தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், டிசம்பர் 12, 2017

கோவில்பட்டி, கோடாங்கி கோமுட்டி


வணக்கம் நட்பூக்களே... எமது பள்ளி நண்பன் வருசைமுத்து வாழ்க்கையில் விரக்தியாக இருக்கிறது அதனால் எத்தனையோ சோசியர்களை பார்த்து மனம் நொந்து விட்டேன் என்று என்னிடம் வந்து வருந்தினான். சரியென்று நம்ம சோலந்தூர், சோசியர் சோனைமுத்து அவர்களிடம் அழைத்து போகலாம் என்று சொன்னேன் அதற்கு...
அவன் கெடக்கான் வெளங்காமட்டை எத்தனை தடவை பார்க்கிறது போன வருசம் வைகாசிக்குள்ளே எனக்கு புதையல் கிடைக்கும்னு சொன்னான் அவனை நம்பி ஊரைச்சுத்தி கடன் வாங்கி செலவழிச்சுட்டேன் ஒரு எலவும் கெடைக்கலை வேற யாரும் இருந்தால் சொல்லேன்.
சரி நம்ம உசிலம்பட்டி, உடுக்கையடி உலகநாதன் அவர்களை பார்ப்போமா ?
நல்ல ஆளைச் சொன்னே.... அவன் பெரிய உலகப்பிராடு அமெரிக்காவுலருந்து எனக்கு விசா வரும்னு சொன்னான் ரெண்டு வருசமாச்சு வரவேயில்லை.
ஏதாவது ஏஜண்டைப் பார்த்தியா... பணம் கட்டி இருக்கியா ?
நான் யாரையும் பார்க்கலையே ?
பின்னே எப்படி விசா வரும் ?
அவருதான் சொன்னாரு வரும்னு...
ஏண்டா... நானாவது நாலாப்பு வரை படிச்சு இருக்கேன் இங்கிலீஷ் எழுத்துக் கூட்டியாவது படிச்சுருவேன். நீ ரெண்டாவது படிக்கும் பொழுது வசந்தி’’னு எழுதச் சொன்னதுக்கு சிலேட்டுல வா சாந்தி’’னு எழுதி சாந்தி டீச்சருக்கு காண்பிச்சதுக்குத்தானே டீச்சர் வச்ச அறையில ஓடுனவன் மழைக்குகூட பள்ளிக்கூடம் ஒதுங்க மாட்டியடா.... எப்படி உனக்கு இப்படி எல்லாம் பேராசை வருது மதுரைக்கார தமிழர்கள் யாராவது உனக்கு விசா அனுப்புறேன்னு சொன்னாங்களா ?
எனக்கு யாரும் மதுரைக்காரவுங்க பழக்கம் இல்லையே....
சரி இப்ப என்னதான் யோசனையில இருக்கே ?
உடனே முன்னேறணும் அதுக்கு ஏதாவது சொல்லேன் ?
உழைக்கணும் அதுதான் வழி.
அது நமக்கு சின்ன வயசுலருந்து ஆகாதே...
இப்படியே காலம் பூராம் சோசியம் பார்த்துகிட்டே இருந்தால் என்னாகும் ?
கோவில்பட்டியில் ஏதோ கோடாங்கி இருக்கிறதா கேள்விப்பட்டேன் உனக்கு தெரியுமா ?
ஆமா நம்ம கோமுட்டிதான் இருக்காரு..
சரி அவரைப் போயி பார்த்து விட்டு வருவோம்.

அதன்படி கடந்த வாரம் நானும் வருசைமுத்துவும் கோவில்பட்டி போனால் அங்கு வரிசையில் நின்றது கூட்டம் வேறு வழியின்று நானும், வருசையும், வரிசையில் நின்று எங்களுக்கான நேரம் வரும் பொழுது பார்த்தோம் வருசையின் எதிர்காலம் குறித்து அவன் பக்கத்தில் அமர்ந்து கேட்டான்.

கோ.கோ.கோ- என்னடா பிரச்சனை ?
வ.மு- சீக்கிரம் முன்னேறுறதுக்கு ஒரு தொழிலை சொல்லுங்க சாமி.
கோ.கோ.கோ- என்னடா படிச்சுருக்கே... ?
வ.மு- எதுவுமே படிக்கலை சாமி

மற்றவைகளை நீங்களே காணொளியில் பாருங்கள். ஆகவே அடுத்த வருடம் 2018 முதல் எனது நண்பனின் அதிரடி அரசியல் பிரவேசம் நடக்கலாம். நான் கோ.கோ.கோ.வின் எதிர்புறம் அமர்ந்து அவருக்கே தெரியாமல் எனது பென் கேமராவில் நான் சுட்டது.

காணொளி

44 கருத்துகள்:

 1. ஹா ஹா ஹா நீங்க சூட்:) பண்ணிய வீடியோ நல்லாத்தான் இருக்கு:).. இருப்பினும் ஜாமத்தில இப்பூடி வீடியோப் போட்டு எங்களை எல்லாம் லைட் போட்டு நித்திரை கொள்ள வைக்கிறீங்களே.. கர்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்ககூடவா பயப்படுவீங்க இதைக்கேட்டு நான் வியக்கேன்.

   நீக்கு
 2. ஹா ஹா ஹா மதுரைத்தமிழன் விசா அனுப்பப்போறாரோ?:).. இது ட்றம்ப் அங்கிளுக்குத் தெரியுமோ?:).. நான் ட்றம் அங்கிளின் பேசனல் செக்கரட்டறி என்பதை மறந்து எல்லாத்தையும் உளறிட்டீங்களே:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா அதிரா இது என்ன புது போஸ்ட்!!! எப்பலருந்து?!!!

   கீதா

   நீக்கு
  2. வருசைமுத்துவுக்கு மதுரைத்தமிழன் நண்பரோ, என்னவோ...

   உங்கள் ட்றம்ப் அங்கிளுக்கு ஒரு கிட்டார் வாங்கி கொடுத்தால் விசா கிடைக்குமா ?

   நீக்கு
  3. ஹலோ அவர் மதுரைக்கார தமிழர்கள் என்றுதான் சொல்லி இருக்கிறார் மதுரைத்தமிழன் என்று சொல்லவில்லை... எனக்கு இவாங்க கேர்ல் பிரண்டுன்னா அதிரா எனக்கு அத்தை முறையல்லவா?

   நீக்கு
  4. முறையை சரியா சொல்லணும் :) அதிரா அத்தை இல்லை அத்தை பாட்டி முறை உங்களுக்கு :)

   நீக்கு
 3. ​ரசித்தேன். பகடி சுவாரஸ்யமாக இருந்தது.​

  பதிலளிநீக்கு
 4. ஹா ஹா ஹா ஜி நல்ல கலாய்த்தல்....

  அதை ஏன் கேக்கறீங்க எங்க வீட்டுலயும் ஒரு உறவினர் இருக்காங்க அவங்க சனி பத்தி சொன்னதை முன்னரேயே ஒரு பதிவு எழுதினேம்ன்...இப்ப புது வருஷம் வேற வருதா அவங்க இப்ப நிறைய கால்ஸ்...அந்த கிரகம் இந்தக் கிரகம் அப்படினு..புதுவருஷம் கிரஹம் மாறுதல் என்று எனக்கு அட்வைஸ் மேல அட்வைஸ்...அதைப் புண்ணு இதைப் பண்ணு என்று..... சோசியக்காரங்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான் ஜி!!இப்படியான ஆளுங்க இருக்கற வரை...!!.என் உறவினர் சொன்னது அதையும் எழுதி வைச்சுருக்கேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லா மனிதர்களும் தன்மீது நம்பிக்கை வைத்து உழைத்தால் இந்த மாதிரியான கோமுட்டிகளை விரட்டி விடலாம்.

   நீக்கு
 5. வீடியோவில் உள்ளதுதான் இப்ப நடக்குது!!!! பல அறிவிலிகள் ஏமாறுகிறார்கள்...

  கிரகங்களை விட அந்த ஆளுதான் பயமுறுத்தறாரு ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏமாளிகள் உள்ளவரை ஏமாற்றுபவர்களை அழிக்க இயலாது.

   காணொளி கண்டு பயந்தால் நேரில் கண்ட எனக்கு எப்படி இருந்திருக்கும் ?

   நீக்கு
 6. சாம கோடாங்கி குடிசைக்குப் பக்கத்துல
  யாரோ டீக்கடை போட்டுட்டாங்களாமே!..

  ஏவாரம் பிச்சுக்கிட்டு ஓடுதாம்...லே!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி டீக்கடை வருமானத்தில் மூன்று பெண்களை கரையேற்றி விட்டதாக தகவல் வந்தது ஜி

   நீக்கு
 7. ஹலோ கில்லர்ஜி இந்த கோடாங்கியை அதிராவூட்டு பக்கம் அனுப்பி வையுங்க இவருக்கு பயந்தாவது எங்க அத்தை அதிரா தேம்ஸ் நதியில் குதிக்கிறாங்களா என்று பார்க்கலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லோரும் சேர்ந்து எப்படியாவது அதிராவை ஜேம்ஸ் ஊரணியில் தள்ளி விடத்தான் நினைக்கின்றீர்கள்.

   அதிரா மொத்தமாக எல்லோரையும் தள்ளி விடாமல் இருக்கணும்.

   நீக்கு
 8. கோவில்பட்டி கோடாங்கி, மற்றவர்களுக்கு கோடாங்கி அடித்து, அவர் வாழ்க்கைக்கு சம்பாதிக்கிறாரே. அதை யார் கேட்பது?

  பதிலளிநீக்கு
 9. வருக நண்பரே அவரை நம்பி ஏமாறுபவர்கள் எப்படி கேட்க முடியும் ?

  பதிலளிநீக்கு
 10. கோ கோ கோ வின் Appointment கிடைக்குமா...பம்பாய் புயல் வந்து கடலில் முங்கப்போகுதுனு. ப.கோ.பயமுறுத்துது.. நம்ம கோ கோ கோ என்னசொல்லுதுனு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோவில்பட்டி போய் கோமுட்டி என்றால் சின்னக்குழந்தையும் சொல்லும்...

   இணையத்தில் புக் செய்து கொள்ளலாமே...

   நீக்கு
 11. எனக்கு காணொளி திறக்க மாட்டேன் என்கிறதே

  பதிலளிநீக்கு
 12. நல்ல கோடங்கி!அவருக்கே ஜோசியம் பார்த்துக்கக் கூடாதோ? மத்தவங்களுக்குச் சொல்லும் அவர் தனக்கு என்னனு முதல்லே பார்த்துக்க வேண்டாமோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவரு, அவருக்கு பார்த்துதானே சம்பாதிக்கின்றார்.
   அவரு வாழ்க்கை நல்லாத்தான் இருக்கு, பார்க்க போறவன்தான் கஷ்டப்படுறான்.

   நீக்கு
 13. சில நிட நேரங்களுக்குப் பின் காணொளி திறந்தது அனைத்தும் உண்மை

  பதிலளிநீக்கு
 14. கோடாங்கி அங்கிளை கொஞ்சம் எங்க ஊர் பக்கம் அனுப்பி வைங்க :) brexit விஷயம் இன்னும் தீர்வுக்கு வரலை :)
  அவர் வந்தாஎதாச்சும் வழி கிடைக்கும் :)) அவரை இன்டர்நெஷனல் லெவலில் பெரியாளாக் கி விட்ரலாம் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனுப்பலாம் அவரை இண்டர்போல் ஜெயிலில் போட திட்டமிடுவது போலிருக்கிறதே...

   நீக்கு
  2. ஒரு விளக்கை கொளுத்தி அதை வீட்டுக்குள் வச்சா வீட்டுல இருக்கவங்களுக்கு மட்டுமே வெளிச்சம் கிடைக்கும் :)
   நான் உலகத்துக்கே வெளிச்சம் தர வைக்க யோசனை சொல்றேன் :)
   நம்ம கம்ப பாரதி மாஸ்டர் செப் வச்சிருக்காங்களே பட்டப்பெயர் இதெல்லாம் விட லண்டன் புகழ் ஐரோப்பா புகழ்னு சொல்லி பாருங்க :) அதான் ஐடியாக்கொடுக்கிறேன்

   நீக்கு
  3. ஆஹா நல்ல எண்ணம்தான் இந்த கருத்தை திரு.கோ.கோ.கோ அவர்களுக்கு மின்னஞ்சல் செய்கிறேன்.

   நீக்கு
 15. கோவில்பட்டி கோடாங்கி சூப்பரு....

  பதிலளிநீக்கு
 16. Virivana pathil koduka mudiyalai ji tha. Ma bota mudiyalai pH kaanpikavillai sorry eppavum pol super

  பதிலளிநீக்கு
 17. நம் நாட்டில் பலர் இப்படித்தான் ஜோசியம் பார்த்தால் போதும் வேறு எதுவும் செய்ய வேண்டாம் என்று நினைக்கிறார்கள். ஹ்ம்ம்! கோடாங்கி பிரமாதம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சோசியருக்கு கொடுக்க வேண்டிய கூலிக்காவது உழைக்கணுமே...

   நீக்கு
 18. என்னாது கோமுட்டி என்றால் சின்ன குழந்தையும் சொல்லுமா...? என்னிடம் எந்தக் சின்னக் குழந்தையும் சொல்லலீயே......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே மதுரையில் கேட்ககூடாது கோவில்பட்டியில் போய் கேளுங்கள்.

   நீக்கு