தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஏப்ரல் 10, 2015

தவளை தன் வாயால் கெடும்


அன்பு நெஞ்சங்களே இந்தப்பதிவு நான் எழுதியதின் காரணம் சமீபத்தில் எனது பக்கத்து ROOMக்கு குடியிருக்க வந்த மலையாளி என்னை ஒரு வாரமாக கவனித்துக் கொண்டு இருந்திருக்கின்றான் பிறகு மற்றவர்களிடம் விசாரித்து இருக்கின்றான் இவரென்ன ? கணினியிலேயே கவுந்து கிடக்கின்றாரே... அதற்கு அவர்கள் இவரு ரொம்ப நல்லவரு, வல்லவரு, பெண்டு எடுக்கிறதுல என்று சொல்லியிருக்கிறார்கள்.... என்னிடம் வந்தான் நான் குறும்படம் எடுத்திருக்கிறேன், நானும் நடித்திருக்கிறேன் நாங்கள் ஒரு குழு இருக்கிறோம்.
(அந்த குறும்பட இணைப்பை கொடுக்க பார்த்தேன்)
குறும்படம் எடுப்போம் நல்ல கதை இருந்தால் சொல்லேன். அவனிடம் நான் கேட்ட முதல் கேள்வி கதைக்கு எனது பெயர் வருமா ? சரி போடலாம் OK.

எனது மூளையின், மூலையில் கிடந்த சங்கதிகளை திரட்டி எழுதி பிறகு டைப்பி (மலையாளத்தில்) நகலெடுத்து வந்து அவனை அழைத்து உட்கார வைத்து கதையை சொன்னேன்.
மலையாள நகலை கண்டு மலைத்தான் மலையாளி....

ஆத்மார்த்தமாய், கதையை சொல்லத் தொடங்கினேன்... இதுவொரு நகைச்சுவை + குடிகாரன் வேடம் + முரட்டு மீசைக்காரன் + இன்றைய சமூகநிலை + வில்லங்கமானவன் இந்தக் குடிகாரன் வேடத்திற்கு மீசைக்காரன் தேவைப்படுவதால் நானே நடித்தால் நான் நினைத்தபடியே நன்றாக வரும் என்று சொன்னதற்கு நல்லது என்றான் பொறுமையாக கேட்டான், ஸூட்டிங்க்கு மூன்று இடங்கள் போதுமானது துபாயின் பிரமாண்டமான சாலையில் நாயகனின் மகன் செல்போன் பேசிக்கொண்டு போவது, வீட்டில் கணவன்-மனைவி பேசுவது, அடுத்து சாராயக்கடையில் குடிமகன்களோடு தமிழ் நாடக பாடல் ஒன்றை பாடுவது, கதை மலையாளத்தில்தான் ஆனால், இந்த தமிழ் நாடக பாடலை பாடுவதற்கான காரணத்தையும் குடிகார நாயகன் சொல்வான்.
(அந்தப் பாடலையும் தேர்வு செய்து வைத்தேன்)

அவனை உட்கார வைத்து நான் கையில் பேப்பரை வைத்து நின்று கொண்டே சொன்னேன் பொறுமையாக கேட்டு கடைசியில் சொன்னான் மலையாளிகள் அடிக்கடி உச்சரிக்கும் ‘’ப்சு’’ என்று சொல்லி இன்னும் நல்லா மர்மமாக இருப்பது போல் எழுதேன் என்றான். அவன் சொன்னதில் தவறில்லை, கேட்தில் தவறில்லை அப்படி எதிர் பார்ப்பதிலும் தவறில்லை ஆனால் நான் கதை சொல்லும் போதே அவன் கண்களின் படித்தேன் அவன் மனதை படித்தேன் ஒரு ஒளி மின்னியது ஆச்சர்யமாய் கேட்டான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போதே குருந்தன் வாத்தியார் இதையும் படித்துக் கொடுத்து விட்டார், புரிந்து கொண்டேன்.

இவனும் வழக்கமான மலையாளிதான் சாதாரணமாக விட்டிருப்பேன் தவளை தன் வாயால் கெடும் என்பதுபோல் கடைசியில் கேட்டான் நல்லா ஒரு டைரக்டர் போலவே ஆக்ஷனோட சொல்றியே... எப்படி  இதற்கு முன் யாரிடமாவது சொல்லி இருக்கின்றாயா ? இந்தக் கேள்விதான் எனக்கு அவன் மீது ஐயத்தை உண்டாக்கியது மேலும் இதில் ஒரு நகல் கொடு எங்கள் குழு படித்து முடிவெடுக்கும் என்றான், நான் இன்னும் திருத்தி எழுதிக்கொண்டு வருகிறேன் எனச்சொல்லி கழண்டு கொண்டேன் இவன் நம்மைக் கழட்டி விட்டு கதையின் போக்கை மாற்றி விடக்கூடும் காரணம்.

நான் இந்த நாட்டிற்கு வந்து பல நாட்டு மனிதர்களின் மொழியோடு மனங்களையும் படித்திருக்கின்றேன் மலையாளிகளை நான் நன்கு உணர்ந்தவன் காரணம் மலையாளி அவன் கொலையாளி என்ற பழமொழியும் உண்டு இது எமது இனிய நண்பர் குவைத் திரு. துரை செல்வராஜு அவர்கள், ‘’மனசு’’ திரு. சே.குமார் அவர்கள் முதல் அரபு தேசங்களில் வாழும், வாழ்ந்த அனைத்து தமிழர்களுக்கும் தெரியும் ஆனால் தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களுக்கு சுத்தமாக தெரியாது என்பது எனக்கும் ஆணித்தரமாக தெரியும் காரணம், தெரிந்திருந்தால் இன்றைக்கு தமிழ்த்திரைப்பட உலகை மலையாளிகள் ஆட்சி செய்யதிருக்க முடியாது, ஆட்சி செய்து கொண்டு இருக்கவும் முடியாது ஏன் ?

ஊடகங்களில் கூட அவர்களின் ஆட்சியே மலையாளிகளே நீதிபதி அன்றிலிருந்தே... தமிழன் ஏமாளி கேட்டால் ? வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்பான் எனக்கு ஒருஆசை எவனாவது இந்த தீஞ்சுபோன வசனத்தை என்முன் சொன்னால் அவன் நாவில் எனது செலவில் ¼ படி தங்கத்தை காய்ச்சி ஊற்ற வேண்டுமென... கேரளத்தில் நடிகர் ஆட்சி செய்ய முடிகிறதா ? முடியாது காரணம் அவன் சொல்வான் உனக்கு அரசியல் தெரியாது நடிக்க மட்டுமே தெரியும், நடித்து விட்டு போய்க்கொண்டே இரு.... இந்த தருணத்தில் ஒரு விசயத்தை நான் சொல்லியே தீரவேண்டும் வருடம் 2003 என்று நினைக்கிறேன் ஃப்ளாட்டின் ஹாலில் உட்கார்ந்து மொத்தம் 11 மலையாளிகளும், தி கிரேட் தமிழன் ஒருவனும் (நாந்தாங்கோ.... கில்லர்ஜி) ஒரு மலையாளப்படம் பார்த்துக் கொண்டு இருந்தோம், படத்தின் கதையில்...

நாயகன், நண்பனோடு கேரளத்திலிருந்து... சென்னைக்கு வருகிறான் நண்பன் கேட்கிறான் ஏண்டா, இந்த தமிழ் நாட்டுல நாம எப்படி ? பிழைக்கப் போறோம்... அதற்கு நாயகன் சொல்கிறான் டேய் நம்ம கேரளத்துலதான் கஷ்டம் இந்த தமிழ் நாட்டுல ரொம்ப சுலபமாக தலைவனாகி விடலாம், நம்ம எம்ஜிஆர் எப்படி தலைவரானாரு, அதுபோல நாமலும் ஆகிடலாம் வாடா....

நண்பர்களே..... இந்த வசனத்தை கேட்டவுடன் அனைத்து மலையாளிகளும் கை தட்டினார்கள் நான் கை தட்டமுடியுமா ? வெட்கித்தலை குனிந்தேன் ஒருவன் கேட்டான் அண்ணா, இதுக்கு நீ பதில் சொல்லு... நான் என்ன பதில் சொல்வது ? தமிழனைப்பற்றி மலையாளி எவ்வளவு துள்ளியமாக கணித்து இந்த வசனத்தை எழுதி இருக்கிறான் பார்த்தீர்களா ? உண்மைதானே... ஒரு தமிழன் கேரள சினிமாவில் நாயகனாக நடிக்க வேண்டாம் ஒரு காமெடியனாக்கூட நடிக்க முடியாது.

ஏக் துஜே கேலியே (1981) பிரமாண்டமான வெற்றிக்குப் பிறகு ஹிந்தியிலிருந்து கமலஹாசன் விரட்டப்பட்டார்.
சுவாதி முத்யம் (1986) பிரமாண்டமான வெற்றிக்குப் பிறகு தெலுங்கிலிருந்து கமலஹாசன் விரட்டப்பட்டார்,
சாணக்கியன் (1990) பிரமாண்டமான வெற்றிக்குப் பிறகு மலையாளத்திலிருந்து கமலஹாசன் விரட்டப்பட்டார்.
புஷ்பக விமானம் (1988) பிரமாண்டமான வெற்றிக்குப் பிறகு கன்னடத்திலிருந்து கமலஹாசன் விரட்டப்பட்டார்.
கபிடா (1977) பிரமாண்டமான வெற்றிக்குப் பிறகு பெங்காளிலிருந்து கமலஹாசன் விரட்டப்பட்டார்.

காரணம் என்ன ? தமிழன், தமிழன், தமிழன்.

