தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், மே 14, 2015

கவிதாவின் காவியம்

 

கவியா ? காவியா ?
என் காதலை ஏற்றுக் கொள்ள
கவிதா கேட்டாள் என்னைப்பற்றி ஒரு கவி தா வென்று
கவிதாவுக்கு என்னிடமிருந்து கவிதையா ?
IMPOSSIBLE


எனக்கு என்ன தெரியும் ? சட்டியில் இருந்தால்தானே, ஸ்பூனில் வரும் நானும் சட்டியை கவிழ்த்துப் போட்டு வரண்டி வரண்டி கரண்டியின் ஒரு பகுதி தேய்பிறையானது


வளர்மதி அத்தை பெற்ற முழுநிலவு நீ என்றேன்
அவள் ஒப்புக் கொள்ளவில்லை இது சாக்கு போக்கு என்றாள்

கவியூர் கவியரசன் பெற்ற கவிமகள் நீ என்றேன்
இது எங்க ஊரும், அப்பா பேரும் என்றாள்

கவிதா உன்பெயரே ஒரு கவி என்றேன்.
இது எனக்கே தெரியும் என்றாள்
வேறு வழியின்றி சொன்னேன்
நீ மலடியை புள்ளப் பெக்கச் சொல்றே
இதுக்கு மேலயும் நீ கவிதை கேட்டால் நான்
காவி உடையணிந்து சன்னியாசம் போய் விடுவேன் கவிதா என்றேன்.

கவிழ்ந்தாள் என் கவிதா
அன்று தொடங்கியது என் காவியக்காதல் என் கவிதாவுடன்.
இன்று கவிதா கணவனுடன்
நான் கவிதையுடன்
WITH
காவியுடன்
LITTLE
கவிஞனாய்
காவிரி கரையோரமாய்...


சாம்பசிவம்-

கவிதை தெரியாதுங்கிற விசயத்தை கவிதை மாதிரியே சொல்லி கவிதாவை கவிழ்த்தினே ஆனால் கடைசியிலே உன்னை கவிழ்த்தி விட்டாளே கவியூர்க்காரி.
 
எனது, கனவில் வந்த காந்தி பதிவில் எடுத்தது.

நண்பர்களே... நண்பிகளே... கடந்த இரண்டு தினங்களாக மனது சரியில்லை காரணம்தான் உங்களுக்கெல்லாம் தெரியுமே... கோபத்தில் பதிவு எழுதினேன் பிறகு தோன்றியது வேண்டாமே.... காந்திஜியிடம் கில்லர்ஜி சொன்ன பதிலை மட்டுமே பதிவாக கொடுப்போம் என்று நிறுத்தி விட்டேன் வாழ்க ஜபணநாயகம் புகைப்படத்தை சொடுக்கி மட்டும் பார்க்கவும்.

61 கருத்துகள்:

 1. கவிதா இப்படிக் கவி தா தா என்று கேட்டபோது கவிஞனாக முடியாமல்.....கவி கொடுத்தும் கவிதா தாவை மறந்து போ என்று சொல்லி மண்ணைக் கவ்வ வைக்க...காதல் போயின் கவிதை என்று காவி உடையில் கவிஞனாய்.....காவிரிக்கரையில்.....ஹாஹா இந்தக் காவியுடைக் கவிஞன் அபுதாயில் இப்போது என்று கேள்விப்பட்டோம்....அப்படியா? அங்கும் காவிரி ஓடுதா?!!!!

  காவி உடை வேண்டாம்பா..ஹ்ஹஹஹ் ஏன்னா நம்ம ஊருல எல்லாம் காவி உடை அணிபவர்கள் எல்லாரும் தத்துவ பித்துக்கள்.வெளியே ...ஆனா உள்ளே ...ம்ம்ம்ம்
  அது சரி கவிக் காதல் போனால் தான் பித்தம் தலைக்கேறி கவிதை பிறந்து கவியாகின்றனரோ!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கு கடல்தான் இருக்கு அங்கேயும் போயி பேப்பரும், பேனாவுமாக திரிந்தால் போலீஸ் பிடிச்சுட்டுப் போயிரும் அப்புறம் யாரு ? கவிதா புருஷனா வருவான் ஜாமீன் எடுக்க ? நல்லா ஐடியா கொடுக்குறீங்க...

