தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், நவம்பர் 25, 2015

கார்மேகமே...


கார்மேகக் கண்ணா வா வா
கணத்த மழை நீரைத் தா தா
அழகு மேகக் கூட்டமே வா வா
அணை நிரம்ப அமுத நீரைத் தா தா
அந்தரத்து அலங்காரமே வா வா
அனைத்து மக்களுக்கும் நீயே தா தா
இன்ப மழை பொழிய வா வா
இடி முழங்க மின்னலை தா தா
கடல் நீரை எடுத்து வா வா
கண்மாய்களில் நீரைத் தா தா
தாகம் தீர்க்க நீயே வா வா
தரணி எங்கும் நீரைத் தா தா
கருப்பு நிறத்துடன் வா வா
கரும்பு சாறாய் தா தா
கர்ணப் பிரபுவே வா வா
கங்கை நதியிலும் தா தா
 கிழக்கு விளக்கே வா வா
மேற்கு வரைக்கும் தா தா
தெற்கு தென்றலே வா வா
வடக்கும் நிலைக்க தா தா
எங்களின் வளமே வா வா
எட்டுத் திசைக்கும் தா தா
இது குழந்தைகள் பாட்டு எனலாமா ?

இதோ E வெண்மேகமே... முந்தைய பதிவு

59 கருத்துகள்:

  1. மழை> அதான் வந்துட்டேனேப்பா! இன்னும் என்னை வாவா என அழைத்து ஏனப்பா தொலை செய்கின்றாய்..

    வெள்ளம்.> வா வா வா வா என இத்தனை தூரம் என்னை வருத்தி வருத்தி வாவா என சொல்லிட்டு இனி போ போ என்பியா ராசா! .

    கார்மேகம்>.இந்த கில்லர்ஜி சாரை நம்பலாமோ? இல்லையோ.. நேற்று என்னன்னால் நம்ம எதிரி வெண்மேகத்துக்கு தூது விடுறார்.அது கூட எனக்கு ரெம்ப நாள் பகை என தெரிந்தும் இன்னிக்கு என்னையும் வா வா என்கின்றார். இவரு ஊருல இருக்கும் அரசியல் வாதிங்க மாதிரி இருக்காரேப்பா! நம்மளை யாருன்னு நினைச்சாரு...
    நாம நம்ம பிரெண்டு காற்றையும் துணைக்கு அழைச்சிட்டு போய் அவரை ஒரு மிரட்டு மிரட்டி வைக்கணும்.

    அட இப்ப இந்த நிமிடம் இலங்கையில் வட பகுதியில் புயலாம் சார்.. எல்லாம் நீங்க கார் மேகத்தை வாவாவா என அழைத்ததனால்ல் தானாம்னு என்கிட்ட வெண்மேகம் வந்து சொல்லிட்டு போனது சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏற்கனவே எனக்கும் கார்மேகத்துக்கும் கொடுக்கல் வாங்கல் தகறாறு இப்போ நீங்க வேற இப்ப சண்டையை மூட்டி விடுறீங்களே...
      நான் அழைத்ததால் மழை வந்தது என்று வெளி உலகுக்கு தெரிந்தால் எல்லோரும் என்னை சாமியார் ஆக்கி விடுவார்களே.... அய்யய்யோ....

      நீக்கு
  2. இதில என்ன விசேஷம் எனில் எங்க ஊரிலும் காத்தும் மழையும் குளிருமாக இருக்கின்றது. இங்கே வெள்ளம் தேங்கும் வாய்ப்பு இல்லை. ஒன்பது வருடங்கள் முன் மழை வெள்ளம் என பெரும் சேதம் நிகழ்ந்தபோது அதற்கடுத்த மழைகாலத்துக்கு முன்னரே மழை நீர் ஆற்றில் சென்று சேரும்படியான வடிகான் வசதிகளையும். ஆற்று நீர் தேங்கி வெள்ளம் மேலே வராத படியாக அகலப்படுத்தலையும் செய்து விட்டார்கள்.

