தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், நவம்பர் 26, 2015

German Toiletஒருமுறை, நான் GERMANY யில் ஊர் சுற்றிக்கொண்டு திரியும் பொழுது RAILWAY STATIONனில் TOILET போவதற்காக MACHINEனில் 1.00 EURO ()
போட்டு TICKET எடுத்தேன், URINE PASS செய்யத்தான் போனேன், முடிந்தவுடன் திரும்பும்போது TICKETடை படித்துப் பார்த்தேன், LETTIN போகவில்லை என்றால் TICKETடை வேறு MACHINEனில், கொடுக்கும்போது 0.50 CENT () RETURN வந்து DOOR திறந்து விடும், இது எப்படியென்றால் அதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்பி விட்டால் URINE போயிருக்கிறான், தாமதமானால்... LETTIN போயிருக்கிறான் என்று அர்த்தம்.

(அதாவது Abu Dhabi Airportடில் Car Parking System போல, 0.15 Min க்குள் திரும்பி விட்டால் Gate திறக்கும் இல்லா விட்டால் Dhs கட்டவேண்டும்)

நான் URINEதானே, போனேன் ஏன்  பாக்கி வரவில்லை ? நானும் MACHINEனை உருட்டிப் பார்த்தேன், புரட்டிப் பார்த்தேன், என்ன சொல்றே நீ ? என்று மிரட்டிப் பார்த்தேன் அசையவில்லை நான் MACHINEனிடம் பேசுவதைக் கண்ட  ஒரு ஜெர்மனியன் என்னை மேலிருந்து கீழாக ஒரு மாதிரி பார்த்தான் ஆஹா இவன் அப்படி நினைக்கின்றான் போலயே ம்ஹூம் பாக்கி வரும் பாக்கியம் நமக்கு எப்போதுமே இல்லை, ச்சே என்ன  MACHINE இது... தமிழ்நாட்டு அரசியல்வாதி போல கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டாமா ? மனதுக்குள் ஆய் வார்த்தைகளால் திட்டி விட்டு பிரைவேட்டாக இருந்தாலும் சரி ஆடம்பர ஹோட்டலாக இருந்தாலும் சரி கழுவ பைப்பு வைக்கிறாங்களா ? ச்சே தண்ணீருக்கு நான் பட்டபாடு அதைப்பற்றி எழுதினால் நான்கு பதிவு வந்துடும் அப்புறம் நீங்க பதிவு நாறுதுனு கருத்துரை போடுவீங்க வேண்டாம் கேட்டால் ட்ஷ்யூ பேப்பர் இருக்குதுல அப்படிங்கிறான் கொங்காப்பயலுக... 

யோசனையோடு TRAINனில், பிரயாணத்தை தொடரும் போதுதான் ஞாபகம் வந்தது, நான் URINE PASS செய்து விட்டு திரும்பியபோது கண்ணாடியில் சுமார் 1 ¾ மணிநேரம் எனது மீசையை சீவிக்கொண்டு நின்று விட்டேன் ஒருவேளை அதனால்தான் பாக்கி வரவில்லையோ....

  அபுதாபி அனஸ்

CHIVAS REGAL சிவசம்போ- 

ஹும், காசியில போயும், ஓசி டீ குடிக்கிற பழக்கம் போகலையா ?

காணொளி

67 கருத்துகள்:

 1. 'அவுட் டோரில்' நீங்கள் எடுத்து இருக்கும் காணொளியை கண்டு ரசித்தேன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஜி முதலில் வந்து ரசித்தமைக்கு நன்றி

   நீக்கு

 2. இப்போதாவது ‘காலம் பொன்னானது (யூரோவானது!)’ என புரிந்துகொண்டீர்களா? காணொளியில் ‘உல்லாசப்பறவைகள்’ படத்தில் வந்த பாடலை இரசித்துக்கொண்டே பிராங்க்பர்ட் நகரத்தின் இரயில்வே நிலையத்தையும் இரசித்தேன். கேமரா உங்கள் பக்கம் வரும்போது ஏன் முகத்தை இறுக்கமாகவே வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அது எனது கைப்பசியில் எடுத்த பகுதியாக இருக்கலாம் தூரமாக கையை நீட்டும் பொழுது கோணம் மாறியிருக்கலாம் நன்றி