ஆனால் தமிழ் திரையுலகில் தமிழனைத்தவிர அனைவருமே பாலாபிஷேகத்தால் குளிப்பாட்டப்படுகிறார்கள் தமிழா என்றாவது இதைப்பற்றி சிந்தித்து இருக்கிறாயா ? எனக்கு வேலை இருக்குப்பா, உழைச்சாத்தான் வீட்டுல எல்லோரும் சாம்பிட முடியும் என்கிறாயா ? நீ உழைத்திருந்தால் இவர்களெல்லாம் கோடீஸ்வரர்களாக வலம் வந்திருக்க முடியாதே... நானும் இப்படியெல்லாம் எழுத வேண்டிய அவசியம் வந்து இருக்காதே...
சரி இவ்வளவு லொள்ளு இருக்கே, நீ ஏன் அவர்களோடு சேர்ந்து இருக்க வேண்டும் எனக்கேட்கிறீர்களா ?

மலையாளிகளோடு இருந்தால் அவர்கள் எப்பொழுதுமே ஒருவனை ஒருவன் கவுத்தி உயரப்பார்ப்பான் இது சரியென நான் சொல்வதாய் அர்த்தமல்ல நாம் சரியானவன் என்றால் நமது மூளை எப்பொழுதும் உஷாராக இருக்கும் அவன் சினிமாவைக் குறித்தோ, அரசியலைக் குறித்தோ பேசினால் அதில் ஆக்கப்பூர்வமான, அறிவுப்பூர்வமான சிந்தனைகள் இருக்கும் குறிப்பாக ஹிந்தி பேசினாலும் தவறின்றி சரியானபடி உச்சரிப்பான், காரணம் பள்ளியிலிருந்தே படித்தவன், எக்காரணம் கொண்டும் எனது தலைவன் என்று யாரையும் சொல்ல மாட்டான், இதில் தண்ணி அடிப்பவர்கள்கூட முறையாக குடித்து, சரியாக சாப்பிட்டு தெளிவாக பேசுவார்கள் இந்த பல காரணங்களுக்காகவே நான் அவர்களுடன் ஒரே ஃப்ளாட்டில் தொடர்ந்து ஆறு வருடங்கள் தங்கி இருக்கிறேன்.

(ஆனால் தமிழர்கள் தண்ணி பாட்டிலை திறந்தவுடன் வசனங்கள் மாறிவிடும் அரசியலோ, சினிமாவோ பேசினால் கிச்சனில் இருந்த கத்தி காலையில் பார்த்தால் ஹாலின் மூலையில் கிடக்கும்)

மலையாளிகள் என்னை அவர்களுடன் நெடுங்காலம் தங்க வைத்திருப்பதற்கு முதல் காரணம் நான் தமிழர்களிலேயே மாறுபட்டவன் என்பதால் இதை அவர்களே பலமுறை என்னிடம் சொல்லி இருக்கிறார்கள், அவர்களைவிட ஒருபடி நாம் மேல்நிற்க வேண்டும் என்பதற்காக மலையாள பத்திரிக்கையை தலைகீழாக வைத்து சப்தமாக படித்துக் கொண்டிருப்பேன், அவர்களுக்கும், எனக்கும் பல விவாதங்கள் நடக்கும் எதிலும் தமிழனை விட்டுக் கொடுக்காமல் பேசுவேன், அனைவரையும் எதிர்த்து பேசுவேன் பல தருணங்களில் தலை குனிந்து இருக்கிறேன் எதற்காக தெரியுமா ?

தமிழ் நாட்டில் நடிகரின் கட்அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்யும்போது தவறி விழுந்து வாலிபர் பரிதாப சாவு, 1500 கோடி ரூபாய் ஊழல் செய்த அரசியல் தலைவரை கைது செய்ததால் பஸ் எரிப்பு.
என பத்திரிக்கைகளில் செய்திகள் வரும் என்மீது தூக்கி எறிந்து சொல்வார்கள் இதுக்கு பதில் சொல் மலையாள பத்திரிக்கைதான் அதன் செலவில் எனது பங்கும் உண்டு உங்க தமிழ் ஆளுங்க எப்படி பார்த்தாயா ? இந்த வகையான செய்திகளுக்கு பதில் சொல்லமுடியாது மனம் புலுங்கி துடித்திருக்கின்றேன் காரணம் நான் சமூக அக்கறை கொண்டவன், சராசரி மனிதனைப்போல சித்தன் போக்கு 7 O’clock என்று போக முடிவதில்லை இந்த நிலை அயல் தேசங்களில் வாழும் என்னைப்போன்ற பல தமிழனுக்கும் உண்டு ஆனால் தமிழ் நாட்டில் வாழ்பவர்கள் அடுத்த மாநிலத்தவனை உயர்த்தி உயர்த்தியே தாழ்ந்து போனவர்கள் இந்நிலை எதுவரை போகுமோ....

உங்களிடம் ஒரு சவால் மலையாளி ஒருவனை எந்த ஒரு தமிழனையாவது என் தலைவன் எனச்சொல்ல வைத்து விடுங்கள் நான் வலைப்பூவில் எழுதி உங்களைக் கொல்லாமல் ஒதுங்கி விடுகிறேன். சரீரீரீரீரீரீ..... ஏதோ குறும்படம் அப்படினு சொல்லி விட்டு சம்பந்தம் இல்லாமல் பெருங்கதை சொல்லிக்கிட்டு போறே.... 

ஐயய்யோ ஆமாவுல மறந்துட்டேன், பதிவு இம்பூட்டு ஆயிடுச்சே.... இவ்வளவு பெரிசா எழுதுறது பெங்களூரு பதிவர் சகோதரி திருமதி. கமலா ஹரிஹரன் அவுங்களுத்தானே வரும் எனக்கு எப்படி வந்துச்சு ? ஒருவேளை அவுங்க பதிவை தொடர்ந்து படிக்கிறதாலயோ அச்சச்சோ பெயரை எழுதிட்டோமே அப்புறம் சண்டைக்கு வந்துடுவாங்களோ... நல்லவேளை படிக்க முடியாது அழிச்சு வச்சுட்டோமுள்ள... எப்பூடி ?

சரிங்க நாளை மறுநாள் வாங்களேன் குறும்படத்தைப்பற்றி எழுதுறேன்.
இதோ, அந்த நாடக பாடல்...

காணொளி

எட்டுக் கால் நடந்து வர,
ரெண்டு கால் நீண்டிருக்க...
பத்துக் கால் மனிதனுக்கு,
பார்வையோ கிடையாது....
எட்டுக்கால், எட்டுக்கால், எட்டுக் கா.......ல்....
மீண்டும் சந்திப்போம்.

78 கருத்துகள்:

  1. சரித்திரம் படைக்கவேண்டியவர் எங்கோ அரபி நாட்டுல காய்ஞ்சு கருவாடாகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் கனவுகளோடும், லட்சியங்களோடும் வாழ்ந்தவன்தான் ஐயா. என்னை இருட்டறைக்குள் தள்ளி விட்டவர்கள் கண்ணையும் கட்டி விட்டார்கள், கண்கட்டை அவிழ்த்து விட்டேன் வழி தேடி அலைகின்றேன். ஐயாவின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. மலையாளிகள் பற்றி நீங்கள் சொல்லி இருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே தோன்றுகிறது. காணொளி ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது வார்த்தைகளை நம்ப வேண்டாம் நண்பரே.... நான் சொன்னதில் பொதுநல உண்மைகள் இருக்கிறதா ? 80தை மட்டுமாவது பாருங்கள்.

      நீக்கு
  3. விளம்பரம் இல்லாமல்... உடனே உதவி செய்வதில்... மலையாள நட்சத்திரங்கள் முன்னோடி... நல்லதையும் பார்ப்போம் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி தாங்கள் எந்த விடயத்தை வைத்து சொல்கிறீர்கள் 80தையும், நடிகர் மம்முட்டி அவர்களையும் சொல்ல வருகிறீர்கள் 80 புரிகிறது அதனைப்பற்றி விரைவில் பதிவாக தருகிறேன்
      உழைப்பால் உயர்ந்த சிங்கப்பூரில் மலையாளிகளுக்கு விசா அனுமதி கிடையாது ஏன் ? தெரியுமா ? அவன் உழைக்க மாட்டான் ஏமாற்றுவான் என்பதால் இதன் காரணமாகவே மலையாளிகள் தமிழ் நாட்டு முகவரிகளில் பாஸ்போர்ட் எடுப்பார்கள் அதனால்தான் இவர்கள் அரபு நாடுகளில் அதிகம் வாழ்கிறார்கள் காரணம் அரபியர்களை மிகச்சுலபமாக ஏமாற்ற முடியும் காரணம் அவனுக்கு சிந்திக்கும் திறன் கிடையாது அதனால்தான் இந்தியர்களும் பெரும் பொருள் ஈட்டுகிறோம் 80ம் உண்மையே..
      நல்லது நண்பரே எப்படியெல்லாம் இவர்கள் அவர்களை ஏமாற்றுவார்கள் 80தை பதிவுகளின் முலம் தருகிறேன் தாங்கள் என் மனதில் பல பதிவுகளுக்கு ‘’கரு’’ கொடுத்து விட்டீர்கள் எமது நன்றி மீண்டும் சந்திப்போம்.

      நீக்கு
  4. அப்டீங்கறீங்க? நாம்தான் அரசியலையும் சினிமாவையும் ஒன்னாக் கலந்துட்டோமே! அவுங்க அததுக்கு ஒரு இடம் தனியா வச்சுருக்காங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் சொன்னீர்கள் மிகவும் சுருக்கமாக அருமை.

      நீக்கு
  5. \\\\\மண்ணுக்குள் புதையு முன் விண்ணில் விதைக்க முயற்சிக்கிறேன்///// சரியாகத் தான் செய்துகொண்டிருகிறீர்கள். ஜி பாராட்டுக்கள்! தொடரட்டும் தங்கள் இனிய சேவைகள் வாழ்த்துக்கள் !
    தம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நான் உள்ளதைச்சொன்னேன், சொல்வேன், கடைசிவரை பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு
  6. எங்கிருந்தாலும் சரித்திரம் படைக்கலாம் நண்பா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே முயல்கிறேன் முடிந்தவரை ஊக்குவித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  7. கில்லர்ஜிக்குப் பதிற்றுப்பத்து எனும் சங்க இலக்கியத்தைப் பரிந்துரைக்கிறேன்.
    த ம 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே இது விளங்குகிறது ஆயினும் விளங்கவில்லை சிறிது விளக்கினால் குழப்பம் விலகி விளங்கி கொள்வேன்.