   நீக்கு
 2. அட போங்கப்பா! கவியும் வேண்டாம் காவியும் வேண்டாம்....நல்லா பேன்ட் ஷர்ட் போட்டு தொப்பி போட்டு மீசைய முறுக்கி நம்ம கில்லர்ஜி மாதிரி இருங்க...இந்தக் கவிதா போனா போறா இன்னுரு கவிதா வந்துட்டுப் போறா...இது என்ன காவியக் காதலா என்ன...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதானே டைம்பாஸ் காதல்தானே.... இதுக்குப்போயி அலட்டிக்கலாமா ?

   நீக்கு
 3. காவி உடை அணிந்து போயிடுவேன்னு பயமுறுத்தியதால்...ஒருவேளை போயிட்டா.....ன்னு, போயிட்டாளோ.....சரி...சரி...இதெல்லாம் இப்போ காதல்ல சகஜமப்பா....தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுசரி கவுண்டமணி வசனத்தை இதுக்கும் பயன் படுத்துவீங்களோ ?

   நீக்கு
 4. மூன்றடுக்கு டைட்டில் கவிஞரே!
  முத்தமிழ் மோனையில்
  வீணை வாசிக்கத் தெரிந்த
  வித்தக வீரன் - நீ
  கவிதை சொல்லித்தர கனவில்
  கவிதா வரவில்லையாயின்
  கவலை கொள்ளற்க!
  காந்தி வருவார்! மனம்
  சாந்தி தருவார் நண்பரே!
  த ம 4
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே நீங்களாவது மனம் சாந்தியடைஞ்சு சமாதியாகுறது மா3 கருத்து சொன்னீங்களே... நன்றி.

   நீக்கு
 5. பதில்கள்
  1. வாங்க சகோ தொலைந்து போன எனது முகவரி கண்டு வந்தமை கண்டு மகிழ்ச்சி, இதை கவி என்று ஒத்துக்கொண்ட கவிஞருக்கு நன்றி.

   நீக்கு
 6. வணக்கம்
  ஜி
  வார்த்தைகளின் விளையாட்டு... எல்லாம் காதல்... காதல்...அருமையாக சொல்லியுள்ளீர்கள் ஜி.. பகிர்வுக்கு நன்றி த.ம 5
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ரூபன் இதுக்குத்தான் காதலிக்ககூடாதுனு பெரியவங்க சொல்றாங்க யாரு ? கேட்கிறா ? சில கிராக்கிகளுக்கு தொட்டால்தானே தெரியுது கரண்டு உயிரை கழட்டி விடும்னு...

   நீக்கு
 7. கவி பிழிந்து விட்டீர்கள்! கவி என்றால் இன்னொரு பொருளும் உண்டே! ஹிஹிஹி!

  பதிலளிநீக்கு
 8. கவிதாவை நினைத்தால் கவியும், காவியும் என்றால் விட்டுவிடலாமே? வேறு திசை நோக்கி பயணிக்கலாமே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே... இது தெரியாமல்தானே நாட்டுல நிறையபேரு பித்துப்புடிச்சு கிறுக்கனாகிறான் பித்து தெளிஞ்சவன் கவிஞனாகிறான் நல்லவேளை எனக்கு பித்தும் புடிக்கலை கவிஞரும் ஆகலை.

   நீக்கு
 9. மனது சரியில்லாத போது... கவி பிறந்து விட்டது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவலைதானே எப்படியிருந்த என்னை இப்படியாக்கிடுச்சு.

   நீக்கு
 10. கவி தா..ன்னு கேட்ட கவிதா கிட்ட கொடுத்த கவிதைய எங்கே காணோம்!..
  அந்தக் கவிதை தான் இந்தக் கவிதையா!?.. அல்லது வேறு சொந்தக் கவிதையா!..

  சாமியேய் சதாசிவம்!..
  கவிதா - கவி தா..ன்னு கேட்ட நேரம் - நல்ல நேரமா.. கெட்ட நேரமா!..

  கவிதாமணிக்கு கவிதை எழுதிக் கொடுத்துட்டு
  காவி கட்டிக்கிட்டு காவிரிக் கரையில சுத்துதே காவியமணி!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி கவிதாவுக்கு கொடுத்த கவிதையே இது
   நாட்டுல நிறையப்பேர் இப்படித்தான் இருக்காங்க ஜி.

