தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, நவம்பர் 15, 2015

முக்கி அடிச்சா...


வெடிவீலு ஏரியா ‘’தாதா’’ இவனைக் கண்டாலே துஷ்டனை கண்டால் தூர விலகு என்பதுபோல் எல்லோருமே ஒதுங்கி விடுவார்கள், வழக்கம்போல் டாஸ்மாக்கில் அகுடித்து விட்டு தோயனார் வீதியை டேப் இல்லாமலே சர்வே எடுத்து வந்து கொண்டிருந்தான்.... எதிர் புறமாய் மாயலோகு வந்து கொண்டிருந்தான்... இவனைக் கண்டதும்,..

டேய், எவன்டா... அது ரோட்டு மேலே நடந்து போறது ?  
ரோட்டு மேலே நடக்காம வீட்டு மேலயா... நடப்பாக ?

டேய்... நம்மல்ட்டயே க்ராஷா ? க்ளோஸாயிடுவே, தம்பி.
டேய்... நானே, GLOBE நம்மளையே... க்ளோஸாக்கிடுவியா ?

க்ளோப்பா அப்பிடினா ?
GLOBE னா, உலோகம்டா முண்டம், லோகம் முழுக்க POLICE வலைவீசி தேடிக்கிட்டு இருக்காங்கே அவங்க கண்ணுல படாம மாயமா மறைஞ்சுக்கிட்டு திறியிறவன், இந்த மாயலோகு என்னை, நீ குளோஸ் பண்ணிடிவியா ?

டோய்ய்ய்... நான் யாரு... தெரியுமா ? வெடிவீலு.
வெடிவீலா... அப்பிடினா ?

இந்த ஏரியாவுல ஓடுற வண்டிக்கு பூராம் வீலுல வெடிவச்சது யாருனு நினைக்கிறே ?
ச்சீ... நீதான் அந்த மூதேவியா ?

டேய், இன்னா  மூதேவிங்கிறே... நான் யாரு  தெரியுமா ?
அதான், சொல்லிட்டியே முடுமே.

என்னோட பலம் தெரியாம மோதுறே...
போயிடு... இன்னைக்கு கூத்தாண்டவருக்கு விரதம் இருக்கேன்...

டேய்ய்ய்.. நாங்கெல்லாம் ரம்ஜான் அன்னைக்கு, சர்ஜ்ஜுலபோயி சாமி கும்புடுறவங்கே... எங்கிட்டேயாவா ?
ஏண்டா... கோணப்பயலே... எதுலடா சேத்தி நீ ?

நானெல்லாம், முக்கி அடிச்சா... முக்கா கிலோ வெளியே வரும்.
நான், ஓங்கியடிச்சேன் ஒன்றை கிலோ வெளியே வரும்.

பாத்துடுவோமா ?
பாத்துடுவோம், வாடா...

ருவரும், அடித்துக் கொ(ல்ல)ள்ள முயலும் போது எதிரில் POLICE வண்டி வருவதை கண்டதும் தெற்கிலும், வடக்கிலுமாக ஆளுக்கொரு பக்கமாய் ஓடினார்கள்.. அதுக்கு பிறகு அவங்கே அடிச்சு கிட்டாங்களா இல்லையா ? எங்க அப்பத்தா மேலே சத்தியமா எனக்கு தெரியாதுங்க. - கில்லர்ஜி

காணொளி

50 கருத்துகள்:

  1. முக்கி அடிச்சா என்கிறியள்
    மூதேவியை இழுக்கிறியள்
    எப்படியோ
    சிந்திக்க வைக்கிறியளே!

    பதிலளிநீக்கு
  2. ஹஹஹஹஹ் ....செம

    அந்த வாய்ஸ் கொன்னுப்புட்டீங்க....கில்லர்ன்ற பேருனாலயோ..அஹஹஹ்

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஜி

    சிரிப்போ..சிரிப்பு... நல்ல நகைச்சுவை கலந்த பாணி...வாழ்த்துக்கள் ஜி. த.ம 4

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞர் ரூபனின் வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  4. வசனத்தைக் கானொளியில் இணைத்து பார்த்தேன் ,நல்ல ஜோடிப் பொருத்தம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்க்கு மிகவும் பாடுபட்டேன் ஜி நன்றி

      நீக்கு
  5. பிரச்னை வரும் நேரத்தில் நீங்கள் தப்பிவருவதைப் போல உள்ளதே. பிறகு என்ன நடந்தது என்பது உங்களுக்கு தெரியும். கடந்த பதிவின்போது கடவுளைக் காணக் கூறினீர்கள். சில நாள்களாக முயன்றுகொண்டிருக்கின்றேன். இன்னும் முடியவில்லை. முடிந்ததும் ஆரம்பிப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே சில இடங்களில் அப்படித்தான் வாழ வேண்டியதிருக்கின்றதே.... ஹாஹாஹா
      தாமதமானாலும் தரமாக வரும் என்பது எமது திண்ணமான எண்ணம்.

