தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், நவம்பர் 03, 2015

தீ


தீபா உனக்கு ஏன் இந்த பெயர் வைத்தார்கள் தெரியுமா ? நீ என்னுள் பாதீ என்பதால், எனக்கு ஏன் பாரதி என்று பெயர் வைத்தார்கள் தெரியுமா ? இந்த பாரதியை, ஆசை தீர பார், ரதி என நான் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதால், எனக்கு முதல் எழுத்து "பா" உனக்கு முதல் எழுத்து "தீ" இரண்டும் சேரும்போது பாதீ இது இறைவனின் தீர்ப்பு, நீ என்னை மறக்கச் சொன்னால் நான் மறந்திடுவேன் என் உயிரை, என் வாழ்வில் தீபம் ஏற்றி தீபஒளி காட்டுவதும், என் கையில் தீப்பெட்டியை கொடுத்து, என் உடலுக்கு தீயை மூட்டுவதும் தீபா உன் தீர்ப்பினிலே, ஆம் என் தீபாவுக்காக வரும் தீபாவளி அன்று தீயிடுவேன் என் உடலுக்கு இது உறுதீ.

அடப்பாவி இப்படி எல்லாம் CINEMA  DIALOG பேசி மொட்டை மாடியில உன் ஆசையை தீர்த்து என்னை நாசம் பண்ணிட்டேயடா மொட்டையாப் போவான், உன்னை நான் சும்மா விடமாட்டேன், தீயணைப்பு துறையில வேலை பார்கிற நீ எத்தனை வீட்டுத் தீயை அணைச்சுருப்பே, அந்தத் தீயாலே உன்னை அணைக்க வைக்கிறேன், டேய் தீனதயாளா, உன்அப்பன் தீப்பொறி தீச்செல்வன்கிட்ட சொல்லி வையி, உனக்கு நான்தான் தீ வைக்கணும்ங்கிறதும் இறைவனின் தீர்ப்பு இப்ப, உனது PHOTO வுக்கு தீ வச்சு என் ஆசையை தீர்த்துக் கிட்டேன், நீ கையிலே கிடைச்சே... அந்த இடத்திலேயே உன்னை தீவச்சு கொளுத்துவேன், அப்படிக் கொளுத்தலே இந்த தீபா எங்க அப்பன் தீச்சட்டி தீத்தாரப்பனுக்கு பொறக்கலேடா, இது அந்த தீர்த்தக்கரை மாரியம்மன் மேலசத்தியம், அதுக்குத் தான்டா கையிலே பெட்ரோல் கேனும், தீப்பெட்டியுமா அலையுறா இந்த தீபா, உனக்கு நான் தீ வைக்குறது உறுதீ.  

CHIVAS REGAL சிவசம்போ-
HERO, மாதிரி இருக்கிறவனையே நம்ப முடியாத காலம் இது, வில்லன் மாதிரி இருக்கிற மொட்டையை நம்பி, மொட்டை மாடிக்கு போனா இப்படித்தான், இதை எடுத்துச் சொன்னா, குடிகாரப்பய ஒளர்ர்ர்ர்ரான்னு சொல்லுவா(ளு)ங்க...  எப்படியோ அடுத்த வருஷம் இவனுக்கு திதி கொடுக்கப் போறது உறுதீ.

காணொளி

நண்பர் D.D மட்டுமே படித்த 2013 - ல் தீபாவளிக்கு நான் வெளியிட்ட மீள் பதிவு

நண்பர் நண்பிகளின் அன்புக்கு கட்டுப்பட்டு மேலே புகைப்படத்தை மாற்றி விட்டேன் தவறுக்கு வருந்துகிறேன் - கில்லர்ஜி.

74 கருத்துகள்:

 1. நண்பா!
  இந்த பதிவின் "படம்" படுத்தம் பாட்டை பார்த்தபோது,
  எனது மனம் தீயின் பதிவைக் காட்டிலும் வெந்து சாம்பலாகித் தான் போனது.
  வன்மையாக கண்டிக்கிறோம் நண்பா!
  தங்களது படத்தை தாங்களே எரித்தாலும் அது பண்பான செயலாகாது!
  இனி இதுபோன்று ஒருபோதும் இவ்வாறு செய்ய வேண்டாம்.
  "நெருப்பென்று சொன்னால் வாய் புண்ணாகாது"
  இருந்தாலும் இது போன்ற செயல்கள் வேண்டாம் நண்பா!
  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா இது நான் செய்யவில்லை அந்த தீபாவின் வேலை ஆகவே நானும் கண்டனம் தெரிவிக்கிறேன்
   தங்களின் அன்புக்கு நன்றி இனிமேல் இப்படி வராது.