   நீக்கு
 3. "German Toilet"
  உடல் உபாதைகள் நீங்க மருந்தில்லா மருத்துவம் உண்டா நண்பா?
  உம்மிடம் கைவசம் உண்டு போல் தெரிகிறதே?
  உருண்டாலும், புரண்டாலும் கில்லர்ஜி மீசையில் ஒட்டுவதுதானே ஒட்டும்.
  சில்லரை வேண்டி காசு இயந்திரத்தை இப்படியா உருட்டுவது! மிரட்டுவது!
  ஜெகஜால ஜெர்மெனிக்கு ஜே!
  காசு பெட்டி காணவில்லை!
  மன்னிக்கவும்... த ம ஒட்டுபெட்டியைக் காணவில்லை!
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏன் நண்பா எங்கே போய் உருளச்சொல்றீங்க....
   வருகைக்கு நன்றி நண்பா...

   நீக்கு
 4. பரவாயில்லை பாஸ் விடுங்க உங்க மீசைக்காக 50 சென்ட் கொடுத்திருக்கீங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே அப்படித்தான் மனசை தேற்றிக் கொள்ளவேண்டும்.

   நீக்கு
 5. தமிழ்நாட்டு அரசியல்வாதி போல கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டாமா ? சிரிக்க வைக்கும் போதே..ஒரு ஆப்பா?
  அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே சந்தர்ப்பம் வரும் பொழுதே தூற்றி விடவேண்டுமே....

   நீக்கு
 6. வணக்கம் ஜி !

  ஹா ஹா ஹா மீசை முறுக்கிப் பார்க்கவும் பணம் கட்டனும் போல இருக்கே யூரின் போனமா வந்தமான்னு இல்லாமா ஐயா மீசை வேறு முறுக்கிப் பார்த்தாராம் ஐயோ ஐயோ அசத்தல் ஜி
  தொடர வாழ்த்துக்கள்
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே இப்படித்தான் என்னை எல்லா இடத்திலும் ஏமாற்றி விடுகின்றார்கள்.

   நீக்கு
 7. ஒ..ன்...றே...மு...க்...கா...ல்... மணி நேரமா!!!
  அந்த இயந்திரம் உமக்குத் தண்டம் போடாமல் விட்டதே! ;-)

  பதிலளிநீக்கு
 8. அங்கெல்லாம் டாய்லெட்டை ஒப்பனை அறை என்பார்களோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா மேலும் அங்கு வீடுகளில் இருக்கும் டாய்லெட்களுக்கு தாழ்ப்பாள் கிடையாது நான் மிகவும் கஷ்டப்பட்டேன்

   நீக்கு
 9. 17.10.32012 மான்ஹைம் ரயில்வே ஸ்டேனை 11.06 நிமிடத்தில் கடந்தீர்கள் எனும் விடயம் மிகத்தெளிவாக புரிந்து போச்சே!

  ரெயில்வே ஸ்டேசன் போன் ற பொது இடங்களில்ல் டாய்லெட் சிறு பிள்ளைகளுக்கு இலவசம் தான். ஒருவகையில் நாங்கள் இந்த ஒரு ஈரோ எனும் கணக்கினை வரவேற்கின்றோம். ஏனெனில் கொடுக்கும் பணத்துக்கு ஏற்க சுத்தமாகவும் இருக்கும். உடனடி துப்பரவுப்பணியாளர் அவ்விடங்களை சுத்தம் செய்து கொண்டிருப்பார்கள்.