      நீக்கு
  6. ரம்ஜான் அன்னைக்கு சர்ஜ்க்குப் போய் சாமிகும்பிடுறவங்க....
    தங்களால் மட்டும்தான் முடியும் நண்பரே
    ரசித்தேன்
    மகிழ்ந்தேன்
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  7. நல்ல நகைச்சுவை கலந்த பதிவு சகோ.

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா11/15/2015 7:49 PM

    அப்பா ஒரே சிரிப்பு போங்க......vedio also.....

    பதிலளிநீக்கு
  9. அன்புள்ள ஜி,

    முக்கி அடிச்சா வெளிய அலைய விடுறாங்க... முக்கியமா பாடி பறை அடிச்சா உள்ளே தள்ளுறாங்க...! விலக்க வேண்டியத விற்கிறது அரசு... விலக்கச் சொன்னா வருமானம் போச்சுன்னு... சொன்னவங்கள விலக்கி வச்சு வியாபாரத்த வெளுத்துக் கட்டுது. கோபம் வந்தாலும் கேட்பதற்கு யாரிருக்கா...?

    த.ம.8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே இப்போதெல்லாம் ரோட்டில் நடக்கும் பொழுது தும்முவதற்க்கே பயமாகத்தான் இருக்கிறது....

      நீக்கு
  10. சத்தியம்..பொங்கச் சோறுன்னு சொல்லுவாங்களே..... நண்பரே........

    பதிலளிநீக்கு
  11. வழக்கம் போல் கலக்கல்!

    பதிலளிநீக்கு
  12. வெடிவீலு நல்ல வார்த்தைப் பிரயோகம்

    பதிலளிநீக்கு
  13. நகைக்க வைக்கும் நகைச்சுவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துப் பகிர்வுக்கு நன்றி.

      நீக்கு
  14. தங்களது பதிவும் அதோடு இணைத்துள்ள காணொளியும் அருமை. ஜாக்கிரதை!! திரு T.R. அவருடைய அனுமதி இல்லாமல் அவரது ‘டண்ணனக்கா டணுக்குனக்கா’ வை உபயோகப்படுத்தியதற்கு உங்கள் பேரில் வழக்கு தொடர்ந்துவிடப்போகிறார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அப்படியெல்லாம் நடந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அவருக்கு டைட்டிலில் நன்றி சொல்லி விட்டேன்

      நீக்கு
  15. நன்மாறன் ஒரு தடவை சொன்னார்...போதையில் ஒருவன் தப்புசெய்துவிட்டான் என நினைத்து ஏமாறாதீர்கள்..
    அவன் சுயமாகத்தான் இருப்பான்...
    பேருந்தை மறிக்கும் அவனை ரயிலை மறிக்கச்சொல்லுங்கள் பார்க்கலாமென.,.

    நினைவில் வந்தது...

    பதிலளிநீக்கு
  16. பதிவும் காணொளியும் பயமா கீது, அப்பாளிக்கா விசிட்டிங்ங்ங்ங்ங்,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயப்படாதீங்க நண்பரே... பதிவில் இதெல்லாம் சகஜம்

      நீக்கு
  17. அன்பின் கரந்தை JK அவர்களுடைய பதிவைப் படித்துவிட்டு வருகின்றேன்.. மனம் மிகவும் வருத்தமாக இருக்கின்றது..

    கடந்த சில நாட்களாக - திருச்செந்தூர், உவரி என்று திருக்கோயில்களில் தரிசனம்.. எனவே தான் தாமதம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி நானும் படித்து விட்டு வேதனையடைந்தேன் இந்தப்பதிவின் மூலமே அந்த விசயத்தை நாம் அறிந்து கொள்ள முடிந்தது
      தங்களின் தாமத வருகைக்கு காரணம் இந்த வகையே என்பது நான் யூகித்திருந்தேன் வாழ்க நலம்

      நீக்கு
  18. முக்கி அடிச்சா...
    கலக்கி அடிச்சிருக்கீங்க நீங்க...
    அடிச்சி ஆடுங்க அண்ணா...
    அருமை... அருமை...

    பதிலளிநீக்கு
  19. அட உங்களுக்கு டி.ஆர் வசனமில்லாம நடிச்சிக் கொடுத்தாரா? அவரு அப்போதும் பயங்கர வசனத்தோட தான் நடிச்சுக் கெடுப்பாரு....( அந்த வீடியோ மாற்றிய விதம் அருமை அங்கிள்...) ஜம்..ஜம்...ஜம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா ஆமா அவரு எப்பவுமே நடிச்சே கெடுப்பாரு....

      நீக்கு
  20. எப்படி தான் சொற்களை கண்டுபிடிக்கிறீங்க.வெடிவீலு சூப்பர். செமரகளையான பதிவு.வீடியோ அருமை. நான்தான் லேட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வடிவேலுனு சொன்னால் நடிகர் வடிவேலு சண்டைக்கு வந்துடுவாரே... அதுக்குத்தான் இந்த ‘’உல்டா’’

      நீக்கு