தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, மே 16, 2015

தெருவினையாடல்

டொங்கு நாட்டு மன்னன் கங்குதேவனை வாழ்த்தி பாடி பரிசுகள் பெற்று செல்வோமென கருதி புலவர் கருமி முத்தன் வந்தான், இளவயது புலவனென்றாலும், வார்த்தைகளில் முதுமையே ஓங்கி நிற்கும் இதனால் இவணுக்கு ’’முதுவாங்கி புலவன்’’ என்ற பெயரும் உண்டு.

மன்னரே... தங்களை புகழ்ந்து கவியொன்று கொண்டு வந்திருக்கிறேன்.
புத்துணர்ச்சி தரும்... புரட்சி புலவரே, புதுமை புத்தனே, புலம்புங்கள் புதுக்கவியை புலங்கட்டும், புதிராய், புரளட்டும் இந்த புவியெங்கும்....
நீர் வாழ்க ! மன்னா  
நீரே எம் அண்ணா  
எதிரியை வஞ்சம்
தீர்க்காமல் லஞ்சம்
கொடுத்து தஞ்சம்
அடைந்தாய்...
மக்கள் நெஞ்சம்
அடைத்தாய்...
நீர் வாழ்க ! மன்னா  
நீரே எம் அண்ணா  
ஆஹா, அற்புதம் முதுவாங்கி புலவா ! வா ! வாங்கிகொள் உமது பரிசை.
மன்னரே, சற்றுப்பொருங்கள்.
யாரது ஓ... பக்கீரரோ தாங்களும் இங்குதான் இருக்கின்றீர்களா ? கவியில் மயங்கி விட்டேன், ஆதலால் தங்களை காண மறந்து விட்டேன் சொல்லுங்கள் பக்கியாரே...
மன்னிக்க வேண்டும் மன்னா, இந்த கருமியிடம் நான் சற்று உரையாடிய பிறகு பரிசை கொடுக்கலாமே...
காரணம் என்னவோ பக்கி ?
இந்தக் கவியில் பிழை இருக்கிறது.
அப்படியா ? ஹும் தானும் படுப்பதில்லை, தள்ளியும் படுப்பதில்லை... நல்லது தொடங்கட்டும் உமது உரையாடல்கள்.
கருமியே, இந்தக்கவியை எழுதியது....
பால்பாயிண்டு பேனா கொண்டு.
அது எமக்கும் தெரியும், யார் எழுதியது ?
எமது புதல்வன் தமிழ்வாணன்.
எழுதிய தங்களது புதல்வன் தமிழ்வாணன் வராமல் தாங்கள் வருவது ஏன் ?
அவனுக்கு காலில் முள் குத்தி விட்டது நடக்க முடியவில்லை, ஆகவே யாம் வந்தோம்.
கவியின் பொருளை நான் எப்படி  தெரிந்து கொள்வது ?
எமக்குத்தான் தெரியுமே...
எழுதிய உமது மகன் தமிழ்வாணனுக்கல்லவா ! பொருள் தெரியும்.
புலவரே, எழுதியதுதான் புதல்வன், கவிதை என்னுடையது.
நீர் எழுதாமல், உமது புதல்வன் எழுதக்காரணம் ?
எமக்கு கை விரலில் நெகச்சுத்தி ஆகவே எமது புதல்வனை எழுதச் சொன்னோம்.