   நீக்கு
 11. கவி என்றால் குரங்கு என்று ஒரு பொருளும் உண்டு நண்பரே..!

  நீ்ங்கள் என்னைக் கவிஞரே என்று அழைக்கும் போதெல்லாம் அப்படி நினைத்துக் கொள்வதுண்டு :)

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே நல்ல வேளை என்னை யாரும் இப்படி அழைக்க முடியாது.

   நீக்கு
 12. கவி....காவியாய் விட்டதால்...காவியம்பாட பெண்களுக்கு பஞ்சமிருக்காதே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாட்டுல காவி உடுத்திய ஆண்கள் உண்டு பெண்கள் உண்டா ?

   நீக்கு
 13. பெயரில்லா5/14/2015 10:34 முற்பகல்

  மிக வித்தியாசமாக எழுதியுள்ளீர்கள்.
  நல்ல எண்ணம்.

  பதிலளிநீக்கு
 14. என்றும் நிலைத்திருப்பது காவியமானால் , காவி உடை அணிவேன் என்று கூறி கவிதாவைக் கவிழ்த்த உங்கள் ஏக்கக் காதல் என்றும் நிலைக்கும் . அடபோப்பா....கான மயிலாடக் கண்ட வான் கோழி என்பதுபோல நானும் எதையோ கிறுக்க முயற்சி செய்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா தங்களுக்கு வராத கவிதையா எனக்கு வந்து விடப்போகிறது.

   நீக்கு
 15. கவி + தா = கவிதா என்று
  காதல் மூண்ட வேளை
  கவிதா கணவனோடு செல்ல
  காவி + கவி = காவிக்கவிஞன் என
  ஆனவரே ஆயிரம் கவிதா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே 1000 கவிதையா ? அய்யோ சொக்கா நான் எங்கே ? போவேன்.

   நீக்கு
 16. பெயரில்லா5/14/2015 1:18 பிற்பகல்

  அற்புதம் நண்பா! அழகோடிய அழகானவரிகள்
  நல்ல தொரு கவிபிராதபம் என்று செப்பிடவா இல்லை சீர்தூக்கிய செவ்வனே பரிந்த சொற்கதம்பமாலை ஒன்று தளிர் தென்றலில் தலையசைத்து வெள்ளிப்பொன் கட்டிவரும் மெலிதான நகைச்சுவையைத் தேன்சுவையைப் படிப்பவர் காது மடல்களில் விளிம்பினுள் நிரப்பியது எனகோதிடவோ என்று மலைக்கவா, இல்லை புனித வளனார் கல்லூரி தமிழ் துறை ஆசான் ஆகமம் செபஸ்தியன் சொல்லியது போல படிப்பவரை பரவசப்படுத்தும் ரீங்காரகவிதை என்று கூறிடவா என்றால் எல்லாமே தான் என இயம்ப விளைகிறேன்.உங்களைப் போலவே எனக்கு கவிதை வாராது வாராது என்று நல் கவிதை பல தந்த கபிலர்சங்க இலக்கியத்தில் விவரித காம்போதியான எட்டுத்தொகையில் உள்ள செஞ்சொற்பரனியாம் கலித்தொகையில் அஸ்வத விகிதமான இருபத்தொன்பது பாடல்கள் பாடியுள்ளார். இவை புரவிச் சைதன்யர் கபிலர் பாடிய மரகதச் சூடரை மடியில் தாங்கிய குறிஞ்சிக்கலி எனப்படும். அதில் ஒரு பாடலைப் பார்ப்போம். பாடலைக் கவனியுங்கள். அற்புதமான காதல் காட்சி நம் கண் முன்னே தோன்றும்.
  சுடர்த் தொடீ இ! கேளாய் தெருவில் நாம் ஆடும்
  மணல் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
  கோதை பரிந்து, வரிப்பந்து கொண்டு ஓடி,
  நோதக்க செய்யும் சிறுபட்டி, மேலோர் நாள்
  அன்னையும் யானும் இருந்தேமா..இல்லிரே!
  உண்ணுநீர் வேட்டேன் எனவந்தாற்கு, அன்னை,
  அடர்பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்!
  'உண்ணுநீர் ஊட்டிவா' என்றாள் என யானும்
  தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை
  வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு,
  அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா,
  அன்னை அலறிப் படர்தரத் தன்னையான்
  உண்ணுநீர் விக்கினான் என்றேனா, அன்னையும்
  தன்னைப் பறம்பு அழித்து நீவ மற்று என்னைக்
  கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகைக்கூட்டம்
  செய்தான் அக் கள்வன் மகன்.

