தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, நவம்பர் 07, 2015

பட்டுப்புடவை


ஏங்க, சாப்பிட வாங்க உங்களுக்கு புடிச்ச அயிரை மீனு குழம்பு வச்சுருக்கேன்.
என்ன விஷேசம் இன்னைக்கு... ம்ம் போடு....

ஏங்க, இந்த வருஷம் தீபாவளிக்கு எனக்கு பட்டுப்புடவை எடுக்கலாம்ங்க...
எதுக்கு எழவுணி... தண்டச்.....

இஞ்சே பாருங்க என்பேரை இப்படிச் சொல்லாதீங்னு எத்தனை தடவை சொல்றது ? இளவேணி அப்படினு சொல்லத் தெரியாதா ?
என்னோட நாக்குல ‘’’’ தான்டி வருது...

உங்க நாக்குல வசம்பை வச்சுத் தேய்க்க... பட்டுப்புடவை கேட்டதுக்கு பேச்சை மாத்துறியளோ...
பல உயிரை கொன்று பட்டுப்புடவை நெய்யிறான் அது பாவம் இல்லையா ?

ஆடு, கோழி எல்லாத்துலயுந்தான் உயிர் இருக்கு அதை மட்டும் மாட்டு மாட்டுனு மேயுறீங்க...
நான் எப்படீ... மாட்டைத்தின்னேன் ?

வருஷத்துல ஒருநாள் தீபாவளி வருது ஒரு பட்டுப்புடவை எடுக்க வக்கு இல்லை, பேச்சு மட்டும் வங்காள விரிகுடா வரைக்கும் போகும்.
ஏண்டி... எனக்கு வக்கு இல்லாமலா.. உன் பேர்ல பேங்க் லாக்கருல அருபது பவுன் நகை இருக்கு.

அதெல்லாம் எங்க அப்பாரு எனக்கு சீதனமா கொடுத்தது.
இருக்கட்டுமே.. அதெல்லாம் இப்பவும் பாதுகாப்பா திருடன் கைக்கு போகாம இருக்குதுல..

அது திருடன் கைக்கு போகாம இருக்குறதுக்கு இல்லை நீங்க முழுங்கிடாம இருக்கணும்னுதான் எங்க அப்பாரு சொல்லி பேங்க்ல வச்சுருக்கேன் நாளைக்கு எம்மகளுக்கு வேண்டாமா ?
என்னடீ... என்னை திருடன் ரேஞ்சுக்கு கொண்டு போயிட்டே.. ?

பின்னே உங்களுக்குத்தான் நகை வாங்கித்தர வக்கு இல்லை எங்க அப்பாரு செஞ்சு கொடுத்ததையாவது போட்டு அழகு பார்க்கவும் கொடுப்பினை இல்லை.
யேன்டி அந்த நகையைப் போட்டால்தான் நீ அழகா இருப்பியா ? இப்பக்கூட நீ தேவதை தேவயானி மாதிரிதானே இருக்கே..

இப்பக்கூட உங்க தேவகோட்டை மாமன் மகளை ஞாபகம் வச்சுக்கிட்டுதானே தேவயானினு சொல்றீங்க...
அடியே நான் நடிகை தேவயானியை சொன்னேன்டி.

அப்படீனா... அவ ஒவ்வொரு படத்துலயும் ஒவ்வொருத்தனையும் கட்டிப்புடிக்கிற மாதிரி நானும் புடிக்கிறேனா ?
அடியே... பொசக்கெட்டவள... நீ யேன்டி விசயத்தை எங்கேயோ கொண்டு போயி முடிச்சுப் போடுறே... ?

அப்ப எதுக்காக... தேவயானினு சொன்னீங்க ?
ஆமாடி... மாமன் மக ஞாபகத்துலதான் சொன்னேன் நடிகையை சொல்லலை சாரி..

இப்ப உண்மை வந்துடுச்சா... எதுக்காக சொன்னீங்க ?
தெரியாமல் சொல்லிட்டேன் இனிமேல் சத்தியமா சொல்ல மாட்டேன் நீ மட்டும் போலீஸ் வேலைக்கு படிச்சிருந்தால் C.I.D வேலை கிடைச்சுருக்கும் விஜயசாந்தி மாதிரி கலக்கியிருப்பே..

