தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, நவம்பர் 01, 2015

தங்க முட்டை

இந்தப்பதிவுக்கு முதன் முதலாக வருபவர்கள் இதன் தொடர்பான கீழ்காணும் பதிவுகளை படித்த பிறகு தொடர்ந்தால் பதிவின் காரணங்கள் விளங்கும் இதில் கொக்கி போட்டு தொடர் பதிவாக்கிய அன்பின் ஜி குவைத் மன்னர் திரு. துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி.

 
எட்டாம் நம்பர் கடையில்... மாலை 07.00 மணி.

ஏலே மந்தக்கட்டி, சகுனி சடையனை கவனிச்சியாலே...
ஆமாலே நானும் பாத்துக்கிட்டுதான் இக்கேன் கட்டிங்குக்கு நேரே நம்மக்கிட்ட வர்றவேன் மூணாவது பாட்லு வாங்கிட்டான்... நீயே கேளுலே...
ஏலே சடையா...
இன்னா மொக்கராசு.. ? 
என்னாலே அங்கிட்டே நிக்கிலே குப்பியை எடுத்துக்கிட்டு இங்கிட்டு வாலே...
சொல்லுபா..
உக்காருலே... என்னா மடியிலே முடிச்சு கணமா இருக்கு..
நான் முட்டை போடுற வாத்து புடிச்சேன்பா..
முட்டை போடுற வாத்தா ? எல்லா வாத்தும் முட்டைதான்லே போடும்.
நான் சொல்றது தங்க முட்டைபா...
என்னலே சொல்றே ?
ஆமாபா, நம்மக்கிட்டே ஒரு டாக்டரு மாட்டிக்கிட்டான் வயித்துவலினு போனா... ஆயிரம் ரூபா தர்றான் அது போதாதுனு சிஸ்டரு இருபது ரூபா தருதுபா..
ஏலே, நமக்கும் சொல்லுலே... தெனம் சரக்கடிக்க டப்புக்கு ரொம்ப டிமாண்டா போச்சுலே..
அந்த டாக்டருட்டே போனா வயித்துவலினு போகணும்பா.. ஒனக்கு வயித்துவலி இல்லையேபா..
சும்மா வயித்துவலினு சொல்லுவோம்லே...
அப்படி இல்லைபா டாக்டரு கண்டு புடிச்சுட்டா துட்டு கிடைக்காதுபா..
சரிலே நான் மந்தக்கட்டி வயித்துல மிதிக்கேன்.

ஏலே மொக்கை நேத்து எம்பொஞ்சாதி மொச்சைக்கொட்டை கொழம்பு வச்சா... வயித்துக்கு சரியில்லை நான் ஒன்னை மிதிக்கேன்லே..
இன்னாபா நீங்க எம்பொஞ்சாதி பானுமதி தெனம் என்னை எம்பூட்டு மிதி மிதிக்கிறா தெரியுமாபா ? ஒரு மிதி வாங்க இம்பூட்டு யோசிச்சா.. எப்படிபா  துட்டு கெடைக்கும் ? 
மந்தக்கட்டி சொன்னாக்கேளுலே நான் மிதிக்கேன்.
ஏய்.. விடுங்கப்பா ரெண்டு பேருக்கும் நான் ஒரு மிதி விடுறேன்பா..
மொக்கைராசும், மந்தக்கட்டியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு தலையை ஆட்டினார்கள்.
சரிலே லேசா மிதிலே...
சடையாண்டி எழுந்து அவிழ்ந்த வேட்டியை மீண்டும் சரியாக கட்டிக் கொண்டு.
மொக்கை நீ கெழக்குப் பாத்தாப்பலே திரும்புப்பா..
மொக்கைக்கு கிழக்கு புடிபடாமல் ஏதோவொரு திசையில் திரும்ப சடையும் இதுதான் கிழக்கு போல என நினைத்து காலைத்தூக்கி ஒரு மிதி மிதித்தான்..
’’அம்மா’’
சுற்றியிருந்தவர்கள் எல்லோரும் திரும்பி பார்க்க கடையின் முதலாளி வீரபாகு சத்தம் கொடுத்தார் ஏலே என்னாங்கடா ?
ஒண்ணுமில்லை வாத்யாரே...
சரி நீ வாபா..

மந்தக்கட்டி சேரில் உட்கார்ந்து குறி தவறி வேறெங்கும் மிதித்து விடுவான் என்று எண்ணி சாய்ந்து கொண்டு வயிற்றை கொஞ்சம் உப்பலாக காண்பிக்க... சடையாண்டி ஓங்கி ஒரு மிதி மிதித்தான் ’’அம்மா’’ என்று அலறிய மந்தக்கட்டி சேரோடு மல்லாந்ததில் சேரின் பின்னங்கால் இரண்டும் ஓடிந்தது பக்கத்தில் இருந்த பெருசு ‘’ஹூம் குடிகார மட்டைகள்’’ என்று சொல்லி விட்டு தனது வேலையை கவனிக்க... ஓடி வந்த கடையின் முதலாளி சடையாண்டியின் வேட்டியை பிடித்துக் கொண்டு பிடறியில் 2 வைத்து ஏன்டா நொண்ணைகளா ? வந்தமா... குடிச்சோமானு போகாமே.. இப்ப சேருக்கு பணத்தை எடுடா... வேட்டியின் முடிச்சைப் பார்த்தவர் அவிழ்க்க வேட்டி கையோடு வந்தது மொத்தம் 580 ரூபாய் இருந்ததை எடுத்து விட்டு பின்புறம் ஜன்னல் வைத்த டவுசரோடு நின்ற சடையாண்டியின் முகத்தில் வேட்டியை வீசி விட்டு உங்க பணத்தை எடுங்கடா...
இல்லை முதலாளி கட்டிங்குக்கு மட்டும்தான் பணம் இருந்துச்சு.
மொக்கையின் வயிற்றில் இவரும் ஒரு மிதி மிதித்து ஓடுங்கடா இனிமே கடைக்குள்ளே வந்தீங்க... கொதிக்கிற சால்னாவை மூஞ்சியிலே ஊத்திடுவேன் கருவக்குச்சியில் நிறுத்தியிருந்த சேருக்கு 580 ரூபாயை பிடுங்கி கொண்டு 3 பேரையும் வெளியே விரட்டினார் கடை முதலாளி வீரபாகு.

வெளியே ஓடிவந்து பக்கத்தில் இருந்த பார்க்குக்குள் நுழைந்த மூவரும் மரத்தடி புல்வெளியில் கால்களை பரப்பிக் கொண்டு உட்காந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள்.
ஏலே ஒம்பேச்சைக் கேட்டு இப்ப பாத்தியா ? மீசைக்காரன் வயித்துலயே மிதிச்சுட்டான்.
அவனை சும்மா விடக்கூடாதுலே இன்னிக்கு ராத்திரி அவன் கடையை தீ வக்கிறோம்லே...
ஏய் என்னபா பேசுறே... வீணாப் போன ஒடிஞ்ச சேருக்கே மீசைக்காரன் 580 ரூபாயை புடுங்கிட்டான் தீ வச்சது தெரிஞ்சதுனா, சும்மா விடுவானா ? வீட்டை எழுதி வாங்கிடுவான்பா அவன் கோடாலி பார்ட்டிப்பா.
ஏலே ஒங்கிட்டே எத்தனை வீடு இருக்குனு சொல்லுதே ஆத்தோரமா பொறம்போக்குல குடுசை போட்டுக்கே அதையா கேப்பான் ? 
பேசிக் கொண்டு இருக்கும் பொழுதே பக்கத்தில் கொர்.... கொர்... சத்தம் கேட்டு திரும்பி பார்க்க மொக்கைராசு குறட்டை விட்டுக் கொண்டிருந்தான்...

ஏலே என்னா தூங்கிட்டான் ?
அவேன் ப்ளாட் ஆகிட்டான்பா... என்ற சடையாண்டி அப்படியே மல்லாந்து உறங்கத் தொடங்கினான்...
ஏலே... ஏலே... ஏலே... என்று சொல்லிக்கொண்டே இருந்த மந்தக்கட்டி மொக்கையின் மேல் சாய்ந்து ‘’வ்வே’’ என்றவன் அப்படியே அதன் மீதே....

சங்ககிரியின் கடைத் தெருக்கள் வெறிச்சோடி உறக்கத்துக்கு தயாரானது...

62 கருத்துகள்:

  1. தங்க முட்டையிட்ட வாத்தியார் ஆகி விட்டீர் போலிருக்கிறது
    வாத்து என்று சொல்ல மனம் இல்லை நண்பா!
    நன்றி!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா சொல்லமாட்டேன்னு சொல்லிட்டு சொல்லிட்டீயலே நண்பா...

      நீக்கு
  2. வணக்கம்
    ஜி

    வழமையான அட்டகாசமான கலாட்டவுடன் பதிவை அசத்தி விட்டீர்கள்...சொல்லிய கருத்து நன்றாக உள்ளது தொடர் வாழ்த்துக்கள் ஜி த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரூபன் ரசித்ததுபோல் தெரிகிறதே... வருகைக்கு நன்றி.

      நீக்கு
  3. 580 உரூபாய்க் குளறுபடி
    எப்ப தான் முடிவுக்கு வரும்?
    இவங்க உள்ளத்தில
    எப்ப தான் மாற்றம் நிகழும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது நல்லவர்கள் ஆட்சி செய்வதில் இருக்கின்றது நண்பரே...

      நீக்கு
  4. குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மைதான் தாங்கள் சொல்வது.

      நீக்கு
  5. மூன்று பேரும் டாக்டரிடம் போனால் ....அவ்வளவுதான்

    பதிலளிநீக்கு
  6. இதுதான் கில்லர்ஜியின் சூப்பர் ஸ்டைல் பதிவு

    பதிலளிநீக்கு
  7. இப்படியாக நல்லா இருந்தவர்களை எல்லாம் குடிகார பயல்களாக்கி வீட்டையும் நாட்டையும் நாசமாக்கி டாங்க..... நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதான் நாடு போச்சே நண்பரே இனிமேல் என்ன இருக்கு....

      நீக்கு
  8. அருமை, ரசித்தேன்!
    தங்க முட்டையை நினைத்து ஓட்டுப் பெட்டியை தொலைத்துவிட்டீர்கள் போல காணவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே ஓட்டுப்பெட்டி கிடக்கட்டும் நீங்க தங்க முட்டையை தூக்கிட்டுப் போயிடாதீங்க...

      நீக்கு
  9. குடிகாரர்களின் சேட்டை தாங்கலையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் நாட்டு குடிகாரர்கள் இப்படித்தானே நண்பரே...

      நீக்கு
  10. சரி தான்..
    இப்போது தான் தளம் கலகலப்பாக இருக்கின்றது..

    சடையாண்டி வயிற்றில் உதை விட்ட பார்ட்டிக்கும் மீசை தானா!..

    அட்டகாசம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி நலமுடன் தஞ்சாவூர் சென்று விட்டீர்களா ? உடனே கருத்துரை போட்டு விட்டீர்களே....

      நீக்கு
  11. அன்புள்ள ஜி,

    பாருக்குள்ளே நல்ல நாடு... தங்க முட்டையிட்ட வாத்த வயித்த கிழித்தது... நன்றாக...!

    த.ம .8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே வயிற்றைக் கிழித்து முட்டையை எடுத்து விட்டீர்களா ?

      நீக்கு
  12. அடடா... எனக்கு இந்த டயலாக் கொஞ்சம் சிரமம்தான் வாசிக்கிறதுக்கு..:)
    இருந்தாலும் வாசிச்சுப் புரிஞ்சு சிரிச்சேன் சகோ!

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கவிஞரே இது தமிழ் நாட்டில் ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் இப்படித்தான் பேசுவார்கள் ஆனால் எனது ஊருக்கும் இதற்க்கும் ரொம்ப தூரம் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  13. உள்மருந்து என்ன வேண்டுமானாலும் செய்யும் ஜி...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இதனாலதானே தமிழ் நாடு குட்டிச்சுவராகி விட்டது.

      நீக்கு
  14. காலையிலேயெ சிரிச்சு வயிற்றை புண்ணாக்கியாச்சு. ஸ்லாங் ல் எழுதியது அருமை அண்ணா ஜி. வழமைக்கு திரும்பியதில் மகிழ்ச்சி.
    (நெல்லையா அந்த ஸ்லாங்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே உங்களுக்கு நெல்லை ஸ்லாங்க் என்று அறிந்திருப்பது கண்டு மகிழ்ச்சி சகோ... ஆனால் மேலே கவிஞர் இளமதி அவர்களுக்கு தெரியவில்லையே... இருவருமே ஜெர்மனியில்தானே இருக்கின்றீர்கள்.

      நீக்கு
    2. கர்ர்ர்ர்......அவங்க நல்ல கவிதை எழுதுறாங்க.கவிஞர் ஆயிற்றே. எனக்கு கவிதை எழுததெரியாது. இதுக்கு என்ன சொல்லப்போறீங்க அண்ணா ஜி.(இதுக்கு என்னல சொல்றே.)

      நீக்கு
    3. ? ? ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

      நீக்கு
  15. ஏங்க...நீங்க அமீரகத்தில் தான் இருக்கிங்களா....?
    இல்லையெனில் அடிக்கடி வந்து போறீகளா...?

    #கவலை மறந்து போன ஒரு காலையில்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் செல்வா அவர்களின் கருத்துரைக்கு நன்றி நானும் இந்திய மண்ணில் புரண்டவன்தானே நண்பரே.. இது இன்னும் தொடரும்... முடியவில்லை ஆனால் நான் தொடரும் போடவில்லை காரணம் பிரித்தும் படிக்கலாம், தொடர்ந்தும் படிக்கலாம் ஆகவே தலைப்புகளையும் மாற்றிக்கொடுக்கின்றேன்.

      நீக்கு
  16. வணக்கம் ஜி! தங்கமுட்டை தார தப்பட்டை போல கலக்கலாக இருக்கிறது! குடிகாரர்கள் இல்லாத நாடும் குடிக்க கஞ்சியில்லாத வீடும் இருந்தா நல்லாயிக்காதமே! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே நல்லதொரு தத்துவத்தை சொன்னீங்க.... உண்மைதானோ... ?

      நீக்கு
  17. சிரிச்சுக்கிட்டே படிச்சாலும் நம்ம நாட்டு நிலைமை சிந்திக்க வைச்சது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சிரிப்போடு சிந்தனையும் கொடுப்பதே சிறப்பு.

      நீக்கு
  18. ஏமாறுதல் ஏமாற்றுதல் இரண்டுமே நினைவுக்கு வருகிறது

    பதிலளிநீக்கு
  19. ம்ம்ம் டாஸ்மாக்கின் சரித்திரம் இப்படித்தான் போய்கொண்டிருக்கின்றது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வாங்க அது சரித்திரம் இல்லை தரித்திரம்

      நீக்கு
  20. பதில்கள்
    1. அடடே வணக்கம் சகோ நலமா ? இன்னும் இணையம் இணைப்பு கிடைக்கவில்லையா ? செல் மூலம் சொல்கிறீர்களே...

      நீக்கு
  21. இது இது தான் சகோ, தொடருங்கள், நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி சகோ

      நீக்கு
    2. தாமதமாக வந்து இப்பொழுது தான் படித்தேன். முதலில் கில்லர்ஜி அகராதி என ஒரு அகராதி எழுதுங்கள், எங்களுக்கு உதவ. அதிகமான புழங்குசொற்கள் அருமையாக இருந்தன. வாழ்த்துக்கள் .

      நீக்கு
    3. ஹாஹாஹா முனைவரின் கருத்துரையை ஏற்று முயல்கிறேன்

      நீக்கு
  22. ரசித்தேன். பணிச்சுமையின் காரணமாக பல பதிவுகள் படிக்க இலயவில்லை. இப்போது தான் ஒவ்வொன்றாய் படித்துக் கொண்டிருக்கிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே படித்து ரசியுங்கள் நன்றி

      நீக்கு
  23. ரசித்தேன்! சுப்பர் சார்.

    பதிலளிநீக்கு