எவ்வளவோ யோசித்து பதிவுகள்
எழுதுகிறோம் மிகச்சின்ன விடயமாக இருக்கும் அதை பிறர் சொல்லும் பொழுது அடடே இவ்வளவு
காலமாக நமக்கு ஏன் ? இது
தெரியவில்லை என்று மனம் குழம்பும் இதில் பலருக்கும் பல விடயங்கள் இருந்திருக்கும்
சில நேரங்களில் தொட்டால் சுடுவது நெருப்பு என்பது எனக்கு பிறர் சொல்லியே
அனுபவப்பட்டு தெரிகிறது ஆம் நண்பர்களே ஒருமுறை சாலையில் போய்க்கொண்டு இருக்கும்
பொழுது எனக்கு தாகம் எடுத்தது யார் வீட்டிலாவது தண்ணீர் கேட்போமே.... என
நினைத்துக் கொண்டு போகும் பொழுது ஒரு வீட்டில் தீ பிடித்து எரிந்து கொண்டு
இருந்தது நான் தண்ணீர் குடிப்போமென்று உள்ளே நுழைந்து விட்டேன் சுள்ளென்று
எரிச்சல் காரணம் தீயின் ஜூவாலைகள் முகத்தில் அடித்தது தெறித்து வெளியே ஓடி வந்தேன்
பிறகு மற்றவர்கள் சொன்னார்கள் அட மூதேவி எரியிற வீட்டுக்குள்ளே போனால் ? சுடாதா ? ஒருவர்
சொன்னார் எரியிற வீட்டுல புடுங்கியதெல்லாம் லாபம்னு தெரிஞ்சவன் போல என்று... ச்சே
தண்ணீர் தாகத்துக்கு போனால் சமூகம் எப்படியெல்லாம் பேசுகின்றது இந்த அனுபவப்
பாடத்தை எனக்கு தீ கற்றுக் கொடுத்தது...
இதே
போல...
ஒருமுறை வீட்டில்
விநாயகர் சதுர்த்திக்கு ஆஞ்சநேயரை வணங்குவதற்காக பூஜை செய்வதற்கான சாமான்களை
வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தேன் (சத்தியமா நாந்தாங்கோ) பூஜையில் அமர்ந்து ஊதுபத்தி கொளுத்துவதற்காக
தீப்பெட்டியை தேடினால் நான் தீப்பெட்டி வாங்கி வரவேயில்லை சரியென்று எதிர் வீட்டு
பரிமளா வீட்டில் கொளுத்திக் கொண்டு வருவோமென ஊதுபத்தியோடு போனேன் விபரத்தை பரிமளாவின்
கணவர் சொரிமுத்துவிடம் சொன்னேன் அவரே வீட்டுக்குள்ளே போய் தீப்பெட்டி எடுத்து
வந்து கொளுத்திக் கொடுத்தார் நன்றி சொல்லி விட்டு வீட்டுக்கு திரும்பினேன் தீ
அணைந்து விட்டது மீண்டும் போய் சொன்னேன் சரியென்று மீண்டும் பற்ற வைத்துக்
கொடுத்தார் மீண்டும் அணைந்து விட்டது சங்டத்துடன் மீண்டும் போனேன் சொரிமுத்து
மறுபடியும் தீப்பெட்டியை எடுத்து வந்து உரசினார்... உரசினார்... 17 குச்சிகள் தீர்ந்து விட்டது ரெண்டு பேரும் என்ன
செய்றீங்க ? கேட்டுக் கொண்டே வந்த பரிமளாவிடம் விபரம்
சொன்னேன் ஏங்க வெளியில மழை பெய்யுதுல மழையில நனைஞ்சா ஊதுபத்தி எரியுமா ? கில்லர்ஜிதான் கூமுட்டை மாதிரி இருக்காருனா..
நீங்க அவரைவிட வெளங்காமட்டையா இருக்கீங்க.. வெடுக்கென்று தீப்பெட்டி
கணவரிடமிருந்து புடுங்கி இந்தாங்க சாமி கும்பிட்டுட்டு இந்த தீப்பெட்டியை நீங்களே
வச்சுக்கங்க மழையில தீப்பெட்டியை நனையாமல் கொண்டு போங்க பரிமளா என்னிடம் கொடுக்க
உள்ளே ஒரேயொரு குச்சி இருந்தது இந்த அனுபவப் பாடத்தை
எனக்கு தண்ணீர் கற்றுக் கொடுத்தது...
இதே
மாதிரி...
சிவாதாமஸ்அலி-
யோவ்,
நிறுத்துய்யா...
ஹாஹா.... நீரும் நெருப்பும்! நல்லா இருக்கு...
பதிலளிநீக்குத.ம. 1
ஹா.... ஹா.... ஹா....
பதிலளிநீக்குஆனால் நாங்கள் எல்லாம் ஊதுபத்தி நின்று நீண்டநேரம் எரியவேண்டி, ஒருமுறை தண்ணீரில் முக்கிவிட்டுத்தான் பற்ற வைப்போம்!
ஹஹஹஹஹஹ் நல்ல அனுபவப்பாடாம்...!!! இது மாதிரி என்று போட்டதில் தெரிகிறது இன்னும் இப்படிப்பாடங்கள் இருக்குனு...அப்படிப் பாடம் கற்கையில் அழுகின தக்காளி முட்டை அடிகள் உண்டா...ஹிஹிஹி
பதிலளிநீக்குஹிஹிஹிஹி, என்ன ஆச்சு திடீர்னு!
பதிலளிநீக்குவிநாயகர் சதுர்த்தி அன்று யாராவது ஆஞ்சநேயரை வணங்குவார்களா ?பரிமளாவிடம் நீங்க இன்னும் நிறைய தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு :)
பதிலளிநீக்குஎரிகிறவிஒஇட்டில் கொள்ளி பிடுங்க வந்தவர் என்று நினைத்திருக்கலாம் எரிகிறவீட்டிலா போய் தண்ணீர் கேட்பார்கள் சாதாரண விஷயங்களுக்குக் கூடவா அனுபவம் வேண்டும்
பதிலளிநீக்குகஷ்டந்தான்...
பதிலளிநீக்குஆனாலும்,
ஒரே ஒரு தீக்குச்சியை வெச்சுக் கொடுத்த பரிமளாவை பாராட்டியே தீரணும்!..
அப்புறம் ஊரெல்லாம் நல்லா இருக்குன்னு நினைக்கிறேன்!..
நல்ல அனுபவப் பாடம் ஐயா....
பதிலளிநீக்குஆஹா! அனுபவ பாடம் அருமை!
பதிலளிநீக்குநீர்ரும் நெருப்பும் அனுபவம்... அருமை...கடைசியல் சிவ தாமஸ் அலிக்கு ஏன் கோபம் வருகிறது...?????
பதிலளிநீக்குதலைப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறீர்கள். பதிவை இரசித்தேன்!
பதிலளிநீக்குhahaha
பதிலளிநீக்குபரிமளா, சொரிமுத்து, சிவாதாமஸ் அலி!!!
பதிலளிநீக்குகில்லர்ஜிதான் கூமுட்டை மாதிரி இருக்காருனா, நீங்க அவரை விட வெளங்கா மட்டையா!! கலக்கல்!!!
நீரும் நெருப்பும் சரிதானுங்க அண்ணா...
பதிலளிநீக்குநீரும் நெருப்பும் நன்று
பதிலளிநீக்கு