    இருந்தும் தொடர் மழை பெய்தால் சுவிஸிலும் பல இடங்களில் வெள்ள அபாயம் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்விஸில் மழை வந்தால் ? ஷாப்பன்ஹௌஸ் நிரம்பி வழியுமே.... ஸூப்பர் ப்ளேஷ் படகு சவாரிக்கு.. வருகைக்கு நன்றி.

      நீக்கு
  3. வந்தோம்...படித்தோம்..இன்னும் தா தா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைசிவரை தருவேன் நண்பரே முடிந்ததை... நன்றி

      நீக்கு
  4. குழந்தைகள் பாட்டேதான். ஆனால் இப்ப சென்னைல பாடினா அடி விழும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுக்குத்தானே அபுதாபியிலிருந்து பாடினேன்.... முனைவர் ஐயாவின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  5. இதுக்கு மேலயும் மழை வேண்டுமா? அப்பாடி.. இப்போது வேண்டாம் அடுத்த மழை! இது எங்கள் நிலை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே மழை வேண்டாம் என்று சொல்லும் நிலைக்கு அரசு நம்மை வைத்து இருக்கின்றது வேதனையான விடயமே..

      நீக்கு
  6. மழை வேண்டி அடுத்த பாட்டா.... மழை வந்தாலும் தண்ணீரைச் சேமிக்க வழியில்லை நம் ஊரில். அனைத்தும் கடலுக்கு அல்லவா சென்று சேர்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி பலநாடுகளுக்கு நமது அரசியல்வாதிகள் சென்று வருகின்றார்கள் ஆனால் ? அதில் எதையாவது கடைப்பிடிக்கின்றார்களா... இல்லையே....

      நீக்கு
  7. உங்கள் காட்டில் நல்ல மழை. அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களைப் போன்றவர்களின் வருகையால்.... முனைவரின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  8. மழைப் பாட்டு அழகு..

    நம் வாழ்வுக்காகப் பெய்யும் மழையை வாழ்த்துவோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி மழை அனைத்து ஜீவராசிகளுக்கும் அவசியமானதே...

      நீக்கு
  9. யூத் ஆனீங்க ,இப்போ குழந்தையுமா :)

    பதிலளிநீக்கு
  10. மழைக்கு மேல் மழை போதுமடா சாமி
    வெள்ளம் மேல் வெள்ளம் என்றால் தாங்காது பூமி

    இது ரெயின் ரெயின் கோ அவே பாட்டுக்கு எதிமறையான குழைந்தைப் பாட்டு என்று சொல்லலாம்.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  11. மழைக்காக உருவாக்கிய பாட்டு அருமை சகோ. தங்களுக்கு திருக்கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள் !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ நன்றி தங்களுக்கும் தீபத்திருநாள் வாழ்த்துகள்.

      நீக்கு
  12. அருமை அண்ணா ஜி. இக்காலகட்டதில எழுதியிருக்கீங்க. ஆனா நீங்க இருக்கும் இடத்திற்கு தேவைதான். மழை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இங்கு மழை வந்தால் அரேபியர்கள் வேடிக்கை பார்ப்பார்கள் ஆசையுடன்...

      நீக்கு
  13. பாட்டு நன்றாகவே இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  14. கரும்புச் சாராயத் தா தா ,,,,,,,,
    புரியலையே சகோ,

    அருமையாக இருக்கு சகோ,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரும்புச்சாறு என்பது தவறாகி விட்டது திரு(ந்)த்தி விட்டேன் மன்னிக்க சகோ வருகைக்கு நன்றி

      நீக்கு

  15. இப்போது இருக்கும் நிலையில் சென்னையில் இருக்கும் குழந்தைகள் மற்றும் பெரியோர் பாடுவது பேய் மழையே போ போ! பெய்தது போதும் போ போ! என்பது தான்.

    இந்த கவிதையை சென்ற ஆண்டு வெளியிட்டிருக்கவேண்டும் நீங்கள். கவிதைக்கு பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முந்தைய கவிதை மழை வேண்டாம் என்றதால் எதிர் பதம் எழுதினேன் நண்பரே...

