ஏனோ தெரியவில்லை சமீபகாலமாக
எனக்கும் ஆசைகள் துளிர் விடுகின்றது அவை இதோ...
மானிடர்கள் இல்லாத இடத்தில்
புல்லாங்குழலிசை கேட்கஆசை,
இப்பூவுலகில், பொய் பேசாத மானிடரை காணஆசை,
படித்தவர்கள் மட்டும் எனது இந்தியாவை ஆள்வதை காணஆசை,
நாடகம் இல்லாத தொலைகாட்சி அலைவரிசைகளை காணஆசை,
வரதட்சிணை இல்லாத திருமணங்கள் நிகழ்வதை காணஆசை,
தாலியை கழட்டி எறியும் காட்சிகளில்லாத
திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களை காணஆசை,
விளம்பரங்களில்லாத தொலைக்காட்சி அலைவரிசைகளை
காணஆசை,
விலைவாசிகள் பழைய நிலைக்கு வரக்காணஆசை,
திரைப்படங்களில் கசாநாயகன் 56 நபர்களை அடித்து வீழ்த்தும் போதும் கை தட்டாத ரசிகர்களை
காணஆசை,
அரபு நாட்டு பலசட்டங்கள் எனது இனிய இந்தியாவில் நிறைவேற்றுவதை காணஆசை,
பூமிகள் அனைத்தும் அரசாங்கத்திற்கு மட்டுமே
சொந்தமாக்க சட்டம் கொண்டு வரஆசை,
வெளிநாட்டு வங்கிகளில் கணக்குகள் வைக்க தடை செய்ய
சட்டம் கொண்டு வரஆசை,
ஒரே தரத்தில் மட்டுமே உணவுப்பொருட்கள்,
மருந்துகள் தயாரிக்க சட்டம் கொண்டு வரஆசை,
குடும்பத்தில் ஒருநபர் ராணுவத்தில் வேலை செய்வதை
கட்டாயமாக்க சட்டம் கொண்டு வரஆசை,
லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் மணிக்கையை வெட்ட
சட்டம் கொண்டு வரஆசை,
திருடுபவர்களின் கை விரல்களை மட்டும் வெட்ட
சட்டம் கொண்டு வரஆசை,
கூட்டுக் குடும்பத்தை கட்டாயமாக்க சட்டம் கொண்டு
வரஆசை,
பிரம்மச்சாரிகள் அரசியலுக்குள் பிரவேசிக்க
முன்னுரிமையாக்க சட்டம் கொண்டு வரஆசை,
ஜனாதிபதி தொடங்கி, வார்டு உறுப்பினர்கள் வரை
கல்வி முறையில் பரீட்சை வைத்து தேர்வுசெய்ய சட்டம் கொண்டு வரஆசை,
அரசில்வாதிகளிடமும், சினிமாகாரர்களிடமும், கிரிக்கெட் வீரர்களிடமும், போலிச் சாமியார்களிடமும், ஏலச்சீட்டு ஏமாற்று பேர்வழிகளிடமும் ஏமாறாத என் இனத் தமிழனையும், தமிழச்சியையும் காணவும் ஆசை,
இன்னும் இதைப் போலவே...
சாம்பசிவம்-
நிறுத்துமய்யா இருந்தாலும் உமக்கு
பேராசைதான்.
உங்கஆசையும் பேராசையும் கண்டிப்பாநிறைவேறாதுன்னு படித்து முடித்த பிறவு தெரிஞ்சுபோச்சு....
பதிலளிநீக்குவருக நண்பரே இப்படிக்கூட ஆசைப்படக்கூடாதா ?
நீக்குஎதுக்கும் சரவணா ஸ்டோர்ஸில் கேட்டுப் பாருங்கள் அங்குதான் World class shopping என்கிறார்கள் .
பதிலளிநீக்குவாங்க நல்லவேளை சொன்னீங்க இவ்வளவு நாளா இடம் தெரியாமல் எங்கெங்கோ அலைந்து விட்டேன் தகவலுக்கு நன்றி
நீக்குசின்னச்சின்ன ஆசைகள்!
பதிலளிநீக்குஆம் நண்பரே சின்ன ஆசைகளே...
நீக்குநல்லா ஆசைப்பட்டீங்க போங்க.... உங்கள் ஆசைகளில் சில எனக்கும் அவ்வப்போது எட்டிப் பார்க்கும்.... ஆனாலும் ஆசையே துன்பத்திற்குக் காரணம்னு படிச்சுப் படிச்சு சொல்லிட்டதாலே ஆசைகளைத் தள்ளி வைத்திருக்கிறேன்.....
பதிலளிநீக்குபிறர் வாழ ஆசைப்படுவோம் ஜி
நீக்குகனவு காணுங்கள். நம்முடைய தலைமுறையில் இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் இக்கனவுகள் மெய்ப்படலாம்.