யாரு... உங்க அழகன்குளம் அத்தை மகள் விஜயசாந்தி மாதிரியா ?
அடியே பகவான்(ஜி) மேல சத்தியமா எவ ஞாபகமும் இல்லை ஒரு ஃப்லோவுல ‘’ஜொள்’’லிட்டேன் ஆபீஸ் போனஸ் வரட்டும் இந்த தீபாவளிக்கு நான் கோவணத்தோடு திரிஞ்சாலும் பரவாயில்லை உனக்கு கண்டிப்பா பட்டுப்புடவை எடுத்து தந்துடுறேன் இத்தோட விட்ரு... பதிவு பெருசாப் போகுதுனு படிக்கிற பதிவர்கள் எழுதப் போறாங்க... அப்புறம் கில்லர்ஜி கோபப்பட்டாருனா இன்னும் குண்டக்க மண்டக்க எனக்கு டயலாக் கொடுத்து என்னைத்தான் கேவலப்படுத்துவாரு, உங்கையில் அயிரை மீனு சாப்பிடுறதுக்குள்ளே உயிரை வாங்குறியே... பசிக்குதுடி சோறைப்போடு.

ம்ம்...ம் அது.

CHIVAS REGAL சிவசம்போ- 
சம்திக்கலைனா... அயிரை மீனு குழம்பு அவன் தலையிலிலே ஊத்திடுவா... போலயே1

52 கருத்துகள்:

 1. சரள நகைச்சுவை. ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலில் வருகை தந்து கருத்துரை பதிந்தமைக்கு நன்றி நண்பரே.

   நீக்கு
 2. ஆஹா பட்டுப்புடவைக்கு இத்தனை போராட்டமா...சகோ...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க சுலபமாக சொல்றீங்க அவன் நிலை அவனுக்குத்தானே தெரியும்.

   நீக்கு
 3. வணக்கம் ஜி! படிக்க படிக்க கடகடனு பிச்சுகிட்டு சிரிப்பது வருது

  தாராளமா இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் ஜி! அருமை கலக்கல் சூப்பர்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் ரசிப்புக்கு நன்றி

   நீக்கு
 4. இதற்குப் பேரு தான் போட்டுக்கொடுத்து வாங்கறது என்பது. புடவை கேட்டவுடனே சரி என்று சொல்லியிருக்கலாமல்லவா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தப்பக்குவம் இவனுக்கு இன்னும் தெரியலை போலயே நண்பரே...

   நீக்கு
 5. இளவேணி பெயரில் சும்மா எதுக்கு 60 பவுன் நகை பேங்க் லாக்கர்ல தூங்குது.
  மோடியின் புதிய திட்டம் நகை(thangkam) குறுகிய கால பிக்சட் டிப்பாசிட்டில் போட்டு பத்திரமாக, பத்திரத்தை வாங்கி வைத்துக் கொண்டால் வருகிற 2.5 பெர்சண்ட் வட்டியைக் கொண்டு அடுத்த தீபாவளிக்கு பட்டுப் புடவை வாங்கி கொடுக்க பரிந்துரை செய்கிறேன்.
  பட் பட் பட்டுப் புடவை.
  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவரு மோசடி செய்துடுவாரோனு சந்தேகமோ, என்னவோ... தெரியலையே நண்பா..

   நீக்கு
 6. அயிரை மீன் கொழம்பு கெடக்க்ட்டும்..

  கோவணம் தான்..ன்னு முடிவெடுத்துட்டா -
  பட்டுக் கோவணம் மருவாதி... சொல்லிப்புட்டேன்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பட்டுப்புடவை எடுத்த பிறகு பாக்கி பணமிருந்தால் பார்க்கலாம் ஜி

   நீக்கு
 7. நான் படித்தவரை ஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லோ நாடகத்தில் டெஸ்டமோனாவைத் திட்டுவதற்கு பல வித்தியாசமான சொற்களைப் பார்த்துள்ளேன். இப்போது உங்கள் பதிவைப் படிந்ததும் அந்த நினைவு வந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஷேக்ஸ்ஃபியரின் வார்த்தைகளோடு எனது வார்த்தையையும் ஒப்பிடுவது நம்ப முடியவில்லை இருப்பினும் முனைவரின் கருத்துரை கண்டு மகிழ்ச்சியும், நன்றியும்.

   நீக்கு
 8. இன்னும் தேவயானி,விஜயசாந்தி நினைப்புதானா ?இதில் என் மேல் சத்தியம் வேறு ,நானே காஜலுக்கும்,சமந்தாவுக்கும் தாவிட்டேன் ,நான் 'யங்'காக்கும் :)

  பதிலளிநீக்கு
 9. தீபாவளி டிரஸ் கோவணமா? எண்ணை தேச்சு குளிக்கறப்ப மட்டும். இல்லைங்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வழியில்லாதவன் வேறென்ன ? செய்யமுடியும் முனைவர் ஐயாவின் வருகைக்கு நன்றி

   நீக்கு
 10. ஹாஹாஹா! நகைச்சுவை அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் சுரேஷ் அவர்களின் வருகைக்கு நன்றி

   நீக்கு
 11. அன்புள்ள ஜி,

  மாட்டிக்கிட்டாரடி மைனாக்காளை... பட்டுப் புடவையப் பேசமா வாங்கிக் கொடுத்திடுங்க...!

