தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், அக்டோபர் 10, 2018

சாத்தான்குளம், சாமியார் சாரங்கபாணி


இப்பதிவின் முந்தைய தொடர்ச்சிகளை படிக்க கீழே சொடுக்குக...

மராத் லைசென்ஸ் இண்டர்நேஷனல் லைசென்ஸுக்கு இணையானது இதை வைத்து நான் ஜெர்மனி, ஒமான் நாடுகளில் விசிட்டிங்கில் ஓட்டியிருக்கிறேன். அதன் பிறகு கார் வாங்குவதற்காக ஆறு மாதம் காத்திருந்தேன் காரணம் லைசென்ஸ் எடுத்து ஆறு மாதங்களுக்குள் ஏதாவது சிறிய விபத்து நடந்தாலும் லைசென்ஸ் மீண்டும் பறிக்கப்பட்டு ஸ்கூலில் போய் படித்து வா என்று அனுப்பி விடுவார்கள் பிறகு கார் வாங்கி ஓட்டிய பிறகுதான் நம்மிடமும் இவ்வளவு திறமை இருக்கின்றதே... என்ற நம்பிக்கை வந்தது காரணம் நான் சிறிய வயதில் நாற்பது K.M வேகத்தில் நடைவண்டி ஓட்டியவன்.

சமீப காலமாக ஒரு புது வியாதி மலையாளிகளால் இந்த நாட்டில் பரவி வருகிறது இதை ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் ? அறிவாற்றல்தான் நான் எப்பொழுதுமே சொல்வதுபோல மலையாளிகள் அறிவாளிகளே ஆனால் அதை நன்மைகளுக்கு பயன் படுத்த மாட்டார்கள் என்பது எனது ஆணித்தரமான கருத்து அதை பதிவு செய்யவே இந்த விழிப்புணர்வு பதிவு மற்றபடி எனக்கு யாரிடமும் காழ்ப்புணச்சி அல்ல !

இங்கு டிரைவிங் பழகி சரியானபடி ஓட்டிக் காண்பித்தாலே லைசென்ஸ் பெறமுடியும் இதில் மாற்றமில்லை இங்கு போலீசாரிடம் லஞ்சம் செல்லுபடியாகாது இந்நாட்டு மக்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும் அதனுள் பேசுவதற்கு இடமில்லை (கப்சிப்) டிரைவிங் பழகிக்கொண்டு இருப்பவர்களை சிலர் கணக்கெடுத்து அவர்களிடம் பணம் கொடு நம்மகிட்டே ஆள் இருக்கு ஒரே தடவையில் பாஸாகி விடலாம் என்று ஆசை வார்த்தை காட்டுவார்கள் இதில் மயங்காதவர் யார் ? காரணம் லைசென்ஸ் பெறுவது என்பது இங்கு சிங்கக்கொம்புதானே இவர்களும் பேச்சில் மயங்கி இரண்டாயிரம் திர்ஹாம்ஸ் தொடங்கி முடிந்த அளவு அவர்களிடம் கறந்து விடுவார்கள் சரி உனக்கு என்றைக்கு டெஸ்ட் வர்ற ஆவணி பதினான்கு சரி அன்னைக்கு நம்ம ஆளு டெஸ்டுக்கு வருவாரு நான் உன்னுடைய தகவல் அனைத்தும் சொல்லி விட்டேன் ஆனால் இதை நீ மற்றவர்களிடம் சொல்லக்கூடாது வரும் போலீஸாரிடம் நீ இதைப்பற்றி பேசக்கூடாது மேலதிகாரிக்கு விசயம் தெரிந்தால்.... அவருக்கும் பிரச்சனை, எனக்கும் பிரச்சனை, நீயும் வாழ்நாள் முழுவதும் லைசென்ஸ் எடுக்கவே முடியாது என்று சாத்தான்குளம் சாமியார் சாரங்கபாணி பாணியில் சொல்லி மிரட்டி வைத்து விடுவார்கள்.