  இதுவே ஹைவேக்களில் வாகனங்களில் செல்லும் போது டாய் லெட் பாவிக்க ஒரு ஈரோ போட்டால் ஒரு துண்டு வரும். அங்கே இருக்கும் ரெஸ்டோடண்டில் ஏதேனும் வாங்கும் போது அந்த துண்டினை கொடுத்தால் வாங்கும் பொருளுக்குரிய தொகையிலிருந்து அந்த ஒரு ஈரோவை திருப்பி கொள்வார்கள்.

  அதாவது அங்கே காப்பி குடித்தாலோ ஏதேனும்வாங்கினாலே இலவசமாக டாய்லட் பயன் படுத்தலாம். பொருள் வாங்காமல் டாயலட் பயன் படுத்துவோருக்கு மட்டும் தான் ஒரு ஈரோ அறவிடுவார்கள்.

  எப்படியோ ஜேர்மன் வந்தீர்கள் எனும் மாபெரும் இரகசியம் பரமரகசியமாகி விட்டது ! அடுத்து எப்போது வருவீர்கள் சார்?

  அந்த பிராங்க்போட் ஐஸ் ரயில் எங்கள் ஊர் வரை வரும். அதன் தொடர் பயணத்தில் எங்கள் ஊர் தான் சுவிஸில் கடைசி எல்லை.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு 1-ம் தெரியாததால நான் நிறைய இடத்தில் ஏமாந்துட்டேன்.
   நான் லிங்கென்-செங்கென் வழியாக ஸ்வில் ஐஸ்ஸில் ஷாப்பன் ஹௌவ்ஸ் வந்தேன் இருவியில் ஃபோட்டில் போய் மலைமுகலுக்கு போனேன்.
   வருகைக்கு நன்றி அடுத்து வர யாராவது ஓசி விசா அனுப்பினால் வரலாம் என்பது எனது திட்டம்.

   நீக்கு
  2. ஹாப்பன் ஹௌஸ் இல்லை சார்..ஷப் ஹௌசன்.. ஜேர்மனிய சுவிஸ் எல்லைகளில் ஒரிடம்.

   பிராங்க்போட் ரூ இன்ரர்லாகன் ரெயில் வரும் பாதையின் சுவிஸுக்குள் வந்ததும் முதல் தரிப்பிடம்.. அவ்விடமிருந்து 250 கிலோ மீற்றர் அதே ஐஸ் ரயில் எங்கள் ஊர் வரைக்கும் வரும்.. இரண்டரை மணி நேர ரயில் பயணம்..வண்டி மாற தேவையில்லை. சுவிஸில் மிக பிரபல்யமான ஐரோப்பாவிலேயே பார்க்க வேண்டிய இடம் நாங்கள் இருக்குமிடம் தான். ரோப் ஆவ் ஈரோப்பா என சொல்லும் பனி மலைச்சிகரம் இருக்கிமிடம்.

   செங்கன் விசாவில் நீங்கள் ஐரோப்பாவில் லண்டன் தவிர்த்து ஏனைய இடங்களுக்கு செல்லலாம்.. அத்தோடு ஒரு முறை செங்கன் விசா எடுத்து விட்டால் இன்னொரு முறை எடுப்பது கடினமாயும் இருக்காது இரர்லாகன் வந்தே செல்ல வேண்டும்

   சுவிஸ் உல்லாச பயணிகளுக்கு நிரம்ப சலுகைகள் கொடுக்கின்றது. ஹோட்டல்களில் தங்கும் போது இலவச பேருந்து பயண பாஸ் கொடுக்கின்றார்கள். அதே போல் ரயில் டிக்கட் ஏயார் போட்டிலேயே நிற்கும் நாட்களுக்கு என ரூடிஸ்ட் டிக்கட் வாங்கி விட்டால் செலவும் குறைவு . .

   ஓரிடத்தில் தங்கி கொண்டு சுவிஸுக்குள் எங்கே வேண்டுனாமாலும் போய் வரலாம். ஆககூடிய பயண நேரம் மூன்று மணித்தியாலங்கள் தான்.