பதிலளிநீக்கு--
Jayakumar
வருக நண்பரே ஆறுதலான வார்த்தை சொன்னீர்கள் நமது சந்ததிகளுக்காக.... ஆசைப்பட்டேன்
நீக்குஜக்கியின் சீடரா நீங்கள் ?அவர்தான் சொல்லுவார் 'அத்தனைக்கும் ஆசைப் படு 'என்று :)
பதிலளிநீக்குவாங்க ஜி நமது ஆசைகளாவது உயர்வாக இருக்கட்டுமே...
நீக்குசின்னச் சின்ன ஆசைகளில் சில நிறைவேறி இருக்கிறதே உ-ம் பொய் சொல்லாத மனிதர்
பதிலளிநீக்குவாங்க ஐயா நான் பிறரைக்காணவே ஆசைப்படுகின்றேன்....
நீக்குஅருமையான விருப்பங்கள் (ஆசைகள்)
பதிலளிநீக்குபெருமையுடன் பேசிக் கொள்வோம்
கில்லர்ஜி அவர்களும் - வருநாளில்
எல்லோரும் வாக்களித்தால்
இந்தியப் பிரதமர் ஆகலாம்!
வருக நண்பரே அப்படியொரு நிலை கண்டிப்பாக வராது நண்பரே
நீக்குஅங்கே அபுதாபியில் - ரமலான் விடுமுறையின் தூக்கத்திலிருந்து இன்னும் விழிக்கவில்லையா!..
பதிலளிநீக்குஅரபு நாட்டு சட்டம்.. அரபு நாட்டு தண்டனை!..
எல்லாரும் சொல்கின்றார்கள் என்றால் நீங்களுமா?...
இங்கே சிக்னலில் நிற்காமல் செல்லும் இந்த நாட்டுக்காரனை விட்டு விட்டு பின்னால் வரும் -
உலகநாதனை ஓவர் ஸ்பீடு என்று சொல்லி பிடித்துக் கொள்கின்றான்..
இன்னும் இங்கே கள்ளச்சாராயம் ஓய்ந்தபாடில்லை..
அப்புறம் என்ன அரபு நாட்டுச் சட்டம்?!..
வாங்க ஜி தாங்கள் சொல்வதும் ஒருவகையில் சரிதான் இன்றைய நிலை மாறித்தான் விட்டது மஜாஜ் சென்டர் என்ற பெயரில் அனுமதி கொடுத்து எல்லாம் சட்டத்தின் அனுமதியோடு நடந்து கொண்டுதான் இருக்கின்றது
நீக்குஇதை நேத்தே பார்த்துக் கருத்துச் சொல்லி இருந்தேனே! காக்காய் ஆசைப்பட்டுத் தூக்கிண்டு போச்சா?
பதிலளிநீக்குஉங்களுடைய ஆசைகள் நிறைவேற வாழ்த்துகள்.
கருத்துரை வரவில்லையே...
நீக்குவிலைவாசிகள் பழைய நிலைக்கு வரவே வராது! ரூபாயின் மதிப்புக்கு ஏற்றபடி விலைவாசி ஏறும், இறங்கும். ஆழ்ந்து பார்த்தால் முன்னர் இருந்ததுக்கும் இப்போதுள்ள விலைவாசிக்கும் அதிகம் வித்தியாசம் தெரியாது!
பதிலளிநீக்குதங்களது கருத்துரைக்கு நன்றி
நீக்கும்ம்ம் இந்த ஆசைகள் எல்லாம் நம் எல்லோரது மனதிலும் அவ்வப்போது எட்டிப் பார்ப்பவைதான். ஆனால் சின்னச் சின்ன ஆசை என்று பாட முடியாத அளவிற்கு படா படா ஆசைகள்...புத்தர் பிறந்த நாடப்பா இது. இதற்காகாத்தானே ஆசைப்பட்டாய் என்று பாட முடியாத நிலை...ஹும்
பதிலளிநீக்குநானும்கூட புத்தரைப்போல வாழ ஆசைப்படுபவன்தான்
நீக்குஇப்படி பலூன் ஊதி ஊதி பெருசு பண்ணீங்கன்னா வெடிக்சுரும்ம்ம்
பதிலளிநீக்குஇது நடக்காது என்று தெரிந்தேதான் பலூன் படம் போட்டேன்
நீக்குஅனைத்துக்கும் ஆசை படு என்று யாரோ சொன்னதை படித்தேன்.
பதிலளிநீக்குநீங்கள் ஆசை பட்டத்தில் அனைத்தும் நடக்க வில்லை என்றாலும் சிலஆசைகள் நடக்கும்.
வாழ்த்துக்கள்.