   நீக்கு
 2. ஓரெழுத்தைக் கொண்டே பதிவிடும் பாங்கு உமக்கு மட்டுதான் வரும் பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 3. ஒரு வதந்தீ..கில்லர்ஜி..உங்கள் பெயரை கில்லார்தீ என மாற்றிக்கொண்டதாக...
  இத்தனை தீ போட்டால் படிப்பதெப்படீ...அடியாத்தீ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே பெயரை மாற்றிச் சொல்லாதீங்கோ தெய்வ குற்றமாகி விடும்.

   நீக்கு
 4. தீபமாய் இருக்க வேண்டியவர்கள் தீயாய் பற்றுகையில் தீர்ப்புக்கள் இப்படித்தான் தீயாய் சுடும்!

  பதிலளிநீக்கு
 5. அன்பின் ஜீ!..

  இது என்னது..!?..

  தீபாவுக்கும் தீனதயாளனுக்கும் - தீவட்டிப் பிரச்னை என்றால் -
  உங்க போட்டோ எதற்கு நடுவில்?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமா ஜி இதுக்கு நடுவுல நான் எதுக்கு ? பொறுங்கள் கேட்போம்.

   நீக்கு
 6. வணக்கம் ஜி! தீதீனு எழுதினாலும் திகட்டுதே ஜி பச்ச எழுத்துல தீ மட்டும் திகுதிகு எரியுது! அருமை அருமை! உங்களுக்கு நிகர் நீங்களேதான்! நன்றி!

  பதிலளிநீக்கு
 7. இப்படியெல்லாம் யோசிக்க.. இப்படியெல்லாம் எழுத.. உங்களால் மட்டுமே முடியும்!
  த ம 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே சும்மா இருக்கும் பொழுது சும்மாக்காச்சுக்கும் யோசித்தது....

   நீக்கு
 8. ஆத் தீ!! எத்தனை தீ. ஒரு தீ யை வைச்சே பதீவு எழுதீ ட்டியளே.
  சூப்பர் அண்ணா ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடியாத்தீ நீங்க கூட கருத்துரையில் கொளுத்தீட்டிங்களே... ஸூப்பர்

   நீக்கு
 9. வணக்கம்
  ஜி

  முகநூலில் பார்த்து விட்டு பயந்து விட்டேன் பதிவை படித்த போதுதான் புரிந்தது. எப்படி எல்லாம் யோசனை போகுது...ஹா...ஹை..

  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ரூபன் பயப்படக்கூடாது எதுக்கு பயப்படனும் தீ சுடும்போது ப்தூ என்றால் அணைந்து விடும் அவ்வளவுதான்....

   நீக்கு
 10. தீப ஒளியில் தீமைகள் அகலட்டும்;தீஞ்சுவைப்பதிவு

  பதிலளிநீக்கு
 11. தீ தீ தித்திக்கும் தீ...தீண்டத் தீண்டச் சுவைக்கும்....அப்படியாக பாரதீ பாடிக் கொண்டு தீபாவைத் தீண்டினால், தீண்டிவிட்டுத் தீராத விளையாட்டுப் பிள்ளையானால், தீபா தீவட்டியுடன் வராமல், கையில் தீபம் ஏந்தித் தீஞ்சுவைப்பாடலான அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசாப்பூ மாலைக் கட்டு அடி ராசாத்தி தோளில்யிட்டு தினம் ராவெல்லாம் தாளந்தட்டு பாடிக்கிட்டே வருவாளா என்ன?!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க, வாங்க பாட்டாவே பாடிட்டீங்களா.... அப்படியே இடையிலே தீ, நெருப்பு, கங்கு இப்படி போட்டுக்கங்க...

