தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, நவம்பர் 20, 2015

மாயவரம், மாயழகு & மாயமுகி


From, Dubai
என் நெஞ்சம், நிறைந்தவளே என்னழகி
என் பெருமை, சேர்ப்பவளே பெண்ணழகி
மனம் மறக்க, மறுக்கிறதே மந்தாரபூவழகி

கண்ணுக்குள்ளே, நிற்பவளே கருவிழி கண்ணழகி
எண்ணமெல்லாம், நின்மீதே கயல்விழி கருப்பழகி
உறங்கும்போது, உன் நினைவே உருண்டைவிழி உலகழகி

என் மதி மயக்கி, விட்டாயடி மதியழகி
தினம் தினம், உன்னுடன் கனவில் நான் பழகி
விடுமுறை, கிடைத்ததும் விரைந்திடுவேன் விழியழகி

From, Mayavaram
கல்ஃபுகுள்ளே, வாழ்பவரே கருத்த கள்ளழகா 
உறங்க மறுக்கிறதே, உன் நினைவால் உருவழகா 
நித்தம் நித்தம், வாடுகிறேன் மீசை வடிவழகா 

மாயம் செய்தாயே, கண்ணுக்குள்ளே மாயழகா 
அல்லும் பகலும், நினைக்க வைத்தாய் என்னழகா 
ஆணொன்று, பெண்ணொன்று விட்டுச் சென்றாய் அழகழகா 

VISA முடியும், நேரத்திலே விடுமுறையா விழியழகா 
RENEWAL செய்து விடு, ரிங்டோன் மொழியழகா 
RETURN டிக்கெட், இல்லாமல் வருவது உனக்கழகா 

காணொளி

51 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

   முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...

   நீக்கு
  2. தமிழ்மணம் எங்கும் ஓட்டு போட விடமாட்டேங்குது...டிடி உங்கள் தகவலைச் சொல்லுகின்றோம் எல்லோருக்கும் முடிந்த அளவில். ஆனால் இங்கு காப்பி பேஸ்ட் செய்ய முடியவில்லை நோட்பண்ணிங்க் கொண்டோம்..

   நீக்கு
  3. மின் அஞ்சல் அனுப்பிவிட்டோம் டிடி

   நீக்கு
  4. வருக ஜி வரும் பொழுது சொல்வேன்

   நீக்கு
  5. அனுப்புகிறேன் ஜி தகவலுக்கு நன்றி

   நீக்கு
 2. ஜி! பாட்டுலேயும் அசத்தறீங்க! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் சுரேஷ் அவர்களின் வருகைக்கு நன்றி

   நீக்கு

 3. மாயவரம் மயிலாடுதுறையாக மாறி 34 ஆண்டுகள் ஆகியும் இரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகை இன்னும் பழைய பெயரை காண்பிக்கிறதே! இந்த ‘பாட்டுக்கு பாட்டு’ வந்து 34 ஆண்டுகள் ஆகிவிட்டதோ? ஆனால் Ringtone என்றெல்லாம் வருகிறதே. ஒரே குழப்பமாக இருக்கிறது. அதை தீருங்கள் திரு KILLERGEE அவர்களே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே மாயவரத்தின் பெயர்தான் மயிலாடுதுறை என்பது தாங்கள் சொல்லியே இன்று அறிந்தேன் முதற்க்கண் நன்றி

   இணையத்தில் கிடைத்த இந்த புகைப்படம் இராமநாதபுரம் இரயில் நிலையம் தலைப்பிற்காக நான்தான் 3 மொழிகளிலும் எழுதினேன்

   பதிவில் புகைப்படம் இடுவதிலும் கவனம் தேவையென்பதை தங்களால் இன்று படித்துக் கொண்டேன் அதற்க்கும் நன்றி நண்பரே...

   நீக்கு
 4. அடப்பாவி .....நீங்க விசா கிடைச்சு விரைந்தோடி வருகின்றேன் என்று சொல்ல....அவளோ நித்தம் நித்தம் வாடுகிறேன் மீசைவடிவழகானு சொல்லிப்புட்டு கடைசில ரிட்டெர்ன் டிக்கெட் இல்லாமல் வருவது உனக்கழகானு கேட்கிறாளே! இது எங்கோ உதைக்கின்றதே! ஹஹஹ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்படித்தான் இனிக்க இனிக்க பேசினாலும் காரியத்துல கண்ணாத்தான் இருக்கிறாள்

   நீக்கு
 5. துபாயும் மாயவரமும்(மயிலாடுதுறை) கலக்குதே...
  என்னதான் இருந்தாலும் மயிலாடுதுறை மயிலு ரொம்ப விவரந்தான்...
  விசாவை புதுப்பிச்சுட்டு ரிட்டன் டிக்கெட்டோட வரச்சொல்லுதே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எவன் பொண்டாட்டி எவனோட போனாலும் கெடைக்கு 2 ஆடு கதைதான்

   நீக்கு
 6. அன்புள்ள ஜி,

  அழகா...அழகி... பாடல் அழகு!

  தமிழ் மணம் ஆறு மனமே ஆறு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மணவையாரின் அழகிய பாடலுக்கும், வருகைக்கும் நன்றி

   நீக்கு
 7. அடுத்த முறை இந்தியா வரும்போது நேராக மயிலாடுதுறைதானா? (மாயவரம்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே மாயவரம் - மயிலாடுதுறை இதுவரை நான் வந்தது இல்லை இனிமேலாவது வரவேண்டும்.

   நீக்கு
 8. வணக்கம்
  ஜி
  சரியான ஆசைகள் வந்து மனதில் அலைமோதுகிறது...போல..ஹா..ஹா..ஹா... த.ம 8
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தொடர்பதிவில் நானும் சிக்கிவிட்டேன்...:
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரூபனின் வருகைக்கு நன்றி தங்களின் தளம் நேற்றே வந்து விட்டேன் அழைப்பிற்க்கு நன்றி

   நீக்கு
 9. தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...


  ஓட்டு போட்டால்....
  முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...

  ஓட்டு போடமுடியவில்லை நண்பரே....

  பதிலளிநீக்கு
 10. பாட்டு நன்றாக இருக்கிறது நண்பரே... மறக்காமல் இரக்க... காப்பி பண்ணத்தான் முடியவில்லை நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது பாட்டு என்று ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி நண்பா

   நீக்கு
 11. இதை கற்பனை என்று என்னால் நம்ப முடியலே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல கணவன்-மனைவிகளின் மனஓலம் என்று சொல்லலாம் ஜி

   நீக்கு
 12. தலைவரே.. நண்பர் ஜோக்களிக்கு ஓட்டு போட முடிகிறது... தங்களுக்கு ஓட்டு போட முடியவில்லையே.... ரகசியம் எதுவும் இருக்குமோ....???

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது எதிர்க்கட்சிகளின் சதி நண்பரே...

   நீக்கு
  2. எதிர்கட்சியின் சதியாக தெரியவில்லை நண்பரே ஆளும்கட்சியின் சதிதான் காரணம் என்று தோன்றுகிறது..

   நீக்கு
 13. பேசாம கோடம்பாக்கம் பக்கம் வந்துவிடுங்கள். உங்கள் பாடல்களிலாவது பாடல்களின் தரம் உயரட்டும்.
  த ம 8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வரலாம் நண்பரே எனக்கு தமிழில் மட்டுமே பாட்டு எழுத வரும் தமிங்கிலீஷில் எழுத தெரியாதே...

   நீக்கு
 14. தமிழ்மணத்தில் வாக்களிக்க முடியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பரவாயில்லை நண்பரே அடுத்த பதிவில் மொத்தமாக குத்துங்கள்

   நீக்கு
 15. மாய அழகு மாயம் ஆகாது!
  மனதை தொட்டது!
  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 16. தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

  முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனுப்பி விட்டேன் நண்பரே தகவலுக்கு நன்றி

   நீக்கு
 17. No Such Post--- என்று வருகிறது.. நண்பரே.........

  பதிலளிநீக்கு
 18. எனக்கும் டவுட்டு டவுட்டா வருது. மிகவும் நன்றாக எழுதியிருக்கீங்க அண்ணா ஜி. காணொளி பாட்டு கேட்டு கனநாளாச்சு. அப்போ ஹிட்டான பாடல்.

  பதிலளிநீக்கு
 19. எசப்பாட்டு அருமை. கடைசி வரிகளில் ரிடர்ன் டிக்கெட்டுடன் வரச் சொன்னது சோகம்! விருப்பமில்லையெனிலும் அனுப்ப வேண்டிய கட்டாயம் பல குடும்பங்களில்..... சம்பாதிக்க வேண்டுமே...

  பதிலளிநீக்கு
 20. நல்ல ரசனையான பாடல் தான்!ரிடர்ன் டிக்கெட் எடுத்துட்டு வரச் சொன்னது தான் கொஞ்சம் யோசனையா இருக்கு! :( என்ன இருந்தாலும் பணம் முக்கியம் என்னும் எண்ணம் போல!

  பதிலளிநீக்கு