ஆறுதல் வார்த்தைகள் சொன்னமைக்கு நன்றி
நீக்குஆசைப்படாதவர்கள் மனிதர்களே இல்லை. நாம் இன்னும் ஆசைப்படலாம், தவறில்லை. ஆனால் அது ஒரு வரையறைக்குள் அமைவது நலம்.
பதிலளிநீக்குமுனைவர் சொல்வதைப் பார்த்தால் இது பேராசையோ.....
நீக்குஅருமையான ஆசைகள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குமுதலாவது ஆசையை தனியாக அமர்ந்து நிறைவேற்றிக்கொள்ளலாம்!
பதிலளிநீக்குஐந்தாவது ஆசை அவ்வப்போது நடந்தேறிக்கொண்டு தானிருக்கிறது!
உங்களின் பத்தாவது ஆசை எனக்கும் எப்போதும் உண்டு. அரபு நாட்டு சட்ட திட்டங்களைப்பார்த்ததிலிருந்து 40 வருடங்களாகவே இருந்து கொண்டு தானிருக்கிறது! நிறைவேறுமா என்பதும் சந்தேகமே!!
13, 15, 17 மூன்றும் மிக அருமை!
வருக சகோ தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி
நீக்குஒரே தரத்தில் உணவும், மருந்தும் தயாரித்தால் மக்கள் நலமுடன் வாழ்வார்கள்தானே....?
// மனிதர்கள் இல்லாத இடத்தில் புல்லாங்குழல் கேட்க ஆசை// ஒரு முறை ஒரு தோழியிடம், "நான் கடற் கரையில் அமர்ந்து கொண்டிருக்க,தூரத்தில் வாசிக்கப் படும் நாதஸ்வர இசை மிதந்து வந்து என் காதில் விழ வேண்டும்" என்று சொன்னேன். அதற்கு அவள் "இதெல்லாம் வேற" என்று என்னை பைத்தியத்தை பார்ப்பது போல பார்த்தாள். உங்கள் நிலையை நினைத்தால் கவலையாக இருக்கிறது.
பதிலளிநீக்குமற்றபடி எல்லாமே நல்ல ஆசைகள்தானே என்றாவது ஒரு நாள் நடக்கலாம்.
ஐந்து வருடத்திற்கு முன்பு ஒரு தொலைக்காட்சி தொடர் அதில் தொடக்கத்தில் பாரதியைக் காண்பித்த பிறகே பாரதியின் பாடலோடு தொடர் ஆரம்பிக்கும் நான் நினைத்தேன் இயக்குனர் பாரதியின் பிரியர் என்று
நீக்குஒருநாள் ஒரு வசனம் தொடரைக் காணாத நான் அன்று மட்டும் எதேச்சையாக கண்டேன்
//எனக்கு கவிதை படிக்கிறதும், பைத்தியத்தோடு பேசுவதும் ஒன்றுதான்//
இதைக்கேட்டதும் எனக்கு கோபம் வந்து விட்டது காரணம் என்ன தெரியுமா ? இவன் எதற்கு தினம் பாரதியை காண்பிக்கின்றான் உடன் அந்த தொடர் நிறுவனத்துக்கு கடுமையாக திட்டி மின்னஞ்சல் அனுப்பினேன் இந்தக்கொள்கை உள்ள நீ பாரதியை காண்பிக்க கூடாது என்று பதில் வரவே இல்லை
வணக்கம்
பதிலளிநீக்குஜி
இந்த ஆசைகள் இந்தியாவில் நிறைவேறுமாக இருந்தால் நாட்டு மக்கள் திருந்த வாய்ப்பு அதிகம்... த.ம 7
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆயுதப்பூ சிறுகதை நூல் வெளியீடு.-மலேசியா-சிங்கப்பூர...:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆம் நண்பரே நிறைவேற்றினால் நலம்.
நீக்குஇந்த ஆசைகள் எல்லாம் நிறைவேறினால் இந்தியா முன்னேறிவிட்டது என்று அர்த்தம்!
பதிலளிநீக்குஉண்மைதான் நண்பரே வருகைக்கு நன்றி
நீக்குஅருமையான கனவு, தூக்கத்தில் பேசும் வியாதி இவ(கில்ல)ருக்கு இருப்பதை நண்பர்களே யாரும் இவரிடம் சொல்லி விடாதீர்கள்.
பதிலளிநீக்குகோ
வருக நண்பரே இது உங்களுக்கும் தெரி(ளி)ஞ்சு போச்சா ?
நீக்குஉங்கள் ஆசைகள் நியாயமானவைகள் தான். ஆனால் நிறைவேறுவது கடினமாயிற்றே!
பதிலளிநீக்குவருக நண்பரே நியாயமானவை எப்பொழுதுமே கடினமானவைதான்.
நீக்கு