தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஆகஸ்ட் 17, 2016

கள்ளிச்செடி


100 ல் 55 பேருக்கு மட்டுமே படிக்க முடியும் எனச் சொல்லியிருந்தார் நான் 55-க்குள் ஒரு ஆளாக முதல் முறையே நுழைந்து விட்டேன் மேலும் எனது நாவு பயிற்சிக்காக தினமும் மூன்று முறை இதை படித்து வருகிறேன் Face Book-ல் அற்புதமான விசயத்தை கொடுத்திருந்த அன்பர் கடைசியாக இந்த சினிமா வசனத்தையும் கொடுத்து இதனை களங்கப்படுத்தி விட்டார் இந்த சினிமா மோகம் இவர்களை என்னபாடு படுத்துகிறது இதில் நாமாக நுழையவில்லை அன்றே நமது தாத்தாமார்கள் இவர்களுக்கு அடிமையாகி நமது தந்தையர்களுக்கு இதை கற்றுக்கொடுத்து அவர்கள் நமக்குள் நுழைத்து விட்டு நாம் நமது பிள்ளைகளிடம் புகுத்தி விட்டோம் அவர்களும் நாளை நமது பேரப்பிள்ளைகளுக்கு திணிப்பார்கள் ரசிகனாக இருப்பது இப்பொழுது ஒரு பதவி போலவே ஆகிவிட்டது.

அதனால்தான் நடிகன் மகன் நடிகனாகிறான் அரசியல்வாதி மகன் அரசியல்வாதி ஆகிறான் ரசிகன் மகன் ரசிகனாகவும் தொண்டன் மகன் தொண்டனாகவும் ஆகிறான் இது என்ன வீட்டில் வளர்க்கும் வாழை மரமா ? வாழையடி வாழையாக தழைப்பதற்கு இன்னும் எத்தனை சந்ததிகள் இப்படியே போவது ? இதை இப்படியே விட்டு வைத்தால் இந்த வாழை முற்றி நாளை கள்ளிச்செடியாகி விடும் ஆகவே இன்றே இதை வேறோடு அறுத்தெறிந்து சுய சிந்தனையாளனாக இனி எனும் வாழ்வோமே !

காணொளி

35 கருத்துகள்:

  1. நல்ல பயிற்சி,எழுத்துக்களை மாற்றிபோட்டு படிக்கும் முயற்சி,,,/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  2. சுய சிந்தனையாளன் ஆவது நல்லதுதான். அங்கு என்ன சினிமா வரிகள் பகிரப்பட்டிருந்தன என்பதையும் கொடுத்திருந்தால் தெரிந்து கொண்டிருப்போமே..!!

    இந்த எழுத்துகள் மாறியிருப்பவற்றை ஏறெகெனவே படித்து, உணர்ந்து ரசித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே (சும்மா அதிருதில்லே) இதுதான்

      நீக்கு
  3. உண்மை நண்பரே
    இனியேனும் சுய சிநதனையாளராக வாழ்வோம்
    தம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  4. நானும் 55-ல் இருக்கிறேன்! :)

    நன்றி.

    பதிலளிநீக்கு
  5. சிந்தித்து செயல்பட வேண்டிய விஷயம் தான்!..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  6. கள்ளிச்செடியின் ஆபத்தை பகிர்ந்த நண்பர்க்கு நன்றி!!

    பதிலளிநீக்கு
  7. நீகங்ள் படிகாக்மல் விடட்து சதாரின் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா வித்தியாசமாக எழுதி விட்டீர்களே.... ஜி

      நீக்கு
  8. எனாதல் எறான்ல இரண்டுமே படிக்க முடியவில்லை. இப்போதும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முயன்று பாருங்கள் ஐயா ஆரம்பத்தில் குழப்பும்.

      நீக்கு
    2. எதனால் என்றால் --- சரியா.?

      நீக்கு
  9. நானும் முகநூலில் இதை வாசித்து பகிர்ந்து இருந்தேன்! கடைசி சினிமா பஞ்ச் அவசியம் இல்லைதான்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சினிமா வசனம்தான் இதன் மகிமையை கெடுக்கின்றது

      நீக்கு
  10. ஹிஹிஹி, இம்மாதிரி ஆங்கிலத்திலும் வருது! எல்லாமும் படிப்போமுல்ல! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நீங்க ஹிந்தியே படிப்பீங்களே....

      நீக்கு
  11. நல்ல பகிர்வு பகிர்வுக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    நானும் 55-ல் ஒருவளாகி விட்டேன். அருமையான தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி. தகவலை தொடர்ந்த சிந்தனை விளக்கமும் அருமை.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. தடங்கலே இல்லாம வேகமா படிச்சுட்டேன் நண்பா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது நண்பரே முயற்சி வெற்றி தரும்.

      நீக்கு
  14. டஅ! நாகங்ம்ளு 55ல் ருஇகிக்ம்றோ. குவெ ளிஎகதா சிவாதுத் டோவிட்ம்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா நல்லாவே சொதப்பி எழுதிட்டீங்களே... நன்று

      நீக்கு
  15. அம்மா பரிட்சையில நான் பாஸ்ஆயிட்டேன்!!!

    பதிலளிநீக்கு
  16. சுயசிந்தனையாளர்களாக வாழ்வோம்!

    பதிலளிநீக்கு
  17. அருமையான முயற்சி சகோ. நான் வேகமாக படித்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  18. 55 ல நானும் இருக்கிறேன் சகோ....முகனூலில்வாசித்து இருக்கிறேன்.
    தம 10

    பதிலளிநீக்கு
  19. தமிழ் நாட்டில் வாழை கள்ளிச்செடியாக மாறாமல் இருக்க ஒரு தலைமுறை திரைப்படம் பார்க்காமல் இருந்தால் போதும்.

    பதிலளிநீக்கு