தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஜூன் 28, 2017

வலிச்சா, வலிப்போக்கனிடம் போ !



தொடக்கத்தில் வந்த திரு ஜியெம்பி ஐயா அவர்கள் எழுத்தில் பிழைகள் இருக்கிறது என்று சொல்லிப்போனார் பிறகு செல்லில் வந்த ஸ்ரீராம் ஜி மற்றும் வாட்ஸ்அப்பில் வந்த தில்லை அகத்தாரும் வார்த்தைகள் குழறுபடியாக இருக்கிறது என்று சொன்னதால் மீண்டும் முழுமையாக எழுதினேன் இதில் கேள்விக்குறிகள் புள்ளிகள் அடைப்புக்குறிகள் இல்லை பொருத்தருள்க - கில்லர்ஜி

அபுதாபி வருடம் 2003
எனக்கு அரபு மொழி நன்றாக பேசத்தெரியும் பியூனாக இருந்து ஃபைலிங் கிளர்க்காக நுழைக்கப்பட்டபோது அரபு மொழியை எழுதிப்பழகும் பழகியே தீரவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டேன் எனது அலுவலகத்தில் வேலை செய்யும் அரபிப்பெண்களே கற்றுக்கொடுத்தார்கள் இதில் நஜாஹ் என்ற இளம் அரபிப் பெண்ணொருத்தி அவள்தான் கூடுதல் கற்றுக்கொடுத்தாள் என்று சொல்ல முடியும் அவரவர் வேலை நடந்து கொண்டு இருக்கும் அதன் மத்தியில் வேலையோடு வேலையாக எனக்கும் பயிற்சி நடக்கும் தவறாக எழுதில் விட்டால் அவளிடம் எனது கையில் புறகின் மொளியில் ஸ்கேலால் ஒரு அடி வாங்கி கொள்ளவேண்டும் என்பதும் அவளை நான் ஒஸ்தாத் என்றே அழைக்கவேண்டும் என்பதும் நாங்கள் வகுத்துக்கொண்ட எழுதப்படாத நீதி சரி கழுதை விளையாட்டுக்குத்தானே சொல்கிறாள் என்று நானும் ஒத்துக்கொண்டேன் முதல்நாளே பனிரெண்டு அடி மொளி பெயர்ந்து விட்டது என்னடா இது அரபு மொழி பழகுறதுக்குள்ளே நம் கைமொளியை பேர்த்திடுவாள் போலயே

என்ன நீ வலிக்கிற மாதிரி அடிக்கிறே
வலிச்சா வலிப்போக்கனிடம் போ நான் சொல்லித் தரமாட்டேன் என்றாள் சரி வலிப்போக்கனிடம் அரபி சொல்லித்தர முடியுமா என்று கேட்போம் என்றால் அவருடைய தொலைபேசி இலக்கமும் இல்லை நமது குருந்தன் வாத்தியார்கூட அடிச்சதில்லையே இவள் அடிக்கிறாளே... ஒருவேளை பூர்வஜென்ம பந்தமோ வேறு வழியின்றி சீக்கிரமாக அரபு பழகவேண்டும் இதற்காக சாலையில் நடந்து செல்லும் பொழுது அங்காடிகளில் எழுதியிருக்கும் பெயர்ப்பலகைகளில் அரபு மொழியிலும் ஆங்கிலத்திலும் இருக்கும் இவைகளை படித்துக்கொண்டே போவேன் இப்படி போகும் வேளையில் பலமுறை சாலையில் நடந்து செல்லும் இளம் பிலிப்பைன்ஸ் பெண்களை தெரியாத்தனமாக இடித்து விட்டு அவர்களது மொழியில் நாக்ஸிஸிஸி என்று சொல்லி மன்னிப்பு கேட்டும் சென்றது உண்டு

