தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஆகஸ்ட் 26, 2016

சத்தியும், நித்தியும்

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில்...


சத்தியானந்தன்-
ஏண்டா, நித்தி உனக்கு வீடு ஒத்திக்கு கொடுக்காதனால இந்த சத்தியப்பத்தி நீ எங்க சித்திகிட்ட வத்தி வைக்கிறயா ? கத்திஎத்தி விட்டேன் நெத்தியில குத்தி நிற்கும் உன்னைப் பார்தாலே எனக்கு பத்திகிட்டு வருது நீ, இந்த ஊருலயே இருக்ககூடாது ஓடிரு.


நித்தியானந்தன்-
அய்யோ சத்தியண்ணே, சத்தியமா உங்களை பத்தி நான் வத்தி வைக்கலண்ணே, இது ஒங்க சித்தி மேல சத்தியம்ணே.


சாம்பசிவம்-
இவங்களே விலக்கப் போனா கத்தியாலே நம்மளை குத்திடுவாங்கே நாம பத்திரமா பஸ் ஏறிடுவோம், அதான் நம்ம புத்திக்கு அழகு.


காணொளி

18 கருத்துகள்:

  1. வணக்கம் ஜி !

    சத்தியமா நித்தி சுத்தமுங்க

    தம +1

    பதிலளிநீக்கு
  2. சுத்தி சுத்தி சிரிச்சேன்!!!

    பதிலளிநீக்கு
  3. /முத்தைத் தரு பத்தித் திருநகை
    அத்திக்கிறை சத்திச் சரவண
    முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்.../ -திருப்புகழ்.

    ‘சந்தக் கவிதை’க்கு அருணகிரிநாதர்.

    தனக்கே உரிய சொந்த நடையில் மந்தை மந்தையாய்ச் சந்தச்சொல் கலந்து விந்தை புரிபவர் பதிவுலகம் தந்த மந்திரப் பதிவர் கில்லர்ஜி என்பது சிந்திக்கத் தெரிந்த யாவரும் அறிந்ததே.

    பாராட்டுகள் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  4. ரஞ்சிதா எதையோ கொஞ்சிப் பேசி சொல்ல வர்றாங்கலேன்னு கேட்க வந்தா ,கத்தி ,குத்தின்னு பயமுறுத்துறீங்களே :)

    பதிலளிநீக்கு
  5. நித்தி, சத்தி, ஒத்தி, பத்தி, கத்தி குத்தி , சித்தி ,எத்தி, வத்தி இவற்றை வைத்தே ஒரு வார்த்தை விளையாட்டு ....?

    பதிலளிநீக்கு
  6. கில்லர்ஜி அந்த முதல் படம் நிஜமா திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலா இப்படி????. உருப்பட்டாப்புலதான்...ஆனால் அப்படித் தெரியவில்லையே ஜி..உண்மையாவா இல்லை உங்கள் சித்து வேலையா ஹஹஹஹ்

    பதிலளிநீக்கு
  7. ஹா... ஹா...
    சத்தி... சத்தியின்னு கலக்கிட்டானுங்க...

    பதிலளிநீக்கு
  8. அது என்ன பேரூந்து நிலையம்? பேருந்து நிலையம்தானே சரி. பதிவை ஒரு மாதிரி எழுத ஆரம்பித்தால் இப்படித்தான் தவறு வரும்.

    பதிலளிநீக்கு
  9. ஏன் இந்தக்கொலவெறி கத்தியுடன்)))

    பதிலளிநீக்கு
  10. அதெல்லாம் இருக்கட்டும்..

    ஒரு சித்தியா.. ரெண்டு சித்தியா?..

    ஒரே குழப்பமா..ல்ல இருக்கு!?..

    பதிலளிநீக்கு
  11. அடுக்கு ..மொழி... கத்தி ..சித்தி..நித்தி..அருமை....

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    தங்களுக்கே உரித்தான பாணியுடன் அடுக்கு மொழியில் அட்டகாசமான நகைச்சுவை பதிவு . ரசித்துப் படித்தேன்.நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில் சத்தி நித்திக்கு வந்துவிட்டீர்கள். பாத்வை இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  14. பாத்வை இரசித்தேன் என்பதை பதிவை இரசித்தேன் என திருத்திக்கொள்ளவும்.

    பதிலளிநீக்கு