   நீக்கு
  2. துளசி அண்ணா , லைக் பட்டன் இல்லையே :-)

   நீக்கு
 12. தீ யை உங்கள் போடோவின் முன் வைத்திருப்பதை பார்த்த போது எனது மனம் மிகவும் கனத்து போனது. இந்த மாதிரி படங்கள் தயவுசெய்து வேண்டாம் சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ பதிவில் வார்த்தைகளுக்கு ஏற்ப புகைப்படங்களை கொடுப்பது எனது பாணி என்பது தங்களுக்கு தெரிந்ததே... பிறரின் படத்தைப்போட்டால் பிரட்சினை வரும் ஆகவே எனது படத்தை போட்டேன் இப்படி எல்லோரும் அன்பால் திட்டுவீர்கள் என்கறு தெரிந்திருந்தால் போட்டிருக்க மாட்டேன் இனிமேல் வராது சகோ
   தங்களின் அன்புக்கு தலை வணங்குகிறேன்

   நீக்கு
 13. "தீயா ஒரு பதிவு போடணும் கொமாரு.."யாரோ உங்க கிட்ட சொல்லிட்டாய்ங்க போல!

  பதிலளிநீக்கு
 14. ஒருத் தீ யாலே...உலகம் பூரா எப்படி தீயா பரவிருக்கு பாத்தேளா???( ஆனால் சகோதரரே...பாத்ததும் பயமா இருக்கு...) (மெல்லிய இதயம் கொண்டவர்கள் படிக்க வேண்டாம் என்று ஒரு டைட்டில் கொடுத்துட்டு போட்டுருக்கலாம்..ல..இப்படிக்கு கணத்த இதயத்தோடு...http://swthiumkavithaium.blogspot.com/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பயப்படாதீங்க சுடாது..... தொரியமாக வந்து கருத்துரை போடுங்க....
   இதோ வருகிறேன் தங்களது தளம்

   நீக்கு
 15. ஏலே 'தீ'வட்டி தடியா அங்கன உன்னோட கம்பியூட்டர் மிசுனு பத்தி எரியுது பாத்துட்டும் நீ பாட்டுக்கு பட்டுன தட்டிக்கிட்டுருக்கியேன்னு அப்டின்னு உம்மால எனக்கு ஒரு சி(ற)ரிப்பு பரிசு கிடைத்தது... சந்தோஷமா?...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே.... யாரைத் திட்டுறீங்க..... பரவாயில்லை நண்பர்தானே திட்டுங்க...

   நீக்கு
 16. ஆ.... இப்படீயும் தீ...தீீ...பா...வளியை கொண்டு ஆடலாம் போல் இருக்கே நண்பரே.....

  பதிலளிநீக்கு
 17. எப்போதும் தங்கள் பதிவைக் கண்டதும் என்னைக் கேட்காமலே வேகமாக வாக்களிக்க வரும் என் விரல்கள் இன்று நான் அழைத்தாலும் வருவதாக இல்லை.. கா'ரணம்' உமக்கும் அவர்களுக்கும்தானே தெரியும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பரவாயில்லை நண்பரே ஓட்டை விட தங்களின் கருத்தே காலத்துக்கும் நிற்க்கும் அதுவே நன்று.

   நீக்கு
  2. திரும்பிவந்து பார்ப்பதற்க்குள்
   என் மனம் பட்ட பாட்டை கேட்டு படத்தை மாற்றிய தங்கள் மென்மனதிற்க்கு நன்றி..

   நீக்கு
  3. அன்பாய் சிவமே சொன்ன பிறகு.....

   நீக்கு
 18. ஒரு வார்த்தை வைத்து இப்படிப் பதிவு போடுவதைக் கண்டிக்கிறேன், நாங்க சொற்களைக் கோர்க்க கஸ்டப்படுப்போது நீங்க என்னடான்னா... :-)
  Jokes apart, விதம்விதமா கலக்குறீங்க சகோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொற்கள் கிடைக்காமல் நீங்க கஷ்டப்படுறீங்களா ? இது கொஞ்சம் ஓவராகத் தெரியலை.... சகோ.

   நீக்கு
 19. அண்ணா முதலில் அந்த gif பைலை மாற்றுங்கள்...

  பதிலளிநீக்கு
 20. படத்தைப் பார்த்ததும் ஏதோ போராட்டம் என்று நினைத்து விட்டேன்.

  பதிலளிநீக்கு
 21. அன்புள்ள ஜி,

  'தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடின்னு..’மொட்டை மாடியில் பாட...

