத்தைத் தவிர, ஹவுஸ்மேடாக இருக்கும் பெண்களுக்கு சில கஷ்டங்கள் உண்டுதான் வருகைக்கு நன்றி

   நீக்கு
 11. நமது நாடு எல்லாவற்றிலும் முரண்பாடான, வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டிய நாடு.

  (கில்லர்ஜியிடம் கடன் வாங்கியவர்கள் இந்த பதிவின் மூன்றாவது பாராவை நோட் செய்து கொள்ளவும்.)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி
   உண்மைதான் இங்கிருந்து விடுமுறைக்கு வரும் நண்பர்கள் பலரும் பிற நண்பர்களிடம் கடன் வாங்கித்தான் வருவார்கள் காரணம் ஏதாவது பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கும் நானும் இப்படித்தான்.

   நீக்கு
 12. கில்லர்ஜி... அபுதாபியில் காதலா? ஆச்சர்யம்தான். உங்கள் வேலை நேரத்தைப் போட்டிருப்பதைப் பார்த்தால் அபுதாபி வந்தாலும் உங்களைப் பார்க்கமுடியாது போலிருக்கே..

  என் நண்பன் சொன்னான். சில மாதங்களுக்கு முன்பு, அபுதாபி துபாய் 'நெடுஞ்சாலையில் ஷேக்கின் கார், நண்பனுக்குத் தெரிந்தவருடைய காரில் மோதிவிட்டது. உடனே ஷேக் காரை நிறுத்தி (சட்டப்படி) போலீஸ் வரும்வரை காத்திருந்து, தவறு தன்னுடையதுதான் என்று தெரிவித்தாராம். இந்த மாதிரி சட்டத்தை மதிப்பதை இந்தியாவில் கனவு காண முடியுமா? தமிழ்னாட்டுல வெட்டி கவுன்சிலருக்கே மாநில கவர்னர்னு நினைப்பு.

  20 வருடம் அரபு நாட்டில் வேலை, ஊரில் கல்யாணம் என்றெல்லாம் எழுதும்போது, அங்கே மனைவியை விட்டுவிட்டு, அரபு நாட்டில் வேலைபார்த்துக்கொண்டு, இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை 1 மாதமோ 2 மாதங்களோ விடுமுறையில் சென்று, அதற்குள் குழந்தை பெற்றுக்கொண்டு, குழந்தை பிறப்புக்கும் போகமுடியாமல், 2 வருடங்களுக்கு ஒரு முறை குழந்தைகளைப் பார்த்துவரும் மக்களைப்பற்றியும் எழுதுங்கள். நிறையபேர், அரபு நாட்டில், இந்தியர்கள், வாளி வாளியாக திரவத் தங்கத்தையும் கட்டி கட்டியாக நிஜத் தங்கத்தையும் வெட்டி எடுக்கின்றனர் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் திரு. நெல்லைத்தமிழன் அவர்களின் விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி

   நண்பரே எனது ஆரம்பகால வாழ்க்கை இப்படித்தான் தற்போது அரசு அலுவலகத்தில் வேலை செய்கிறேன் அதேநேரம் என்னுடன் வந்த பல நண்பர்கள் இன்னும் அதே சூழலில்தான் வாழ்கின்றார்கள் முயன்றவன் முன்னேறலாம் என்பது பொது வழக்கு எனக்கு இது கொள்கை.

   நண்பரே 2015 மார்ச்சில்
   Police Your Friend (U.A.E) الشرطه اصدقاؤك
   காவல்துறை உங்கள் நண்பன். (India)
   என்று இரண்டு பதிவுகள் எழுதி இருக்கின்றேன் அவசியம் படித்துப்பாருங்கள்

   மேலும் தங்களுக்காக போலீசுடன் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை கண்டிப்பாக எழுதுகிறேன்
   நன்றி - கில்லர்ஜி

   நீக்கு
 13. த ம வாக்கு போட்டவுடன் விழுந்து விட்டதே ,அதுகூட காதலுக்கு ஜே ன்னு சொல்லுதே :)

  பதிலளிநீக்கு
 14. வாழவைக்கும் காதலுக்கு ஜே,,,/

  பதிலளிநீக்கு
 15. காதல்... காதல்...
  நல்ல பகிர்வு...
  சரி... சரி... கடைசியாச் சொன்ன சொந்தக் கதையைச் சொல்லுங்க.. ஆவலுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே விரைவில் தருகிறேன் வருகைக்கு நன்றி

   நீக்கு
 16. சிறப்பான பகிர்வு. காதல் பற்றிய புரிதல் பலருக்கும் இல்லை என்பது தான் நிதர்சனம்.

  பதிலளிநீக்கு
 17. உங்கள் மனதில் உள்ளதைக் கொட்டி எங்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற ஆசை உங்களுக்கு. அதற்கு என் பேரை இழுத்து...உங்களின் திட்டத்தை புரிந்துகொண்டுவிட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா முனைவரால் விடயம் கிடைத்து விட்டதே....

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...