தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஜூலை 09, 2017

சாலை விதிகளை மறப்போம் ?

(தேவகோட்டை தியாகிகள் ரோடு சிக்னலில் நிற்கும் போது எடுத்தது)

சாலை விதிகளை மதிப்போம் விபத்தினை தடுப்போம்

இது எனக்கு நீங்களோ உங்களுக்கு நானோ சொல்லும் வார்த்தை அல்ல

அரசாங்கம் வாகன ஓட்டுனர்களின் நன்மைக்காக சொல்வது போல் சொல்லும் தாரக மந்திரம். ஆனால் இப்படிச் சொல்லும் அரசாங்கமே ரோட்டின் எலக்ட்ரோனிக் சிக்னல்களில் விளம்பர வருமானத்திற்கு ஆசைப்பட்டு விளம்பர பலகைகள் வைப்பதற்கு அனுமதிக்கின்றது இதில் பல இடங்களில் திரைப்பட நடிகைகளின் ஆபாச படங்கள், இதனால் வாகன ஓட்டுனர்களின் கவனம் சிதறி பல விபத்துக்கள் நடந்து இருக்கிறது.

இதைத் தடுக்க நமது அரசு சட்டம் கொண்டு வருமா ?
வரும்.
வரும்.
வரும்.
வரும்.
வரும்.


கடந்த பதிவு வாழ்க வளமுடன் பேருந்தின் வாசலில் நிற்பது யார் ? என்ற கேள்விக்கு சரியாக பதில் தந்த பதிவர்களின் பெயர்கள்


முதலாவதாக திரு. வெங்கட் நாகராஜ் ஜி அவர்கள் நடத்துனர் என்று சரியான விடையை தந்துள்ளார்கள்.

இரண்டாவதாக திரு. ஸ்ரீராம் ஜி அவர்கள் நடத்துனர்தானே ? என்று ஐயப்பாட்டை வைப்பதோடு திரு. ராதாரவி அவர்களின் தம்பி ஜாடையில் இருக்கிறார் என்று மறைந்த நடிகவேள் எம். ஆர். ராதா அவர்களது குடும்பத்தில் குழப்பத்தையும் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்த முயன்று இருக்கின்றார் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மூன்றாவதாக திரு. நெல்லைத் தமிழன் அவர்கள் கண்டக்டர் நீங்களோ ? என்று கேட்டு இருக்கிறார் நல்லவேளை அவர் என்னை கண் டாக்டர் என்று சொல்லவில்லை

நான்காவதாக திரு. பசி பரமசிவம் அவர்கள் நடத்துனர் என்று ஆணித்தரமாக சரியான விடையை சொல்லி இருப்பதோடு நடத்துனர் அவரது ஊர் நாமக்கல் என்றும் பக்கத்து வீட்டுக்காரர் என்பதும் சிறப்பு

ஐந்தாவதாக திருமதி. கோமதி அரசு அவர்கள் நடத்துனர் அல்ல என்றும் வேறு பேருந்தின் நடத்துனரோ என்று கேள்வி எழுப்பியுள்ளதால் இதை சரியான விடையாக விழாக்கமிட்டி ஏற்றுக்கொள்ளாது

ஆறாவதாக திரு. வே. நடனசபாபதி அவர்கள் ஓட்டுனரையே நடத்துனராக நிற்கச் சொல்லி படம் எடுத்து இருப்பதாக சொல்லி இருக்கிறார் பேருந்தில் ஓட்டுனரும் இருக்கின்றார் அவரது கையில் கட்டி இருக்கும் டைடன் கடிகாரம் காலை 9.15-ஐ காண்பிக்கிறது புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்தால் தெரியும் ஆகவே இது சரியான விடையாகாது என விழாக்கமிட்டி தீர்மானிக்கிறது

ஏழாவதாக திருமதி. பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்கள் நடத்துனர்தானே என்று கேள்வி கேட்பது முறையாகாது இங்கு தேவை பதில் மட்டுமே

எட்டாவதாக திரு. பகவான்ஜி அவர்கள் அது நானில்லை என்று சொல்லி இருப்பதை புறக்கணிக்கிறது விழாக்கமிட்டி