  த.ம.5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மணவையாரே அவன் பொண்டாட்டிக்கு நான் ஏன் ? பட்டுப்புடவை வாங்கி கொடுக்கணும் நீங்க தேவையில்லாத வேலை செய்ய சொல்றீங்க....

   நீக்கு
 12. இவ்வளவு (வடிவேல் குரலில் படிக்க) ரத்தக்களறியிலும் .,,, இப்படி ஒரு எகத்தாளம். ம்ம்???

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே எல்லாவற்றையுமே நகைச்சுவையாக பார்த்தால் துன்பம் குறையும், இன்பம் நிறையும் என்பது வள்ளுவர் வாக்கு.

   நீக்கு

 13. நகைச்சுவை பதிவு அருமை சகோ. மேலே உள்ள பட்டுப்புடவைகளும் அழகா இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ வருகைக்கு நன்றி இந்த புடவை நான் கூகுள் சில்க்ஸில் எடுத்தேன்

   நீக்கு
 14. அயிரை மீன் குழம்புவை சாப்பிட்டு முடிப்பதற்கும் இவ்வளவு பிரச்சனையா
  அருமை நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இன்று நிறையப் பேரின் நிலை இதுதானே....

   நீக்கு
 15. மனசில இருப்பது தானே வாயில வரும்... நடக்கட்டும் நடக்கட்டும்.. அயர மீனும் நீங்கள் ஆய்ந்த மீனும் அருமை..

  கோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனசில இருப்பதுதானே வாயில வரும்...
   ஆம் நண்பரே உளறினான் மாட்டினான் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 16. பண்டிகைக்கு ஏற்ற பட்டுப் புடவை பதிவு. ரசித்து சிரித்தேன் நண்பரே!
  த ம 8

  பதிலளிநீக்கு
 17. ஒரு பட்டுப் புடவைக்கு இத்தனை அலம்பல்கள், அலப்பறைகளா...ஹும் அது சரி பட்டு அவரைக் கட்டுக் கட்டி சுட்டுவிடாதோ....(கையத்தான்...அம்புட்டு விலையாக்கும்...)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பட்டுப்புடவை வாங்கி கேட்டால் பரவாயில்லை வடை சுடுவதற்க்கு பருப்பு வாங்கி கேட்டால் ?

   நீக்கு
 18. எதுக்கு ..பேச்சு மட்டும் வங்களா விரிகுடா வரைக்கும் போகனும்.. கோவணமே இல்லேன்னாலும் பரவாயில்லை..ஒரு பட்டுப் புடவை எடுத்து கொடுத்திருங்கோ... அப்புறம் பாருங்கோ கோவணத் துணிக்கு அலைய வேண்டிய வேலைய இருக்காது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுவும் சரிதான் நண்பரே மொத்ததில் இவன்தான் அலைய வேண்டும் போல...

   நீக்கு
 19. நகைச்சுவை உரையாடலை ரசித்தேன். பகவான்ஜீக்குப் போட்டியா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அப்படியெல்லாம் சொல்லாதீங்க... அவர் தினம் நகைச்சுவைப் பதிவு போடுபவர்... நான் ஆடிக்கும், அமாவாசைக்கும்.

   நீக்கு
 20. ஹா..ஹா..ஹா. சூப்பர் அண்ணா ஜி. ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 21. அயிர மீன் குழம்ப ரசிச்சு ருசிச்சு சாப்பிட முடியுதா.... அதுக்குள்ள பட்டுப்புடவை பிரச்சனை வந்துடுச்சே! :) நகைச்சுவையை ரசித்தேன்...

  உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் திபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி என்ன செய்வது அவனுக்கு வாய்ச்சவள் இப்படி

   நீக்கு
 22. தேவயானி, விஜயசாந்தியின்னு பேச்சு பேச்சாப் போனாலும் அக்கா பட்டுப் புடவைக்கு சரி பண்ணிருச்சுல்ல...

  அது...

  ஆமா... கில்லர்ஜி அண்ணனின் பதிவுகள் சுறுக்... நறுக்...தானே....
  நீளக்கூடாது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எவன் எக்கேடு கெட்டாலும் கெடைக்கு 2 ஆடு

   நீக்கு
 23. புடவைகள் அனைத்தும் இல்ல பதிவு அழகு சகோ,

  பதிலளிநீக்கு