சனி, ஆகஸ்ட் 13, 2016

ராஜபாளையம், ராஜவீதி ராஜலட்சுமி

ராஜவீதி ராஜலட்சுமி வீட்டில்......

சதி-
ஏங்க நம்ம வீட்டுக் காவலுக்கு ஒரு நாய் வாங்கலாங்க...
பதி-
எதுக்குடா செல்லம் தெண்டச்செலவு நீ இருக்கும்போது...
சதி-
உங்க வீட்ல கூடத்தான் உங்க அம்மா இருக்காங்க உங்க அப்பா வாங்கி கொடுக்கலையா ?
பதி-
அது பொண்டாட்டி மேல நம்பிக்கை இல்லாதவங்க செய்யுறது நான் அப்படியா ?
சதி-
உங்களுக்கு எம்மேல நம்பிக்கை இருக்குல ?
பதி-
பின்னே ?  
சதி-
அப்ப அந்த நம்பிக்கையோட இந்த வீட்டை எம் பேருக்கு மாத்துங்க பார்ப்போம் ?
பதி-
ஹூம் கடைசியில அங்கே வர்றீயா ? சரி சரி ரொம்ப குரைக்காதே உனக்கு குட்டியோட சேர்த்து நான் நாய் வாங்கித் தர்றேன்.

சாம்பசிவம்-
நாய் நீ ன்னு சொன்னவன் கடைசியில நான் நாய்னு' ஒத்து போயிட்டியேயா.

வில்லங்கத்தார் மட்டும்தான் பைரவரைப்பற்றி பதிவு எழுத முடியுமா ? நாங்களும் எழுதுவோம்கில்லர்ஜி

31 கருத்துகள்:

 1. ஹா... ஹா.... நாய் நீ.. நான் நாய்....
  ஆமா ஒரு வீட்டுல எல்லாமே நாயாத்தானே இருக்கணும்... அம்மா நாயின்னு பொண்டாட்டி சொல்றா.... பொண்டாட்டி நாயின்னு அவன் சொல்றான்... அப்ப அவனும்....

  பதிலளிநீக்கு
 2. வார்த்தை விளையாடல் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. நேற்று ,நான் சனி என்று விளையாடியதைப் போல ,நான் நாய் என்று விளையாடி இருப்பதை ரசித்தேன் ஜி :)

  பதிலளிநீக்கு
 4. என்ன பண்றது!..
  சண்டை போட்டுக்கிட்டா - பூவாவுக்கு எங்கே போறது?..

  இதெல்லாம் குடும்பத்துக்குள்ளே சகஜமப்பா!..

  சாம்பசிவம் மாதிரியான - ஜண்டு ஜடாநந்தாவுக்கெல்லாம் இதப் பத்தி ஒன்னும் தெரியாது..

  பதிலளிநீக்கு
 5. நாய் என்கிறீர்
  குட்டி என்கிறீர்
  அப்படியிருக்க
  நாய்க்குட்டி என்று சொல்லாமல்
  குட்டியோடு சேர்த்து
  நாய் வேண்டித் தருவதாகச் சொல்கிறீர்
  எதனை எவர் வளர்ப்பது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லோரும் சேர்ந்து வளர்க்க வேண்டியதுதான் நண்பரே

   நீக்கு
 6. முக்கியத்துவம் கதைக்கா அல்லது வார்த்தைக்கா என்று கேட்டால் ..... ரெண்டுமே அப்படீன்னு சொல்ல வைக்கிற ஒரு பதிவு

  பதிலளிநீக்கு
 7. ஹாஹாஹா! இப்படி ஆகிப்போயிருச்சே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன செய்வது கணவன்-மனைவியும் இப்படி இருக்காங்களே...

   நீக்கு
 8. படத்திலுள்ள நாய்க்கு வாலைக் காணோமே...“வாலை.வாலை ஆட்டுது”என்று எப்படி புரிந்து கொள்வது....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது பீகார் மாநில நாய்கள் நண்பரே சூப் வச்சு குடிச்சு இருப்பாங்கே....

   நீக்கு
 9. நாய்ங்க எல்லாம் கோவிச்சுக்கப் போகுதுங்க!

  பதிலளிநீக்கு
 10. கில்லர்ஜி இப்படி பைரவர்களைச் சொல்லலாமா...ஜி...

  அது சரி நாய் வாலை நிமிர்த்த முடியாதுன்னுதான் வாலே இல்லாம கட்டே பண்ணீட்டீங்களோ...ஹஹஹ

  இது மீள் பதிவா...? வாசித்த நினைவு நன்றாக உள்ளது....நமக்குத்தான் பைரவர் பற்றிய பதிவு எல்லாம் மறக்க்காதே...

  பதிவர்களின் பைரவர்கள் எல்லாம் நீங்க இந்தியா வரும் போது உங்களுக்கு "ராஜ" மரியாதை கொடுக்க காத்துக்கிட்டிருக்கான....நாய்கள் ஜாக்கிரதை!!!!! ஹஹஹஹஹஹ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு ராஜ மரியாதை உண்டா ?
   ஆம் பழைய பதிவுதான்

   நீக்கு
 11. சொல் விளையாட்டை இரசித்தேன்!

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...