மேற்கண்ட எட்டு பதிவர்களும் தங்களது நெட்பேங்கின் கணக்கு எண் மற்றும் கடவுச்சொல் இரண்டையும் கில்லர்ஜியின் மின்னஞ்சலுக்கு உடனடியாக அனுப்பி வைக்கவும் இதில் தவறாக விடை சொன்னவர்களின் கணக்கிலிருந்து தலா ஆயிரத்து நானூற்றி பதினேழு ரூபாய் மட்டும் பிடித்தம் செய்து சரியாக விடை சொல்லிய திரு. வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு முதல் பரிசாக நூற்றி அறுபத்தி ஐந்து ரூபாயும், இரண்டாவது பரிசாக திரு. பசி பரமசிவம் அவர்களுக்கு நூற்றி நாற்பத்தி ஆறு ரூபாயும் பரிசளித்து மூன்றாவது பரிசு பெறுவதற்குறியவர்கள் இல்லாத காரணத்தால் பாக்கி சில்லறையை மட்டும் விழாக்கமிட்டியாளர்களால் எடுத்துக் கொள்ளப்படுகிறது பரிசுப்பணம் விரைவில் அனுப்பி வைக்கப்படும்

முதல் பரிசு பெறுபவர்
இரண்டாவது பரிசு பெறுபவர்
விழாக்கமிட்டி நிர்வாகிகள்


சரியாக பதில் சொன்ன இரு பதிவர்களுக்கு வாழ்த்துகளும் இந்த மலர்ப்படுக்கையும் விழாக்கமிட்டியாளர்களால் வழங்கப்படுகிறது
கில்லர்ஜி

48 கருத்துகள்:

  1. ஆஹா..என்னன்னமோ நடந்துருக்கே...
    இனி வருவேன் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே ஏற்கனவே தொடர்ந்திருந்தால் பரிசுகள் பல பெற்று இந்நேரம் "பிக்பாஸ்" ஆகி இருக்கலாம்.

      நீக்கு
  2. எனக்கு நெட் பேங்க் கணக்கு இல்லை....எஸ்கேப் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பக்கத்து வீட்டுக்காரரிடம் வாங்கி அனுப்புங்க ஜி

      நீக்கு
  3. ஹை! நாங்க விடையே சொல்லலையே...அப்ப எங்க அக்கவுண்ட் ஸேஃப்!!ஹிஹிஹி..விடை நடத்துனர் தான் இதென்ன கேள்வினு சொல்ல வரதுக்குள்ள நெட் போச்சு!!! போச்சே போச்சே!!! வடை போச்சே..ஹஹஹ்..

    அதென்ன விழாகமிட்டி எல்லாரும் ஒரே போல மொட்டை பாஸா இருக்காங்களே ஹஹஹ்

    பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!!!!


    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தப்பித்து விட்டீர்கள்

      கமிட்டி நிர்வாகிகள்தான் தலைவர், செயலாளர், பொருளாளர்

      நீக்கு
  4. சாலை விதிகளா??!!! ஹஹாஹ் அப்படினு ஒன்னு இருக்கா?? நீங்க அபுதாபில இருக்கீங்களா இந்தியாவுல இருக்கீங்களா?!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பல நேரங்களில் இங்கு குழம்பி நிற்கிறேன்.

      சிவப்பு விளக்கு எரிகிறது, போலீஸ்காரர் தடுத்து சைகை காண்பிக்கிறார், ஆனாலும் நான்கு புறமும் வாகனங்கள் செல்கிறது நான் மட்டும் குழம்புகின்றேன்.

      நீக்கு
  5. ஹாஹா... ஸ்விஸ் பேங்க் அக்கவுண்ட் நம்பர் தரவா? :)

    சாலை விதிகளை மதிப்போம் என்று சொல்லும் அரசாங்கமே இப்படி பதாகைகள் வைக்க அனுமதிப்பது கண்டித்தக்கது என்றாலும் எதிலும் காசு பார்க்கும் அவர்களை ஒன்றும் சொல்வதிற்கில்லை.....

    நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஸ்விஸ் நம்பரா ? பரவாயில்லை உங்களுக்காக விழாக்கமிட்டி அனுமதிக்கிறது.