      நீக்கு
  8. தமிழன் தெலுங்கன் சீக்கியன் இவர்களின்
    பசிக்கு ஏது சொந்தநிறம் ? - இவர்
    சிந்தும் கண்ணீரை வேறுவேறாக
    பேதம் பிரிப்பது எந்தநிறம்?
    சொந்த சகோதரர் சிந்தும் குருதியால்
    அன்னை நிற்கிறாள் தீமேலே ---- நவகவி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நல்லதொரு கவி.
      நான் ஜாதி, மதம், நாடு, மொழி இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் மனிதநேயம் இது ஒன்றே மனிதனுக்கு வேண்டும் என்ற கொள்கையாளன்.

      நீக்கு
  9. எப்படிப்பா? இப்படியெல்லாம், உண்மையை ஓங்கி சொல்லியுள்ளீர்கள், நானும் இது போல் சண்டை போட்டது உண்டு, ஆனாலும் முடியல, எப்ப சித்தப்பன் சொந்தம், மாமா சொந்தம், அத்தை,பெரியப்பா,,,,,,,,,,,, இப்படி சொல்லி ஓட்டு கேட்க்கும் நாங்கள் மாறும் வரை எதூம் மாறாது? கலை கலையாக இருக்க வேண்டும், அது சரி அ,,,,, முக்க ஒரு பஞ்ச் பண்ண வேண்டியது தானே, இப்படி எத்தனைப் பேர் கதையை களவாடி இருக்கிறாய் என்று?, மாற்றத்தை எதிர்பார்த்து காலத்தை ஒட்டும் ஒரு கும்பலாக இல்லாமல்,,,,,,,,,,,,,,
    சரி சரி நான் பாட்டுக்கு ,,,,,,,,,,,,,
    அப்புறம் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் என்ன ? இருக்கிறது உண்மையை சொல்வதில் பயமில்லை எனக்கு நல்லதை எனது எதிரி செய்ததை பாராட்டி இருக்கிறேன் பிறரிடம் தவறு நண்பன் செய்ததையும் எதிர்த்து பேசியிருக்கிறேன் முகத்துக்கு முன்னால் அவன் சுப்பு ஆனாலும் சரி, சுல்த்தான் ஆனாலும் சரி, சூசை ஆனாலும் சரி இறைவன் என்னைப் பார்த்துக்கொண்டு இருக்கிறான் 80 நம்புபவன் ஆனால் அவனை வணங்குவது நேர விரயம் 80 எமது கொள்கை நமது ஊழைக்கும்பிடு இறைவனுக்கு பயனற்றது.

      நீக்கு
  10. இவ்வளவெல்லாம் இருக்கா? உங்களுடைய அனுபவங்களை நீங்கள் பகிரும்போது நகைச்சுவை மேம்பட்டிருந்தாலும்கூட படிக்கும் எங்களை உங்கள் பக்கம் முழுமையாக இழுத்து பேசப்படும் பொருளில் முழுமையாக உணர்வுபூர்வமாக ஈடுபடுத்திவிடுகின்றீர்கள். அதுவே உங்கள் எழுத்தின் வெற்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் முனைவரே எப்பொழுதுமே எமது எழுத்துகளின் பொய் வரக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன் அதனால்தான் தங்களுக்கு பிடித்திருக்கிறதோ என்னவோ விருவான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  11. ஓரு இனத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு எழுதுவது எனக்கு உடன் பாடில்லை. தவறாக நினைக்க வேண்டாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் ஐயா நான் எந்த இனத்தையும் தவறாக சித்தரிக்கவில்லை உள்ளவைகளை யதார்த்தமாக சொல்கிறேன் ஐயா இன்னும் சொல்லப்போனால் அவர்களின் திறமையை பல இடங்களில் பாராட்டிதான் எழுதியிருக்கிறேன் அவர்கள் புத்தி கூர்மையானவர்கள் 80ம் உண்மையே... சராசரி இந்தியாவில் வாழும் மலையாளிகளுக்கு 3 மொழிகள் எழுதப்பேசத் தெரிகிறது முஸ்லிமாக இருந்தால் 4 மொழிகள் எழுதப்பேசத் தெரிகிறது அதுவே வெளிநாடாக இருந்தால் இன்னும் கூடுதலாக தெரிகிறது ஆனால் தமிழன் சராசரி தமிழ் மட்டுமே அது எந்த மதத்தினராயினும் எனக்கு மலையாளம் எழுதப்படிக்க கற்றுத்தந்தது மலையாளிதான் தட்டச்சுதான் நானாகவே பழகி கொண்டது மட்டுமல்ல மலையாளிக்கு கற்றும் கொடுத்தேன் மலையாளிகளை நான் தவறாக நினைக்கவும் இல்லை சொல்லவும் இல்லை தமிழனை மலையாளிகளிடம் ஏமாறாதே 80தே எமது கருத்து தங்களின் வருகைக்கு நன்றி ஐயா

      நீக்கு
  12. கட்டுரை அப்படியே என் மனதில் வெகுநாட்களாக தேங்கிக் கிடந்த ஆதங்கத்தை நானே கொட்டியது மாதிரி இருக்கிறது.

    மலையாளி ஒருபோதும் தமிழனை தலிவா என்று சொல்லமாட்டன், ஆனால் தமிழன் வாயில் எடுத்தவுடன் வரும் வார்த்தை தலைவர் தான். ரஜினியும் தலைவர் தான், கவுண்டமணியும் தலைவர்தான். அஜித் மட்டும் தல!!

    நமது மாநிலம், அதைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு தமிழக அரசியல்வாதிக்கு கூட கிடையாது, மக்களில் பெரும்பாலவர்களுக்கும் கிடையாது. நடக்கும் அநியாயத்தை பார்த்து தங்களைப் போல மனம் புளுங்குபவர்கள் வெகு சிலரே.

    முன்னர் காலத்தில் எல்ல துறைகளிலும் முன்னணியில் இருந்த தமிழன் தற்போது ஏன் இவ்வளவு தரம் தாழ்ந்து போனான் என்பது விந்தையாகவே இருக்கிறது. குறிப்பாக குடித்து விட்டு வீதிகளில் பாட்டு பாடுவது, மட்டையாக எங்கு வேண்டுமானாலும் விழுந்து கிடப்பது என்பதெல்லாம் தமிழனுக்கே உரிய சொத்து. இயற்கை வளங்களை சுரண்டி அண்டை மாநிலங்களுக்கும், பிற நாடுகளுக்கும் கடத்துவதில் தமிழனை யாரும் மிஞ்ச முடியாது.

    தமிழ்நாட்டில் மலைகளை எல்லாம் மொட்டையடித்தவன் இப்போ ஆந்திராவிற்குப் போயிருக்கிறான். என்னைக் கேட்டால் ஆந்திராவில் சுட்டுத் தள்ளியது மாதிரி தமிழகத்திலும் செய்திருந்தால் லட்சக்கணக்கான டன் சந்தன மரங்கள் உயிரோடு இருந்திருக்கும், நாட்டில் மழை பெய்திருக்கும், பஞ்சம் இருந்திருக்காது. அயோக்கியத்தனம், திருட்டுத் தனம், ஏமாளித்தனம், முட்டாள்த் தனம் இத்தனையும் கலந்த கலவை தமிழன் உருபடுவது கடினம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஒரு குட்டிப்பதிவு போல் தங்களது ஆதங்கத்தை கொட்டி விட்டீர்கள் சவுக்கடி வார்த்தைகளால் ஆனால் தமிழன் இனியெனும் எழுந்தால் நாளைய சமூகம் வாழும்.

      நீக்கு
  13. நியாயமான கருத்துக்கள்.. அரபு நாடுகளில் - இப்படி நடக்கும் எதையும் மறுக்கவோ மறைக்கவோ இயலாது.

    இங்கு - குவைத்தில் - சில வருடங்களுக்கு முன் எனக்கு - எனது Company -ல், பல இடங்களிலும் இருக்கும் Unit - களை Inspection செய்யும் பணியினைக் கொடுத்திருந்தார்கள்..

    சில வாரங்களிலேயே - என் கால்களை வாரி விட்டார்கள்.. காரணம் - அந்த Unit களில் இருந்து வெளியே போய்க் கொண்டிருந்த பொருட்களைக் கண்டு பிடித்தது தான்..

    இழுத்து விட்டவர்கள் நீங்கள் சொல்லும் வகையறாக்கள்.. அதைத் தீர விசாரிக்காமல் அமுக்கமாக இருந்தவன் - நம்ம ஊர்க்காரன்..

    மேலிடத்தில் சொல்லியிருக்கலாமே!.. - என்று நீங்கள் கேட்கின்றீர்கள் தானே!..

    மேலிடத்தில் இருந்தவனும் - தென்னந்தோட்டத்துக் காரன்!..

    காலை வாரி விட்டவன் இன்று Asst. Manager.
    அவனை உயர்த்திய - Manager.. நம்ம ஊர்க்காரன்..

    இதனால் - நானொன்றும் குறைந்து விடவில்லை..

    தனியாக எந்த ஒரு இனத்தின் மீதும் காழ்ப்புணர்ச்சி ஏதும் கிடையாது. அதேசமயம் பிறரால் காரணம் இன்றி விளையும் கஷ்டங்களைப் பகிர்ந்து கொள்வதில் தவறேதும் இல்லையே!..

    இத்தனைக்கும் - மேலே இருக்கும் Asst. Manager.. -க்கு அவனது தாய் மொழி மட்டுமே தெரியும்.. ஆங்கிலம் நாலு வரி கூட எழுதத் தெரியாது..