      நீக்கு
  16. ஜி நல்லா எழுதியிருக்கீங்க. ம்ம்ம் குழந்தைகள் பாடல் எனலாம்...

    நம்மூரில் மழை வரலாம் ஆனால் அதை மிகவும் திறமையாகச் சமாளித்துச் சேமிக்க வழி செய்தால்....பெய்யட்டும் மழை...இல்லையே இப்போது இது போதும். ஒரு இடைவெளி விட்டு வரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது இரசியல்வாதிகள் செய்யவேண்டும் அதை மக்கள் செய்ய வைக்க வேண்டும் இரண்டுமே இல்லையே..

      நீக்கு
  17. உங்கள் ஊருக்குத்தானே /
    மிகச் சரியாய்ச் சொல்லுங்கள்
    மழை மீண்டும் இங்கு வந்துவிடப் போகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த ஊருக்காக என்றால் அரபு மொழியில் எழுதி இருப்பேனே... கவிஞரே...

      நீக்கு
  18. அதிகமாகவே தந்து விட்டான் போங்க!

    பதிலளிநீக்கு
  19. ஓட்டுப்பட்டை என் கண்ணில் படவில்லையே!

    பதிலளிநீக்கு
  20. நீங்க இப்படி..தா..தா..என்று பாடிவிங்கன்னு தெரிஞ்சுதான் தமிழ்நாட்டின் வடக்கு பக்கமும் தெற்கு பக்கமும் வெளுத்து வாங்கிவிட்டது நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுக்குத்தான் நண்பரே பெரியவர்கள்கள் சொன்னார்கள் //பெய்யென பெய்யும் மழை//

      நீக்கு
  21. குழந்தைப்பாடல் என தாராளமாய்ச்சொல்லிக்கொள்ளலாம்/

    பதிலளிநீக்கு
  22. பாடல் அருமை
    சென்னை வாசிகளைக் கேட்டுப் பாருங்கள்
    மழை வேண்டுமா போதுமா என்று
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னைக்கு போதும் என்பதை மறந்து வேண்டாம் என்று சொல்லும் நிலையாகி விட்டதே நண்பரே வருகைக்கு நன்றி

      நீக்கு
  23. மழை போதும் போதும் என்று மக்களை படுத்தி விட்டது. சிறிது நாள் கழித்து தேவைபடும் போது இந்த பாடலை பாடலாம்.
    நல்ல பாடல்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோவின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  24. வணகம்
    ஜி
    தமிழகமே நீரில் மூழ்கி கிடக்கும் போது.. துபாய்யில் இருந்து கார்மேகத்தை ஏன் அழைக்கின்றீர்கள்....இயற்கை தந்த அவலம் போதும் ஜி... த.ம 11
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன ? ரூபன் நீங்கதான் கார்மேகம் கேட்டதால் குழந்தைகளை வைத்து அவசரமாக எழுதினேன் வேண்டுமானால் சொல்லுங்கள் மலேசியா பக்கமாக திருப்பி விடுகிறேன் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  25. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் உங்களைத் தேடுகிறார்கள். மழைப்பாட்டா எழுதுகிறீர்கள். ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா நலமா ? நீங்களே மாட்டி விட்ருவீங்களோ.... இதற்க்கு முந்தைய கவிதை வெண்மேகமே... படித்தால் கோபப் படமாட்டார்கள் ஐயா... வருகைக்கு நன்றி

      நீக்கு
  26. நல்லதொரு பாடல். வருந்தி வருந்தி அழைத்தாலும் வாராத மாமழை இப்போது வந்தேவிட்டது. ஆனால் வந்த மழையைத்தான் வைத்துக்கொள்ள இடமில்லாமல் செய்துவிட்டோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோ இந்த தவறுகளின் தொடக்கமே நாம்தானே...

      நீக்கு
  27. கார்மேகம்
    தமிழக மக்களின்
    கண்களில்.....
    இப்பொழுது போர்மேகம்.

    பதிலளிநீக்கு
  28. வந்துடுச்சே, நாளைலேருந்து இன்னமும் வரப் போகுதாம்! :)

    பதிலளிநீக்கு