‘உலகத்தை படைத்தது நிச்சயம் கடவுளல்ல; இயற்கை தனக்கு தானே படைத்துக் கொண்டதுதான் உலகம்’’ என்று இங்கிலாந்து இயற்பியல் விஞ்ஞானி Stephan Hacking தெரிவித்துள்ளார் அண்ட சராசரம் பற்றி ஆராய்ந்து புத்தகம் எழுதுவதில் அவர் பிரபலம். 1988-ல் அவர் எழுதிய A Freed History of Time என்ற ஆராய்ச்சி புத்தகம் சர்வதேச அளவில் விற்பனையில் சக்கை போடு போட்டது. மேலும் அவர் The Grand Design என்ற புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில் இடம் பெற்றுள்ள சில அம்சங்களை லண்டனைச் சேர்ந்த The Times நாளிதழ் வெளியிட்டுள்ளது.
புத்தகத்தில் Stephan Hacking கூறியிருப்பதாவது: புவி ஈர்ப்பு தத்துவத்தை Sir Isaac Newton வெளியிட்டார். அதுதான் அண்டவெளியின் ஆதாரம். ஈர்ப்பு
சக்திதான் உலகை தாங்கிப் பிடிக்கிறது. அதன் தொடர்ச்சியில்தான் உலகம் உருவானது. புவியீர்ப்பு விதியின்படிதான் உலகம்
நிலைத்திருக்கிறது. அதே விதிப்படிதான் தன்னைத் தானே அது படைத்துக் கொண்டிருக்க முடியும்.
அறிவியல் ரீதியாக உலகைப் பார்ப்பவர்களுக்கு, அறிவியலை புரிந்து கொண்டவர்களுக்கு அதை உருவாக்கியதில் இறைவனின் ஐடியா இருப்பதாக நம்ப வேண்டிய அவசியம்
இருந்ததில்லை இருப்பதில்லை என்று புத்தகத்தில் Stephan Hacking கூறியுள்ளார். அறிவியல் ஆராய்ச்சியில் டிவி நிகழ்ச்சிகள் டாக்குமென்டரிகளில் உலக புகழ் பெற்றவர் Hacking.
மீஈஈஈஈஈஈ மீஈஈஈஈஈஈ மீஈஈஈஈ தான் 1ஸ்ட்டூஊஊஊ:)
பதிலளிநீக்குஎனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும்.... இப்போ கில்லர்ஜி க்கு என்ன பிரச்சனை????:)... கடவுள் இல்லை என எல்லோரும் ஒத்துக்கொள்ளோணும் என்பதோ???:)... இல்ல மனிதரைப் படைச்சது ஆர் என்பதோ?:)...
பதிலளிநீக்குஹையோ நான் இப்போ கொயம்பிட்டேன்ன்ன்ன்:)... இதுக்குப் பதில் சொல்ல உடனடியாக கீதாக்காவை மேடைக்கு அழைக்கிறேன்:)...
இல்லைனு நான் எப்ப சொன்னேன் ? எல்லோரும் ஒரே மாதிரி சொன்னால் நல்லதுனுதான் சொல்லணும்னு நினைக்கிறேன்.
நீக்குகில்லர்ஜி... விடிய எழும்பினோமா சமைச்சோமா சாப்பிட்டோமா என இருக்காமல் எதுக்கு இப்போ இங்கிலாண்டூஊஊ டொக்கியூமெண்டறி எல்லாம் படிச்சு பீதியைக் கிளபுறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்:)
பதிலளிநீக்குவாங்க என்ன செய்வது எனக்கு பஜ்ஜி வடை சுடத்தெரியலையே.......
நீக்குஇவர் இறைவன் என்ற பதத்தை பயன்படுத்தியதே ஆச்சர்யம் ..இவருக்கும் இவரது மனைவிக்கும் எப்பவும் இந்த கடவுள் நம்பிக்கை விஷயத்தில் பெரும் வாக்குவாதம் நடக்குமாம் .மனைவி தீவிர நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர் .ஸ்டிபன் atheist :) ..
பதிலளிநீக்குயெஸ் ஏஞ்சல்!!!
நீக்குகீதா
நல்ல ஜோடிப்பொருத்தம் இறைவன் காரணத்தோடுதான் இணைப்பான் தகவலுக்கு நன்றி.