மகனுக்கு காலில் முள்குத்தி, தந்தைக்கு கையில் நெகச்சுத்தி, ஹும் நன்றாக இருக்கிறது உமது வேஷம்.
யார் வேஷமிடுவது ? அறுபது வயதான நீர், பணிப்பெண்கள் அருகில் நின்று சாமரம் வீசவேண்டும் என்பதற்காக ! வெண்தாடிக்கு கருப்பு டை அடிக்கும் நீரே வேஷதாரி.
புலவர்களே... Don’t talk about personal life கவிதைக்கு வேண்டிய விசயங்களை குறித்து மட்டும் உரையாடுங்கள்.
மன்னியுங்கள் மன்னா, என்னை வேஷமிட்டாய் என்றதால் கோஷமிட்டேன்.
புலவரே, உமது கவியின் ‘’அடைத்தாய்’’ என்பதின் பொருள் என்ன ?
மக்களை தாயைப்போல் அடை + காத் = தாய் என்று பொருள், நம்மை ஆண்டாள் நமது ஆத்தாள், நம்மை காத்தாள் அதாவது... கில்லர்ஜியை போன்ற பாமரர்கள்கூட சொல்வார்களே ’’அம்மா’’ என்று அதைப்போல்.
இல்லவே இல்லை நீர் மன்னரை பெட்டைக்கோழி எனபொருள்பட எழுதியுள்ளீர்... அதாவது மன்னரை பொட்டைப்பயல் என்கிறாய்.
சிவ சிவா என்ன, கொடுமை இது எனது பொருளில் இருளா ?
பக்கீரா, புலவரை வேதனை படவிடாதீர்...  Mr.சிவா எனக்கு சோதனை கொடுத்து விடப்போகிறார்.
நல்லது மண்ணே, புலவரே, எமது மூன்று வினாக்களுக்கும் விடையளித்து விட்டு நீர் பரிசை பெறலாம்.
நானும் தயார்.
சுவைக்க முடியாத காரம் எதுவோ ?
உம்மைப் போன்றவர்களின் அகங்காரம்.
கொள்கை இல்லாத மதம் எது ?
சோம்பேறிகளின், தாமதம்.
ஓட்ட முடியாத கார் ?
உம்மைப்பற்றி நான் மன்னரிடம் கொடுக்கப்போகும் புகார்.
எம்மைப்பற்றி பெட்டிஷனா ? உம்மை பொட்டிப்பாம்பாய் அடக்கி விடுவேன்.
(திடீரென மன்னரின் SAMSUNG செல்லுக்கு அந்தப்புரத்திலிருந்து NOKIA வில் ‘’அந்த’’ அழைப்புக்கு அர்த்தமாய் செல்லிருந்து MISSED CALL வர)
யாரங்கே ? சந்தடி சாக்கில் என்னை மண்ணு என்றும், பொட்டைக்கோழி என்றும் இழிவாக சொல்லி என்னை பழி வாங்கியவர்களை பலி கொடுக்கும் நேரம் வந்து விட்டது, பெட்டியென்றும், பொட்டியென்றும், வெட்டியாக பேசி அவையின் பொன்னான நேரத்தை கட்டிப்போட்ட பக்கீரர், கருமி முத்தன் இருவரையும் ஜட்டியோடு முட்டியில் தட்டிக்கொண்டே... ஆபரேஷன் தியேட்டருக்கு இழுத்துப்போய் தலையை வெட்டி விடுமாறு உத்தரவிடுகிறேன். (உடன் புறப்பட்டார் ’’அந்த’’புரத்தை நோக்கி)