  ”டெராபைட்” தாமஸ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி ‘’டெராபைட்’’ தாமஸ் அவர்களே...

   நீக்கு
 17. கவி , காவி வார்த்தைகளை வைத்து அருமையாக சொல்லி இருக்கீங்க சகோ.

  பதிலளிநீக்கு
 18. வழக்கம் போல கவிதை படிக்காமலேயே அசத்தி விட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 19. மனது சரியில்லை என்றபோது நன்றாக எழுதியிருக்கிறீங்க கவிதையை.
  கவிதா போனால் காவியா வருவா. கவலைவிடுங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எதுக்கு ? காவியா வந்து காவியையும் இழந்து விட்டு நிற்கவா ? நல்ல எண்ணம் உங்களுக்கு.

   நீக்கு
 20. dont வொர்ரி ஜி பாருங்க எவ்வளவு பேர் ஆறுதல் சொல்ல இருக்காங்க எதுக்கு இன்னும் கவலைப் பட்டுகிட்டு. கவி வராவிட்டால் என்ன புவி தான் இருக்கே அதைப் பற்றி எழுதுங்கள் எல்லாம் சாரியாயிடும். ok வா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க புவியைப்பற்றி எழுத தெரிஞ்சாத்தான் நான் விஞ்ஞானி ஆகியிருப்பேனே....

   நீக்கு
 21. கவிதா அருமை... மன்னிக்கவும் கவிதை அருமை...
  தம +

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேண்டுமென்றே எழுதிவிட்டு மன்னிப்பு கேட்பதை ஏற்க முடியாது தோழரே...

   நீக்கு
 22. மனம் சரியில்லாதததால் தோன்றிய கவிதை அருமை நண்பரே
  கவலையை விடுங்கள்
  தம +1

  பதிலளிநீக்கு
 23. ஒரு கவி காவி அணியக் காரணமாக இருந்த அந்த கவிதாவுக்கு நன்றி! இல்லாவிடில் இந்த கவிதை பிறந்திருக்காதே. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதை கவிதை என்று ஏற்றுக்கொண்ட நண்பருக்கு நன்றி.

   நீக்கு
 24. சரியில்லா மனதை போக்குவதற்குத்தானே...இணையம் இருக்கிறது நண்பரே.....கவலையை போக்குங்கள்.....

  பதிலளிநீக்கு
 25. அன்புள்ள ஜி,

  கவிதா...கவிதா...கவிதா... என்று அழைத்தால் வராமலா போய்விடுவாள்!
  அதுவும் தாங்கள் அழைத்தால்...!
  அவள் வருவாளா...? அவள் வருவாளா...? என்று ஏங்கியதால்
  காவியக் காதலாக்கி விட்டு... விட்டுச் சென்று விட்டாள்!

  கவி தையலுடன் காவியக் கவி...!

  நன்றி.
  த.ம. 17.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மணவையாரே... அழைத்தது ஒருவன் அழைத்துக்கொண்டு போனவன் மற்றொருவன் .

   நீக்கு
 26. கவிதா பாவம் கவிதையைப் பார்த்து பயந்து போயிட்டாங்களோ...

  பதிலளிநீக்கு
 27. கவிதைதானே நீங்க எழுதணும்?உங்களுக்கு தொடர்ந்து சேவை செய்து வரும் 'டெராபைட் தாமஸின்'கருத்துக்களை அக்கு வேறு ஆணி வேறாய் பிரித்து மேய்ந்து பாருங்கள் ,கவிதை கதறிகிட்டு உங்கள் கைக்கு வரும் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சத்தியமான வார்த்தை பகவான்ஜி தகவலுக்கு நன்றி.

   நீக்கு
 28. எந்தப் பதிவிலும் வெளியீடு தேதி (வெளியிடும் தேதி)
  இல்லையே, ஏன் நண்பரே?
  கருத்துரையிலும் தேதி இல்லை!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இந்த மோடலேஷனில் தேதி அமைப்பு இல்லை நண்பரே...
   இனிமேல் நான் பதிவின் மேலே இடலாம் என்று நினைக்கிறேன்.

   நீக்கு