நட்பூக்களே... மனிதன் என்பவனுக்கு நகைச்சுவை
உணர்வுகள் வேண்டும் அப்பொழுதுதான் அவன் ஐந்தறிவு இனங்களிலிருந்து வேறு படுகின்றான்
நானும்கூட நகைச்சுவை உணர்வாளனே என்னைச்சுற்றி உள்ளவர்களை மகிழ்வித்துக் கொண்டு
இருப்பதில் உள்ளுக்குள் மகிழ்பவன் ஆனால் வெளியில் சிரிக்கத் தெரியாதவன் அல்ல ! சிரிப்பை இழந்தவன் அந்த
நகைச்சுவை உணர்வுகளின் உந்துதல்களே கேளிக்கைகள் விளையாட்டுகள் ஆனாலும் எந்த
நிலையிலும் இன்றுவரை விபரீதமாக செய்யாதவன் கீழ்காணும் விபரீத காணொளியால் எழுதியதே
இந்த பதிவு.
நண்பர்கள் சில நேரங்களில் நையாண்டியுடன் பேசி
சிரிப்பது, பிறரை சிரிக்க வைப்பது வாடிக்கையான விடயமே இப்பொழுது விஞ்ஞான
வளர்ச்சியின் அதிவேகத்தால் நண்பர்கள் எந்த நேரமும் எதையும் ஏன் ? தற்கொலைகள், கொலைகளைக்கூட கைப்பேசியில்
ஒளியலை எடுத்து உடனுக்குடன் ஊடகங்களுக்கு அனுப்பி விடுகின்றார்கள் சிலர்
வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற சிந்தையில் திட்டமிட்டே இப்படி செய்து காணொளி
எடுத்து பிறரை மகிழ்விப்பதாக நினைத்துக் கொண்டு சில நேரங்களில் விபரீத செயல்களில்
ஈடுபட்டு விடுகின்றார்கள் கீழ்காணும் காணொளி தங்களுக்கு சிரிப்பாக இருக்கலாம் இதன்
பின்னணியை சிறிது யோசித்தால் வேதனையான விடயமே ஆம் இந்த நபர் யாரோ எவரோ எனக்கு
தெரியாது நண்பர்கள் சேர்ந்து செய்யும் விளை(னை)யாட்டால் இவர் இந்த வாளிக்குள் விழுந்து
விடுகின்றார் அவரை வெளியே தூக்குகின்றார்கள் பிறகு காணொளி இல்லை ஒரு மனிதனை சட்டென
இரண்டாக மடித்தால் அவனது முதுகெலும்பு என்னாகும் என்று நாம் சிறிது யோசித்துப்
பார்க்க வேண்டும் இந்த வேதனையை தெரியாத மனிதர்கள் இருக்கவே முடியாது யோகா, தந்திரம்
போன்றவற்றை செய்பவர்களுக்கு பிரச்சனை இல்லை இந்த வாளியிலிருந்து இவரை வெளியே
எடுத்து விட்டாலும் இவருக்கு ஏற்பட்டு இருக்கு முதுகுவலி எப்படியிருக்கும் ? வலியோடு பிரச்சனை முடிந்து விட்டாலும்
பரவாயில்லை வேறு ஏதாவது பிரச்சனைகளை தொடர்ந்து விட்டால் அவரின் வாழ்க்கையே மூழ்கி
விடும் விபரீதமாக சாத்தியம் உண்டு இவ்வளவு விளக்கமாக நான் சொல்வதற்கு காரணம்
நான்கு வருடங்களுக்கு முன்பு எனது நண்பரொருவர் தவறுதலாக மூன்றடி உயரத்திலிருந்து
இதே மாதிரி வாளிக்குள் விழுந்து விட்டார் இன்றுவரை அவர் மருத்துவம் பார்த்துக்
கொண்டு இருக்கின்றார் கடின வேலைகள் செய்ய முடியவில்லை இன்னும் பூரணமாக
வலியிலிருந்து விடுபடவும் இல்லை நண்பர்களே... யாராக இருந்தாலும் சரி இந்த வகையான
வினையாட்டுகளை செய்யாதீர்கள்
விளையாடுவதற்கு எத்தனையோ வழிகள் உண்டு.