சாம்பசிவம்-
பக்கீரர், கருமி முத்தனைவிட மன்னர் கங்கு தேவன் புலவர் போலவே பேசுகிறாரே... மண்ணே என்று சொன்னதை கப்புனு புரிஞ்சுக்கிட்டாரே... கற்பூரப்புத்தியோ...

சிவாதாமஸ்அலி-
சினிமா காண முடியாத தியேட்டர் எது ?

CHIVAS REGAL சிவசம்போ-
ஆபரேஷன் தியேட்டர்.

வியாழன், மே 14, 2015

கவிதாவின் காவியம்

 

கவியா ? காவியா ?
என் காதலை ஏற்றுக் கொள்ள
கவிதா கேட்டாள் என்னைப்பற்றி ஒரு கவி தா வென்று
கவிதாவுக்கு என்னிடமிருந்து கவிதையா ?
IMPOSSIBLE


எனக்கு என்ன தெரியும் ? சட்டியில் இருந்தால்தானே, ஸ்பூனில் வரும் நானும் சட்டியை கவிழ்த்துப் போட்டு வரண்டி வரண்டி கரண்டியின் ஒரு பகுதி தேய்பிறையானது


வளர்மதி அத்தை பெற்ற முழுநிலவு நீ என்றேன்
அவள் ஒப்புக் கொள்ளவில்லை இது சாக்கு போக்கு என்றாள்

கவியூர் கவியரசன் பெற்ற கவிமகள் நீ என்றேன்
இது எங்க ஊரும், அப்பா பேரும் என்றாள்

கவிதா உன்பெயரே ஒரு கவி என்றேன்.
இது எனக்கே தெரியும் என்றாள்
வேறு வழியின்றி சொன்னேன்
நீ மலடியை புள்ளப் பெக்கச் சொல்றே
இதுக்கு மேலயும் நீ கவிதை கேட்டால் நான்
காவி உடையணிந்து சன்னியாசம் போய் விடுவேன் கவிதா என்றேன்.

கவிழ்ந்தாள் என் கவிதா
அன்று தொடங்கியது என் காவியக்காதல் என் கவிதாவுடன்.
இன்று கவிதா கணவனுடன்
நான் கவிதையுடன்
WITH
காவியுடன்
LITTLE
கவிஞனாய்
காவிரி கரையோரமாய்...


சாம்பசிவம்-

கவிதை தெரியாதுங்கிற விசயத்தை கவிதை மாதிரியே சொல்லி கவிதாவை கவிழ்த்தினே ஆனால் கடைசியிலே உன்னை கவிழ்த்தி விட்டாளே கவியூர்க்காரி.
 
எனது, கனவில் வந்த காந்தி பதிவில் எடுத்தது.

நண்பர்களே... நண்பிகளே... கடந்த இரண்டு தினங்களாக மனது சரியில்லை காரணம்தான் உங்களுக்கெல்லாம் தெரியுமே... கோபத்தில் பதிவு எழுதினேன் பிறகு தோன்றியது வேண்டாமே.... காந்திஜியிடம் கில்லர்ஜி சொன்ன பதிலை மட்டுமே பதிவாக கொடுப்போம் என்று நிறுத்தி விட்டேன் வாழ்க ஜபணநாயகம் புகைப்படத்தை சொடுக்கி மட்டும் பார்க்கவும்.

செவ்வாய், மே 12, 2015

ஐந்தறிவு

மனிதனுக்கு, ஆறறிவு என்ற மனிதன், மிருகங்களுக்கு ஐந்தறிவு என்று கணக்கிட்டான் ஆனால் இந்த மனிதன் காதலை யாரிடமிருந்து கற்றுக் கொண்டான் ? காமத்தை யாரிடமிருந்து கற்றுக் கொண்டான் ?

பறவைகளை பார்த்து காதல் படித்தான், மிருகங்களை பார்த்து காமம் படித்தான், பறவைகள் அருகருகே அமர்ந்து தங்களது அலகால் ஒட்டி உரசி காதல் மொழி பேசுவதை கண்டு, காதல் செய்வது எப்படியென படித்தான், மிருகங்கள் புணைவதைப் பார்த்து தாம்பத்யம் கொள்வது எப்படியென படித்தான், ஆடு மாடுகள், தாவரங்களை உண்பதை கண்டமனிதன் உணவுண்ணும் பழக்கங்களை படித்தான், இந்த வகையில் விஷச்செடி கொடிகளையும் படித்தான், மிருகங்கள் ஒன்றை யொன்று அடித்து சாப்பிடுவதைப் பார்த்த மனிதன் ஆபத்தில்லாத மிருகங்கள், பறவைகளை அடித்து சாப்பிட்டான், மீன்களை பிடிக்க கொக்குகளை பார்த்து படித்தான், பறவைகளை பிடிக்க சிலந்திகளிடமிருந்து வலை பின்னுவதை படித்தான், குழந்தைகளுக்கு உணவூட்டும் முறையை பறவைகளிடமிருந்து படித்தான், வீடு கட்டும் முறையைகூட பறவைகள் கூடு கட்டுவதை பார்த்துதான் படித்தான், காடுகளில் காற்றில் மூங்கில்கள் உரசி தீப்பிடித்து மிருகங்கள் எரிந்தபோது சாப்பிட்ட மனிதன் தீயால் சமைப்பதை கற்றுக்கொண்டான், பறவைகள் தண்ணீருக்குள் தலையை விட்டு ஆட்டுவதை கண்டமனிதன் குளிக்க கற்றுக் கொண்டான்.

