தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், நவம்பர் 09, 2015

தீபாவளிக்கு ஷேஃப்டி முக்கியம்


உங்க மாப்பிள்ளை வெடிகுண்டு கவசஉடை வாங்கி வச்சாத்தான் தலைத்தீபாவளிக்கு வருவேனு சொல்லிட்டாரா... ஏன் ?
கம்பி மத்தாப்பு புடிக்கும்போது அவருக்கு ஷேஃப்டி வேணுமாம்.
* * * * * 01 * * * * *

ஏண்டி காமாட்சி உங்க வீட்டு புது மாப்பிள்ளை தலைத் தீபாவளிக்கு சுத்தியலோடு வந்து இறங்குறாரே ஏன் ?
என் மகள் எங்க அம்மா மைசூர் பாகு நல்ல ஸ்ட்ராங்கா செய்வாங்கனு சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டாரோ என்னவோ ?
* * * * * 02 * * * * *

என்னங்க, மாப்பிள்ளை தலைத் தீபாவளிக்கு வர நம்மளோட சின்னப் பொண்ணை கட்டி வச்சாத்தான் வருவேனு சொன்னாரா... ஏன் ?
உன் பேச்சைக்கேட்டு தலைத் தீபாவளிக்கு சீர் செய்யும்போது ஒட்டிக்கோ கட்டிக்கோ வேஷ்டி எடுத்து வச்சேன் ஒட்டிக்கோ வேஷ்டி இங்கே கட்டிக்கோ கொழுந்தியாள் எங்கே அப்படினு கேட்கிறாரு...?
* * * * * 03 * * * * *

ஏண்டி தீபா உன் ஆசைப்படியே... இந்த வருஷம் தீபாவளிக்கு உங்க அம்மா வீட்டுக்குப் போவோமா ?
ஏன் தீபாவளி கொண்டாட வழியில்லாமல் இதுல என் ஆசை வேறயா ? மரியாதையா... போனஸ் வந்ததும் பணம் என் கைக்கு வந்தாகணும் இல்லை உங்களுக்கு தீபாவளி கொண்டாடிவேன் ஞாபகம் இருக்கட்டும்
* * * * * 04 * * * * *

விடிஞ்சா தீபாவளி ஜவுளிக்கடைக்கு புடவை எடுக்க வந்துட்டு நீங்க மட்டும் வீட்டுக்கு போறேனு சொல்றீங்களே... ஏன் ?
போன வருஷம் இப்படித்தான் புடவை எடுக்க வந்தே நான் ஒரு ஓரமா உட்கார்ந்தவன் தூங்கிட்டேன் பொம்மைனு நினைச்சு கடையை அடைச்சுட்டுப் போயிட்டாங்கே தீபாவளி முழுவதும் கடைக்குள்ளேதானே கிடந்தேன் அதான் அட்வான்ஸா நான் முன்னாடியே வீட்டுக்குப் போறேன்.
* * * * * 05 * * * * *

நீங்க என்ன கம்பெனிக்கே வந்து சீனி வெடிக்கு திரி மட்டும் ஆறு மீட்டருல வச்சு கேட்குறீங்க ?
தலைத்தீபாவளிக்கு வீட்டுக்கு வர்ற மாப்பிள்ளை இந்த மாதிரி வெடி வாங்குனாத்தான் வருவேனு சொல்றாரு... நான் என்ன செய்யட்டும் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை தயார் செய்து கொடுங்க.
* * * * * 06 * * * * *

என்ன தீபாவளிக்கு மாப்பிள்ளையை வரவேண்டாம்னு சொல்லிட்டிங்களா ?
ஆமா போன தீபாவளிக்கு வந்தவரு... போன வாரம்தானே திரும்ப போனாரு.
* * * * * 07 * * * * *

ஏண்டி கலையரசி தீபாவளியும், அதுவுமா உன்னோட மருமகன் எதுக்கு  மாமனாரை துறத்திக்கிட்டு ஓடுறாரு...?
பொட்டு வெடி போடுங்க மாப்பிள்ளைனு சொன்னதுக்கு மாமனாரு பொட்டுலதான் அடிப்பேனு சுத்தியலோட அடம் பிடிக்கிறாரு...
* * * * * 08 * * * * *

ஏங்க, கொண்டு வந்த போனஸ் பணம் எனக்கும், மகனுக்கும் சரியாப்போச்சே உங்களுக்கு ட்ரெஸ் எடுக்க பணம் ?
எல்லா வருஷமும் இதுதானே நடக்குது வீட்டுல அடுப்படியில புடிதுண்டு இருக்குல துவைச்சு கட்டிக்கிறேன் நட வீட்டுக்கு ஹும் இந்த தீபாவளிக்கும் கோவணம்தான்.
* * * * * 09 * * * * *

ஏங்க, தீபாவளி புடவை எனக்கு மேட்சா அழகா இருக்கா பார்த்துச் சொல்லுங்க...?
புடவை அழகாத்தான் இருக்கு.
* * * * * 10 * * * * *

 காணொளி

எமது பதிவையும் தொடரும் அனைத்து உள்ளங்களுக்கும் எமது மனம் நிறைந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்
என்றும் அன்புடன்
- தேவகோட்டை கில்ர்ஜி அபுதாபி -

64 கருத்துகள்:

 1. ஏனுங்க, தீபாவளிக்கு ஊருக்குப் போகலீங்களா?
  பிளேன்ல வித்தவுட்ல போகமுடியாதே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏனுங்க தீபாவளிக்கு என்ற வீட்டுல வரச்சொல்லலீங்களே...
   முனைவர் ஐயாவின் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 2. அனைத்தும் தீபாவளி சிரிப்பு சர வெடிகள். பகிர்விற்கு நன்றி.