நீக்குஇந்த ஐயா நரம்புகள் பாதிக்கப்பட்டு தீசிஸ் பற்றி உரையாற்றும்போதே விழுந்தவர் கோமாவில் போய்ட்டார் .டாக்டர்ஸ் இவரது மனைவியை அழைத்து இவருடைய லைஃப் சப்போர்டிங் மெஷினை எடுக்கப்போறோம் சொன்னப்போ ..பிரார்த்தனை செஞ்சி மனைவி எடுக்கக்கூடாதுன்னு சொன்னார்களாம் .இவர் அந்த நிகழ்வுக்கு பின்னர் வாழ்நாளெல்லாம் வீல் சேரில் தான் பேசவும் முடியாது .tracheotomy செஞ்சிருக்காங்க .ரெண்டு வருஷம் தான் வாழ்வார்ன்னு டாக்டர்ஸ் சொல்லியும் இவ்ளோ காலம் வாழறார்னா அது இறைவன் நமக்கு மேலே இருக்கிற கடவுள் தான் காரணம் :)
பதிலளிநீக்குஇவர் பற்றிய திரைப்படம் ஆஸ்கர் அவார்டலாம் வாங்கியிருக்கு The Theory of Everything
ஆம் ஏஞ்சல்.எஸ் எஸ்.....நான் இதைப் சொல்ல வந்தப்ப நம்ம நெட் அவுட்டு....இப்பிக கூட மொபைல் வழிதான்....
நீக்குஇந்தப் படம் எங்கள் வீட்டில் ரொம்பவே விவாதிக்கப்பட்டது....
கீதா
விரிவாக தகவல் தந்தமைக்கு மீண்டும் நன்றி.
நீக்குதங்கள் அறிவியல் ஆய்வை வரவேற்கிறேன்.
பதிலளிநீக்குகடவுள் மனிதனைப் படைத்தார் - அத்துடன்
அவரது பணி முடிந்து விட்டது - அடுத்து
ஆக்குவதும் அழிப்பதும் மனிதன் தான் - அதன்
விளைவுகளைச் சந்திப்பதும் மனிதன் தான் - அதற்கான
அத்தனையும் மனிதனுக்குள் படைத்தவர் கடவுளே!
வருக நண்பரே மிகச்சரியான கருத்தை முன் வைத்தமைக்கு நன்றி.
நீக்குஸ்டீஃபன் ஹாக்கிங்கின் ப்ளாக் ஹோல் தியரி மிகப் பிரபலம் அடைந்தது என்றால் அதன் பின்னர் வந்த நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இப்புத்தகம் சக்கை போடுபோட்டது.தலைவர் சுஜாதாவும் இவரைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். எங்கள் வீட்டில் இந்த ப்ளாக் ஹோல் தியரி பற்றியும் பிரபஞ்சம் பற்றியும், டியம் மெஷின் பற்றியும் அறிவியல் ரீதியாகவும், நம் முன்னோர்கள் அதாவது பிரபஞ்சம் பற்றி நம் முன்னோர்கள் இறையியல் ரீதியாகவும் நிறைய பேசுபவர்கள் உண்டு.
பதிலளிநீக்குஇவரைப் பற்றி வாசித்திருக்கிறேன். அவர் புத்தகத்தை நேரடியாக வாசிக்கும் அளவிற்கு எனக்கு இயற்பியல் அறிவு இல்லை. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஏனென்றால் அவர் சொல்லியிருப்பது நம் பண்டைய ஸாஸ்திர(அறிவியல்) நூல்களில் இருக்கிறது...எனது தனிப்பட்டக் கருத்து அப்படிப் பிரபஞ்சம் உருவாவதைத்தான் நம்மை மீறிய சக்தி என்றும் அதனால் விளையும் கான்ஸிக்வென்ஸை நாம் இறையியல் மூலமாகவும், ஜோதிட ஸாஸ்திரம் மூலமாகவும் நாம் சொல்லி அதற்குப் பல வடிவங்கள் கொடுத்து, பல நம்பிக்கைகள் வழி வழியாக வந்து அதில் மூடநம்பிக்கைகளும் கலந்து பல கதைகள் உருவாகி என்று போகிறது. அந்தப் பிரபஞ்ச சக்தியை அவர் மற்றும் அவர் போன்று சிந்திப்பவர்கள் அறிவியல் என்கிறார்கள், பிறர் கடவுள் என்கிறார்கள்.(அதற்குப் பல வடிவங்கள் கொடுத்து) நானும் இரண்டாவது கட்சி. நம்மை மீறிய சக்தி ஏனென்றால் அந்த சக்தியை அத்தனை எளிதில் முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடியாது.
