தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஆகஸ்ட் 31, 2024

எனக்கு அகவை முந்நூறு


ண்பர்களே... மேலே மேற்படியார் சொல்லி இருப்பதை பார்த்தீர்களா ? இவர் நூற்றி ஐம்பது வருடம் வாழ்வாராம். இருக்கட்டும் நானும்கூட முந்நூறு வருடம் வாழப்போகிறேன் அதற்கான ஆய்வை முடித்து விட்டேன். அந்த ஆய்வு ரகசியம் எமது சீடர்களால் எப்படியோ கசிந்து இவரது கைக்கு போய் விட்டது போல... பரவாயில்லை எனது ஆய்வில் பாதிதான் கிடைத்து இருக்கிறது ஆகவே நூற்றி ஐம்பது வருடம். நான் முந்நூறு அல்லவா...

திங்கள், ஆகஸ்ட் 26, 2024

குட்டிச்சுவரு...

ண்பர்களே... ஜெயிலர் என்றொரு திரைப்படத்தில் வந்த பாடல் வரிகள் ஒன்று என்னை மெய் சிலிர்த்து கேட்டு இரசிக்க வைத்தது அதனைக் குறித்து எழுத வேண்டுமென்று வெகு நாட்களாக நினைத்திருந்தேன். பாடலின் தொடக்க வரிகள் என்னவென்பதை என்னால் இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை காரணம் பின்னணி இசையின் மெல்லிய நீரோட்டம் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது.

புதன், ஆகஸ்ட் 21, 2024

வள்ளியை கிள்ளியபோது...

 

01.  மளிகை கடை வேலை செய்து மாளிகை வீடு கட்டியவர்களும் உண்டு.
மாளிகையில் வாழ்ந்து கெட்டு மளிகை கடை வேலை செய்பவரும் உண்டு.

வெள்ளி, ஆகஸ்ட் 16, 2024

நினைவஞ்சலி

 

ணக்கம் நட்பூக்களே...இப்பொழுது எங்கெங்கு காணிணும் நினைவஞ்சலி சுவரொட்டிகள், நெகிலி பதாகைகள் என்று சுவர்களில் இருப்பதை பார்த்து இருப்பீர்கள். அதாவது இறந்ததற்கு சுவரொட்டி அடிக்கின்றார்களோ... இல்லையோ மறுவருடம் முதல் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மட்டுமல்ல, அப்பத்தாவின் பதினாறாம் ஆண்டு நினைவஞ்சலி என்று சுவரொட்டிகள் ஒட்டுகின்றார்கள்.

ஞாயிறு, ஆகஸ்ட் 11, 2024

பாஞ்சாலி


ண்பர்களே.. மேலே புகைப்படத்திலிருக்கும் குடும்பம் ஹரியானா மாநிலத்தில் நாகரீகம் வளராத மலைவாசி மக்களின் குடும்பங்களில் ஒன்று. முன்புறம் கையில் தான் பெற்ற குழந்தையுடன் நிற்பதுதான் குடும்பத்தலைவி பின்புறம் நிற்பவர்கள் யார் தெரியுமா ? அவர்கள் இந்தப் பெண்மணியின் கணவர்கள். ஆம் ஐந்து நபர்களும் கணவர்களே... வரிசைப்படி பிறந்தவர்கள்.

செவ்வாய், ஆகஸ்ட் 06, 2024

கிறுக்கியது ஏழு

 

வனுக்கு ஊரார் வைத்த
பெயர் கிறுக்கன் மாலை
நேரமாதலால் பறவைகள்
நேர்த்தியாக அரை வட்டமாக
கூடு திரும்பும் அவசரத்திலும்
இவனை கூச்சலிட்டு கேலி செய்து
போனது. கிறுக்கன் கேட்டான்
ஏ... பறவைகளே நீங்கள் எதற்கு
என்னை கேலி செய்கிறீர்கள்
நானும் உங்களைப் போல்தானே
ஆடையின்றி வாழ்கிறேன்...
* * * * * * Sunday * * * * * *

வியாழன், ஆகஸ்ட் 01, 2024

ஆத்தூர், ஆதார் ஆராயி

 

தார் அட்டையில் நமது புகைப்படத்தை நாமே அடையாளம் காண முடியாத வகையில் அச்சடிப்பது நமது நாட்டின் சிறப்பு. அதையும் நாம் ஏற்றுக் கொண்டோம். வேறு வழியில்லை என்பதால், பெட்ரோல் விலை, கேஸ் விலை ஏறுகிறது என்ன செய்தோம் ? ஒரு ஆணியும் புடுங்கவில்லை. காரணம் நமக்கு புடுங்கத் தெரியாது. ஆனால் வாங்கத் தெரியும்.