தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், டிசம்பர் 06, 2017

பிடித்த விச(ய)ம்

December - 06
மதம் மறப்போம் மனிதம் காப்போம்

கிருஸ்து மதத்தில் எனக்கு பிடித்த விசயம்.

பொய் சொல்லாமை இவர் கிருஸ்தியன் இவர்கள் அணியும் வெள்ளையுடையை போல மென்மையானவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என ஆணித்தரமாக நம்பக்கூடிய நிலையிருந்தது ஒரு காலத்தில் ஒரு மனிதன் பொய் சொல்வதை நிறுத்தும் பொழுது எல்லா கெட்ட செயல்களும் அவனை விட்டு விலகி விடும் இன்று பொய் சொல்லாத மனிதர்களும் இருக்கிறார்களா ? என்று ஆச்சர்யப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

இஸ்லாம் மதத்தில் எனக்கு பிடித்த விசயம்.

பலதார மணங்களுக்காக சொல்லப்பட்ட காரணங்கள் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படக்கூடாது என்பதின் பின்னணியில் சொல்லப்பட்டது மட்டுமல்ல, வாழ்க்கை வாழ்வதற்கே என்ற உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டது அன்றைய காலகட்டத்தில் போர்கள் நடந்தது இன்றைய காலகட்டத்திலும் WARகள் நடக்கிறது ஆனால் இன்று அந்த காரணங்கள் அடியோடு மறக்கப்பட்டு சில அற்ப காரணங்களுக்காக நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

இந்து மதத்தில் எனக்கு பிடித்த விசயம்.

ஒருத்தி ஒருவனுக்காகவும், அந்த ஒருவன் ஒருத்திக்காகவும் வாழும் அற்புதமான வாழ்க்கை நெறிமுறை ஆனால் இன்று 100க்கு 99.9 % மாறுபட்ட நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது, அந்த 00.1 %த்திற்குள் நானும் இருக்கின்றேன் என்பதில் பெருமை பட்டுக்கொள்கிறேன். உணவுக்கும், உறக்கத்திற்கும் அப்பாற்பட்ட இறைவனுக்கு தெரியும் இது உண்மையென்று ஆனால் உணவருந்தி மலம் கழிக்கும் மானிடர்கள் நம்ப மாட்டார்கள் இதை ஏனெனில் அம்மணத்தான் ஊரிலே கோவணம் கட்டியவன் கிறுக்குப்பயல் என்பது நமது பாரம்பரிய நம்பிக்கை. இருப்பினும் எனது குருதிவற்றி இறுதிபாதை செல்லும் வரையில் இப்படியே செல்லுமென உறுதியோடு.....

காணொளி
(தலைப்பு எமக்கல்ல பாழும் சமூகத்திற்கு)

57 கருத்துகள்:

 1. உண்மைதான்... சிலருக்குப் புரியுது, பலருக்குப் புரிய மாட்டேனென்கிறது.. இன்னும் சிலருக்குப் புரிஞ்சாலும் வெளியே சொல்லப் பயம்.. இப்படிப் பலவகை:))..

  நானும் எப்பவும் மதத்தைப் பார்ப்பதில்லை... மனிதராகவேதான் பார்ப்பேன்ன்ன்...
  எல்லா மதத்தினரிடையேயும்.. குறைபாடும் உண்டு, நல்ல குணமும் உண்டு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆ!!என்ன ஆச்சு செஃப்க்கு... இன்று ஃபர்ஸ்டூஊஊஉ குரலைக் காணலை?!!! அப்போது மொபைலில் இருந்து அடிச்சதுனால இது இல்லாததைப் பார்க்க முடியலை...

   கீதா

   நீக்கு
  2. To,அதிரா
   உண்மை மதம் மறந்தால் தானாகவே மனதுள் மனிதம் பிறக்கும் எனது கொள்கையும் இதுவே...

   நீக்கு
  3. ஹா ஹா ஹா கீதா.. அது போஸ்ட் போட்டு வன் அவராலதான் பார்த்தேன் அதிலும் வோட்டும் போட்டிருந்தமையால் யாரோ வந்திட்டார்கள் என நினைச்சு அடக்கிட்டேன் கூவிவதை:).. சில சமயம் நானே இணைச்சு நானே முதல் வோட்டும் போடுவேன் அப்போ தெகிறியமா சவுண்டு விடுவேன்:)...