பண்டைகால பெண்கள் உடன்கட்டை ஏறினார்களே எப்படி ? யாரிடமிருந்து கற்றுக் கொண்டார்கள் ? சிட்டுக்குருவியை போன்ற ஒருஜாதி வகைப்பறவை (Sorry, I Don't Know that Birds Name) தன் ஜோடிப்பறவை இறந்து விட்டால் மற்ற பறவை, எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயரமாகப்போய் தன்னுடைய இறகுகளை தன்னைத்தானே அணைத்துக் கட்டிக் கொண்டு மேலிருந்து கீழே விழுந்து இறந்து விடும், அதனுடைய அறிவுக்கு எட்டிய தற்கொலை இப்படித்தான், இருப்பினும் இதனைப் பார்த்துதான் தன்னால் பறக்க முடியாது என்பதால் கணவனுக்காக தீயில் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை பெண்கள் படித்துக் கொண்டார்கள் என்பதை விட, படிக்க வைக்கப்பட்டார்கள் என்பதுதான் சரி, காரணம் ஆணாதிக்கம். 

(இந்த பழக்க வழக்கங்களை ஒழித்த பெருமை மரியாதைக்குறிய சுப்பிரமணிய பாரதியார் அவர்களையும், தந்தை பெரியார் அவர்களையும் சிறிய அளவில் சாரும்) 

இத்தனையும் மற்றவைகளிடமிருந்து படித்துக் கொண்ட நன்றி கெட்ட மனிதன் அவைகளுக்கு ஐந்தறிவு என்றும் தனக்கு ஆறறிவு என்றும் போட்டுக் கொள்வது எந்த விதத்தில் நியாயம் ?  பறவைகளும், மிருகங்களும் தன்னிடம் கேள்வி கேட்காது என்ற, தைரியத்திலா...  இது எப்படி இருக்கிறது தெரியுமா ? படிப்பை முடித்து சான்றிதழை வாங்கிக் கொண்டு கல்லூரியை விட்டு வெளியே வரும்போது... ஆசிரியருக்கு, மாணவன் மதிப்பெண் போடுவது மாதிரி இருக்கு.

காணொளி.


ஞாயிறு, மே 10, 2015

அன்னை

 
என் அசைவிற்கு உயிர் கொடுத்த அன்னையே
என் உயிர் உள்ளவரை மறவேன், உன்னையே
உனக்காக, தகனமும் கொடுப்பேன் என்னையே

வெள்ளி, மே 08, 2015

நந்தவனத்து ஆண்டி.


மலை முழுங்கி ஜவுளிக்கடல் கொடைரோடு.
கடையின் உள்ளே ஓரமாக உட்கார்ந்து சேரில் தூங்கி கொண்டு இருந்த கணவன் கண்ணப்பனை தனது சேலைத்தலைப்பைக் கொண்டு சட்டீர், சட்டீரென தட்டிக்கொண்டு இருக்க திடீரென முழித்தவன் கேட்டான்.
 
யேன்டி மாரியம்மா என்ன செய்யிறே ?
மனுஷன் இப்படியா ? தூங்குறது ?
எதுக்கு ? மூஞ்சியிலே சேலையை வச்சு அடிக்கிறே ?
எதுக்கா ? இப்படி ஒரே இடத்துலே உட்கார்ந்து தூங்கினா ? சிலந்தி கூடு கட்டாமல் என்ன செய்யும் ?
சிலந்தியா ? சேலை எடுத்துட்டியா ? இருட்டாயிருக்கு ? மணி என்ன ?
சேலை டிஸைனிங் ஒண்ணும் சரியில்லை நம்ம நந்தவனத்தார் சில்க்ஸ் போவோமா ?
மணி என்னடி ?
8 மணிதான் ஆகுது.
அடியே காலைலே 11 மணிக்கு உள்ளே நுழைஞ்சே இப்ப மணி ராத்திரி 8 ஆச்சு, இதுவரை என்னதான் செஞ்சே ? சேலை டிஸைனிங் சரியில்லைனு சொல்றே ?
ஆமாங்க, நான் கேட்கிற அமலாபால் புடவை இன்னும் வரலையாம்.
அதை காலையிலேயே கேட்டுத்தொலைக்க வேண்டியதுதானே ? ஆமா, அவ கட்டுன புடவையை நீ ஏன்டி கேட்கிறே ? மதியம் சாப்பிட்டியா ? நானும் அசதியிலே தூங்கிட்டேன்.
மதியம் ஜூஸ் கொடுத்தாங்க, பசி எடுக்கலை, நீங்க சாப்பிட்டீங்களா ?
நல்லா இருக்குடி, நீ கேட்கிறது... ஏசி சுகத்துல அப்படியே தூங்கிட்டேன். நீ போக வேண்டியதுதானே காலையிலே எந்திரிச்சு வருவேன்ல.
அப்படித்தான் நினைச்சேன் பர்சு உங்க பேண்ட்க்குள்ளே மாட்டிக்கிருச்சே...
ஏன் ? முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரிங்கிறது மா3 நீயும் என்னை இப்படியே விட்டுப்போயிருந்தா ? சிலந்திக்கு சிலை கொடுத்தாள் மாரினு நாளைக்கு சரித்திரம் சொல்லுமே...
சரி, கலைக்கானம் பேசாமல் சீக்கிரம் கிளம்புங்க நந்தவனத்தார் சில்க்ஸ் போகனும் கடையை பூட்டிருவாங்க...
எதுக்கு ? என்னைக் கொண்டுபோய் ஆண்டி மா3 நிறுத்தி வைக்கவா ?
தொனத்தொனனு பேசாமே கிளம்புங்க...
முதல்லே வீட்டுக்கு கிளம்புடி மணி 8 ஆச்சு எனக்கு பசிக்குது வீட்டுல என்ன வச்சுருக்கே ?
அதெல்லாம் ஒண்ணும் இல்லை ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு கடைக்கு போவோம்.
கடைக்கு நாளைக்கு போகலாம் எனக்கு அசதியா இருக்கு தூங்கனும்.
இன்னைக்கு ஏகாதசிதானே முழிச்சாத்தான் என்ன ?
நல்லாயிருக்குடி உன் நியாயம் ஏகாதசி எதுக்கு ? முழிக்கனும்னு விவஸ்தை தெரியாதவளே நட....டீ வீட்டுக்கு.
உங்களைக் கட்டிக்கிட்டு என்ன ? சுகத்தை கண்டேன்.
இதை நீ சொல்றியா ? நான் அபுதாபியிலே வேலை செய்யும்போதே கம்பெனியிலே வேலை செய்யிற ரெண்டு பிலிப்பைனிகள் சொன்னாளுக நாம கல்யாணம் செய்துக்கிறலாம்னு நாந்தான் கோட்டை விட்டுட்டேன்.
இப்ப மட்டும் என்னவாம் போய் கட்டிக்கிற வேண்டியதுதானே... யாரு ? புடிச்சுக்கிட்டு இருக்கா ?
கட்டிக்கிறலாம்தான் ஆனால் ? அவளுக புருஷன்மாரு ஒத்து வரமாட்டாங்கே...
ஹூம் நானும்தான் எங்க தேவகோட்டை மச்சான் கில்லர்ஜியைக் கோட்டை விட்டுட்டு இப்படி நிக்கிறேன்.
அவனுக்கு நல்லநேரம் உங்கிட்ருந்து தப்பிச்சுட்டான்.
என்னோட கெட்டநேரம் உங்கள்ட்டே மாட்டிக்கிட்டேன்.
ஒண்ணும் மட்டும் உறுதி அவளுகளைக் கல்யாணம் செய்திருந்தா தீபாவளி, பொங்கலுக்கு ஒரு டவுசரும், பனியனும் எடுத்தால் போதும் உன்னைப்போல பட்டுப்புடவை, ஒன்றரை முழத்துக்கு மல்லிகைப்பூ, ரெட்டை வடம் ஜெயினு இதெல்லாம் கேட்க மாட்டாளுக.
ஆமாமா, வீட்ல பட்டு புடவையை கோட்டை போலத்தான் குமிஞ்சு கிடக்கு ஜெயினு வாங்கிட்டாலும் இங்கே ஜெயிலு வாழ்க்கையாத்தான் இருக்கு.
பட்டுக்கோட்டைக்கு போகும் போதெல்லாம் பட்டுப்புடவை எடுக்கலையாடி ? அசோகன் ஆபரண மாளிகையில ஜெயின் வாங்கி தரலை ?
ஆமா, இப்படி குத்திக்காட்டிக்கிட்டே இருங்க...
ஆத்தா, தாயே ஹோட்டல் வந்துருச்சு எனக்கு பசி உயிரை எடுக்குது வாயை மூடிக்கிட்டு பேசாமல் சாப்பிடு.
வாயை மூடிக்கிட்டு எப்படி ? சாப்பிட முடியும் ?
அடடே அறிவுக்கொழுந்து.... வாத்தா நான் வாயை மூடிக்கிறேன்.
 
மன்னிக்கவும், இருவரும் அந்த உயர் தரமான ஹோட்டலின் உள்ளே சென்று Family Roomக்குள் நுழைந்து கதவைச்சாத்திக் கொண்டதால் அவர்கள் இருவரும் அடுத்து என்ன ? பேசினார்கள் 80தை ஒட்டுக்கேட்க முடியவில்லை.
 
குறிப்பு - கடந்த குடை வள்ளல். பதிவுக்கு முனைவர் திரு. B. ஜம்புலிங்கம் அவர்கள் கருத்துரையை போட்டதோடு போகாமல் எனது கழுத்தில் கோடரியை போட்டு விட்டு போன காரணத்தால் அவசரமாக சிந்தித்து எழுதி இன்று வெளியிடுகிறேன் முனைவர் அவர்களே மகாராணிகள் எதிலுமே சிக்க மாட்டார்கள் மகாராஜாக்கள் வேண்டுமானால் ஒட்டடை அடிக்கும் நிலைக்கு தள்ளப்படலாம் இந்நிலை அன்றிலிருந்து இன்றுவரை இப்படித்தான் இந்தப்பதிவை எழுத வைத்தமைக்கு தங்களுக்கு எனது நன்றி இருந்தாலும் இப்படியுமா ? என்னை உடனடியாக கஷ்டப்படுத்துவது ? மறுநாளே எழுதி விட்டேன் 3  தினங்களாக வேலை காரணமாக அபுதாபியில் இல்லை அதனால்தான் யாருடைய பதிவுகளுக்கும் வரவில்லை பின்னூட்டமும் தரவில்லை மன்னிக்கவும் விடுபட்ட அனைத்து பதிவுகளுக்கும் வருவேன்.
 
சாம்பசிவம்-
சிறிய பதிவுக்கு, முனைவர் கொடுத்த சிறிய கருத்துரை அதைவிட பெரிய பதிவை கொடுத்துருச்சே....
சிவாதாமஸ்அலி-
கில்லர்ஜி கூட குடை வ.... ச்சீ கொடை வள்ளல்தான்.
Chivas Regal சிவசம்போ-
நாமலுந்தான் கடைக்குப் போறோம் இவ்வளவு நேரமா ? காசைக் கொடுக்குறோம் எடுத்து வைக்கிறான் மறுநிமிஷம் வெளியே வந்துடுறோம்.
காணொளி