    அப்புறம் அவன் எப்படி வேலைகளைச் செய்கின்றான்!.. - என்பது உங்கள் ஆச்சரியம்.. அல்லவா!..

    அங்கே தான் இருக்கின்றது செப்படி வித்தை!..

    அன்பின் ஜி தங்களுக்கு நன்றி - மனிதரின் நிறங்களைச் சொல்லுதற்கு ஒரு வாய்ப்பளித்ததற்கு!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி தங்களுக்கு நான் எந்தப்பதிலும் சொல்ல விரும்பவில்லை தங்களைத்தான் நான் பதிவிலேயே இணைத்து விட்டேனே தங்களிடமிருந்து இப்படியொரு பின்னூட்டம் வராவிட்டால்தான் நான் ஆச்சர்யப்பட்டு இருப்பேன்.

      நீக்கு
  14. அருமை அருமை. உங்கள் கருத்து மிகவும் சரி. ஆனால் நாம் எப்போது மாறுவோம் என்றுதான் தெரியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு.சம்பத் கல்யாண் அவர்களின் முதல் வருகையை வரவேற்கிறேன் கருத்துரைக்கு நன்றி தொடர்ந்தால் சந்தோஷம்.

      நீக்கு
  15. வணக்கம் சகோதரரே.!

    தங்கள் "அனுபவ"த்துணையுடன் மலையாளி, தமிழன் என மனிதனை இரு கோணத்தில் வைத்து அலசி விட்டீர்கள். படிக்க, படிக்க நம் தாழ்வு மனப்பான்மையின் கணம் ௬டிக்கொண்டே வந்தது. மனிதன் எங்குமே எதிலுமே மனிதனாய் இருந்து விட்டால், பிரச்சனை ஏதுமில்லை.! ஆனால் மனித ஒற்றுமைதான் இன்னமும் ஏற்படவேயில்லையே! யாரை முட்டாளாக்கி ஏமாற்றலாம், நாம் மட்டும் எப்படி முன்னேறலாம் என்ற சுயநல சிந்தனைதானே மனிதனின் மூளையில் முக்கால்வாசி இடத்தை பிடித்துக்கொண்டிருக்கிறது. எப்படியோ, தப்பித்தமைக்கு வாழ்த்துக்கள்.

    பதிவு கை கால் முளைத்து நீளுகிறதே! இப்படி எழுத யாரிடம் கற்றீர்கள்? (என் பதிவுகளை பார்த்தா.? என்று கருத்தில் கேட்கலாம் என நினைத்து இறுதி வரை படித்தேன்.) கற்றுக் கொண்ட யார் பெயரையோ எழுதி அழித்து இருக்கிறீர்கள். பெயர் கண்ணுக்கே தெரியவில்லை. யார் அது? என்று தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன். சாவகாசமாக கருத்துரை பதிலில் தெரிவியுங்கள். (ச…ரி.. ஒரு சந்தேகம் ! தாங்கள் பதிவுக்கு வைத்த “தலைப்பை” போல் நானே வந்து கேட்டு மாட்டிக்கொண்டேனோ.? )

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோதரி தங்களின் புரிதலுக்கும் விரிவான கருத்துரைக்கும் நன்றி நான் தமிழன் ஏமாறக்கூடாது என்பதைத்தான் வலியுறுத்துகிறேன் மற்றபடி எந்த மொழியினர் மீதும் கோபமில்லை நல்லவேளை அந்தப்பெயரை நீங்கள் படிக்க முடியவில்லை அதுவரை சந்தோஷம்

      நீக்கு
  16. பல பதிவுகள் படிக்காமல், வெகுநாள் கழித்து வந்திருந்தாலும் நான் வரும்பொழுது நீங்கள் உங்களுக்கே உரிய வகையில் அறச்சீற்றப் பதிவொன்றை இட்டிருப்பதைக் காண மகிழ்ச்சி! இப்படிப்பட்ட பதிவுகளைத்தான் நாங்கள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

    தமிழர்களைப் பற்றி நீங்கள் கூறுகிற குற்றச்சாட்டெல்லாம் உண்மைதான். ஆனால், இவையெல்லாம் மலையாளிகள் முன்போ, மற்ற இனத்தவர்கள் முன்போ நீங்கள் தலைகுனிந்து நிற்க வேண்டிய அளவுக்குக் கீழ்த்தரமானவை அல்ல!

    நினைத்துப் பாருங்கள்! ஒருவன் அளவுக்கு மிஞ்சிப் பெருந்தன்மை உடையவனாய் இருப்பது பிழைக்கத் தெரியாத்தனம்தானே தவிர, கீழ்த்தரம் இல்லை. அதே போல்தான் இதுவும். தமிழர்கள் வந்தாரை வாழ வைக்கிறோம், நடுநிலையோடு நடக்கிறோம், இந்திய ஒருமைப்பாட்டிற்கு உகந்தபடி செயல்படுகிறோம் என்கிற பெயரால்தான் மலையாளிகளையும் மற்ற இனத்தவர்களையும் இங்கு தலையெடுக்க விட்டிருக்கிறார்கள். அது தமிழர்களின் அளவு கடந்த பெருந்தன்மையைக் காட்டுவது. அஃது இளிச்சவாய்த்தனம்தான் இல்லையெனச் சொல்லவில்லை. ஆனால், கண்டிப்பாக அயோக்கியத்தனமில்லை.

    அண்டை மாநிலத்திலிருந்து பால், இறைச்சி, முட்டை, மின்சாரம் என அன்றாட வாழ்வுக்குத் தேவையான அத்தனை பொருட்களையும் இறக்குமதி செய்து கொண்டு அவர்களுக்கே குடிக்கத் தண்ணீர் தர மறுக்கும் அவர்கள்தான் தலைகுனிய வேண்டுமே தவிர, அப்படிப்பட்ட அவர்களுக்கு இன்று வரை ஒரு துரும்பைக் கூடக் குறைக்காமல் அனுப்பும் நாம் தலைகுனிய வேண்டியதில்லை. மீண்டும் கூறுகிறேன்; தலைகுனிவு என்பது எப்பொழுதும் அயோக்கியர்களுக்கு உரித்தானதே தவிர, இளிச்சவாயர்களுக்கு இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஒருவன் அளவுக்கு மிஞ்சிப் பெருந்தன்மை உடையவனாக இருப்பது பிழைக்கத் தெரியாத்தனம்தானே தவிர, கீழ்த்தரம் இல்லை என்று நீங்களே சொல்கிறீர்கள் எனது கேள்வியே ஏன் ? பிழைக்கத் தெரியாதவனாக இருக்க வேண்டும் 80தே அயோக்கியத்தனம் இல்லைதான் ஏன் ? ஏமாளியாக வாழவேண்டும் சரி எவ்வளவு காலங்கள் ?

      நீக்கு
    2. ஏமாளியாக இருப்பதை நான் சரியெனக் கூறவில்லை நண்பரே! அது களைந்து கொள்ள வேண்டிய குணம்தான். ஆனால், மற்ற இனத்தவர்கள் முன் நாம் வெட்கித் தலைகுனிய வேண்டிய அளவுக்கு அஃது இழிவான குணம் இல்லை என்கிறேன், அவ்வளவுதான்.

      நீக்கு
    3. வருக நண்பரே நானும் அப்படிப்புரிந்து கொள்ளவில்லையே...நண்பரே...
      நான் தலைகுனிந்ததற்கான காரணத்தை கீழே பாருங்கள்.

      தமிழ் நாட்டில் நடிகரின் கட்அவுட்டிற்க்கு பாலாபிஷேகம் செய்யும்போது தவறி விழுந்து வாலிபர் பரிதாப சாவு, 1500 கோடி ரூபாய் ஊழல் செய்த அரசியல் தலைவரை கைது செய்ததால் பஸ் எரிப்பு

      நீக்கு
  17. எம்.ஜி.ஆர் பற்றிக் கூறியிருந்தீர்கள். தனி மனிதர் எனும் முறையில் எம்.ஜி.ஆர் மீது நிறையக் குற்றச்சாட்டுகள் உண்டு. அவற்றைப் பற்றி இப்பொழுது பேசுவது நாகரிமாக இருக்காது. அப்படியே அவை உண்மையாக இருந்தாலும், அவற்றைத் தவிர்த்து விட்டுப் பொது வாழ்வு எனப் பார்த்தால், அவர் ஓர் அருமையான தலைவராகவே தென்படுகிறார்.

    இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல் உச்சக்கட்டத்தை அடைந்து விடுதலைப்புலிகள் கையறு நிலையில் இருந்தபொழுது, மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களை அழைத்து, அன்றைய நிலைக்கு மிகப் பெரும் தொகையான ஆறு கோடி ரூபாய் கொடுத்து அனுப்பினாராம் எம்.ஜி.ஆர். விடுதலைப்புலிகளின் ஆயதப் போராட்டத்துக்கு முதல் முதலீடே அந்த ஆறு கோடி ரூபாய்தான் என்கிறார்கள். எம்.ஜி.ஆர் மட்டும் அதைச் செய்திராவிட்டால் 2009இல் நடந்த தமிழினப் பேரழிப்பு அன்றைக்கே நடந்திருக்கும். இன்று அளவுக்கு இணையம், தனியார் ஊடகங்கள் போன்றவை இல்லாத அந்நாளில் அப்படி நடந்திருந்தால் இந்திய அரசு அதைப் பெரிதும் மூடி மறைத்து விட்டிருக்கும். வெளிவந்திருக்கக்கூடிய சில உண்மைகளும் இந்திய நாட்டுப்பற்றின் பெயரால் பூசி மெழுகப்பட்டிருக்கும். சரியான நேரத்தில் தமிழினத்தைக் காத்த உண்மைத் தலைவன் எம்.ஜி.ஆர்! அவர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் தமிழினம் இன்று இவ்வளவு பெரிய கொடிய இழிநிலைக்கு ஆளாகியிருக்காது.