   நீக்கு
  4. வருக முதலில் ஓட்டு போட்டது ஏஞ்சலின்.

   நீக்கு
  5. ஹாஹா :) அதென்னனா கீதா நானா தான் முதலில் வந்தேன் இங்கே போஸ்ட் போட்டு முதல் வோட்டும் என்னுது கமெண்ட்டையும் நான் போட்டு சைன் இன் செய்யாததால் போகலை போலிருக்கு :) கொஞ்ச நேரம் கழிச்சு பாரதா மியாவ் பின்னூட்டம் மட்டும் நல்லவேளை டிராப்டில் இருந்ததை திருப்பி சேர்த்தேன்

   நீக்கு
  6. நோஓஓஓஓ மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:).. இல்லை எனில் அஞ்சுவைத்தேம்ஸ்ல தள்ளுவேன்ன்:)

   நீக்கு
 2. உங்கள் முதல் படத்தில் இருக்கும் முதலாவது கருத்தை நான் வெறுக்கிறேன்.. சமூகத்துக்குப் பயப்படாத நீங்க போய் இப்படி ஒரு கருத்தைச் சொல்லலாமா?:))..

  சமூகம் புரிஞ்சு கொள்ளாட்டில் என்ன? 5 கிலோ எடை குறைந்துவிடுமோ நம்மில்?.. நமக்கு நாமே நீதிபதி... எதுக்கு அக்கவலை? சமூகம் உங்களைப் புரிந்திட்டால் மட்டும் என்ன ஆகும்??

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்ல அதிரா கில்லர்ஜிக்கு என்ன பயம் தெரியுமா...சமூகம் புரிஞ்சுக்கலைநா...அவர் மீசையை
   பிடிச்சு இழுத்து பிச்சுரு வங்களோன்னு பயம்...ஹாஹாஹா

   கீதா

   நீக்கு
  2. To,அதிரா
   உண்மை சமூக பயம் எனக்கு என்றுமே கிடையாது அதேநேரம் கௌரவபயம் எப்பொழுதும் எல்லா மனிதரிடமும் இருத்தல் அவசியம்.

   மேலே புகைப்படத்தில் உள்ளது எனது கருத்தல்ல யாரோ. எவரோ எழுதியது.

   நீக்கு
  3. கருத்து யாருடையதாயினும், நீங்கள் அக்செப்ட் பண்ணியமையாலதானே படத்தில் இணைச்சீங்க.. அதுக்குச் சொன்னேன்....
   கெளரவ மட்டருக்கு கொஞ்சத்தால வாறேன்:)...

   நீக்கு
  4. கௌரவம் படம் பார்த்துட்டு வர்றீங்களா ?

   நீக்கு
  5. ஹா ஹா ஹா கர்ர்ர்:) 4 கில்லர்ஜி.

   இல்ல கில்லர்ஜி கெளரவம் என்பது என்ன??.. சுற்றார்ர்.. சூழ இருப்போரால் நமக்குக் கிடைப்பதா இல்லயே?:.. நமக்கு நாமே ஏற்படுத்துவதுதானே.. அதவது நம் நடத்தை, ஒழுக்கம், பண்பாட்டைக் கடைப்பிடித்தல்.. இப்படிப் பல... அப்போ கெள்ரவம் என்பதும் நம்மால் நமக்குக் கிடைப்பதே தவிர அடுத்தவர்களா வந்து தரப்போகினம்:).. நாம் நல்லபடி இருந்தாலும் திட்டும் சமுதாயம்:), கூடாமல் நடந்தாலும் திட்டும்:).. அது சமுதாயத்தின் அந்நேர மனநிலையைப் பொறுத்தது:).. அதனால எதுவும் நமக்கு நாமே ஏற்படுத்தினால் மட்டுமே நிலையானதாகும்:)).. என் பட்டங்களைப்போல:)

   அதைத்தான் ஜொன்னேன்:))

   நீக்கு
  6. கீதா உங்கள் கருத்தும் கொஞ்சம் மனதுக்கு எடுத்துப் போகிறேன், வெளிநாடு வேறு... இந்தியா வேறு.. யாரும் தப்பாக எடுக்கக்கூடாது அறிஞ்சதைச் சொல்கிறேன்.. அங்கு செய்வினை, மருந்து வைத்தல் , வெட்டுதல், கொல்லுதல் சாதாரணமாக சின்னச் சின்னப் பிரச்சனைக்கே நடப்பதை அறிகிறோம்ம்... அதனால நாம் கொஞ்சம் ஒதுங்கி வாழ நினைக்கலாம் அப்படியான இடங்களில்.. மற்றும்படி எதிர்பார்ப்பு இருக்கக்கூடாது...