   நீக்கு
  3. இப்ப பெயரை மாற்றி விட்டார்களா ? சொல்லவே இல்லை
   நானும் செங்கன் விசாவில்தான் வந்தேன் அபுதாபிலிருந்து விசா எடுப்பதற்க்குள் எனக்கு வேண்டாமோ என்றாகி விட்டது அவ்வளவு இண்டர்வியூ வைத்து கேள்விகள் கேட்கின்றார்கள் ஆனால் இனி எனக்கு அப்ளை செய்வது சுலபம்

   ஸ்விஸ்சில் ஒருநாள் மட்டுமே இருந்தேன் பணம் எடுப்பதற்க்காக பேங்க் வந்தேன் அதனால் சுற்றிப்பார்க்க அதிக இடத்துக்கு போகவில்லை

   இத்தாலி போவதற்க்கு நேரமில்லை ஆகவே திரும்பி விட்டேன்
   தங்களது கருத்துரையில் நிறைய குறிப்பு கிடைத்தது நன்றி

   ஸ்விஸ் பயண விபரம் 2014 செப்படம்பர் மாதம் க்ளிக்கி பார்க்கலாம்
   தலைப்பு – Sweet Day in SWITZERLAND.

   நீக்கு
  4. Schaffhausen தான் நீங்கள் வந்ததாக சொன்ன இடம். ஆங்கிலத்தில் உச்சரித்தாலும் கூட ஸ்கஃப் ஹௌசென் (Schaffhausen) ஹார்ப் ஹௌசன் எனத்தானே வரும். ஹாப்பன் ஹௌஸ் இல்லையே...

   அங்கே தான் Waterfall இருக்கின்றது. Rhine Falls near Schaffhausen

   சுவிஸுக்கு நேரடியாக விசா கடினம் தான். இத்தாலில் போன்ற நாடுகளுக்கு ரூடிஸ்ட் விசா அப்ளை செய்து வர வேண்டும்.


   சுவிஸிலிருந்து ஜேர்மன், இத்தாலி, பிரான்ஸ் என அனைத்து இடங்களுக்கும் ரயிலிலேயே போகலாம்.

   நீக்கு
  5. எனது ஸ்விஸ் பதிவு பாருங்கள் எல்லா விபரமும் எழுதி உள்ளேன்

   நீக்கு
 10. அருமையான விவரணம் கில்லர்ஜி. இருந்தாலும் டாய்லெட் மெஷின் உங்களைப் பழிவாங்கிவிட்டதே....ஹஹஹ்

  கீதா: உங்க மீசைதான் பல இடங்கள்ல உங்கள பழிவாங்குது ம்ம்ம் ஒழுங்க டாய்லெட் போனமா வந்தமானு இல்லாம...

  ஜெர்மனில டாய்லெட் சுத்தமா இருக்கும் ஆனால் பல இடங்கள்ல கதவே இருக்காது...எங்க உறவினர் அங்கு இருந்திருக்கிறார் சில வருடங்களுக்கு முன். ஹைடெல்பெர்க் யுனிவெர்சிட்டில ப்ராஜெக்ட்...ஹைடெல்பெர்க்ல தான் இருந்தாங்க. அவங்க வீட்டுல அந்தப் பிரச்சனை இல்லை...
  உங்க மீசையினால பாருங்க அந்தப் பொண்ணு கஷ்டப்படுது....இதுல தோளில் சாய்ந்தாட வந்தேன்னு பாட்டு வேற அஹ்ஹாஹ்ஹ...பிச்சுப்புடுவேன் பிச்சு ஒழுங்கா மீசைய எடுத்துட்டு வாயானு சொல்லிச்சோ...
  ஜெர்மனிக்கு வந்தேன் மலரே
  உன் தோளில் சாய்ந்திடவே
  ஹஹஹ் இந்த வயசிலயும் இதுக்கொண்ணும் குறைச்சலில்லை...ஹஹஹ் எஞ்சாய் ஜி எஞ்சாய்...2012 விசிட் இல்லையா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க.. வாங்க.. இந்த மீசைகளை வைத்துக்கொண்டு பராமரிப்பவர்களுக்கு தெரியும் ஆம் ஜெர்மனி, மற்றும் ஃப்ரான்ஸிலும் கதவுகளுக்கு தாழ்ப்பாள் கிடையாது