அன்று காலை இவனும் போன் செய்வான் அவனும் நீ உன்னுடைய குலதெய்வம் குத்துக்கல் குலோத்துங்கனை வேண்டிக்கிட்டுப்போ எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று வாழ்த்தி அனுப்பி விடுவான் இவனும் உலக நாயகன் அப்படினு ஏதோ சொல்றாங்களே அதே மாதிரி உலக கடவுள்கள் அனைவருக்கும் அன்றைக்கு கால்ஷீட் கொடுத்து அபுதாபிக்கு அழைப்பான் போய் நல்லபடியாகவோ...  எப்படியோ.. யாருக்குத் தெரியும் அந்த இரண்டு போலீஸுக்கு மட்டும்தானே தெரியும் இல்லை கடவுளுக்கு தெரியும்னு சொல்றீஙகளா ? தெரிந்தாலும் அவரிடம் நாம் கேட்க முடியாதே.. ஓட்டிக் காண்பித்து வருகிறான் பெயில் என்று வைத்துக் கொள்வோம். (பெரும்பாலும் இதுதானே) உடன் இவன் அவனை போனில் அழைப்பான் அவன் என்ன சொல்வான் தெரியுமா ?

அடச்சே போப்பா உனக்கு இன்றைக்கு நேரம் சரியில்லை நம்மஆளு இன்றைக்கு லீவு போட்டுட்டாரு சரி விடு சாயங்காலம் ரூமுக்கு வந்து பணத்தை தந்துடுறேன்.
சொன்னபடியே வந்து பணத்தைக் கொடுப்பான் இவன் சொல்வான் நீ வச்சுக்க...
அடுத்த தேதி வரும்ல அப்பச் சொல்லு அப்போதைக்கு வாங்கிக்கிறேன் நீயே வச்சுக்க இது தப்பு.
என்று நம்பிக்கைத்தீயை மூட்டி விட்டுப் போய் விடுவான் இத்தீ காட்டுத்தீயாய் பரவும் ஆனால்  ரகசியமாய் பரவும் நகரின் நம்பிக்கையான ஸ்தாபனம் என்று ஊரில் கேள்விப்பட்டு இருப்பீங்களே அதேபோல...

அடுத்த தேதியில் க்ளிக் ஆகிவிட்டது என்று வைத்துக் கொள்வோமா ? காரணம் இவனது முயற்சி என்றாவது திருவினை ஆக்குமல்லவா ?
பார்த்தாயா... தாடி ட்ரிம் பண்ணி இருந்தாரே.. அவர்தான் நம்மஆளு... இதையெல்லாம் வெளியிலே சொல்லக்கூடாது.
(மூதேவி 90 % போலீஸும் அப்படித்தானடா இருப்பாங்க)

இவன் என்ன செய்வான் ? மாமன், மச்சான், சகலை, ரகளை எல்லோருக்கும் சொல்லி அவங்களையும் மொய் வைக்க வைத்து விடுவான். இதெல்லாம் பிழைக்கத் தெரிந்த வழிகள்.

ஏமாறுபவன் அப்பாவி ஏமாற்றியவன் அயோக்கியன், இது அந்தக்காலம் ஏமாற்றுபவன் அறிவாளி ஏமாறுபவன் முட்டாள், இது இந்தக்காலம்.


இறைவன் இருவருக்கும் என்னைப் போலத்தானே இரண்டு கிலோ மூளையைக் கொடுத்தான் உன்மீது நம்பிக்கை வை நண்பா வெற்றி உமதே.

முற்றும்

Chivas Regal சிவசம்போ-
பதிவு பதினெட்டாம்படி கருப்பரிடம் தொடங்கி சாத்தான்குளம் சாமியாரிடம் வந்து முடிந்து இருக்கிறதே...

48 கருத்துகள்:

  1. மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ:)) ஆனா நான் சாகு சாமிசா வைப் பார்க்க மாட்டேன்ன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இப்பூடியா படம் போட்டுப் பயமுறுத்துவீங்க:).

    பதிலளிநீக்கு
  2. அப்பாடா முடிஞ்சிடுச்சா?:).. அதானே சிறி சிவசம்போ அங்கிள் சொன்னதும்தான் கவனிச்சேஎன் முடிஞ்சு போச்சூ.... ஏமாளிகள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.. இதில் ஊரென்ன நாடென்ன மொழி என்ன... எங்கும் எல்லாம் உண்டுதானே.

    அதுசரி பத்து வருடத்தில மொத்தமும் விழுந்திடுச்சே:)) அதெப்பூடி??:) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'முற்றும்' போட்டதை படிப்பதில்லையா... உங்கட அங்கிள் சொன்னது மட்டும் புரிகிறது...

      நீக்கு
    2. இது காசு கட்டி எடுத்த கள்ள லைசென்ஸ்:) அதனால்தான் தலைமயிரும் அப்படி கிரபிக்ஸ் செய்து போட்டிருக்கிறீங்க:)).. யாருமே வருடக்கணக்கு வழக்கைக் கவனிக்கவில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதிரா கண்ணுக்கு எல்லாம் தெரியுமாக்கும்:))

      நீக்கு
    3. லென்ஸு வச்சு பார்ப்பீங்களோ...?