      உண்மை எப்படியாவது அரசுக்கு வருமானம்

      நீக்கு
  6. பணம் சம்பாதிக்கிற வழிகளில் இதுவும் ஒன்றா? இதுவரை எனக்குத் தெரியாமல்போய்விட்டதே. இனி பிளாக் ஆரம்பித்து எல்லோரிடமும் வங்கிக்கணக்கும் பாஸ்வேர்டும் கேட்டுவிடவேண்டியதுதான்.

    நீங்கள் உங்கள் இடுகைக்கான ஆதாரமாக 'திரைப்பட நடிகைகளின் ஆபாசப்படங்கள்' இருக்கும் விளம்பரப் பலகைகள் எதையும் காண்பிக்காததால் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள வாசகர்கள் சங்கம் மறுக்கிறது. த ம போட்டாச்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. நாலுகாசு பார்க்க நினைத்தால் உடனே போட்டியா ?

      நண்பரே அரசு செய்யும் தவறை நானும் செய்யலாமா ? அது தவறு.

      நீக்கு
  7. வக்கிரமான சுவரொட்டிகளைக் கூட கடந்து விடலாம்..

    சென்னையில் தங்கியிருந்த சில தினங்களில்
    சாலையின் இருமருங்கிலும் கண்ட காட்சிகள்!?..

    விஷயத்தைச் சொன்னால் -
    இது தான் வசதி.. என்று எதிர்த்து வருவார்கள்!..

    வேண்டாம் ஜீ!.. என்னை விட்டு விடுங்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      தவறுகளின் உண்யைகளை வெளிப்படுத்துவதில் தவறில்லை வருகைக்கு நன்றி ஜி

      நீக்கு
  8. ​வெங்கட்டை வழிமொழிந்தும் எனக்குப் பரிசில்லையா? அய்யகோ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் ஜி விடையை மட்டும் நேரடியாக சொல்லவேண்டும் என்பது கமிட்டியின் விதிமுறை.

      நீக்கு
  9. ஹெல்மெட் இல்லாமல் போலீசார் போகலாம். மூன்று பேர்களாக அவர்களே இருசக்கர வாகனத்தில் பயணிக்கலாம். சாலையில் போவோரை வசூலுக்கு நிறுத்தினால் அவர்கள் நிற்காமல் போனால் கைத்தடியை ஓடும் வண்டியின் சக்கரத்தின் இடையே நுழைத்து விபத்துக்குள்ளாக்கலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை ஸ்ரீராம் ஜி இவ்வகை புகைப்படங்களை நான் பார்த்து இருக்கிறேன் இது எந்த சட்டத்தில் இருக்கிறது அவர்களுக்கே வெளிச்சம்.

      நீக்கு
  10. நல்லவேளையா நான் விடை சொல்லலை. அந்தக் கேள்வியையே பின்னூட்டம் எழுதறச்சே மறந்துட்டேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தப்பித்து விட்டீர்கள் 1417.00 ரூபாய் மிச்சப்படுத்தி விட்டீர்கள்

      நீக்கு
  11. நடத்துனர் இல்லை, என்று சொன்னதால் வேறு பஸ் நடத்துனர் என்றேன்.

    எப்படியும் அவர் நடத்துனர் தான். பரிசு இல்லையென்றால் என்ன ? பதிவில் என் பேர் இடம் பெற்று விட்டது.

    சாலைவிதிகளை மதிப்போம்.

    பதிலளிநீக்கு
  12. தப்பித்து விட்டேன் ஜி... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  13. வருக சகோ இருப்பினும் உங்களுக்கு ரூபாய் 1417.00 நஷ்டம்தானே...

    பதிலளிநீக்கு
  14. சாலைகளில் barricade வைத்து சமீபத்தில் நிறைய விபத்துக்கள் நடந்ததை பற்றி படிக்கிறோம். 'ஏதோ என்னால் முடிந்தது' என்பது போல் அரசாங்கம் செய்யும் காரியங்கள்தான் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை நண்பரே மக்கள் எதையும் தாங்குவார்கள் தங்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  15. ஓட்டுனரின் உள்ளங்களை
    சிதற விட்டு
    விபத்தை ஏற்படுத்த உதவும்
    தெருவெளிக் கவர்ச்சிப் படங்களை
    தடுக்கவொரு தடைச்சட்டம் எப்போ?