கீதா
நம்மை மீறிய சக்தி நிச்சயமாக உண்டு என்பதை நம்புகின்றவன் ஆனால் எல்லாவற்றுக்கும் மூட நம்பிக்கையை கையிலெடுக்கும் விசயங்களில் எனக்கு என்றுமே உடன்பாடில்லை.
நீக்குஎங்கள் குடும்பத்தில்இது விவாதமாகவே நடக்கும்...அதாவது ஆக்கப்பூர்வமான விவாதமாக. ப்ளாக் ஹோல் தியரி, இறையியல். சிறியவர்கள் முதல் வகையிலும், பெரியவர்கள் இரண்டாவது வகையிலுமாக....நான் ஜஸ்ட் கூர்ந்து பார்க்கும் பார்வையாளராக. எனக்கு இரண்டிலுமே அதிக அறிவு கிடையாது. பார்வையாளரும் வேண்டுமே!! ஹா ஹா ஹா ஹா...
பதிலளிநீக்குகீதா
பார்வையாளராக இருப்பதில் பலனும் உண்டு சிக்கலும் உண்டு கவனமாக பேசியாக வேண்டும்.
நீக்குஸ்டிபன் கடவுள் இருக்கிறார் என்று சொல்லவில்லை. இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என்று சொல்கிறார்.
பதிலளிநீக்கு:)))
ஸ்ரீராம்ஜி இது அதிராவின் அங்கிள் சொன்ன கருத்து.
நீக்குஸ்ரீராம். . .ஹா ஹா ஹா...எஸ்...அதே...
நீக்குகில்லர்ஜி.. ஹா ஹா ஹா அதிராவின் அங்கிள்...ஹாஹா
கீதா
படித்த விஷயத்தினை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்குஎல்லாமே நம்பிக்கை தானே....
வாங்க ஜி வருகைக்கு நன்றி
நீக்குஓஹோ.... இவ்வளவு நடந்திருக்குதா!?..
பதிலளிநீக்குஆமாம் ஜி ஒரு பக்கம் என்னவெல்லாமோ நடக்குது.
நீக்குஎன்னிடம் இந்த நூல் இருக்கிறது
பதிலளிநீக்குபடித்திருக்கிறேன் நண்பரே
இறைவன் இருக்கிறார் என்று இந்நூலில் அவர் எங்கும்
ஒப்புக்கொள்ளவே இல்லை நண்பரே
தம+1
வருக நண்பரே தங்களது கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி.
நீக்குபடிப்பதைப் பகிரும்போது ஆழ்ந்து சிந்தித்து எழுதும் உங்கள் பாணி நன்றாக உள்ளது. இவ்வாறாகத் தொடருங்கள். எங்களுக்கும் பல நூல்களைப் படித்த உணர்வு ஏற்படும்.
பதிலளிநீக்குமுனைவர் அவர்களுக்கு ஒரு மதம் சொல்லுகிறது ‘’மதங்களே இல்லை’’ என்று பிறகு அதே மதம் சொல்கின்றது (இந்து மதம் அல்ல) ‘’பிற மத மனிதர்களின் உணர்வுகளை மதிக்கத் தெரிய வேண்டும்’’ என்று இது முரண் இல்லையா ?
நீக்குஆகவேதான் நான் படித்த விடயங்களில் எனது ஐயத்தையும் பதிவு செய்கிறேன் தங்களின் வருகைக்கு நன்றி.
கில்லர்ஜி மற்றொரு கருத்து...இந்தப் பிரபஞ்ச சக்தியைப் பற்றி முன்பே இறையியல் ரீதியாக ஒவ்வொரு மதமும் சொல்லியிருக்கிறது இல்லையா...அதன் பின் வந்தவை எல்லாம் நம் மக்கள் ஏற்படுத்திய பிரிவுகளே..நம் உடல் அணுக்களால் ஆனது என்றும், இறக்கும் போது அணுக்கள் காற்றில் கலக்கிறது என்றும் இயற்பியல் கூறுவது என்றும் சுஜாதா இவரைப் பற்றிச் சொல்லி கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார். அப்படிப் பார்க்கும் போது நாம் எல்லோருமே இறுதியில் அதாவது நமது அணுக்கள் இந்தப் பிரபஞ்சத்தில் தான் கலக்கின்றன...அப்ப எல்லோரும் ஒன்னுதானே...இந்த பூமியில்தான் இத்தனை வேறுபாடுகள்...இதில எதுக்கு அவன் இந்த அறிவைத் திருடிட்டான்...இவன் அந்த அறிவைத் திருடிட்டான்னு விவாதங்கள் எழுகின்றனவோ.....இப்படியான விவாதங்களும் கூட ஒருவிதமான வேற்றுமையைக் கிளப்புவது போலத்தான் இருக்கு..