    இதே போல செயலலிதாவையும் நாம் தொடக்கத்திலிருந்தே 'கன்னடக்காரி' எனத் தூற்றி வந்தோம். ஆனால், தமிழினத் தலைவர் என நாம் தலை மீது தூக்கி வைத்துக் கொண்டாடிய கருணாநிதி காவிரிப் பிரச்சினையில் கடைசி வரை பேச்சுவார்த்தைகளும், வார்த்தை மாயங்களும் மட்டுமே நிகழ்த்தி வந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டுத் தாள் அளவிலாவது தமிழரின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்டியவர் அவர்தான்.

    அதற்காக மீண்டும் மீண்டும் தமிழர் அல்லாதவர்களைத்தான் ஆளத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கூறவில்லை. இனியாவது தமிழரைத் தமிழர் ஆள வேண்டும் என்பதுதான் என் கனவும். ஆனால், தமிழர்கள் ஒருபொழுதும் தவறானவர்களை ஆட்சிக்குத் தேர்ந்தெடுக்கவில்லை; வேற்று இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், திரையுலகைச் சேர்ந்தாவர்களாக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும் தகுதியானவர்களையே தமிழர்கள் எப்பொழுதும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியிருக்கிறார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டுகளாகவே இவற்றைக் கூறினேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழரைத் தமிழர் ஆளவேண்டும் 80தே எமது கருத்து சில விட்டில் பூச்சிகள் என்னுடன் வாதம் செய்யும் சில குறிப்பிட்ட நடிகனை முதல்வராக வரவேண்டும் என்பான் நான் சொல்வேன் அவன் பிரதமராக வரட்டும் காரணம் அவனும் இந்தியன் ஆனால் ? அவன் தமிழ் நாட்டுக்கு முதல்வனாக வரக்கூடாது என்பேன் ஏன் ? 6 ½ கோடி தமிழர்கள் இருக்கிறோம் அதில் நீயும் இருக்கிறாய் சினிமாவில் நியாயமானவனாக நடிக்கின்றான் என்பதால் அவனை நல்லவன் என நினைப்பது எவ்வளவு அறியாமை

      நான் அவர்களுடன் பழகத் தொடங்கி 19 ஆண்டுகளாகிறது.
      தமிழன் மாற்றுச்சிந்தனைக்கு வரவேண்டும் மலையாளி தமிழனை எப்படி கணித்து வைத்து இருக்கிறான் 80 அரபு நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு கண்டிப்பாக தெரியும் அவன் தமிழனுக்கு வைத்திருக்கும் பட்டப்பெயர் ‘’பாண்டி’’ சரி நண்பரே இனி நிறைய விடயங்களை ஆதாரமாக எழுதப்போகிறேன்..

      நீக்கு
    2. பாண்டி என்பது அவர்கள் நமக்கு வைத்திருக்கும் பட்டப்பெயர் என மற்றவர்கள் போல நீங்களும் நினைக்கிறீர்கள். உண்மையில் அப்படியில்லை. தமிழ்நாடு என்பது ஒரு காலத்தில் விந்திய மலை வரை பரவி இருந்ததாம். மூவேந்தர்கள் கோலோச்சிய அந்தக் காலத்தில் இன்று போலக் கேரளம், ஆந்திரம், கருநாடகம் ஆகியவை இல்லை; அனைத்தும் ஒரே தமிழ்நாடாகவே இருந்தன. இவற்றுள் தமிழர்களின் சேரநாடுதான் இன்றைய கேரளம் என்பது தாங்கள் அறிந்ததே. ஆரியம் எனப்படும் வடமொழி உள்ளே புகுந்தது; தமிழோடு கலந்தது; கன்னியாயிருந்த தமிழ்த்தாய் தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல குழந்தைகளுக்குத் தாயானாள். அப்பொழுதுதான் இவை பல்வேறு நாடுகளாகப் பிரிந்தன. ஆனாலும், திராவிட நாடாகவே அனைவராலும் கருதப்பட்டன. ஆங்கிலேயன் வந்தான். நம் வேற்றுமையைப் பயன்படுத்தி மதன் அவர்கள் கூறுவது போல வந்தவுடனே வென்றான்! காலச்சக்கரம் உருண்டோடியது. காந்தியடிகளின் அருள்வழியாலோ அல்லது சிலர் கூறுவது போல இட்லரின் தாக்கத்தாலோ விடுதலை பிறந்தது. மொழிவாரி மாநிலங்கள் உருவாயின. அப்பொழுதுதான் தமிழர்களின் சேரநாடு கேரளம் எனும் தனி மாநிலமாக அலுவலார்ந்து ஏற்கப்பட்டது. சோழர்களும், பாண்டியர்களும் அரசாண்ட பகுதி தமிழ்நாடாகவே நீடித்தது. சோழர், பாண்டியர் ஆகியோருள் மலையாளிகளான சேரர்களோடு தொன்று தொட்டு நட்புப் பூண்டவர்கள் பாண்டியர்களே! சோழர்களுக்கும் சேரர்களுக்கும் என்றைக்குமே ஆகாது. எனவே, தமிழர்களான நம்மைச் சேரர்களான அவர்கள் பாண்டியர்கள் எனப் பொருள்படும் வகையில் 'பாண்டி' என்று குறிப்பிடுகின்றனர். இதுவே என் துணிபு.

      நீக்கு
    3. மீள் வருகைக்கு நன்றி நண்பரே தங்களது கருத்து மிகச்சரியாக இருக்கிறது பொருத்தமானதே... சில அறிந்த விடயங்களும் பல புதிய விடயங்களும் தந்தமைக்கு நன்றி.
      நாமென்ன சளைத்தவர்களா ? மலையாளியை கஞ்சி என்றும், தெலுங்கரை கொலுட்டி என்று பட்டப்பெயர் வைத்து இருக்கிறோமே...

      நீக்கு
    4. தெலுங்கர்களை கொலுட்டி என அழைப்பது தெரியும். மலையாளிகளை இப்படி அழைப்பதுண்டு என இப்பொழுதுதான் தெரியும் நீங்கள் சொல்லி. ஆக மொத்தம், நாம் யாரும் ஒற்றுமையாக இல்லை.

      நீக்கு
    5. முததலில் தமிழர்கள் ஒன்று பட்டாலே நாளைய நமது சந்ததிகளுக்கு போதுமானது.

      நீக்கு
  18. மலையாளிகள் பற்றி சிந்திக்கும் பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மையை எழுதினேன் அவ்வளவுதான்.

      நீக்கு
  19. வணக்கம்
    ஜி
    எங்கோயு போயிற்றிங்கள்.... தங்களின் ஒவ்வொரு திறமையையும் கண்டு வியந்து போயிற்றேன் சரி ஊருக்கு வாருங்கள் அப்பத்தான் ஊக்கம் வரும்..... இறுதியில் சொல்லிய பாடல் மிகவும் கருத்து நிறைந்தவை.. தங்களின் குரல் ஒரு இனிமை... ஆகா...ஆகா...பகிர்வுக்கு நன்றி த.ம9
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரூபன் விரிவான கருத்துரைக்கும் பாராட்டுகளுக்கும் மனமார்ந்த நன்றி.
      நண்பரே அது ஒரு நாடக பாடல் இன்னும் உரக்க பாடவேண்டிய பாடல் நல்ல அர்த்தம் உள்ளது.

      நீக்கு
  20. அன்புள்ள ஜி,

    குறும்படம் எப்ப எடுக்கக் போகிறீர்கள்...? மலையாளிகளோடு சேர்ந்து பழகி வாழ்ந்து வருவதால் தங்களின் அனுபவம் பேசுகிறது.

    வெட்கித் தலைகுனிந்த அனுபவம்... படிக்கின்ற பொழுது உண்மையில் தலைகுனிவுதான்.

    காணொளி பாட்டு எட்டுக் கால்... கா...ல்... என்ன என்பதை ஒருக்கால் யோசித்துப் பார்த்தால் கால் தடுக்கி... போன் கால் வந்து... அதுவும் ராங்கால் ஆகிவிட்டது.

    நன்றி.
    த.ம. 10.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே எனது அனுபவத்தில் உண்மைகளை மட்டுமே எழுதினேன் 80தே சரி இந்தப்பாடலின் அர்த்தங்கள் எல்லாம் தங்களுக்கு தெரியாததா என்ன ?

      நீக்கு
  21. அன்புள்ள நண்பருக்கு,
    தங்களது மேலான கவனத்திற்கு,
    ஒன்றுபட்ட இந்தியாவில்,
    ஒரு தாய் மக்களாகாக நாம் வாழ்ந்து வர வேண்டும் என்பதுவே எனது எண்ணம்!
    மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கபட்டாலும்!
    இந்தியன் என்னும் ஒருமைபாட்டுக்குள் ஒரு குடையின் கீழ் வாழ்வதுதான் சிறப்பான செய்லாக நான் பார்க்கின்றேன். ஆதங்கத்தை பதிவுகளாக்கும் முன்பு பரந்து பட்ட பார்வையோடு பார்ப்பதுதான் சிறந்தது.
    தமிழர்கள் ஏமாளிகளாக இருப்பதற்கு இன்னொரு இனத்தையே குறை சொல்லுவது எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்!

    எம்ஜி ஆர் அவர்கள் பேரறிஞர் அண்ணாவை தலைவராக ஏற்றுக் கொண்டு
    செயல் பட்டவர்.
    சிங்கப்பூரில் மலையாளிக்கு விசா கிடையாது இது எற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவே எனக்கு தோன்றுகிறது.

    மலையாளிகளுக்கு என்று தனி பாஸ்போர்ட் கிடையாது அவர்களும் இந்தியர்களே!
    அவர்களிடம் இருப்பதுவும் இந்திய பாஸ்போர்ட் தான் அப்படி இருக்க எப்படி சிங்கப்பூர் அரசாங்கம் தர முடியாது என்று சொல்ல முடியும். இதில் விளக்கம் ஆதாரப் பூர்வமாக இருக்க வேண்டும் நண்பரே!
    எனது தம்பி மருத்துவத் துறையில் மருந்தாளுனர் படிப்பினை கேரளாவில் கோட்டயத்தில் படித்தபோது அவன் கற்று வந்த நல்ல பழக்க வழக்கங்க பல உள்ளன.