   நான் பாட்டு போடும் போது அந்தப் பெண்தான் தோள்மீது சாந்ந்தது நான் என்ன செய்யமுடியும் ஒருவேளை தமிழ்ப்பாடல் அர்த்தம் தெரிந்தவளாக இருக்கலாம் வருகைக்கு நன்றி

   நீக்கு
  2. கதவு இல்லையா?

   புதிய தகவலாக இருக்கின்றதே! நீங்கள் ஆண்கள் டாய்லட் குறித்து சொல்கின்றீர்களோ என்னமோ? அங்கும் குறைந்தது இரண்டு டாய்லட்கள் கதவுகளோடு இருக்குமே?

   நீக்கு
  3. கதவுகள் இல்லையென்று நான் சொல்லவில்லை
   தாழ்ப்பாள் இல்லாத கதவுகள்தான் நான் பார்த்தது வரையில்

   நீக்கு
  4. சான்சே இல்லை. டாய்லட்டில் ஒருவர் உள் நுழைந்ததும் சிவப்பு பட்டனும் ஆள் இல்லையெனில் பச்சையும் தெரியும் படி திருகும் தாள் வைத்திருப்பார்களே!

   நீக்கு
  5. எனது தம்பி வீட்டில் இல்லை நண்பரின் வீட்டில் இல்லை ஃப்ரான்ஸிலும் இல்லை.

   நீக்கு
  6. நிஜமாக இது எனக்கு புதிய தகவல். நான் இங்கே வந்து 25 வருடம். எமக்கு ஜேர்மன், இத்தாலி, பிரான்ஸ் வெறும் இரண்டு மணி நேர கார் பயணம் தான். அடிக்கடி நினைத்த நேரம் கிளம்புவோம். ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு நாடு நிச்சயம் பயணம் செய்வோம். சுவிஸ், பிரான்ஸ் ஸ்பெயின்,, அப்படியே போர்த்துக்கல் என 24 மணி நேரம் தொடர்ந்தும் எமது வண்டியில் பயணம் செய்திருக்கின்றோம். ஆனால் கதவில் தாழ்ப்பாள் இல்லாத டாய்லட் கண்டதே இல்லை.

   நீக்கு
  7. நான் உபயோகப்படுத்தியது வரையில் பொது இடத்தில் இருந்தது வீட்டிலும், ஹோட்டலிலும் இல்லை.

   நீக்கு
 11. அப்புறமாவது தங்களுக்கு ஞாபகம் வந்ததே சகோ,,,
  பாக்கி வரும் என்று காத்திருக்காமல்,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காத்திருந்தால் மிஷின் வாடகை கேட்ருமே....

   நீக்கு
 12. சில பேருக்கு ப்ராஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறுநீர் கழிக்கவே தாமதமாகுமே... அப்போது என்ன செய்ய!

  எனக்குக் காணொளி வேலை செய்ய .மாட்டேன் என்கிறது. என் கணினியில் ஏதோ கோளாறு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுக்கு கம்பெனி பொருப்பல்ல... போச்சு ஒரு யூரோ...
   காணொளி பிறகு பாருங்கள் நண்பரே நிறைய வேலை செய்திருக்கிறேன் நன்றி

   நீக்கு
 13. காசிக்கு போனாலும் ஒசி பழக்கம் அவ்வளவு சீக்கிரத்தில் எப்படி போகும் ...ரத்தத்தோடு ஊறிப் (ஓசி) போனது நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமா நண்பரே எல்லாம் பயக்க வயக்கம்தான்...