   நீக்கு
 3. காணொளியில் ஒலித்த பாடல் எனக்கு ரொம்ப பிடிச்சது .ஸ்கூல் படிக்கிற நாளில் ரம்ஜான் என்றால் இந்த பாட்டை கட்டாயம் ஒலிபரப்புவாங்க .

  என்னை பொறுத்தவரை மனிதம் அதற்குள் தான் மதம் வருகிறது ..ஆகவே நான் கிறிஸ்டியன் என்று சொல்லிக்கிறதைவிட முதலில் நல்ல ஹியூமன் பிறகே மதத்தை சொல்வேன் ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நான் அதிகம் விரும்பும் பாடல்களில் இதுவும் ஒன்று.
   ஆம் மதம் மறப்போம் காணொளி கண்டமைக்கு நன்றி

   நீக்கு
 4. சிலர் செய்யும் காரியங்கள் அடப்பாவிகளே எனும் அளவுக்கு வெறுப்பும் கோபமும் வரும் :(
  அதற்காக ஒட்டுமொத்தமா எல்லாரையும் குறை சொல்ல முடியாதே .பிடிச்சதை எடுத்துக்கிட்டு பிடிக்காததை அங்கியே விட்ருவேன் தண்டிக்கும் பொறுப்பையும் கடவுளிடம் விட்டுடுவேன் ..
  நல்ல பதிவு இந்த நாளுக்கு பொருத்தமான தலைப்பு மனிதம் காப்போம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் எல்லா மதத்திலும் நல்லவர், கெட்டவர் உண்டு
   இருப்பினும் இன்று உலக அளவில் கெட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

   இதற்கு அடிப்படை காரணம் மதமே இதைக் கலைந்தால் மனிதம் தளைக்கும்.

   நீக்கு
 5. மதங்களில் குறையில்லை. மனிதரில்தான் - மனிதரின் மனங்களில்தான் - குறை. வாழ்வது சிலகாலம், நட்பாய் வாழ்ந்து விட்டு .செல்லலாம். காணொளியில் வரும் பாடல் எனக்கு பிடித்த பாடல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் சொன்னதை நான் நூறுசதவிகிதம் நான் ஒத்து கொள்கிறேன் சில வரிகளில் மிக சரியாக சொல்லி விட்டார்

   நீக்கு
  2. ///மதங்கள் போதித்தது அன்பையே
   மனிதன் மறந்தது அது ஒன்றையே//

   இது நண்பர் திரு. கரந்தையார் அவர்களின் கருத்து.

   வருகைக்கு நன்றி ஸ்ரீராம்ஜி

   நீக்கு
  3. மதுரைத்தமிழரின் வருகைக்கு நன்றி

   நீக்கு
  4. ஐ ஒப்ஜக்சன் யுவ ஆனர்:).... மதங்களிலும் தவறிருக்கிறது:)..... ஹையோ வழி விடுங்கோ வழி விடுங்கோ இல்லாட்டில் நான் தள்ளி விழுத்தி உங்களுக்கு கராஜ் க்குப் போகும் நிலைமை வரலாம்ம்ம்ம்ம்ம்.... ஹையோ என் தேம்ஸ் எங்கேஏஏஏ? இங்கினதானே இருந்துது:).... அதையும் ஆரோ ஆட்டையைப் போட்டிட்டினமோ:)....

   நீக்கு
  5. ஜேம்ஸை ஆட்டையை போட்டாய்ங்களா ?

   நீக்கு
 6. ஜி எல்லா மதங்களும் ஒன்றுதான்...ஒன்றேதான் போதிக்கின்றன...மனிதன் புரிந்து கொள்வ தில்தான் தவறு கள் நடக்கின்றன....மதம்...ம உக்கிம் த விற்கும் இடையில். னி சேர்ப்போம்...

  கீதா: மேற்சொன்ன கருத்துடன்.. ஜி அது என்ன...அந்த படத்தில் உள்ள கருத்தில் முதல் லைன்...ம்ம்ம்ம் சமூகம் நம்மைப் புரிந்து கொள்ளலை நிறத்தை விட முதல்ல நாம் நம்மைப் புரிந்து கொண்டால்.. அது கைகொடுக்கும்....முதல் வரியை எதிர்கொள்ள. .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் மதங்கள் அன்பையே போதிக்கின்றன.
   நான் என்னை புரிந்து கொண்டவனே விரிவான கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 7. கில்லர்ஜி இப்படி தேம்ஸ் டைமுக்குப் போட்டா இங்க நட்ட நாடு ஜாமத்துல ராக்கோழி துளசி மாதிரி இருக்கரவங்க வாசிச்சுருவங்க.. ஹிஹிஹிஹி...நான் மாஸ்டெர் செஃப் ஐ சொல்லலனு வைரவர், கூவம், தேம்ஸ் எல்லாம் மீது சத்தியமா சொல்லறேன்...ஹாஹாஹா மீ எஸ்கே ப்...மாஸ்டர் செஃப்...முருங்கை கட்டை ய தூக்கும் முன் ஓடறேன்....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுக்காக அதிராவை ராக்கோழி என்று சொல்வது நல்லா இல்லையே.....

   நீக்கு
 8. இன்று பி.எஸ் .ராமையா அவர்கள் எழுதிய கதை படித்தேன் கதை பேர் 'நடசத்திரக் குழந்தைகள்'.
  அதில் வரும் அப்பா தன் குழந்தையிடம் "நாம் சத்தியத்தையே பேசுவதால் ; நாம் ஒவ்வொரு தடவையும் ஒரு உண்மையைச் சொல்லும் பொழுது ஒரு நடசத்திரம் பிறக்கிறது என்று சொல்கிறார்"

  குழந்தை கேட்கிறது அப்பாவிடம் " நான் கூட நிஜத்தையே சொன்னால் நடசத்திரம் பிறக்குமா அப்பா" என்று
  அப்பா : ஆமாம் அம்மா ! நீ ஒவ்வொரு தடவையும் நிஜம் சொல்லும் பொழுது ஒரு நடசத்திரம் பிறக்கிறது என்று//

  ஒரு நாள் ஒரு நடசத்திரம் கீழே விழ்ய்வதை குழந்தை பார்க்கிறது தன் அப்பாவிடம் அழுது கொண்டெ அப்பா யாரோ ஊரில் பொய் சொல்லி விட்டார்கள் அதுதான் நடசத்திரம் கீழே விழுந்து விட்டது என்று அழுகிறது.நடசத்திர குழந்தை கீழே விழுந்து இறந்து விட்டது என்ற அழுகை.


  உங்கள் பதிவுக்கு வந்தால் பொய் சொல்லாமை


  அதிராவின் பின்னூட்டத்தை நான் வழி மொழிகிறேன்.


  காணொளி பாடல் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதிக்கா சூப்பர் கதை...வாசிக்கணும்...எனக்கு நான் என் மகனுக்கு, என் பாட்டி தாத்தா என் சின்ன வயதில் நட்சத்திரம் விழுவதற்கான கதையைச் சொன்னதை சிறிது மாற்றிச் சொன்னது நினைவுக்கு வந்தது...நட்சத்திரக் கூட்டத்தில் எந்த நட்சத்திரம் தவறு செய்கிறதோ அந்த நட்சத்திரத்தை நட்சத்திரக் கூட்டத்தின் தலைமை அதான் சூரியன் "நீ பூமிக்குப் போய் சில காலம் வாழ்ந்துவிட்டு வா...அபோது உனக்குப் பலதும் புரியும் என்று சொல்லி அது தண்டனை அல்ல உனக்குப் புரிதலை ஏற்படுத்தவே என்று பூமிக்கு அனுப்புவதாகச் சொன்னேன். அப்போ என் மகன் கேட்டான் "அப்போ இந்த பூமிதான் நரகமா? அன்னிக்கு என் ஃப்ரென்ட் சொன்னான் அவங்க அம்மா அப்பா அப்படிச் சொன்னதா...தப்பு செஞ்சா நரகத்துக்கு அனுப்பிடுவார் கடவுள் அப்படினு..." நான் சொன்னேன் "இல்லைம்மா பூமி நரகம் இல்லை. சொர்கமே! பூமியின் வாழ்க்கையை, இயற்கையை நீ புரிந்து கொள்வதில்தான் இருக்கு! எப்போதும் பாஸிட்டிவா திங்க் பண்ணு உனக்கு இந்த பூமியும், வாழ்க்கையும் சொர்கமே...உன் ஃப்ரெண்டிடமும் சொல்லு...பயம் வேண்டாம்னு..." என்று மேலும் என் தாத்தா சொன்ன அந்தக் கதையை விவரித்துச் சொன்னேன்....குழந்தைகளுக்கு வாழ்க்கையைப் பற்றிய பயம் கூடாது...

   கீதா

   நீக்கு
  2. கீதா , மருமகளின் தோழி வீட்டுக்கு போன போது தோழியின் கணவர் வைத்து இருந்த புத்தகங்களைப் பார்த்துக் கொண்டு இருந்தேன் , அவர் அம்மா படித்து விட்டு தாருங்கள் என்று இரண்டு கதை தொகுப்புகள் கொடுத்தார் 100 சிறந்த சிறுகதைகள் . தொகுத்தவர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள். ஒரு தொகுப்பில் 100 கதை. 200 கதைகள் இருக்கிறது. அவற்றில் சில கதைகள் படித்தது.


   நீங்கள் சொன்ன கதையும் நன்றாக இருக்கிறது.

   நீக்கு
  3. சகோ கோமதி அரசு அவர்களின் குட்டிக்கதை அருமை

   இன்று இந்தக்கதைகள் எல்லாம் சொன்னால் குழந்தைகள் ஏற்றுக்கொள்வதில்லை மேலும் கதைகள் சொல்லும் பாட்டிகள் இருப்பதும் முதியோர் இல்லங்களே.... என்ன செய்வது ?

   நீக்கு
  4. வில்லங்கத்தாரின் மாற்றுக்கதையும் (திறித்து விடுதல்) நன்று

   நீக்கு
  5. கோமதிக்கா மிக்க நன்றி... ஆம் எஸ் ரா தொகுத்திருக்கிறார் அப்புத்தகம் அறிவேன். ஆனால் வாங்கவில்லை. அதில்தான் இருக்கிறதா. எஸ் ராவே இங்கு சென்னையில்ல் பூங்காக்களில் யார் ஏற்பாடு என்பது மறந்து விட்டது ஒரு சில வருடங்களுக்கு முன் அவர் குழந்தைகளுக்குக் கதை சொன்னதாக நினைவு. குழந்தைகளுக்குக் கதைகள் என்பது மிக மிக முக்கியம்.

   கில்லர்ஜி அப்ப்டி நிறைய நான் திரித்துவிடுதல் செய்திருக்கேன்...சில கதைகளைக் குழந்தைகள் ஏற்றுக் கொள்ளாது எனவே அவற்றிற்கு ஏற்றவாறு பாஸிட்டிவாக, பயம் ஏற்படாத வகையில் சொல்லியிருக்கேன்...என் மகனுக்கும் நிறைய சொல்லியிருக்கேன்.

   கீதா

   நீக்கு
  6. குட்டிக்கதை அழகு கோமதி அக்கா.. நானும் சின்ன வயதில் அம்மம்மா அப்பம்மா விடம் இருந்து நிறைய நிறையக் கதைகள் கேட்டிருக்கிறேன்...

   ஆனா இப்போதைய குழந்தைகளுக்கு கதைப்பதே ரைம் வேஸ்ட் என நினைக்கிறார்கள்.. போறிங் என்கிறார்கள் ஹையோ ஹையோ...

   நீக்கு
  7. இப்போது ஐபேடில் அவர்களே கதை, பாட்டு எல்லாம் படித்துக் கொள்கிறார்கள் .பாட்டி, தாத்தா எல்லாம் தேவை இல்லை அதிரா. விளையாட்டும் விளையாடுகிறார்கள். இப்போது குழந்தைகள் உலகம் தனி உலகம்.

   நீக்கு
 9. நல்லதொரு பகிர்வு. மனிதம் இருந்தால் போதும்.....

  பதிலளிநீக்கு
 10. நல்ல பகிர்வு.வாழ்துக்கள்!

  பதிலளிநீக்கு
 11. எது எதற்கோ தமிழைக் கையாளும் தாங்கள் மதம் என்ற சொல்லைக் கைக் கொள்ளலாமா?..

  கலை கலாச்சாரம் நன்னெறி நல்லொழுக்கம் இன்னும் பல -இவையெல்லாம் சார்ந்த ஆன்மிக வாழ்வினை சமயம் என்று சொன்னார்கள் நமது ஆன்றோர்கள்..

  மதம் எனும் சொல் எப்படி இதற்கு மாற்றாகப் புகுந்தது என்று தெரியவில்லை..

  மதம் - என்ற வடமொழிச் சொல்லின் பொருள் வேறு..

  விரும்பினால் வாருங்கள் - நாம் தனியே உரையாடுவோம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி ''மதம்'' இது வடமொழிச்சொல் என்பது தாங்கள் மூலமே இன்று அறிகிறேன் மேலும் விடயங்கள் அறிய ஆவலுடன் தகவலுக்கு நன்றி ஜி

   தமிழில் எப்படி சொல்வது ?

   நீக்கு
 12. அன்பின் ஜி..

  நமது ஆன்மீக வாழ்வின் நெறிமுறைகள் சமயம் என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன..

  முந்தைய கருத்துரையில் குறித்திருக்கின்றேனே!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜி சமயம் என்பது அறிந்ததே ஆனால் மதம் என்பது வடமொழிச்சொல் என்பதை இன்றே அறிந்தேன்.
   தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி ஜி.

   நீக்கு
 13. மதம் பற்றியும் மனிதம் பற்றியும் நிறையவே பேசப்படுகின்றன ஆனால் பேசியதை ஒழூகுவதில் நிறையவே குறைகள்

  பதிலளிநீக்கு
 14. 'மதம்' - பெயரே அதன் விளைவையும் சொல்லுதே. இருக்கும் நன்னூல்களில் பிழை இல்லை. அதனை practice செய்யும் மக்களிடம்தான் பிழை. அதற்கு 'மத நூல்கள்' என்ன செய்யும்? மனிதனிடம், 'மதம் என்ன சொல்லியிருக்கு'ன்னு ஒருத்தர் விளக்கினா, அதனைப் புரிந்துகொள்ளாமல், விளக்கியவரை 'கடவுள்' ஸ்தானத்துக்கு உயர்த்திடறான். பிரச்சனை மனிதர்களிடம்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அருமையான கருத்தை முன் வைத்தமைக்கு நன்றி.

   நீக்கு
  2. நன்றாக சொன்னீர்கள் நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 15. ஹா....ஹா...ஹா..உணவருந்தி மலம் கழிக்கும் மானிடர்கள்...ஹா....ஹா..ஹா..என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை நண்பரே...

  பதிலளிநீக்கு
 16. உணவும் அருந்தாமல் மலமும் கழிக்காமல் இருக்க நாம் கடவுள் (தவ) நிலையை அடைய வேண்டும் சாதரண மனிதனுக்கு சாத்தியமில்லாது மனிதம் காப்போம் உணவருந்தினாலும் அடுத்தவர் பசியை உணர்வோம், அடுத்ததிலும் அடுத்தவர் கஷ்டத்தை உணர்ந்து வழிவைக்க செய்வோம், இதுவே மனிதம்.
  மதம் என்னும் மதம் தலைக்கு ஏற்றாமல் பார்த்து கொண்டால் யாரையும் மிதிக்காமல் கடந்துவிடலாம்
  முதலில் படத்தில் இருப்பது மிகவும் சூசகமமான வார்த்தை ..அருமை .,காணொளி அருமை நன்றி பகிர்ந்ததற்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக அழகாக விவரித்து எழுதிய கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 17. மதங்களைத் தாண்டியது மனிதம். ஆனால் எவருக்கும் அது தெரிவதில்லை. என்ன செய்ய முடியும்! :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ அழகாக சொன்னீர்கள் வருகைக்கு நன்றி

   நீக்கு
 18. அருமையான சிந்தனை...

  நன்றி ஜி...

  பதிலளிநீக்கு