ஆறு மாதங்களில் இவளது அடிக்குப்பயந்து அதேநேரம் தொடக்கம் முதலே அழகாக எழுதப்பழகி விட்டேன் இதை பெருமைக்காக சொல்லவில்லை அவர்களே உனது எழுத்து அழகாக இருக்கிறது என்று சொன்னது இருக்கட்டும் எனக்கே தெரியும் காரணம் இவர்களில் பலருக்கும் எழுத்து அழகாக வராது இந்த அலுவலகத்தில் அரேபியர் சூடானியர் பாலஸ்தீனியர் எஜிப்தியர் ஒமானியர் யெமனியர் சிரியர் ஜோர்டானியர் அனைவருக்குமே தாய்மொழி அரபுதான் சுமார் நூற்றி இருபது ஊழியர்கள் வேலை செய்தாலும் இதில் ஆயிஷா என்ற அரபுப்பெண்ணின் எழுத்துதான் மிகவும் அழகாக இருக்கும் நான் சவால் விட்டு சொல்வேன் ஆயிஷாவின் எழுத்துதான் அழகு என்று ஆயிஷா எழுதும் பொழுது நான் அருகில் நின்று கவனித்து ரசிப்பேன் ஆயிஷாவுக்கு திருமணம் ஆனது இப்பொழுது அலுவலகத்தில் இல்லை

சரி விசயத்துக்கு வருவோம் ஆரம்பத்தில் எனக்கு கணினி கொடுக்கவில்லை கோப்புகள் வெளியே போகும் உள்ளே வரும் தேதிகளும் எடுத்தவர்களின் பெயர்களும் பதிவேட்டுகளில்தான் எழுதினேன் நான் நினைத்திருந்தால் ஆங்கிலத்திலேயே தொடர்ந்திருக்கலாம் அந்த தருணத்தில்தான் தேவகோட்டை மூளையின் மூலையோரத்தில் ஒரு மின்னல் வரிகள் ஓடியது நாமும் அரபு மொழியில் எழுதினால் என்ன காரணங்கள் இரண்டு உண்டு முதலாவது நான் விடுமுறை என்றால் அவர்கள் பதிவேட்டை பார்த்துக்கொள்வார்கள் பலருக்கும் ஆங்கிலம் தெரியாது என்பதும் குறிப்பிடத்தக்கது அடுத்தது இதையே காரணமாக வைத்து நாமும் ஓசியில் அரபி படித்து விடலாம் ஒரே கத்தி குத்து ரெண்டு

பிறகு கணினி கொடுத்தார்கள் வாழ்வில் முதல் முறையாக படிக்காத பாமரனுக்கு கணினியில் வேலை பெருமையாக இருந்தது அரபு மொழியில் டைரி டைப்பி பென் டிரைவரில் சேமிக்கும் பழக்கத்தை தொடங்கினேன் பிறகு இணையம் கொடுத்தார்கள் கிளி கையில் கோவைப்பழத்தை கொடுத்தால் என்னாகும் கிளி கிலி கிழிதானே அப்படி இப்படி எப்படியோ வலைப்பூவை கண்டு விட்டேன் விடுவேனா

எனக்கு புதிதாக ஒருவர் ஒரு விடயம் சொல்லிக்கொடுத்தார் என்றால் அதிலிருந்து அவருக்கே தெரியாத மற்றொன்றை தேடிப்பிடித்து விடுவேன் இது எனக்கு இறைவன் கொடுத்த அன்பளிப்பு என்றே பலதருணங்களில் நினைத்து இருக்கினேன் அரபு மொழியில் ஒரு சிறப்பு என்னவென்றால் எழுத்துக்களை எப்படி வேண்டுமானாலும் நமது வசதிக்கு எழுதமுடியும் உதாரணத்திற்கு கில்லர்ஜி என்ற எனது இனிமையான கனிவான பெயரைக்கூட ஒரு அழகிய தாமரையைப் போலவோ அல்லது அழகான உங்கள் கில்லர்ஜியின் உருவத்தைப் போலவோ ஒரு விமானத்தைப் போலவோ எழுதலாம் அதேநேரம் ஒரு சிறியபுள்ளி மாறி வந்தாலும் அர்த்தம் அபத்தமாகி விடும் இப்படித்தான் நானும் ஒருநாள் சங்கடத்தில் மாட்டிக்கொண்டேன் அது என்ன வென்றால்
தொடரும்