   நீக்கு
 14. உங்கள் ஜெர்மனி அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே...

   நீக்கு
 15. உங்களது அனுபவம் எங்களுக்குப் பாடம். நாங்கள் செல்லும்போது உதவியாக இருக்கும். மீசையை டிரிம் செய்து சிக்கலில் மாட்டமாட்டோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா முனைவரின் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 16. இவ்வளவு நடந்திருக்கு..
  மழை வெள்ளத்தால் ஒன்றும் தெரியாமல் போய் விட்டது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி வருகைக்கு நன்றி மழை தஞ்சாவூரிலா ?

   நீக்கு
  2. இல்லை..இல்லை..
   மழை பெய்தது வெளியூர்களில்!...

   நீக்கு
 17. "அனுபவம்" புதுமை, உங்களுக்கு நகைச்சுவை சரளமாக வருகிறது நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் கருத்துரை இனிக்கின்றது நன்றி

   நீக்கு
 18. அன்புள்ள ஜி,

  மிரட்டும் காணொளி கண்டு மகிழ்தேன்...வியந்தேன்.

  த.ம.11

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மணவையாரே... ஜெர்மன் வழி தெரிந்ததா ? வருகைக்கு நன்றி

   நீக்கு
 19. மீசைக்குத்தானே காசு போச்சு... விடுங்க அண்ணா...
  அந்த வீடியோ கலக்கல்... அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நண்பரே பில்லியன் மதிப்பு உள்ள மீசைக்கு 0.50 சென்ட் பெருசு இல்லைதான் வருகைக்கு நன்றி

   நீக்கு
 20. அட்டகாசம்
  பின்னணி இசையுடன் காணொளி
  ஒரு திரைப்படம் பார்க்கிற உணர்வைத் தந்தது
  அடுத்த காணொளியை எதிர்பார்த்து...

  பதிலளிநீக்கு
 21. அனுபவம் புதுமை
  காணொளி அருமை
  நன்றி நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
 22. ஜெர்மனியில் உச்சா போன அனுபவம் நல்ல நகைச்சுவையாக இருந்தது. சிறுநீரை நினைவு படுத்தியதால் இன்று சிறுநீர் சம்பந்தமான ஒரு பதிவை போடுகிறேன். தவறாம வந்துடுங்க!
  த ம 14

  பதிலளிநீக்கு
 23. ஒரு கருத்தில் நீங்க // ஜேர்மனியிலும்,பிரான்ஸிலும் கதவுகளுக்கு தாழ்பாள் கிடையாதுன்னு எழுதியிருக்கிறீங்க.// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். என் வன்மையான கண்டனங்கள். இதை வாசிக்கிறவங்க இந்நாடுகளை தப்பா நினைக்கபோறாங்க. ஒரு வீட்டில இல்லையென்றால் (இப்படியிருக்க சான்ஸே இல்லை) ஒட்டுமொத்தமா இல்லையென்றாகிவிடும். அக்கருத்து அப்படித்தான் தொனிக்கிறது.
  தாழ்பாள் இல்லையென்பது. அதுவும் ஹோட்டலில் வீடுகளில். ஏற்கனவே நிறைய தகவல் வந்தாச்சு உங்களுக்கு. அத்தனையும் நடைமுறையில் இருப்பவை இங்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ நான் போன சில வீடுகளில் உள்ளதை சொன்னேன் பொது இடங்களில் இருக்கின்றதே... அதையும் சொல்லியிருக்கிறேன்

   நீக்கு
 24. மேக்கப் கட்டணம் 50 செண்ட்!
  நியாயம்தான்!

  பதிலளிநீக்கு
 25. ஹாஹா, மேக்கப் கட்டணம் ஜெர்மனியில் ரொம்பக் குறைச்சல்! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தண்டம் கட்டி விட்டு வருகிறேன் மேக்கப் கட்டணமா ?

   நீக்கு