    பதிலளிநீக்கு
  16. ஆகா. இன்று முதல் தாங்கள் பேனர்'ஜி' என்று அழைக்கப்படுவீராக.

    பதிலளிநீக்கு
  17. சட்டம் வராது .அப்படி வந்தாலும் அது பாமரனுக்குத்தான் அரசுக்கு கிடையாது.....போட்டி அறிவிப்பு முன்பே யான் செவ்வாய் கிரகித்திற்கு பணி விசயமாக சென்றுவிட்டதால்..போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போட்டியில் கலந்து கொள்ளாதது மகிழ்ச்சியா ?

      செவ்வாய்கிழமை போயிட்டு புதன்கிழமையே வந்துட்டீங்களே...

      நீக்கு
  18. உண்மைதான் நண்பரே
    சாலையோர விளம்பரப் பதாகைகள் கவனத்தைச் சிதற அடித்து
    விபத்தினை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்ததுதான்
    தம +1

    பதிலளிநீக்கு
  19. விதின்னு இருந்தாலே அதை மதிக்கக்கூடாதுன்னு நம்ப ரத்தத்திலேயே ஊறிப்போய் கிடக்கு

    பதிலளிநீக்கு
  20. ஓட்டு ஏற்கனவே போட்டுட்டீங்கன்னு பொய் சொல்லுது. என்னன்னு தெரில.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெட்க உணர்வுள்ள ஆறறிவு மனுசனே பொய் சொல்றான் மிஷின்தானே விடுங்க சகோ.

      நீக்கு
  21. வம்புக்கு நான போவதில்லை!

    பதிலளிநீக்கு
  22. நாம் மாறமாட்டோம், மாற்றிக்கொள்ளமாட்டோம் என்பதே உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை முனைவரே தவறுகளின் தொடக்கம் மக்களிடமே...

      நீக்கு
  23. ஆகா...எனக்கு இரண்டாம் பரிசா! மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!!

    சட்டம் வரட்டும். சாலை விதிகளை மிதித்து...மன்னிக்கவும், மதித்து நடப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சட்டம் இனிமேலாவது வரட்டும் நண்பரே

      நீக்கு
  24. பதிலே சொல்லாதவர்களுக்கு பரிசு என்னும்பேச்சுக்கே இடமில்லை விபத்துகள் நிகழ்வதில்லை நிகழ்த்தப் படுவது என்று எங்கோ படித்த நினைவு ஜீ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா தடுப்பு நடவடிக்கை இல்லாதபோது தவறுகளை ஊக்கு விப்பதாகத்தானே அர்த்தம்.

      நீக்கு
  25. தவறாக விடை சொன்னவர்களின் கணக்கிலிருந்து ரூபாய் 1417 பிடித்தம் செய்வதாக சொன்ன விழாக்குவினர், சரியான விடையை சொன்ன இருவருக்கு வெறும் 165 & 146 ரூபாய்கள் மட்டும் தருவது எந்த விதத்தில் நியாயம்? இது தப்பாட்டம் என்பதால் நான் எனது வங்கிகணக்கு விவரத்தைத் தரவில்லை!

    சாலை விதிகள் என்பது பொது மக்களாகிய நமக்கு மட்டும் அரசுப் பேருந்து ஓட்டுனர்களுக்கு அல்ல. சமீபத்தில் சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தத்திற்குள் அசுரவேகத்தில் நுழைந்து வேகத்தடை மீது ஏற்றியதால் ஒரு பெண்மணி (அவரும் அரசு ஊழியர்) பலியானார் என்பதை நாளிதழில் படித்திருப்பீர்கள். இந்த மாதிரி ஓட்டுனர்கள் இருந்தால் சாலை விதியாவது ஒன்றாவது.

    பதிலளிநீக்கு
  26. ஆஹா 1977-ல் திரு. கருணாநிதியிடம் ஒருஆள் கணக்கு கேட்டதுபோல் ஆகி விட்டதே...

    முதலில் ஓட்டுனர் உரிமம் பெறுவதிலேயே நமது குழறுபடிகள் தொடங்கி விடுகிறது நண்பரே பணத்தை தள்ளினால் வீட்டிலிருந்தபடியே பெறமுடிகிறது என்ன செய்வது ?

    பதிலளிநீக்கு