55 கருத்துகள்:

  1. தொடர்கிறேன் அடுத்தபதிவிலாவது எழுதும்பிழைகள் குறையும் என்று நினக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கவும் ஐயா தவறான இடத்தை குறிப்பிட்டால் திருத்தம் செய்து விடுவேன்

      நீக்கு
  2. அரபிகள் அதிலும் குறிப்பாக பெண்கள் அதிலும் குறிப்பாக இளம் பெண்கள் இனிமையாக பழகுவார்கள்.. மருதாணியைப் பற்றி பேசினால் மிகவும் பிடிக்கும்..

    ஏதோ நமக்கும் மலரும் நினைவுகள்..

    அடுத்த பதிவு சீக்கிரம் வரட்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏனென்றால் அவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை, இந்தியர்களின், அதுவும் முஸ்லீம் அல்லாதவர்கள் மேல். (வாலை ஆட்டமாட்டோம் என்று). இதுதான் என் அனுபவமும்.

      நீக்கு
    2. அன்பின் ஜி தங்களது நினைவோட்டங்களை பறக்க விடுங்கள் வருகைக்கு நன்றி

      நீக்கு
    3. நண்பர் திரு. நெல்லைத் தமிழன் அவர்களின் மிக, மிக, மிகவும் அருமையான கணிப்புக்கு எமது வணக்கங்கள்.

      நீக்கு
    4. ஆம் வளைகுடாவில் என் உறவினர்கள் இருக்கிறார்கள்.....அவர்களும் இதே கருத்தைத்தான் சொல்வார்கள்....

      கீதா

      நீக்கு
    5. ஜி தம டப்பா தெரிலே மொபைலில்.....லிங்கும் இல்லியே....எப்படி ஒட்டு போட...

      கீதா

      நீக்கு
  3. கில்லர்ஜி, இந்தப் பதிவை ரசித்துப்படித்தேன். நானும் இங்கு காய்கறி மார்க்கெட்டில் நம்ம ஊரு சுப்பன்/குப்பன் (தவறாகச் சொல்லவில்லை, படிப்பறிவில்லாத எளிய மக்கள் என்பதைச் சுட்டுவதற்காகச் சொன்னேன்) சர்வ சாதாரணமாக வாடிக்கையாளர்களிடம் அரபியில் பேசுவார்கள்.

    நானும் இந்தப் பகுதியில், ஆச்சு 24ஆவது வருஷம். இன்னும் இந்தியே (என்னைச்சுற்றி வடவர்கள் பலர்) கற்றுக்கொண்டபாடில்லை. போதாக்குறைக்கு தற்போதைய கம்பெனியில், அரபிகள் என்னிடம் ஹிந்தியில் பேசும்போது 'ஞே' என்று விழித்து, 'மதராசி ஹிந்தி நஹி மாலும்'னு வழியவேண்டியிருக்கிறது. நானும், 30 நாளில் ஹிந்தி கற்றுக்கொள்ளுங்கள் முதல் எளிய அரபிக் எழுத/படிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்று பலப் பல புத்தகங்களை வாங்கி அடுக்கியிருக்கிறேன். (வாங்கும்போது தெரியாது, புத்தகம் வாங்கினால்மட்டும் போதாது, படிக்கவேண்டும், முயற்சி செய்யவேண்டும் என்று).

    நீங்கள் அரபிக் கற்றுக்கொண்டதை நினைத்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. 'தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய்' - 'அவசியம்தான் மொழியைக் கற்றுக்கொள்ள முதல் படி'.

    தொடர்ந்து படிக்கிறேன்.

    (தெரியாமல் நீங்கள் இடித்த பெண்கள், இளம் பெண்கள் என்பதையும் கவனித்திருக்கிறீர்களே :))

    முதல் த.ம வா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மிகவும் ரசித்து இருக்கின்றீர்கள் முதலில் நன்றி உண்மை மொழி பழகுவதற்கு படிப்பு வேண்டும் என்பது எனது அனுபவத்தில் பொய் நான் படிக்காதவன் சூழல் என்னை படிக்க வைத்தது

      இன்னொன்று தெரியுமா நண்பரே...
      ஒரு மொழி எழுதப் படிக்க தெரிந்து விட்டால் மற்ற மொழிகளும் சுலபமாக வரும்.

      இந்தியன் இந்தி தெரியாமல் அரபியிடம் அவமானப்படுவது இந்தியனில் தமிழ் நாட்டான் மட்டுமே இதை சொன்னால் நம்மவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

      இருப்பினும் மத்திய அரசு தமிழை ஓரங்கட்டவே இந்தியை நுழைக்கிறது என்பது உண்மையே....

      நான் ஒரு பாலஸ்தீனியிடம் இந்தி வார்த்தைகள் நிறைய படித்துக் கொண்டேன் என்றால் நம்புவீர்களா ? இதுதான் உண்மை.

      ஆம் நண்பரே சாலையில் போகும் பொழுது இடித்தது காரா ? பஸ்ஸா ? என்று பார்க்க வேண்டுமே அதைப்போல் இதையும் நினையுங்கள்.

      நீக்கு
  4. ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள முதலில் விருப்பம் இருக்கவேண்டும், மேலும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையும் வேண்டும். அவைகள் தங்களிடம் உள்ளதால் வெகு எளிதாக அரபு மொழியைக்காற்றுக்கொண்டீர்கள் என நினைக்கிறேன். அடுத்து நடந்தது என்ன என அறியக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இதுதான் மொழி பழகுவதின் ''மூலக்கரு'' அழகாக சொன்னீர்கள் தொடர்வதற்கு நன்றி.

      நீக்கு
  5. அனுபவங்கள் மட்டுமல்ல
    சொல்லிச் செல்லும் விதமும் சுவாரஸ்யம்
    ஆவலுடன் தொடர்கிறேன்
    வாழ்த்துக்களுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரின் கருத்துரைக்கும், ஆவலுக்கும் நன்றி

      நீக்கு
  6. அழகான நினைவுகள்..

    ஆனாலும் உங்களின் விடாமுயற்சியும்...ஆர்வமும்...
    ..வியக்கத்தக்கது...பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  7. அரபியில் உங்கள் பெயரை நீங்க சொன்ன மாதிரி எழுதிக் காட்டலாமே கில்லர்ஜி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது யோசனையும் நன்றாக இருக்கிறது செய்கிறேன்.

      நீக்கு
  8. தங்களின் மலரும் நினைவுகள் அருமை நண்பரே
    தங்களின் நம்பிக்கை,போற்றுதலுக்கு உரியது
    எத்துனையோ பேர் வெளிநாடுகளுக்குச் சென்று வருகிறார்கள், ஆனால் தங்களைப் போல், அவர்களது மொழியைப் பேசுவதற்கு மட்டுமல்ல,எழுதுவதற்கும் கற்றுக் கொண்டவர்கள், யாராவது இருப்பார்களா என்பது சந்தேகமே.

    தங்களின் விடா முயற்சி போற்றுதலக்கு உரியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் விரிவான கருத்துரை என்னை உற்சாகப்படுத்துகிறது நன்றி நண்பரே

      நீக்கு
  9. சுவாரஸ்யம், தொடர்கிறேன். 12 வருடங்கள் ஓமானிய அரசு உத்தியோகத்தில் குப்பை கொட்டினாலும்,கேஃப் ஹாலக், சின்(zhain),ஃபாதல்,ஜிப் சாண்ட்விச், க்ஷுக்ரான், ஷோயி போன்ற சொற்ப வார்த்தைகளை வைத்துக்கொண்டு காலத்தை ஓட்டினேன். ஒன்று முதல் பத்து வரை எழுதி படிக்க தெரியும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் சொல்லவே இல்லை பரவாயில்லை தங்களது அனுபவத்தையும் எழுதுங்கள்.

      நீக்கு
  10. சில இடங்களில் வரிகள் மாறி விழுந்திருப்பது வேண்டுமென்றேவா? இல்லை டைப்பும்போது கூகிள் செய்த குறும்பா? தனது சொந்த அனுபவத்தை வைத்தும் நெல்லையும் இதில் ஈடுபாட்டுடன் ரசிக்கிறார் என்று தெரிகிறது.

    :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது தளத்தில் சரியாக இருக்கிறதே நண்பரே ஏதும் குழப்பமா ?
      இதைத்தான் ஜியெம்பி ஐயா பிழைகள் என்றாரோ....

      நீக்கு
    2. ஜி....வரிகள் மாறி மாறி வருது..... என்றாலும்....வாசித்து விட்டேன்.....ஸ்ரீராம் கூகுளின் ஆட்டம் போல.....

      கீதா

      நீக்கு
  11. நலமா தோழர்,
    நல்ல அனுபவம்தான் ...

    பதிலளிநீக்கு
  12. எனக்கு அயல்நாடு சென்றுவந்த அனுபவமே இல்லை. உங்களின் அனுபவப் பதிவை மிகவும் விரும்பிப் படிக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இனி தொடர்ந்து எழுதுவேன் இப்பதிவில் படிப்பதற்கு எழுத்துகள் குழப்பமாக இருக்கின்றதா ? அதை சொன்னால் நல்லது நன்றி

      நீக்கு
  13. செம அனுபவம் ஜி.சுவாரஸ்யமான அனுபவம்...பின்ன அரபி டீச்சர்.....ஆஷாவின் எழுத்துஅழகோ அழகு....தெருவில்....நடக்கும் போது....ஹஹஹஹ.....சரி சரி...நான் ஜஸ்ட் லைக் தட் தான் சொன்னேன்பா....வம்பு தும்பு எதுவும் இல்லபா நம்புங்க.....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆயிஷாவை ஆஷாவாக்கி மதம் மாற்றி விட்டீர்களே.... அரேபியர்களுக்கு தெரிந்தால் எனக்கே பிரச்சனை.
      இதில் வம்பு தும்பு இல்லையா....

      நீக்கு
  14. மொழி கற்கும் உங்கள் திறன் அபாரம் கில்லர்ஜி....ஹேட்ஸ் ஆப்.....!!! தொடர்கிறோம்....

    கீதா

    பதிலளிநீக்கு
  15. Learning the new language is always a good experience, very interesting,

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் ஜி !

    மத்திய கிழக்கில் மலரும் நினைவுகள் அசத்தல் ஜி ஆனாலும் அரபி எழுத வாசிக்கக் கற்றுக்கொண்டதை நினைத்துப் பெருமைப் படுகிறேன் நமக்கு தமிழைவி விட்டா வேறு எதுவும் வராதே ஆங்கிலம் கூட தத்தக்க பித்தக்கதான் ! ஆமா அடுத்த பதிவில் இன்னும் சுவாரஸ்யம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன் நன்றி !

    தொடரட்டும் தொடர்ந்து வாசிக்கிறேன்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே தங்களது ஆவலுக்கு நன்றி இதோ வருகிறது அர்த்தம் அபத்தமானது

      நீக்கு
  17. பல மனிதர்கள் சந்திப்பு, பழக்கம், நட்பு என்ற நிலையில் உங்களின் இப்பதிவு எங்களை வழக்கம்போல வியக்க வைக்கிறது. உங்களுக்கு மொழி சொல்லிக் கொடுத்த அப்பெண்மணி வாழ்க.சிறிய புள்ளியின் சங்கடத்தை ரசிக்கக் காத்திருக்கிறோம்.//புள்ளி தொடர்பான என் அனுபவம் ஒன்று இங்கே : ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சில் மேல்நிலையிலும் சுருக்கெழுத்தில் ஆங்கிலத்தில் இடைநிலையிலும் தமிழில் கீழ்நிலையிலும் தேர்ச்சி பெற்ற நான் சுருக்கெழுத்தில் புள்ளியை மாற்றி வைத்து சிக்கலில்மாட்டிக்கொண்டேன். I congratulate you on your new assignment என்று கம்பெனி மேலாளர் கூறியதை I congratulate you on your new consignment என்று தவறாகத் தட்டச்சிட்டேன். சுருக்கெழுத்தில் எழுதும்போது புள்ளியை இடம் மாற்றி வைத்ததால் இந்நிலை. அப்போது பணியில் சேர்ந்த ஆரம்பகாலகட்டம். assignment (பொறுப்பு, பதவி)மற்றும் consignment (அனுப்பப்படும் பொருள், சரக்கு)ஆகியவற்றுக்கிடையேயான பொருளைப் பற்றியும் அறிந்திருக்கவில்லை. ஆதலால் தவறு செய்யும் நிலை ஏற்பட்டது. ஆனால் அத்தவறு எனக்கு ஒரு பாடமாக அமைந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே உண்மை வார்த்தைகளில் ஒரு புள்ளி எவ்வளவு மாற்றங்களை கொண்டு வருகிறது தங்களது அனுபவத்தை முழுமையான பதிவாக தாருங்கள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  18. ஆ...அரபி சொல்லித்தரும் டீச்சர் வரைக்கும் பிரபலமாகிவிட்டாரா வலிப்போக்கன்.....????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே எனக்குத் தெரியாது அந்தப்பெண்தான் சொன்னாள்

      நீக்கு
  19. பிற மொழியை கற்றுக் கொள்வதில் ஆர்வம், விடா முயற்சி , அடிக்கு பயந்து விரைவில் கற்றுக் கொண்டது எல்லா அனுபவங்களும் அருமை.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பயம்தான் காரணமோ... வருகைக்கு நன்றி

      நீக்கு
  20. அனுபவப் பகிர்வு அருமை! தொடர்ந்து படிக்கக் காதிருக்கிறேன். இந்தப் பதிவு திருத்தியது என்றாலும் ஓரிரு தவறுகள் இருக்கின்றன. மற்றபடி படித்துப் புரிந்து கொள்ள முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ தவறு என்பது வார்த்தைகள் முன்னுக்குப்பின் முரணாக மாறி விட்டது எழுத்துப்பிழையை திருத்தம் செய்யவும் தயக்கமாக இருக்கிறது பிறகு மொத்தமாகவே மாறுபடுகிறது வருகைக்கு நன்றி

      நீக்கு
  21. பிழைகள் இப்போது 99.9 சதவிகிதம் ஓகே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம் ஜி இது குழறுபடிகள் அரபு மொழியும் இடையில் எழுதி படிவு நீண்டதால் இரண்டாக பிரித்தேன் அதில் வார்த்தைகளை டேஷ்போர்டு குழப்பி விட்டது ஆகவே மீண்டும் புதிதாக டைப்பினேன் தகவலுக்கு நன்றி

      நீக்கு
  22. இதுதான் உங்களிடம் எனக்குப் பிடித்தது குறை சொன்னால் கோபம் கொள்ளாமல் திருத்திக் கொள்ள முயல்வது வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இதில் கோபபட என்ன இருக்கிறது ? நான் எல்லாம் தெரிந்த ஏகாம்பரமும் இல்லை, ஒன்னும் தெரியாத ஓம்பிரகாஷும் இல்லை

      அதே நேரம் நீங்கள் விரிவாக வார்த்தைகள் குழறுபடியாக உள்ளது என்ற விபரத்தை சொல்லிச்சென்று இருக்கலாம் எனது கணினியில் சரியாகவே வந்தது ஸ்ரீராம் ஜி போன் செய்து விளக்கினார்.
      மீள் வருகைக்கு நன்றி ஐயா.

      நீக்கு