தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, மார்ச் 21, 2025

நாளை கூடும் வேளை

 

ணக்கம் நண்பர்களே... மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை என்ற கவிஞர் வாலி அவர்களின் பாடலை. எனது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.

வெள்ளி, மார்ச் 14, 2025

காத்திருந்து...

 

வள் மீது ஆசை கொண்டு

காதல் கடிதம் எழுதினேன்

கொடுப்பதற்கு தகுந்த நேரம்

பார்த்து காத்திருந்தபோது...

வெள்ளி, மார்ச் 07, 2025

கொடுமலூர், கொடுமைக்காரி கொடிமுல்லை

கொடிமுல்லை பெயரைப்போல ஆளும் அழகுதான் ஆனால் குணம் ? அதுதான் இந்த ஏரியாவுல எங்கே தேடினாலும் கிடைக்காத அபூர்வ குணம். கணவனை பணம், பணம் என்று நச்சரித்துக் கொண்டே இருப்பாள். பக்கத்து வீட்டுக்காரி பாயாசம் செய்தால்கூட நாமும் செய்ய வேண்டும் என்று நினைப்பவள். வேலை செய்து விட்டு வந்து நிம்மதியாக சாப்பிடக்கூட விடமாட்டாள். இதனால் சாப்பிட்டவுடன் வெளியேறி விடுவான்.

புதன், பிப்ரவரி 26, 2025

நிழல்கள் நிஜமாகாது

வேகாமலே போனது ஒன்று
வெந்து போனது மற்றொன்று
இதில் வெற்றி எப்படியென்று
விளங்கவில்லை எனக்கின்று

புதன், பிப்ரவரி 19, 2025

குலப்படியான்

லோ வீட்ல யாரு ?
நாந்தான் இருக்கேன் நீங்க யாரு ?
 
நாங்க சுகாதாரத்துறையிலிருந்து வந்து இருக்கோம். தடுப்பு ஊசி போடணும்
சரி எதற்காக போடணும் சொல்லுங்க ?

புதன், பிப்ரவரி 12, 2025

புதன், பிப்ரவரி 05, 2025

மும்பை வாலா

மேலேயுள்ள புகைப்படத்தில் இருக்கும் குடும்பம் யாருடையது என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். வாழ்க வளத்துடன் இதிலுள்ள நான்கு பெண்மணிகளில் ஒருவர் மட்டும் தலைவிரி கோலமாக இருப்பதின் காரணமென்ன ? அதுதான் குடும்பப் பெண்களுக்கும் திரைப்படக் கூத்தாடிகளுக்கும் உள்ள வேறுபாடு. இது நடைமுறைகளுக்கு சரிப்பட்டு வராது ஆகவேதான் மும்பை வாலாவாகி விட்டது.

புதன், ஜனவரி 29, 2025

கோமாவில்18 மாதங்கள்

மிழ் திரைப்படங்களில் எவ்வளவோ கோமாளித்தனமான காட்சிகளைப் பார்த்து வெறுத்து இருப்போம், நூறு நபர்கள் மிஷின்கன் கொண்டு சுட்டாலும் கசாநாயகனின் காலில்கூட குண்டு படாது காரணம் அவ்வளவு கனகச்சிதமாக ஓடுவார். அதிலும் ஒடிக்கொண்டே தனது கையிலிருக்கும் சாதாரண ஆறு குண்டுகள் உள்ள துப்பாக்கியால் அத்தனை பேரையும் சுட்டு விடுவது, பிறகு எத்தி விடும்போது அவ்வளவு பேர்களும் வானத்தில் பறந்து போய் விழுவது. அப்படியே சிலர் ஈட்டியை நெஞ்சில் குத்தினாலும் பிடுங்கி எறிந்து விட்டு மீண்டும் சண்டை போடுவது, இப்படி நிறைய சொல்லலாம்.

புதன், ஜனவரி 22, 2025

காவி மயில்


ணக்கம் நண்பர்களே... ‘’சின்ன கண்ணன் அழைக்கிறான்’’ என்ற பஞ்சு அருணாசலம் அவர்களின் பாடல். எமக்கு மிகவும் பிடித்த பாடல் எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.

புதன், ஜனவரி 15, 2025

மாங்கொட்டையன் தெரு

 

மேலேயுள்ள புகைப்படத்தை பார்த்தீர்களா ? இந்த மாங்கொட்டையன் தெருவின் நுழைவாயிலில் பெயர்ப்பலகை உள்ள இடத்தில் இப்படி அதன் பெயரே தெரியாத அளவுக்கு மாற்றி, மாற்றி சுவரொட்டிகள் ஒட்டுகின்றனரே.. இது நாங்கள் முட்டாள்கள் நிறைந்து இருக்கிறோம் என்பதை காட்டுகிறதோ... காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்லும் காவலர்கள் 30 கி.மீ வேகத்தில் போகும் இரண்டு சக்கர வாகனங்களை வழி மறைத்து, இடையில் சக்கரங்களில் லத்தியை விட்டு நிறுத்துகின்றார்களே...

புதன், ஜனவரி 08, 2025

இருளை விட்டு வெளியேறு...


ணக்கம் நட்பூக்களே... வாழையடி வாழையாக இவர்கள்தான் இந்த நாட்டை ஆளவேண்டுமா ? மண்ணின் மைந்தர்களான நாமெல்லாம் ஆளக்கூடாதா ? நாமேன் இன்னும் இந்த வாரிசு அரசியலுக்குள் சிக்கி நம்மை மட்டுமல்ல நமது சந்ததிகளையும் சீரழித்து வாழ்கிறோம் ? இது மன்னர்கள் ஆட்சி இல்லையே.. பிறகு ஏன் நாம் சிந்தித்து வெளியேற முயலவில்லை ? நாம் இன்னும் தாமதித்தால் விரைவில் வடகொரியாவைப் போல் கொத்தடிமைகளாக வாழவேண்டிய நிலை வரலாம்.

புதன், ஜனவரி 01, 2025

அன்னவாசல், அன்னக்கூடை அன்னலட்சுமி

 

ன்னலட்சுமி அம்மா இந்த வார்த்தையை நகரின் காய்கறி மார்க்கெட்டில் உச்சரிக்காதவர்களே இல்லை. சரியாக 12.00 மணிக்கு வந்து விடுவார் அன்னக்கூடையுடன்... மிகவும் குறைந்த விலையில் மூன்று வகை கூட்டுகளுடன் தட்டில் வைத்து தருவார் இதை சாப்பிட்டு காலம் ஓட்டுபவர்கள் நிறைய நபர்கள் இருக்கின்றார்கள். இதில் குடும்பம் இல்லாதவர்களும் உண்டு.