  ‘தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை
  தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா’

  பாடி பாடி தீக்குளியலா...? எங்கு பார்த்தாலும் ஒரே தீ... மயம்தான் ‘பத்த வச்சிட்டியே பரட்டை... இதெப்படி இருக்கு?’

  த.ம.7

  பதிலளிநீக்கு
 22. இப்படிப் படத்தை எரித்துப் பதிவு போட்டது எனக்கு ரசிக்க தெரியல சகோ!
  வரிக்குவரி உங்களை கொல்லுவேன் எரிப்பேன்ங்கிறதையும் அத்தனை இலகுவாக ஒரு பதிவுதானே தமாசுதானேன்னு படிச்சிட்டுப் போகமுடியலை சகோ!..

  இனி இப்படியான பதிவு வேணாம். ப்ளீஸ்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே தங்களின் அன்புக்கு நன்றி படத்தை மாற்றி விட்டேன்

   நீக்கு
 23. படித்து முடித்தவுடன் கம்யூட்டர் மவுஸ் கூட சுட்டது போல இருந்தது. அவ்வளவு தீ.

  பதிலளிநீக்கு
 24. எரிச்ச - படத்தை மாற்றியமைக்கு மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 25. எளியவன் சொல்
  எவரெஸ்ட் செல்லாது
  என்பார்கள்
  நண்பா!
  எனது சொல்லுக்கு செவி கொடுத்தமைக்கு
  மிக்க நன்றி!
  இந்த பதிவின் புகைப் படத்தை மாற்றி தந்தமைக்கு
  மகிழ்ச்சி!
  மீண்டும் நன்றி!
  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே எவரெஸ்ட்டுக்கு எட்டாவிடிலும் பாரிஸ் டவருக்கு 8மே.... நன்றி நண்பா அன்புக்கு...

   நீக்கு
 26. தங்களால்தான் முடியும் நண்பரே
  இப்படி ஒரு பதிவினை எழுத
  வாழ்த்துக்கள்
  தம +1

  பதிலளிநீக்கு
 27. எழுத்து விளையாட்டு நன்று!

  பதிலளிநீக்கு

 28. தீ வார்த்தை ஜாலம் ரசித்தேன் ஆனால் புகைப்பட எரிப்பை மனம் விரும்பவில்லை ஜீ!

  பதிலளிநீக்கு
 29. எல்லொரும் சொன்னதையே நானும் சொல்கிறேன் தயை செய்து காணொளியில் வெளியிட்டுள்ளது போன்ற காட்சிகளை இனி வெளியிடாதீர்கள். உங்கள் பேரில் உள்ள அன்பால் விடுக்கும் வேண்டுகோள் இது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் அன்புக்கு தலை வணங்குகிறேன் மன்னிக்கவும் இனிமேல் இப்படி செய்யமாட்டேன்.

   நீக்கு
 30. மூலப் பதிவை தேடி பார்த்தேன் , தீயிலே எரிஞ்சு போச்சோ :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி அதை எடுத்து விட்டேன் நண்பர் டி.டி. அவர்களுக்கு தெரியும்.

   நீக்கு
 31. வணக்கம் கில்லர் ஜி !

  தீச்சட்டி தீத்தாரப்பன் மேல சத்தியமா நெஞ்சு தீஞ்சு போச்சுங்க உங்க போட்டாவை தீயில் எரித்த போது !

  அழகான தீ இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிஞரின் வருகைக்கு நன்றி தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்

   நீக்கு
 32. சுடும் பதிவு.... என்றாலும் சுடச் சுடப் படிக்காமல் கொஞ்சம் தாமதமாகவே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுடும் என்பதால்தான் தாமதமாக வந்தீர்களோ ?

   நீக்கு
 33. அருமையா இருக்கு சகோ, வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 34. தீக்குள் விரலை வைத்தால் நின்னை தீண்டும் இன்பம் என்று பாடுவார் பாரதி...இந்த தீக்குள்....விரல் சொடுக்க நிறைய நகைச்சுவைகள்...எல்லாப் பக்கங்களும் அருமை...நன்றி அங்கிள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா நான் என்றும் விரும்பும் வரிகள் நன்றி ராகசூர்யா

   நீக்கு