    சுத்தம்!
    நேரம் தவாறாமை
    உடை கலாச்சாரம்
    இவை மூன்றும் நல்ல பழக்க வழக்கங்களாகவே அவர்களிடம் அவன் கற்று வந்தான்.
    இதனை இந்த வேளையில் குறிப்பிட வேண்டுகிறேன்.
    முல்லை பெரியாறு தண்ணீர் பிரச்சனை போன்ற அரசியல் பார்வையை தவிர்த்து விட்டு பாருங்கள் நண்பரே.
    இல்லையாயின் பெரியார் தான் வர வேண்டும்.
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நண்பரே தங்களின் நீண்ட கருத்துரைக்கு எமது முற்க்கண் நன்றி நண்பா, நான் ஏதோ மலையாளிகளை எதிரிகளைப்போல் சித்தரித்து விட்டதாகவே முடிவு செய்து விட்டீர்களா ? கீழே பார்த்தீர்களா ? அவர்களை உயர்த்தி எழுத வேண்டும் என்ற எண்ணமும் கிடையாது தாழ்த்தி எழுத வேண்டும் என்ற எண்ணமும் கிடையாது உண்மையை, யாதார்த்தத்தை எழுதவேண்டும் 80தே எப்போதுமே... எனது திண்ணமான எண்ணம். நான் மிகைப்படுத்தி பொய் கலந்து எழுதும் பதிவு நகைச்சுவை மட்டுமே 80தை ஆணித்தரமாக இங்கு பதிவு செய்கிறேன்.

      //அவன் சினிமாவைக் குறித்தோ, அரசியலைக் குறித்தோ பேசினால் அதில் ஆக்கப்பூர்வமான, அறிவுப்பூர்வமான சிந்தனைகள் இருக்கும் குறிப்பாக ஹிந்தி பேசினாலும் தவறின்றி சரியானபடி உச்சரிப்பான், காரணம் பள்ளியிலிருந்தே படித்தவன், எக்காரணம் கொண்டும் எனது தலைவன் என்று யாரையும் சொல்ல மாட்டான், இதில் தண்ணி அடிப்பவர்கள்கூட முறையாக குடித்து, சரியாக சாப்பிட்டு தெளிவாக பேசுவார்கள்//

      இதுவும் நான்தானே எழுதினேன் நண்பரே அவர்களுடன் இன்றல்ல, நேற்றல்ல 19 ஆண்டுகளாக பழகி வருபவன் நான், மலையாளி தமிழனை முட்டாள் என்றுதான் தீர்மானித்து வைத்து இருக்கிறான் அதை நடைமுறைப்படுத்தியும் வருகிறான் இது அரபு தேசங்கள் முழுவதும் உள்ள உண்மையான நிலை

      எங்கும் மலையாளி நிறைந்திருப்பான் இதில் அடிமட்ட வேலை பார்ப்பவர்கள் பெரும்பாலும் தமிழர்கள் மேல்மட்டத்திலும் இருக்கிறார்கள் இல்லை என்று சொல்லவில்லை அவன்தான் இவர்களை வேலை வாங்குவான் முதற்காரணம் என்ன தெரியுமா ? நம்மருக்கு மொழிப்பிரட்சினை அவனை இவன்போய் அண்ணா இது என்னானு கேட்டுச்சொல்லுண்ணா ? என்பான் இதன் முலம் மலையாளி குறுகிய காலத்தில் தமிழ் படித்து விடுவான் நம்மவன் எத்தனை காலம் ஆயினும் அவிடே, இவிடே, எவிடே இந்த மூன்று வார்த்தைகளை மட்டுமே சொல்லுவான் இது 100/100 உண்மை

      நீக்கு
    2. இனிய நண்பர் புதுவை வேலு அவர்களுக்கு.....
      சுத்தம், உடை கலாச்சாரம், நேரம் தவறாமை உண்மை உண்மை இதில் நேரம் தவறாமை இருக்கிறதே அதில் பிரயோசனம் இல்லை காரணம் வேலை செய்யவே மாட்டான் இல்லை.
      என்னுடன் பழகும் அனைத்து மளையாளிகளும் என்னை விரும்புவார்கள் காரணம் நான் அவர்களிடம் ஒரு தமிழ் வார்த்தைகூட கலக்காமல் மலையாளம் பேசுவேன் இன்னும் இருக்கிறது நண்பரே மலையாளப் பத்திரிக்கையை தலைகீழாக படிப்பேன் காரணம் நாம் அவனைவிட ஒருபடி மேல்நிற்க வேண்டுமென்ற உந்துதல்.

      எம்ஜியாரைப்பற்றி சொல்கிறீர்கள் நான் நம்பியாரைப்பற்றி சொல்லட்டுமா ? தமிழ்நாட்டில் நம்பியாரைத் திட்டாத தாய்க்குலங்கள் இருக்கிறார்களா ? உண்மையில் நம்பியார் அப்பழுக்கற்ற மனிதர் தெரியும்தானே.. எம்ஜிஆர்-நம்பியார் ஒப்பிட்டுப்பாருங்கள் வேண்டாம் நண்பரே இருவருமே மறைந்து விட்டார்கள் ஆகவே வேண்டாம் பிறகு நான் அரசியல் பேசுவதாக அர்த்தமாகி விடும். என்னிடம் எந்த மலையாளியையும் தமிழ் பேச விடமாட்டேன் ஏன் ?

      ஒருமுறை அபுதாபி வந்திருந்த பிண்ணிப்பாடகர் திரு. உண்ணி கிருஷ்ணன் என்னிடம் தமிழில் பேசினார் நான் மலையாளம் பேசினேன் அவர் ஏன் ? தமிழ் பேசினால் ? என்ன ? என்றார் இதே கேள்வியை நானும் கேட்கலாமா ? என்றேன் அதையும் மலையாளத்தில் பிறகு அவர்தான் மலையாளத்துக்கு வந்தார்

      பால்போர்ட் விபரம் ஆம் நண்பரே அதில் கேரள விலாசம் இருந்தால் நிராகரிக்கப்படுகிறது 90 சதவீதம் ஆகவே அவர்களை அரபு நாட்டை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தார்கள்.

      முடிவாக ஒன்று நான் மலையாளியை மட்டுமல்ல அனைத்து இந்தியனையும் நேசிக்கிறேன் என்னை என்னுடன் பழகிய மலையாளிகள் யாருமே இதுவரை வெறுத்ததில்லை நான் மலையாளம் எழுதப்படிக்கத் தெரியாத ஒரு மலையாள நண்பனின் மனைவிக்கு கடிதம் எழுதுவதும், வந்த கடிதங்களை படித்துக் காண்பிப்பதும் நான்தான் இது மொபைல் போண்கள் வராத காலகட்டம் மற்ற மலையாளிகள் சிரிப்பார்கள் இதை எனக்கு பெருமைக்குறிய விடயமாக நினைக்கிறேன்.

      நண்பரே நான் இன்னும் சில பதிவுகள் எழுதப்போகிறேன்..... விரிவாக காரணம் கருத்துரை 80 தங்களுக்கு மட்டுமாகி விடும் ஆகவே..

      குறிப்பு – நண்பரே தங்களது கருத்துரை மட்டுமல்ல யாருடைய கருத்துரையையும் நீக்கும் பழக்கம் இதுவரை இல்லை என்னைத்தாக்கினாலும் பதில் எழுதுவேன் முகம் அறியாத நபராயினும்.
      அன்புடன்
      கில்லர்ஜி

      நீக்கு
  22. நம்ம தமிழன் நகை வாங்குவதும் மலையாளி கடையில்தான் ,அடகு வைத்து ஏமாறுவதும் மலையாளி கடையில்தான் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக சொன்னீர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள நகைக்கடைகளில் பெரும்பாலும் மலையாளிகள்தான் தமிழன் ஒருவன் போய் கேரளத்தில் நகைக்கடை வைக்க முடியுமா ?

      நீக்கு
    2. மலையாளி ஃபைனான்ஸ் கடைகளும் இங்கே தெருவுக்கு தெரு வந்து விட்டதே :)

      நீக்கு
    3. கோயமுத்துரின் வியாபார நிலையை நிர்வாகிப்பது இன்று அவர்கள் கையில்தான் ஜி நாளை கோவை கேரளத்தைச் சேர்ந்ததது என்று சொன்னாலும் ஆச்சர்யப்பட வேண்டியதில்லை ஓணத்துக்கு பள்ளி விடுறை, எங்கே கேரளத்தில் தீபாவளிக்கு விடுமுறை விடச்சொல்லுங்கள் பார்ப்போம் எதையும் தொலைநோக்கு கண்ணோட்டத்தில் பார்த்தால்தானே புரியும் தமிழனுக்கு இவண்தான் டாஸ்மார்க்கில் மூழ்கி விட்டானே...

      நீக்கு
  23. வருங்கால சூப்பர் ஹீரோ வாழ்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் நண்பரே இப்படி திட்டுகிறீர்கள்.

      நீக்கு
    2. உங்கள் திறமை எனக்கு தெரியும். வாழ்த்துக்கள்.

      நீக்கு
    3. நம்பிக்கைக்கு நன்றிகள் பல...

      நீக்கு
  24. தமிழில் இருந்து பிரிந்து சென்றது
    மலையாளம் என்பதால்
    மலையாளியும் தமிழர் தானே!
    தமிழா என்று
    ஒப்பீட்டுச் சிந்திக்க வைக்கிறியளே...
    காட்டுக்குப் போகையிலே - நம்மாளுகளுக்கு
    எட்டுக் கால் தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் நண்பரே பாடலைக்குறித்து கருத்து சொன்னைக்கு நன்றி.