  எனது வலைப்பூவில் பயனுள்ள பதிவொன்று:


  கம்ப்யூட்டர் வேகம் 500 மடங்கு அதிகரிக்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் பழனி அவர்களின் கருத்துரைக்கு நன்றி தங்களது தளம் வருவேன் தங்களுக்கு கருத்துரை கொடுப்பது மிகவும் கடினமாக இருக்கின்றதே... ஏன் ?

   நீக்கு
 3. திபாவளி வாழ்த்துக்கள் நண்பரே
  தம 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்

   நீக்கு
 4. ஆமா ஆமா ஷேஃப்டி முக்கியம் தான் சகோ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ உண்மைதான் ஷேஃப்டி முக்கியமே....

   நீக்கு
 5. தீபாவளி ‘சிறப்பு வெடி’ச் சிரிப்புகளுக்கு நன்றி! தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் கருத்துக்கு நன்றி தங்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துகள்

   நீக்கு
 6. அருமையான தீபாவளி
  சரவெடிகள்
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிஞரின் வருகைக்கு நன்றி தங்களுக்கு எமது தீபாவளி வாழ்த்துகள்.

   நீக்கு
 7. அன்புள்ள ஜி,

  தீபாவளி சோக்குகள் அனைத்தையும் இரசித்துப் படித்தேன். காணொளி கண்டு சிரித்து மகிழ்ந்தேன். இதுக்குதான் நா வெடியெல்லாம் வெடிப்பதில்லை... பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓட முடியாதில்ல...!

  ‘தீபாவளி வாழ்த்துகள்’

  த.ம.4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மணவையாரே தாங்கள் முன்னெச்சரிக்கைவாதி என்பது நான் அறிந்ததே... வருகைக்கு நன்றி தீபாவளி வாழ்த்துகள்

   நீக்கு
 8. பத்திக்கிச்சு நண்பா
  பட்டாசு சிரிப்பு வெடி
  பாது காப்பு அவசியமே!
  தீபாவளி இனிப்பு அருமை!
  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாரீஸ் கோபுரமே வருக... தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், இனிய நண்பர் கருத்து கருப்பசாமிக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

   நீக்கு
 9. காணொளியில் பட்டாஸ் பற்ற வைப்பவரின் பையன்தான் மாப்பிள்ளையா :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமா ஜி நானும் அப்படித்தான் நினைக்கிறேன் தீபாவளி வாழ்த்துகள் ஜி

   நீக்கு
 10. தீபாவளி சிரிப்பு வெடிகள் அனைத்தும் சூப்பர் சகோ. தங்களுக்கு இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் !!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ நன்றி தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்

   நீக்கு
 11. தீபாவளி வெடிக்கேற்ற வடி சிரிப்பு!
  த ம 8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே சிரித்து வெடியுங்கள் தீபாவளி வாழ்த்துகள்

   நீக்கு
 12. ஆனந்தம் கொண்டாடும் தீபாவளி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்

   நீக்கு
 13. தீபாவளி நல
  வாழ்த்துக்கள்.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க தாத்தா தங்களுக்கும், பாட்டிக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

   நீக்கு
 14. வணக்கம்
  ஜி

  பதிவை அசத்தி விட்டீங்கள் ஜி.இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். த.ம9வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரூபனின் வருகைக்கு நன்றி தீபாவளி வாழ்த்துகள்.

   நீக்கு
 15. கலகலக்கும் நகைச்சுவையுடன் சந்தோஷத் தீபாவளி..

  அன்பின் கில்லர் ஜி அவர்களுக்கும் அன்புச் செல்வன் தமிழ்வாணன் மற்றும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் - இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி தங்களின் வருகைக்கு நன்றி தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், தீபாவளி வாழ்த்துகள்.

   நீக்கு
 16. தீபாவளி நகைச்சுவை சரவெடிகள். ரசித்தேன். எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களுக்கும், தங்களது குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

   நீக்கு
 17. என்ன கில்லர்ஜி உங்கள் ஊர்ல எல்லாம் இப்படி வெடிக்க விடுறாங்களா....ஹஹ்

  சரி மகனுடன் தீபாவளி கொண்டாடும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்க ஊருக்காரங்கே... வாயில் பீடி பத்தவைப்பது போல ஊதி எரிவார்கள்.
   எனக்கு அலுவலகம் செல்லவேண்டும் மகனுக்கு இன்று தீபாவளி என்பது தெரியாமல் போய் விடும் ஆதலால் துபாய் மகள் வீட்டுக்கு நேற்றே அனுப்பி விட்டேன் தீபாவளி வாழ்த்துகள்

   நீக்கு
 18. அசத்தல்...