      நீக்கு
  3. சாத்தாங்குளம் சாமியாண்டிக்குத் தான் சங்கிலி போட்டுட்டாங்களே!!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி இப்போ இருப்பு ஏர்வாடியாம்.

      நீக்கு
  4. முயற்சி திருவினையாக்கும்
    (அப்பப்போது!...) - என்பதை நிரூபிக்கும் பதிவு...

    எப்படியோ சிங்கத்தை மடக்கி கொம்பை எடுத்தாச்சு!...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  5. 40 கிலோமீட்டர் வேகத்தில் நடைவண்டி... ஹா... ஹா... ஹா... நினைத்தே பார்க்க முடியவில்லை!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி புகைப்படம் போட்டு நிரூபிக்கவா ?

      நீக்கு
  6. இந்த மாதிரி விஞ்ஞான முறைப்படி ஊழல் செய்பவர்கள் இங்கும் இருக்கிறார்கள். டிபார்ட்மென்ட் பரீட்சைகளில் இதேபோல இவர்கள் விளையாட்டு நடக்கும். புத்திசாலித்தனமான சம்பாதிப்பு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் எப்படியாயினும் இதற்கு அறிவு வேண்டும் அவ்வகையில் பாராட்டலாம்.

      நீக்கு
  7. ஜீ... அப்போ மீசை ரொம்பச் சின்னதா இருக்கே ஜீ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது அப்போதைய மாடல் முறுக்கு மீசைதான். படம் தெளிவில்லை.

      நீக்கு
  8. வாழ்த்துகள் நண்பரே
    தொடர்ந்து தங்களின் அனுபவப் பதிவுகளைத் தாருங்கள்
    நன்றி

    பதிலளிநீக்கு
  9. அலுக்காமல், சலிக்காமல் தொடரும் பதிவுகள். வாழ்க, வளர்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  10. முயற்சி திருவினை ஆக்கும்.

    பதிலளிநீக்கு
  11. டிரைவிங் லைசன்ஸ் எடுத்த கதை நல்லா சொல்லியிருக்கீங்க.

    மாற்றிய லைசன்ஸையும் பார்த்தேன். செய்வன திருந்தச் செய்திருக்கீங்க (அரபிக்லயும் மாத்தியிருக்கீங்க). உங்க வயசும் தெரிந்தது. ஹாஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே இதை நீங்கள் கவனிப்பீர்கள் என்று தெரியும். ஆனால் ''உலகம் தோன்றியதிலிருந்து...'' அந்தப்பதிவில் ஒரு புகைப்படம் போட்டேன் அதனைக்குறித்து ஒன்றும் ஜொள்ளவேயில்லையே...

      நீக்கு
    2. கில்லர்ஜி ஹவுஸ் என்று போர்டில் பார்த்தேன். மற்றவங்க சொல்லிட்டாங்கன்னு சொல்லலை.

      நான் டிரைவிங் லைசன்ஸ் எடுத்த சமயத்தில் போட்டோல்லாம் எடுத்துக்கலை. அப்போ எனக்கு போட்டோ எடுக்கும் எண்ணம் வந்ததில்லை. 2000க்குப் பிறகுதான் எதை எடுத்தாலும் போட்டோ எடுத்துவிடுவேன். அதுவும் டிஜிட்டல் கேமரா 2002ல் கிடைத்ததிலிருந்து நிறைய போட்டோ எடுப்பேன். என்னிடம் புர்ஜ் கலீபா கட்டப்பட்டுக்கொண்டிருந்தபோது எடுத்த போட்டோல்லாம் இருக்கு.. 93லலாம், துபாயிலிருந்து ஷார்ஜா போகும் வழியில் பாலைவனம் இருபுறமும் தெரியும். ஒரே மணற் பரப்பா இருக்கும்.ஆப்கானியர்கள், பாகிஸ்தானியர்கள்தான் ஷார்ஜா எல்லையில் ஷேர் டாக்சியோடு ரெடியாக நின்றுகொண்டிருப்பார்கள்.. அப்போ பெரிய பில்டிங் சிலதான். . இப்போ ரொம்ப மாறிவிட்டது.

      நீக்கு
    3. பார்த்தமைக்கும், மீள் வருகைக்கும் நன்றி

      ஆம் நானே பல மாற்றங்களை சந்தித்து விட்டேன் நீங்கள் பலமுறை கட்டிய கட்டடத்தையும், இடித்த கட்டடத்தையும் பார்த்து இருப்பீர்கள்.