      நீக்கு
  25. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று கூறி கூறி
    வந்தவர்களை எல்லாம் வாழவைத்து,
    நாமும் வாழ வேண்டும்என்பதை மறந்தே போனோம்
    அடுத்தவர்களுக்கு பல்லக்கு தூக்குவதையே பெருமையாய்
    எண்ணும் எண்ணம் மாற வேண்டுமே நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இதைத்தான் நான் ஆரம்பம் முதலே சொல்லிக்கொண்டு வருகிறேன் நான் யாரையும் தாக்கி எழுதவில்லையே அனுபவ உண்மையை எழுதுகிறேன் வருகைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  26. தமிழர்களின் நிலைமைகளுக்கு மற்ற மாநில மக்கள் எந்த விதத்திலும் சம்மந்த படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் உங்களுக்கு அறிந்த தெரிந்த ஒரு சிலரை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு கருத்து சொல்வது சரியாகாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மாது நமது வாழ்வுக்கு நாமே பொருப்பாளி உண்மைதான். நாம் இன்று உணர ஆரம்பித்தால் நாளைய நமது சந்ததிகள் நலம் பெறுவார்கள் நான் அவர்களின் திறமைகளை எவ்வளவு பட்டியல் போட்டு எழுதி இருக்கிறேன் அதைப்படிக்கவில்லையா ?

      அரபு தேசத்தில் வாழும் தமிழர்களுக்கு தெரியும் நான் சொல்வதில் உண்மை இருக்கிறதா ? இல்லையா ? 80அதுவும் படித்து நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு நண்பரே நான் அவர்களுடன் 19 வருடமாக பழகி இருக்கிறேன்.

      நான் சொல் வருவதெல்லாம் தமிழன் இன்னும் ஏமாறக்கூடாது 80தே...
      அரசியல்வாதிகளுக்கு தொண்டனாக இருப்பவர்களும், சினிமா நடிகனுக்கு ரசிகர்களாக இருப்பவர்களும் இந்தப்பதிவை ஏற்றுக்கொள்ள முடியாது 80 இதை நான் எழுதத்தொடங்கும்போதே அறிந்தவன்.

      நண்பரே எனக்கு பதிவு எழுத இந்தச்சமூகத்தில் விடயங்கள் கிடைக்காமல் இல்லை கடந்த வாரம் நடந்த உண்மைச்சம்பவத்தை குறும்படத்துக்கான கதையை சொல்லியபோது நடந்த விசயங்களே இது. இனி நான் கடந்த கால சம்பவங்களை நோக்கிப் போகிறேன் நடந்தவைகளை எழுத.... பதிவுக்கு வழி கொடுத்தமைக்கு நன்றி மாது.

      நீக்கு
    2. பெயரில்லா4/11/2015 1:43 PM

      சகோதரா முதலில் பாடல் குரல் நன்றாக உள்ளது..
      பேசும் பொது வேறு மாதிரி உள்ளது.
      2ம் பொருந்தவே இல்லை. டப்பிங்கோ என்று சிந்தனை..
      ஆயினும் பாடல் குரல் நல்லது.
      பதிவு பற்றி...
      பல உண்மைகளைப் பிட்டுப் பிட்டு (புட்டுப் புட்டு) வைத்தீர்கள்.
      சினிமாவும் அரசியல் கலப்பும் சரியானது.
      அது தானே இந்தியாவின் பலவீனம்.
      நன்று நன்று பலர் சிந்திக்கட்டும்

      நீக்கு
    3. சகோவின் வருகைக்கு நன்றி, பாடியதும் நான்தான், பேசியதும் நான்தான், கணொளியில் வரும் மொட்டையும் நான்தான் புகைப்படத்தில் டப்பிங்கை சொருகினேன் வேறொன்றுமில்லை. எனது குரலும் நன்றாக உள்ளது என்றமைக்கு நன்றி.

      நீக்கு
  27. ஏமாற்றும் மலையாளிகளைப்பற்றிக் கூறும்போது ,ஏமாறும்,ஏமாந்த தமிழினைப்பற்றியும் கூறு வேண்டுகிறேன் நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை நான் சொன்னால்தான் தெரியுமா ? காலம் முழவதும் ஏமாறுவதுதான் என் பணி என்னுதானே வாழ்கிறான் தமிழன்.

      நீக்கு
  28. அட்டகாசமான பதிவு நண்பரே,

    மூன்று நாட்களாக கேரளத்து சேட்டன்களோடு ஒரு வனப் பகுதியில் தான் இருந்தேன். அதாவது தொடர்பு எல்லைக்கு வெளியே. இன்றுதான் ஊருக்கு வந்தேன். வந்ததும் உங்கள் பதிவு. வழக்கம் போல் வெளுத்து கட்டுகிறீர்கள். என் மனதிலும் இதுபோன்ற எண்ணம் உள்ளது. மலையாளிகள் கொஞ்சம் சந்தர்ப்பவாதிகளாகவே படுகிறார்கள்.

    தொழில் நடத்திவரும் நண்பர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஒரு சில மலையாளிகள் பொருட்களை வணங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றி விடுவார்களாம். மதுரையில் நிறைய அப்பளக் கம்பெனிகளை அவர்கள்தான் நடத்தி வருகிறார்கள். அவர்கள் எல்லாம் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள். ஆனால், மதுரையில் இருந்து கேரளாவிற்கு வியாபாரம் செய்பவர்களில் பலர் மலையாளிகளிடம் ஏமாந்த விவரத்தை சொல்லியிருக்கிறார்கள். உங்களின் பதிவு அதை உண்மை என்றே காட்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அவர்கள் சந்தர்ப்பவாதிகள்தான் ஆனால் ? அவர்களுக்குள் ஒற்றுமை உண்டு அயல் நாடுகளில் விட்டுக்கொடுக்காமல் உதவிக்கொள்வார்கள் அதனால்தான் எந்த அலுவலக காலி இடங்களையும் மற்றொரு மலையாளி வந்து நிரப்புகிறான் அதனால்தான் அவர்கள் நல்ல சம்பள நிலையில் வருகிறார்கள் குறுகிய காலத்தில் முன்னேறி விடுவார்கள் ஒரு விசயம் கண்டிப்பாக ஆத்மார்த்தமாக வேலை செய்ய மாட்டான் இன்னும் சொல்லப்போனால் நான் அவர்களின் அறிவுத்திறமையை பாராட்டவே செய்கிறேன் இதில் பலரும் நான் அவர்களை குற்றவாளியாக சித்தரித்ததைப்போல் கருத்திருகிறார்கள் தங்களின் வருகைக்கு நன்றி.

      நண்பரே நான் வெளுத்துதான் கட்டுவேன் அழுக்கை உடுத்த மாட்டேன்.

      நீக்கு
  29. உண்மையைச் சொல்லியிருக்கீங்க அண்ணா...
    அருமை...
    நானும் இங்கு மலையாளிகளோடுதான் குப்பை கொட்டுறேன்... நம்ம கிட்ட நல்லவன் போல பேசிக்கிட்டே அங்கிட்டு போட்டுக்கொடுப்பதில் வல்லவர்கள்...




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பிஸியான தருணத்திலும் தங்களது கருத்தினை பதிந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  30. நண்பரே! உங்கள் கருத்துகள் அனைத்தும் நியாயமானவையே! ஆனால், இதிலிருந்து என்ன தெரிகின்றது என்றால், நாம் இந்தியர்கள் இந்தியாவுக்குள் மட்டுமல்ல வெளிநாடு சென்றாலும் ஒற்றுமையாக இல்லை. வெளியில் ஒற்றுமையாக இருப்பது போல் தெரிந்தாலும், மனதிற்குள் ஒருவரைப்பற்றி ஒருவர் ஏதோ ஒரு வகையில் மாற்றுக் கருத்துக்கள். தமிழனும் தெலுங்கு நாட்டவரும் சேர்ந்து இருந்தால் உங்களுக்குத் தெரியுமா? என்ன நடக்கும் என்று? அந்த அனுபவமும் உண்டு. அதே போன்று வட இந்தியர்களுடன் இருந்த அனுபவமும் உண்டு. எல்லோருக்குமே தமிழரைப் பற்றி என்ன தாழ்மையான எண்ணமோ அதே போன்று தமிழருக்கும் மற்ற மக்களைப் பற்றி நல்ல அபிப்ராயம் இல்லை.

    நீங்கள் சொல்லுவது போல் அவர்களிலும் நல்லவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள் எப்படி நம்மவர்களில் மோசமானவர்கள் இருக்கின்றார்களோ அதே போன்று. ஆனால் நாம் அதற்காகத் தலை குனியவோ, நம்மைத் தாழ்த்திக் கொள்ளவோ தேவை இல்லை. ஏனென்றால், நீங்கள் சொல்லியிருக்கும் மாநிலத்தவரும் சரி மற்ற மாநிலத்தவரும் சரி எல்லோருக்கும் நன்றாகவே தெரியும் தமிழ்நாடு மிகவும் பாதுகாப்பான ஊர். மக்கள் நல்லவர்கள் உதவுவதில் என்று. அதனால் தான்....இங்கு எல்லோரும் வந்து தொழில் செய்ய முடிகின்றது.

    கேரளாவும் பாதுகாப்பான மாநிலம்தான் என்றாலும் அங்கு தொழில்களுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு தங்களுக்கே தெரியும் அங்கு அரசியலமைப்பு அப்படி. எதற்கெடுத்தாலும் கொடி பிடிப்பார்கள் என்று. அது அவர்களுக்கும் தெரியும். அங்குளவர்கள் தங்கள் உரிமையை என்றுமே விட்டுக் கொடுப்பதில்லைதான். நாம் அதில் கொஞ்சம் அதிகம்தான்...