  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஜி தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்

   நீக்கு
 19. அடடா...தீபாவளின்னாலே. வெடிக்கு பயந்துபோயிவிழுந்தடித்துஒடுவது.....இம்புட்டும்...இருக்கா....!!!! பேஷ் பேஷ் ரெம்ப ரெம்ப நல்லா இருக்கு..தீபாவளி நகைச்சுவை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேவையில்லாத வேலைதானோ..... வருகைக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 20. வணக்கம் சகோதரரே.

  தங்களுக்கே உரிய பாணியில் தீபாவளி நகைச்சுவைகள் ஒவ்வொன்றும் அருமை. ரசித்துப் படித்தேன். சென்ற பதிவில் தங்கள் மகன் அவ்விடம் வந்திருப்பதாக எழுதியிருந்தீர்கள். மகனுடன் இவ்வருட தீபாவளி மனம் நிறைந்து சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  என் தளம் வந்து கருத்திட்டு வாழ்த்துரைத்த தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.
  தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி வீட்டில் திருமண வைபோக வேலைகள் நடந்து கொண்டிருக்கும் இந்த தருணத்திலும் எனது பதிவுக்கு வந்து கருத்துரை தந்தமைக்கு மீண்டும் நன்றி

   நீக்கு
 21. வணக்கம் கில்லர் ஜி !

  அத்தனையும் அருமைதான் ஆனாலும் தீபாவளிக்கு மாப்பிள்ளையை அழைக்காதது தப்புத்தான் ஹா ஹா ஹா ஆமா இந்த காமாட்சி ,தீபா ,கலையரசி எல்லாம் யாருன்னுதான் புரியமாட்டேங்குது ?????

  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் கில்லர் ஜி வாழ்கவளமுடன்
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக பாவலரே இவங்க எல்லோருமே நாம அக்கம்பக்கத்தில் வாழுபவர்கள்தானே... இனிய தீபாவளி வாழ்த்துகள்.

   நீக்கு
 22. எல்லா வெடிகளும் சூப்பர் வெடிகள் அண்ணா ஜி.
  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தீபாவளி வெடிகள் சுட்டமைக்கு நன்றி சகோ எனது இனிய தீபாவளி வாழ்த்துகள்.

   நீக்கு
 23. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
  உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
  "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
  இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
  எல்லாம் கைகூடி வந்து
  என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
  தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.

   நீக்கு
 24. பெயரில்லா11/10/2015 12:17 PM

  இன்பத் தீபாவளி உங்களிற்காகட்டும்
  அன்புடன் இனிய வாழ்த்துகள்.!
  இன்னமுத நன்றியுடன் தீபமொளிரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.

   நீக்கு
 25. தொலைபேசியில் உங்களது தீபாவளி வாழ்த்தினைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தேன். மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.

   நீக்கு
 26. வணக்கம்
  தலைவா..
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் உளம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ரூபன் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.

   நீக்கு
 27. வெடிச்சிரிப்பு.... :) அதுவும் அந்த காணொளி - சிரித்து மாளவில்லை - விழுந்தவர் பாவம் என்று மனதில் தோன்றினாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

  பதிலளிநீக்கு
 28. ஜி ஒரு மனிதன் கீழே விழுந்தால் சிரிக்கலாமா ?

  பதிலளிநீக்கு
 29. ஆமாமாம் சேப்டி ரொம்ப முக்கியம்! த.ம.+1

  உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் சகோ!

  பதிலளிநீக்கு

 30. மனங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும், தங்களது குடும்பத்தாருக்கும் தீபாவளி வாழ்த்துகள்

   நீக்கு
 31. ஜீ...

  சிரிப்பு சரவெடியில ஒன்னுக்கூட " சவுத்து " போகாம பட்டையை கிளப்புது !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா நான் வெடியை ப்ரீஜரில் வைப்பதில்லை அதனால்தான் சவுத்து போகவில்லை.

   நீக்கு
 32. கலக்கல் ஜோக்ஸ்...
  தளிர் சுரேசுக்கு போட்டியா கிளம்பிட்டாரு எங்க கில்லர் அண்ணா...
  யார் யாரோ எப்படி எப்படியோ பத்த வைக்கிறாங்க.
  நாம இப்படியாச்சும் பத்த வைப்போம்...
  சீனி சரமாகுதா.. புஸ்வானமாகுதான்னு பார்ப்போம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நண்பர் சுரேஷ் எனக்கும் நண்பர்தான் ஏதும் ஊதி விட்றாதீங்க...

   நீக்கு
 33. நல்ல வெடி ,வாழ்த்துக்கள் சகோ,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஈரமில்லாத வெடி இப்படித்தான் வெடிக்கும்

   நீக்கு