பதிலளிநீக்குகீதா
விவாதங்கள் மனித இனம் அழியும்வரை நடக்கும்.
நீக்குஇந்த ப்ளாக் ஹோல் தியரியிலும் நிறைய விவாதங்கள் இருக்கின்றன.
பதிலளிநீக்குஅணுவிற்கு ஆக்கமும் இல்லை அழிவும் இல்லை...அப்படிப் பார்க்கும் போது பிரபந்தத்திலும். சைவசித்தாந்தத்திலும், ஏன் சமணர் பற்றி விஜு ஜோசஃப் எழுதிவந்தாரே அதிலும் கூட சொல்லப்பட்டிருக்கிறது. அணுவிலும் அணுவாய் என்றுதான் இறையியல் சொல்லுகிறது. இறைவன் என்ற கான்செப்டை நம்புகிறோமோ இல்லையோ, இந்தப் பிரபஞ்ச சக்தியை நம்பாமல் இருக்க முடியுமோ..அப்ப நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கத்தானே செய்கிறது...அதைத்தான் இறைவன் என்ற ஒரு குறியீட்டின் மூலம் எளிதாகச் சொல்ல விழைகிறார்கள்.
என்னதான் மனிதன் கண்டுபிடித்தாலும் விதி/இயற்கை வலியது...இதைக் குறித்து ஒரு கதையும் எழுதியிருக்கிறேன்...இன்னும் கொஞ்சம் எடிட்டிங்க் வேலை இருக்கிறது அதற்கு ஒரு மூட் வரவில்லை இன்னும்...ஆனால் அதை நான் முடிக்கும் முன் வேறு எவரேனும் அதைக் குறித்து, இந்த ரீதியில் எழுதியிருப்பார்கள்....கதை ஹோல்ட் ஆன்/ட்ராஃப்ட் ஃபோல்டரில் போய்விடும்...ஹா ஹா ஹா ஹா ஹா...
கீதா
ஆம் நானும் படித்த ஞாபகம் இருக்கின்றது
நீக்குதங்களது கட்டுரை வரட்டும் வெளியிடுங்கள்.
கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்.
பதிலளிநீக்குகண்ணதாசன் சொல்லியிருக்கிறாரே...
உண்டு என்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை
பக்தி நூல் சொல்கிறதே..
உளன் எனில் உளன் அவன்.....
உளன் அலன் எனில் அவன்....
வருக நண்பரே நிச்சயமாக மனிதன் இறந்த பிறகே இறைவனை காண இயலும் என்பது மட்டுமல்ல, கண்டே தீரவேண்டும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.
நீக்குஅதேநேரம் இறைவனுக்கு பால்காவடி, பன்னீர் செல்வம் காவடி, எடப்பாடி காவடி தூக்குவதில் என்றுமே உடன் பாடில்லாதவன்.
எத்தனையோ நாத்திகவாதிகளை எங்கள் குடும்பத்தில் பார்த்தாச்சு! தீவிர கம்யூனிஸ்டாக இருந்தவங்களும் உண்டு. எல்லோரும் பின்னர் மாறியதையும் பார்த்து வருகிறேன். இங்கே ஸ்டீஃபன் ஹாக்கிங் பற்றிச் சொல்வதும் அது போல் தான் இருக்கும் என எண்ணுகிறேன். ஹாக்கிங் குறித்து அறியாத பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குவருக சகோ எனது அனுபவத்திலும் பலரும் காலம் மாறும்போது கொள்கைகளும் மா(ற்)றிக் கொண்டவர்கள் உண்டு.
நீக்குஉதாரணம் திரு. கண்ணதாசன் அவர்கள் இல்லையா ?
வருகைக்கு நன்றி சகோ.
சரிதான் அவரவர் வழியில் அவரவர் ,அறிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குவருக தங்களது வருகைக்கு நன்றி
நீக்குஸ்டீஃபன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking) பற்றி எழுதி உசுப்பிவிட்டிருக்கிறீர்கள். இந்த நூற்றாண்டின் சிறந்த இயற்பியலாளர் (Physicist) என்பதோடு, சுவாரஸ்யமான மனிதராகவும் அவர் தென்படுகிறார். அவர் சொன்ன சில விஷயங்களைக் கவனித்தேன். நண்பர்கள்/நண்பிகளுடன் பகிர்கிறேன் கொஞ்சம் :
பதிலளிநீக்கு1. முதிர்ச்சியே அடையாத சிறுவன் நான். இன்னமும் ‘ஏன்’, ‘எப்படி’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறேன். சிலசமயங்களில் விடையையும் கண்டுவிடுகிறேன்.
2. நான் ஒரு நாஸ்திகன்.
3. நான் சாவைக் கண்டு அஞ்சவில்லை. ஆனால் சாவதற்கான அவசரத்தில் நான் இல்லை. எனக்கு செய்யவேண்டியது நிறைய இருக்கிறது.
4. கருங்குழிக்குள் (Black hole) மனிதனுக்குத் தேவையான தகவல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன என்று நினைத்திருந்தேன். விஞ்ஞானரீதியாக, என்னுடைய மடத்தனமான தவறு அது.
5. கடவுள் இருக்கக்கூடும். ஆனால், கடவுளின் அவசியம் இல்லாமலேயே விஞ்ஞானத்தால் பிரபஞ்சம்பற்றிச் சொல்லிவிடமுடியும்.
6. வாழ்வெல்லாம், காலத்தைப்பற்றி நினைத்து ஆச்சரியப்பட்டுக்கொண்டிருந்தேன்.
7. கடவுள், தாயம் விளையாடுவதுமட்டுமல்ல. சிலசமயங்களில் தாயக்கட்டைகளைக் கண்காணாத இடத்துக்கு உருட்டியும் விட்டுவிடுகிறார்.
8. பிரபஞ்சத்தைத் தோற்றுவிக்குமுன், கடவுள் என்ன செய்துகொண்டிருந்தார் ?
9. 1982-ல் பிரபஞ்சத்தைப்பற்றிய பிரபலமான ஒரு புத்தகத்தை எழுதும் எண்ணத்தைக் கொண்டிருந்தேன். என் மகளின் பள்ளிச் செலவை ஈடுகட்ட, அதன்மூலம் பணம் சம்பாதிக்கவேண்டும் என நினைத்ததும் ஒரு காரணம்.
10. முழுமையான, திருப்திகரமான வாழ்க்கை என்னுடையது. எனது வேலையும், குடும்பமும் எனக்கு முக்கியமானவை.
வருக நண்பரே அவரைப்பற்றிய நிறைய தகவல்களை அறியத் தர்தமைக்கு நன்றி.
நீக்கும்...
பதிலளிநீக்குநன்றி தோழர்
நீக்குவழி தவறி வந்துட்டேன் போல இருக்கே......
பதிலளிநீக்குசரியான வழிதான் நண்பரே
நீக்குஅருமை கில்லர்ஜி. இதற்கு பின்னூட்டமிட்ட கீதா ,ஏகாந்தன் , ஸ்ரீராமின் பதிலும் அருமை
பதிலளிநீக்குவருக சகோ தங்களின் வருகைக்கு நன்றி
நீக்குஅன்புள்ள ஜி,
பதிலளிநீக்குவிஞ்ஞானி Stephan Hacking சொல்லும் கருத்து நல்ல கருத்து.
இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான் - அவன்
இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்?
மணவையாரின் வருகைக்கும், பாடலுக்கும் நன்றி
நீக்குஎதற்கும் இயங்க உந்துவிசை வேண்டும் அது இறைவனா இயற்கையா
பதிலளிநீக்குவாங்க ஐயா நல்லதொரு கேள்வி.
நீக்குஅருமை கில்லர்ஜி! ' தேவக்கோட்டையானின் வரிகள் அதனினும் அருமை! அனைத்துப்பின்னூட்டங்கள் மிகவும் அருமை!
பதிலளிநீக்குவருக சகோ மிக்க நன்றி தங்களின் வருகைக்கு...
நீக்குரொம்பத்தான் ஆராய்ச்சி செய்றீங்க பாராட்டுக்குரியது
பதிலளிநீக்குவருக நண்பரே மிக்க நன்றி
நீக்குஉலகில் இருமை என்பது பிரசித்தி உண்டு இல்லை என்பதும் அவற்றில் ஒன்று இருப்பது அதை நம்புபவர்களுக்கு மன சாந்தி எதற்கும் காரணம்காட்ட ஒரு இறைவன் எல்லாவற்றுக்கும் அவனே காரணம் என்றால் போயிற்று. இல்லை என்று சொல்பவன் தான் சொல்ல வருவதை நிரூபிக்க வேண்டப்படுகிறான் உண்டோ இல்லையோ எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டுமே
பதிலளிநீக்குவாங்க ஐயா தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்கு