    நீங்கள் சொல்லி இருப்பது போல் தனிமனிதக் கொண்டாட்டம் இங்கு அளவுக்கு மீறியதுதான். தமிழ் நாட்டில் மட்டுமா நண்பரே ஆந்திரா, கர்நாடகாவிலும் தான். கேரளத்தவர் படிப்பறிவு உள்ளவர்கள். அதாவது பெயருக்குப் பின்னால் டிகிரிகள் போடும் அளவிற்கு இல்லை என்றாலும் ஓரளவு கல்வி அறிவு, உலக நடப்பு தெரிந்தவர்கள். கிராமங்களில் கூட விழிப்புணர்வு உள்ளவர்கள். நம் தமிழ் நாட்டில்? அதனால் தான் இங்கு இத்தனைப் பிரச்சனைகள்.

    எனவே நாம் நம்மை உயர்த்திக் கொள்ள முனையவேண்டும் என்பதே எமது கருத்து. இங்குள்ளது போல் நன்மைகள் எந்த மாநிலத்திலும் கிடையாது.

    எங்கள் தளத்தில் துளசி அடிப்படையில் கேரளக்காரர்தான். தமிழ் நாட்டில் வளர்ந்ததால் அவருக்கு இங்கு ஈடுபாடு அதிகம். கீதா தமிழ்நாட்டவர்தான் என்றாலும் கேரளத்து வாழ்க்கை முறை, கன்னியாகுமரி மாவட்டம், திருவனந்தபுரத்தில் 8 வருட வாழ்க்கை மட்டுமல்ல கேரளத்துடன் அதிகத் தொடர்பு உடையவர் என்பதால்.

    எம் ஜி ஆர் தனிப்பட்ட முறையில் பார்க்காமல் பொது ந்ல வாழ்வு என்று பார்த்தால் அவர் நிறையவே நல்லது செய்திருக்கின்றார் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்றாலும். அவரது தாயார் இலங்கையில் இருந்தவர். அப்படித்தான் அறிந்து கொண்டது.

    யார் என்ன சொன்னாலும், தமிழ்நாடு தங்களது அரசியல் அமைப்பு, அரசியல் கல்வித்துறை, சினிமாத் துறை இவற்றில் எல்லாம் நுழையாமல், அரசியலும் மற்ற துறைகளும் தனித்தனி என்று பிரித்தாராயத் தொடங்கி விட்டால் நீங்கள் நினைப்பது நடக்கும். அதற்கு இளையவர்கள் முன்னேறி தமிழ்நாட்டை ஆளத் தொடங்க வேண்டும். இப்போதிருக்கும் அரசியல் கட்திகள் வெளியேறி நல்லதொரு அரசியல் அமைப்பு உருவானால் தமிழ்நாடு எங்கேயோ போய்விடும். சரிதானே நண்பரே!


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சரியாக சொன்னீர்கள் மனதில் ஒன்று வெளியில் ஒன்றுதான் இருக்கிறது அதே நேரம் நாம் அவர்களை மதிக்கிறோமே இல்லையோ அவர்கள் நம்மை இழிவாக நினைக்கிறார்கள் 80 100க்கு100 உண்மைதான்.

      அவர்களில் மட்டுமல்ல உலக அளவில் நல்ல மனிதர்களும், கெட்ட மனிதர்களும் நிறைந்து இருக்கிறார்கள் ஆம் நாம் மற்றவர்களின் உயிருக்கு மட்டுமல்ல உடமைக்கும் பாதுகாப்பு கொடுக்கிறோம் கன்னடத்தில் தமிழர்கள் அடித்து உதைக்கப்பட்டபோது நாம் கன்னடனுக்கு பாலாபிஷேகம் செய்கிறோம் அதற்காக பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்று நான் சொல்வதாக அர்த்தமல்ல பாலாபிஷேகத்தையாவது நிறுத்தியிருக்க வேண்டும் அதுதான் தமிழுணர்வு மேலே கமலஹாசன் விரட்டப்பட்ட விடயங்களை கொடுத்து இருக்கிறேன் இதனால் என்னை கமலஹாசனின் ரசிகன் என்று தவறாக கருதி விடவேண்டாம் 1983-ல் கமலஹாசனிடமே நான் உங்களது ரசிகன் அல்ல என்று சொன்னவன்.

      இன்றொரு விடயம் நான் மலையாளிகளை குற்றம் சொல்ல வரவில்லை அவர்களின் நல்ல குணங்களையும் பட்டியல் இட்டு இருக்கிறேன் அதை மறந்து விடவேண்டாம் மேலும் அவரிகளின் இயல்பான குணங்களையும் சொல்லி வருகிறேன் மலையாளிகள் நிறைய நண்பர்கள் எனக்கு உண்டு 80தையும் இங்கு பதிவு செய்கிறேன்.

      எம்ஜிஆர் பொதுவாக பார்த்தால் நிறைய நல்ல காரியங்கள் செய்திருக்கின்றார் அதை மறுக்க முடியாது ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்வில் பலரும் பாதிக்கப்ட்டுள்ளார்கள் இதில் S.A.அசோகன் முக்கியமானவர் இதை நம்மவர்கள் ஏற்க மறுப்பதற்க்கு காரணம் நம்பி விட்டால் மரணம் வரை நல்லவன்தான் என்று நினைப்பது தமிழனின் இயல்பு குணம்.

      படித்த இளைஞர்கள் நினைத்தால் நடக்கும் உண்மைதான் அவனும் கட்டவுட்டுக்கு பாலாபிஷகம் செய்கிறான் தனது தலைவனின் திரைப்படம் வெற்றி பெற இறைவனுக்கு காவடி எடுக்கிறான், பின்நோக்கி நடந்து பாதயாத்திரை போகிறான் அதே நேரம் அந்த நடிகனோ, நடிகனின் குடும்ப உறுப்பினர்களோ போவதில்லை அதற்காக அவர்களும் போகவேண்டும் என்று நான் சொல்வதாக அர்த்தமல்ல இத்தனைக்கும் அவன் படிக்காதவன் இதில் யார் ? அறிவாளி.

      நீக்கு
  31. நண்பரே நீங்கள் ஒன்று கவனித்திருப்பீர்களே! அவர்கள் எங்கே போனாலும், ஒற்றுமையாக இருப்பார்கள். விட்டுக் கொடுப்பதில்லை. தங்கள் தாய்மொழி உட்பட. அவர்கள் சந்தித்துக் கொண்டால் பெரும்பாலும் தங்கள் மொழியில்தான் சம்சாரிப்பார்கள். ஆனால், தமிழர்கள் இருவர் சந்தித்துக் கொண்டால், ஆங்கிலம் தெரிந்தவர்கள் என்றால், ஆங்கிலத்தில்தான் ஸ்பீக் பண்னுவார்கள். நிச்சயமாகத் தமிழில் ஸ்பீக் பண்ண மாட்டார்கள். இது வேறு மாநிலத்தவர்க்கும் பொருந்தும். ஆனால் இதை ஒரு நல்ல விடயமாகவே பார்க்கலாம். பாசிட்டிவ் ஆங்கிளில். அதாவது ஒரு குழு இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். தமிழர், கேரளத்துக்காரர், செலுங்குக் காரர்ம் கன்னட்த்துக்காரர், இந்திகாரர் என்று வைத்துக் கொள்ளுங்கள் இவர்களில் இருவருக்கு மலையாளமோ, இந்தியோ, கன்னடமோ, தெலுங்கோ தெரியும் என்றால் அவர்கள் நிச்சயமாக, குழு என்றும் கூட பார்க்காமல் அவர்கள் மொழியில்தான் பேசிக் கொள்வார்கள். இது நாகரீகமற்ற செயல். அதே சமயம் தமிழர் நிச்சயமாக ஆங்கிலத்தில்தான் உரையாடுவார் எல்லோருக்கும் புரியும் வகையில், ஆங்கிலம் தெரிந்திருந்தால்.

    கேரளத்தவர் ஹிந்தி நன்றாகப் பேசுகின்றார் என்றால் அதற்குக் காரணம் அவர்களது மொழி சம்ஸ்கிருதம் கலந்த மொழி. அதன் தாக்கம் அதிகம். தமிழ் அப்படிப்பட்டது அல்ல. அதிலிருந்து பிரிந்தவைதான் மற்ற தென்னக மொழிகள். எனவே அவர்கள் ஹிந்தி பேசுவது பெரிய விடயமல்ல.

    இப்போதுதான் இபுஞா அவர்களின் கருத்தை வாசித்தோம். அவரது கருத்தையும் வழி மொழிகின்றோம்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், நண்பரே அவர்கள் தமிழர்களைப்போல வெட்டியாக தமிழ் வாழ்க 80 போல் மலையாளம் வாழ்க என்று கோஷம் போடுவதில்லை அதேநேரம் தனது மொழிக்காரனைக் கண்டால் மலையாளத்தில்தான் பேசுகிறார்கள் இது அவர்களின் சிறப்பான விடயமே நம்மவர்கள் ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள் 1999 களில் நான் வந்த புதிது ஒரு அலுவலகத்தில் தமிழரிடம் கஷ்டப்பட்டு இருக்கிறேன் கேட்டால் அவர் இஞ்சினியராம் இருப்பினும் அதுவும் எனக்கு உதவியதே...

      மேலும் மலையாளம் சமஸ்கிருதத்தை கலந்திருந்தாலும் ஸ்கூலிலேயே ஹிந்தி எழுதப் படிக்கத்தெரிந்து கொள்கிறார்கள் அவர்கள் என்றுமே ஹிந்தியை எதிர்தத்தில்லை காரணம் ஹிந்தி இந்தியா முழுவதும் சென்றாலும் பிழைத்துக்கொள்ளலாம் 80 அவர்களுக்கு தெரியும். விரிவான கருத்துரைக்கு நன்றிகள் பல..

      வழி மொழிந்தவை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

      நீக்கு
  32. நல்லவர்களும் கெட்டவர்களும் எல்லா இடங்களிலும் உண்டு.

    உங்கள் கதை குறும்படமாக வர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்தையும் ஏற்கிறேன் வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு