ஏனோ தெரியவில்லை சமீபகாலமாக
எனக்கும் ஆசைகள் துளிர் விடுகின்றது அவை இதோ...
மானிடர்கள் இல்லாத இடத்தில்
புல்லாங்குழலிசை கேட்கஆசை,
இப்பூவுலகில், பொய் பேசாத மானிடரை காணஆசை,
படித்தவர்கள் மட்டும் எனது இந்தியாவை ஆள்வதை காணஆசை,
நாடகம் இல்லாத தொலைகாட்சி அலைவரிசைகளை காணஆசை,
வரதட்சிணை இல்லாத திருமணங்கள் நிகழ்வதை காணஆசை,
தாலியை கழட்டி எறியும் காட்சிகளில்லாத
திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களை காணஆசை,
விளம்பரங்களில்லாத தொலைக்காட்சி அலைவரிசைகளை
காணஆசை,
விலைவாசிகள் பழைய நிலைக்கு வரக்காணஆசை,
திரைப்படங்களில் கசாநாயகன் 56 நபர்களை அடித்து வீழ்த்தும் போதும் கை தட்டாத ரசிகர்களை
காணஆசை,
அரபு நாட்டு பலசட்டங்கள் எனது இனிய இந்தியாவில் நிறைவேற்றுவதை காணஆசை,
பூமிகள் அனைத்தும் அரசாங்கத்திற்கு மட்டுமே
சொந்தமாக்க சட்டம் கொண்டு வரஆசை,
வெளிநாட்டு வங்கிகளில் கணக்குகள் வைக்க தடை செய்ய
சட்டம் கொண்டு வரஆசை,
ஒரே தரத்தில் மட்டுமே உணவுப்பொருட்கள்,
மருந்துகள் தயாரிக்க சட்டம் கொண்டு வரஆசை,
குடும்பத்தில் ஒருநபர் ராணுவத்தில் வேலை செய்வதை
கட்டாயமாக்க சட்டம் கொண்டு வரஆசை,
லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் மணிக்கையை வெட்ட
சட்டம் கொண்டு வரஆசை,
திருடுபவர்களின் கை விரல்களை மட்டும் வெட்ட
சட்டம் கொண்டு வரஆசை,
கூட்டுக் குடும்பத்தை கட்டாயமாக்க சட்டம் கொண்டு
வரஆசை,
பிரம்மச்சாரிகள் அரசியலுக்குள் பிரவேசிக்க
முன்னுரிமையாக்க சட்டம் கொண்டு வரஆசை,
ஜனாதிபதி தொடங்கி, வார்டு உறுப்பினர்கள் வரை
கல்வி முறையில் பரீட்சை வைத்து தேர்வுசெய்ய சட்டம் கொண்டு வரஆசை,
அரசில்வாதிகளிடமும், சினிமாகாரர்களிடமும், கிரிக்கெட் வீரர்களிடமும், போலிச் சாமியார்களிடமும், ஏலச்சீட்டு ஏமாற்று பேர்வழிகளிடமும் ஏமாறாத என் இனத் தமிழனையும், தமிழச்சியையும் காணவும் ஆசை,
இன்னும் இதைப் போலவே...
சாம்பசிவம்-
நிறுத்துமய்யா இருந்தாலும் உமக்கு
பேராசைதான்.