      நான் பார்த்தபோது கட்டிய கட்டடத்தை சரியாக இருபது வருடம் கழித்து இடித்ததையும் பார்த்தேன் இது அரிய வாய்ப்பு.

      நீக்கு
    4. அபுதாபில 90களுக்கு முன்னால் 2-4 மாடிக் கட்டடம் நிறைய இருந்தது. வாடகை ரொம்ப அதிகமானதாலும் (93ல ஒரு பெட்ரூம் வீடு 35,000 திர்ஹாம்ஸ் வருட வாடகை) வீடு கிடைப்பது கஷ்டமாக ஆனதாலயும் அபுதாபி அரசு, 15-20 வருடங்களான கட்டிடங்களை இடித்து பலமாடிக் கட்டடங்களாக ஆக்கச் சொன்னது. நம்ம ஊர் முனிசிபாலிட்டி போல இல்லை. நோட்டீஸ் கொடுத்தாச்சுனா உடனே செய்துவிடவேண்டும். அந்த சமயத்துல புத்தம் புதிய ஸ்டூடியோ வீட்டில் (14,000 திர்ஹாம்ஸ் வாடகை) நான் இருந்தேன். எடிசலாட் அபுதாபியில் வேலை கிடைத்தபோதுதான் வீடு தேடினேன். அது ஒரு காலம் கில்லர்ஜி...

      நீக்கு
    5. நான் 1996 ஜனவரிக்குப் பிறகே அபுதாபியை கண்டேன்.

      தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  12. எப்படியோ இன்டர்நேஷனல் லைசென்ஸ் நல்லபடியாக் கிடைச்சதே! அதுக்கு இறைவனுக்கு நன்றி. எங்கேயுமே ஊழல் இருக்கத் தான் செய்கிறது! 100% ஊழலற்ற நாடுனு பார்க்கவே முடியாது போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஊழலை எங்கும் அபிவிருத்தி செய்பவன் இந்தியனாகவே இருக்கிறான் என்பதுதான் வேதனை.

      நீக்கு
  13. அது சரி, ஃபோட்டோ கில்லர்ஜிக்கும் இப்போ உங்க முகம், மீசைக்கும் ஆறு வித்தியாசத்துக்கும் மேல் இருக்கே! ஙே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அது லைசென்ஸ் எடுத்தபோது உள்ள கெட்டப்பு.

      நீக்கு
  14. மழை விட்டாச்சு தூவானமும்விட்டாச்சு

    பதிலளிநீக்கு
  15. ஒருவழியா லைசென்ஸ் எடுத்தாச்சு. தலைக்கொள்ளாத முடி அன்று, முடியே இல்லாத தலை இன்று. நைச்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ, துபாயில் பணம் சம்பாரிக்கிறதுனா, சும்மாவா ?

      நீக்கு
  16. லைசென்ஸ் எடுத்த தேதியில் காணும் புகைப்படத்தில் அடர்த்தியான முடி தெரிகிறது. இன்று அதெல்லாம் காணவில்லை. வளைகுடாவில் வேலை செய்தால் இப்படித்தானோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அங்கு முதலில் இழப்பது இதுவே... வருகைக்கு நன்றி.

      நீக்கு
  17. அடடா..தொடர் இரண்டு கிலோ மூளையுடன் முற்றுப் பெற்றுவிட்டதே........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நண்பரே இன்னும் வளரும் கிலோ கூடலாம்.

      நீக்கு
  18. சாத்தான்குளம் சாமியார் உடுக்கை அடித்துக் கொண்டு பயமுறுத்துகிறார்.
    உங்கள் உண்மையான முயற்சியால் ஓட்டுனர் உரிமை பெற்ற அனுபவ பகிர்வு
    நிறைவு பெற்றது அருமை.

    பழைய படமும் அருமை.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  19. நல்ல படியா லைசென்ஸ் கிடைத்தாச்சு. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.

    துபாயிலும் சில ஏமாற்று வித்தைகளைப் பார்த்திருக்கிறேன்.

    நம் தமிழன் கூட அதில் அடக்கம்.
    முக்கியமாக வண்டி துடைப்பவர்கள், சமையல் வேலைக்கு வருபவர்கள்.
    தலை வாங்கிய அபூர்வ சிகாமணிகளில் துபாய்த் தண்ணீர் அடங்கும்.

    படம் சூப்பராக இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  20. லைசன்ஸ் வெற்றி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு