தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், நவம்பர் 17, 2015

Killing Hospital


இந்தப்பதிவுக்கு முதன் முதலாக வருபவர்கள் இதன் தொடர்பான கீழ்காணும் பதிவுகளை படித்த பிறகு தொடர்ந்தால் பதிவின் காரணங்கள் விளங்கும் இதில் கொக்கி போட்டு தொடர் பதிவாக்கிய அன்பின் ஜி குவைத் மன்னர் திரு. துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி


சுள்ளென்று முகத்தில் வெயிலின் சூடுபட்டு கண் விழித்த மொக்கை தன்மீது சாய்ந்து கிடந்த உருவத்தை கவனிக்க.. அட நம்ம மந்தக்கட்டி இங்கே கெடக்கானே.. யேன் ? காலின் விரலில் ஏதோ ஈரம் போல உணரந்தவன் எழுந்து நிமிர்ந்து உட்கார அவனது காலின் கட்டை விரலை வாயில் கவ்வியபடி கிடந்த சடையாண்டியை கவனித்தான் குழப்பமாகி நான் ஏன் இங்கே புல்லிலே படுத்துக்கிடக்கேன் ? வழக்கமாக வீட்டுக்கு வெளியில் கிடக்கும் கயித்துக்கட்டில் எங்கே ? குழம்பிபோய்...
ஏலே... மந்தக்கட்டி எந்திரிலே..
தனது சட்டையை கவனித்தவன் என்ன ? இது வடிச்ச கஞ்சி மாதிரி புளிச்சவாடை அடித்தது எழுந்த மந்தக்கட்டி பேந்த பேந்த முழித்தான்.
என்னாலே... ?  ஏலே சடையா, எந்திரிலே..
கொஞ்ச நேரம் கண்ணைக் கசக்கிக்கொண்டு இருந்தவர்களுக்கு நேற்றிரவு நடந்தது நினைவுக்கு வர ஆரம்பித்தது... மந்தக்கட்டி லேசாக சிரித்தான்.
ஏலே.. சடையா நேத்துச் சொன்னியே.. அந்த டாக்டருட்டே போவோமாலே ?
எந்த டாக்டருபா ?
நீ தானேலே சொன்னே... தங்க முட்டைனு... ? 
தலையைச் சொறிந்த சடையாண்டியை எழுந்து செவுலைச் சேர்த்து சட்டீரென ஒரு அறை விட்டான் மொக்கை... சுதாரித்து எழுந்த சடையாண்டி..

என்னாபா நீ பட்டுனு அடிக்கிறே..  சொல்லுப்பா ஞாபகம் வந்துருச்சு.
நீதான் சொல்லணும் எந்த டாக்டரு...
ஆமாபா டாக்டரு பேரு 7 மலை
அவரு எங்கே இருக்காரு.. ? 
ஐயோப்பாண்டி நகருல, முட்டுக்கெட்டான் தெரு.
சரி மந்தக்கட்டி கெளம்புலே..
ஏய்.. என்னாபா.. நீ டீசண்டா போகணும்பா..
சரிலே நீ குளிச்சிட்டு நம்ம வெள்ளையன் ஊரணி மணி டீக்கடை முக்குக்கு வந்துரு... ஏலே மந்தக்கட்டி கெளம்புலே ஆத்துல போயி குளிச்சிட்டு வந்துருவோம்.
ஏலே.. நீ வீட்டுக்குப் போயி நல்ல சட்டை போட்டு வாப்பா.. சரிலே 11.00 மணிக்கு வந்துவோம்லே...
மூவரும் பிரிந்து மீண்டும் சரியாக 11.00 மணிக்கு மணி டீக்கடையில் கூட..
ஏலே.. ஆட்டோவுல போவோமாலே ?
ஏங்கிட்டே துட்டு இல்லைபா..
மந்தக்கட்டி உங்கிட்டே ?
ஏங்கிட்டே ஏதுலே.. ?
ஆட்டோ புடிப்பா, நம்ம டாக்டருட்டே வாங்கி கொடுக்கலாம்.

கையை காட்டி ஆட்டோவை நிறுத்த முயல அனைத்து ஆட்டோக்களும் 16 அடி இடைவெளி விட்டு பறந்தார்கள் சில ஆட்டோக்கள் இவர்களைக் கண்டதும் 32 அடி இடைவெளியில் வந்த வழியே திரும்பி போனது….
ஏலே.. நடந்து போவோம்லே... ஒரு பயலும் நிக்கெ மாட்றான்லே...
ஆமாபா.. வா..
சடையா, நீ சட்டை போட்டு வரக்கூடாதாலே ?
இவேன் என்னைக்குலே சட்டை போட்டான் சட்டை போட்டு 30 வருசமாச்சு..
யேன்லே.. ?
அதை விடுப்பா, வயித்துவலி யாருக்குபா... நான் வேணா லேசா மிதிக்கவா ?
ஏலே, நேத்து மீசைக்காரன் மிதிச்ச மிதி இன்னும் வலி உயிர் போகுதுலே...
மொக்கை அங்கே வந்ததும் வயித்துவலி வந்து துடிக்கனும்பா.. மறந்துடாதே..
சரிலே...
ஹாஸ்ப்பிட்டலின் வரவேற்பறையில் சடையாண்டியை கண்ட ஸிஸ்டர்ஸ் அனைவரது முகத்திலும் கிலி குறிப்பாக 20 ரூபாய் கொடுத்தவள் மிரண்டாள் மொக்கை வயிற்றைப் பிடித்துக்கொண்டு.... அம்மா.. அம்மா... என்றான்.

யோவ் எதுக்குயா வந்தே ?
என்னம்மா ? இப்டி பண்ணுறீங்களேமா... பாத்தீங்களா ? வயித்து வலிச்சு துடிக்கிறான் டாக்டருட்டே சொல்லுமா ?
சட்டென டெலிபோனை எடுத்தவள் வேண்டாமென டாக்டரின் அறைக்குள் ஓடி விபரத்தை சொன்னாள் தலையை அசைத்து கேட்டுக்கொண்ட டாக்டர் மானிட்டரில் ரிசப்ஷன் காட்சிகளை வரவழைத்து மூன்று நபர்களையும் பார்த்தார் சடையாண்டியை கண்டதும் தண்டுவடம் சிலிர்த்தது சிறிது யோசித்தவர் தலையை ஆட்டி விட்டு...
ஓகே அவுங்களை உள்ளே வரச்சொல்.
கும்புடுறேன் டாக்டர்
சடையாண்டி சிரிக்க... டாக்டர் வழுக்கட்டாயமாக சிரிப்பை வரவழைத்து...
ம்.. ம்.. சவுக்கியமா ?
நல்லாயிருக்கேன் சாமி.. என்று சொல்லிய சடையாண்டி மந்தக்கட்டியை அலட்சியமாக பார்த்து கண்களால் சிரித்தான்.
என்ன பிரச்சனை ?
இவெனுக்கு வயித்துவலி அதான்...
டெதஸ்கோப்பை எடுத்து மொக்கையின் வயிற்றில் வைத்து டெஸ்ட் செய்து விட்டு கண்களை விரித்துப் பார்த்தவர் செல்லை எடுத்து யாருக்கோ... அழைக்க கால் எடுக்கப்படாததால்... தொலைபேசியில் ரிஷப்சனுக்கு அழைத்து சொன்னார்.

ஹலோ இம்மீடியட்டா, கில்லிங்க் ஹாஸ்ப்பிட்டலுக்கு கால் பண்ணி கணைக்ட் கொடுங்க....
சிறிது நேரத்தில் கணைக்ஷன் வர..
ஹலோ திஸ் இஸ் டாக்டர் 7 மலை கென் ஐக் காண்டாக்ட் டாக்டர் K 7 ப்ளீஸ்.
.........
ஓகே ஐம் வெயிட்டிங்..........
1 2 3 4 5 Second

ஹலோ டாக்டர் K 7 ஹவார் யூ ? ஐம் டாக்டர் 7 மலை...
..............
ஐம் ஃபைன் ஓகே தாங்க்யூ.... கென் யூ ஹெல்ப் மீ டாக்டர் இம்மீடியட்லீ.
.................
ஹியர் ஒன் பேஷண்ட் ............................................................................
டாக்டர் பேசிக்கொண்டிருக்க.... இருவரும் சடையாண்டியை பெருமையுடன் பார்க்கவும் சட்டையே இல்லாத காலரைத்தூக்கி விட்டுக் கொண்டான் சடை பேசி முடித்த டாக்டர் சொன்னார்....

இது ரொம்ப இம்பார்ட்டண்ட்... அதாவது இந்த வயிற்றுவலி முக்கியமான விசயம் அதானாலே ஸ்பெலிஸ்ட் சாரி... என்னைவிட பெரிய டாக்டர்தான் பார்க்கனும் என்னோட நண்பர்தான் எல்லாம் பேசிட்டேன் இப்போ வேன் வரும் அதுல மூணு பேரும் போங்க டாக்டர் உடனே குணப்படுத்திடுவாரு.
டாக்டர் நேத்து எனக்கு பாத்தியலே... அந்த மாதிரி ஏதும்....
அது வேற, இது வேற ஓகேயா ? வெளியில் உட்காருங்க உங்களை கூட்டிப்போக இப்ப வந்துடுவாங்க...
அங்கே ஏதாவது......
அங்கே குணப்படுத்தி என்னைவிட அதிகம் பணம் கொடுப்பாங்க...
மூவரின் முகமும் மலர்ந்தது வயிற்றைப் பிடித்துக்கொண்டு இருந்த மொக்கை கையை எடுத்தான்.
இப்ப, வயிற்றுவலி எப்படியிருக்கு ?
பரவாயில்லை டாக்டர் ரொம்ப நன்றி டாக்டர்..

எல்லோரும் கும்பிட்டு விட்டு வெளியில் உட்கார புரியாத ஸிஸ்டர்ஸில் ஒருத்தி உள்ளே ஓடினாள் வெளியில் வந்தவள் மற்றவர்களிடம் கேசவன் டாக்டரிடம் என்று... மெதுவாக சொல்லி சிரிக்க... மூவரும் புன்முருவலுடன் மெதுவாக ரகசியமாக பேசிக்கொண்டிருக்க... சிறிது நேரத்தில் இரண்டு நபர்கள் வந்து ரிஷப்ஷனில் இங்கே சடையாண்டினு மூணுபேரு... உடன் மூவரும் நாங்கதான் என்றவர்களை அழைத்துக்கொண்டு வெளியில் நிற்கும் வேனில் ஏற்றிக்கொண்டு போக, ஆல் சிஸ்டர்ஸ் விழுந்து விழுந்து சிரித்தார்கள். (காரணம் நானறியேன்கில்லர்ஜி)

தொடரும்.....

48 கருத்துகள்:

 1. அதெப்படி..ஆசுபத்தரியில் அமைதியாக இருக்கனும்முனு படம் போட்டுருக்க... ஆல் சிஸ்டர் எல்லாரும்.. கிழே விழுந்து விழுந்து சிரிக்கலாம்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அதெல்லாம் நமக்கு மட்டுமே....டாக்டர்களுக்கும், சிஸ்டர்களுக்கும் அல்ல...

   நீக்கு
 2. எல்லாத்தையும் செஞ்சு போட்டு நான்றியேன் பராபரமேன்னா சரியாப் போயிடுமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் ஐயாவுக்கு.... நாளை நடப்பதை யாரறிவார் நானும் தங்களைப் போலதான் காத்திருக்கிறேன்.

   நீக்கு
 3. அவர்கள் மூவரும் மன நோய் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவதால் தான் அந்த செவிலியர் ’விழுந்து விழுந்து’ சிரித்தாரோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருக்கலாம் ? நண்பரே நாமலும் பார்ப்போமே.... வேன் எங்கேதான் போகுதுனு.....

   நீக்கு
 4. வணக்கம்
  ஜி

  எப்படியெல்லாம் கற்பனை பன்னி எழுதுகின்றீர்கள் ஜீ... நீங்கள் கற்பனைக் கடல்... வாழ்த்துக்கள் த.ம 4
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ரூபன் வலையுலக கடலில் எவ்வளவோ பெரிய மீன்கள் இருக்கின்றன.... அதில் நானொரு அயிரை.... அவ்வளவே...

   நீக்கு
 5. பதில்கள்
  1. வருக நண்பரே நான் நடத்தவில்லை எல்லாம் வீதியின் வழியில் விதி நடத்துகிறது...

   நீக்கு
 6. ஹஹஹ் என்னத்த எடுக்கணுமோ அதை எடுத்துட்டாங்க இல்லை இல்லை அத நீங்க எடுக்க வைச்சுட்டீங்க....ம்ம்ம் எல்லாம் பிரதமர் ஆகப்போற முதல் ஸ்டெப்போ.....இப்பத்தான் புரியுது சைனாவின் புலம்பல்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன நடக்கப்போகுதுனு மேலேயுள்ள பகவான்ஜிக்குத்தான் தெரியும்...

   நீக்கு
  2. சத்தியமா நானறியேன் பராபரமே :)

   நீக்கு
  3. வாங்க ஜி உங்களுக்கே தெரியலையா ?

   நீக்கு
 7. நான் போட்ட கொக்கி தானா இது!...

  சரி.. போகட்டும்.. இதுவரைக்கும் நடந்ததெல்லாம் சரி..

  நானொரு அயிரை மீனு..ன்னு சொல்லிக்கிட்டு -
  கடைசியா - Emergency - போற வழிய படமா போட்டு இருக்கீயளே!?..

  Emergency - யாருக்கு?...
  வந்திருக்கிற மூணு பேருக்கா.. அல்லது டாக்டருக்கா..
  இன்னும் கொஞ்ச நேரத்தில புரிஞ்சிடும்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி எமர்ஜென்ஸி என்றாலே ஆ10தான் பொருத்திருந்து பார்ப்போம் ஜி யாருக்குனு.....

   நீக்கு
 8. பதில்கள்
  1. இது உகாண்டா நாட்டில் நடந்த உண்மைச் சம்பவம் ஜி

   நீக்கு
 9. இப்படியெல்லாம் எழுத தங்களால் மட்டும்தான் முடியும் நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே...

   நீக்கு
 10. ஊரிலே ஓடுகிற மழைவெள்ளம் போல உங்க கற்பனையும்
  ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறதே..:)

  ரசித்தேன் சகோதரரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே நலம்தானே... பார்த்து சிறிது காலமாகி விட்டதே... வருகைக்கு நன்றி

   நீக்கு
 11. அது சரி.... கு,க, பண்ணச் சொல்லிட்டாரா...
  ஹா... ஹா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கு.க. ஹா ஹா// ஆஹா அடுத்த பதிவுக்கு ‘’கரு’’ கிடைச்சுருச்சு....

   நீக்கு
 12. வணக்கம் கில்லர் ஜி !

  மூணு பேரையும் மெண்டல் ஹொஸ்பிட்டலுக்கு அனுப்பிட்டு காரணம் நான் அறியேனா ????? ஏம்பா இப்படிப் பண்றீங்களேப்பா

  அழகாய் தொடரும் நகைச்சுவை ஜி உங்களுக்கு நிகரா யாரும் இருக்க முடியாது வாழ்த்துக்கள் !
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சந்தேகம் இருந்தால் வேனை தொடர்ந்து செல்லுங்கள் தெரிந்து கொள்ளலாம் ஒரு மனிதரை மெண்டல் ஹோஸ்ப்பிட்டல் போறாங்கனு.... அப்படியெல்லாம் குந்தாங் குறையாக சொல்லாதீர்கள் மனதுக்கு கஷ்டமாக இருக்கின்றது அவர்களும் வாழப் பிறந்தவர்கள்தானே...
   கவிஞரின் வருகைக்கு நன்றி

   நீக்கு
  2. மன்னிக்கவும் கில்லர் ஜி ! இதன் முன் இடுகைகளை எல்லாம் பார்த்தேன் கருத்திடவில்லை நாளை இட்டுக் கொள்கிறேன் நன்றி

   நீக்கு
  3. கவிஞரே மன்னிப்பு எதற்க்கு ?

   நீக்கு
 13. கற்பனை என்று சொல்லமுடியாது உடலில் எடுக்க வேண்டியதை உருவி விட்டார்கள் போல)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே எதை எடுத்து விடப்போறாங்களோ....

   நீக்கு
 14. கற்பனைக்கு பஞ்சமே இல்லை போலவே அனைத்தும் கலகககலலகக்லகலக்கல் லலலலலல தான் சூப்பர் சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க இணைப்பின் அனைத்துக்கும் சென்று கருத்துரை தந்து கலகலப்பு ஊட்டியமைக்கு நன்றி

   நீக்கு
 15. எமர்சன்ஜி மூவருக்குமோ, டாக்டருக்குமோ அல்ல, எங்களுக்குத்தான் என்பதை உங்கள் பதிவு உண்டாக்கியது. வழக்கம்போல அருமையான தங்களின் வித்தியாசமான பாணி எங்களை கவர்ந்தது.
  தாங்கள் விடுத்த அழைப்பின் பேரில் கடவுளைக் காணமுயன்று நேரமின்றி இன்னும் தவிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவரின் கருத்துரைக்கு நன்றி அவசரமில்லை நேரம் கிடைக்கும் பொழுது கடவுளைக் கண்டு தங்களது ஆசைகளை விண்ணப்பியுங்கள்

   நீக்கு
 16. பாவம் மூணு எலிங்க மாட்டிக்கிச்சு! கேசவன் பூனைக்கிட்ட! ஹாஹாஹா!

  பதிலளிநீக்கு
 17. வழக்கம் போல கலக்கல்தான்!

  பதிலளிநீக்கு
 18. நல்ல கற்பனை! நல்ல சுவை!
  த ம 12

  பதிலளிநீக்கு
 19. அருமை..திருநெல்வேலி உரையாடல்...எனக்குப் பிடிக்கும்....நன்றி அங்கிள்

  பதிலளிநீக்கு
 20. வழமைபோல கலக்கியிருக்கீங்க. அடுத்த பகுதியை சீக்கிரம் வெளியிடுங்க. தொடரும்ன்னு போட்டிருக்கீங்க..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விரைவில் வரும் சகோ வருகைக்கு நன்றி

   நீக்கு