இதைப்போல மற்றொரு காணொளி YouTube கண்டேன் அதையெல்லாம் தங்களுடன் பகிர்ந்து கொள்வது
தவறு காரணம் கில்லர்ஜியின் பெயர் மட்டுமல்ல எமது தளத்தின் பெயரும் கெடும் கல்லூரி
விடுதியில் தங்கி படிக்கும் பெண்களின் கூத்து பெண்கள் பீர் குடித்து விட்டு ஆட்டம்
ஆடுவதும், ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக் கொண்டாலும் பரவாயில்லை உடைகளை கிழித்து
விளையாடுகின்றார்கள் ஏறத்தாழ முக்கால் நிர்வாணமாக்கிய
விளையாட்டு (?) இவர்கள் சமூகத்தை
சீரழிக்கின்றார்கள் என்று பெரிய குற்றச்சாட்டை எல்லாம் நான் முன் வைக்கவில்லை
காரணம் பீப் பாடலையே ஆதரித்து பேசிய பல கல்லூரி பெண்களை பார்த்து விட்டேன் நான்
சொல்ல வருவது இவர்களின் எதிர்கால வாழ்க்கையை குறித்தது தங்களது தாய்-தந்தைகளின்
கௌரவத்தைப்பற்றி சிறிதளவாயினும் நினைத்துப் பார்ப்பது இல்லையா ? என்பதே எமது வியப்புடனான வினா இப்படிச் செய்த
தவறைக்கூட மன்னித்து விடலாம் ஆனால் இதையும் பகிரங்கமாய் பொது இடமான YouTubeல் வெளியிடலாமா ? நாளை இவர்களையும் ஒருவன் திருமணம் செய்வதற்கு தயாராகிக்
கொண்டுதானே இருக்கின்றான் ஒருக்கால் இவர்களின் பந்துக்கள் இதை கண்டால் இவர்களின்
வீட்டில் பெண் எடுப்பார்களா ? படிப்பதால்
அறிவு வளர்ச்சி பெறுகின்றார்கள் என்பதில் எனக்கு அவ்வப்போது ஐயம் ஏற்படுவது
இவ்வகைகளை காணும் பொழுதே பண்டைய காலங்களில் படிக்காத பெண்களே அதிகம் அவர்களில்
ஒருவர்கூட இப்படி எல்லாம் செய்ததாக நாம் அறிந்ததில்லை அரண்மனைகளில் வாழ்ந்த
தேவதாசிகள்கூட மது அருந்தியதாக கேள்விப் பட்டதில்லை கல்லூரி மாணவிகளே செல்லம்மா
புருஷன் ஆசைப்பட்டது இந்த வகையான தங்களைப் போன்ற புதுமைப் பெண்களை அல்ல ! வேலு நாச்சியார் போன்ற
வீரமுள்ள விவேகமுள்ள புதுமைப் பெண்களை தாங்கள் செய்தது தவறென்று ஒருநாள் உணர்ந்து
வருந்துவீர்கள் அந்நாளில் உங்களுக்கும் ஒரு வயது
பெண் அல்ல ! ஒரு ’’வயதுப்’’ பெண்
இருப்பாள்.
அழகிய பெண்ணினமே உம்மை ஆணினம் மதிப்பதற்கு
முன் உன்னை நீயே மதிப்பிடு – கில்லர்ஜி
உண்மைதான் .பல விளையாட்டுக்கள் வினையில் முடிகின்றன .அந்த வாளியில் விழுந்தவர் பாவம் ..வாளி என்றில்லை கட்டாந்தரையில் விழுந்தாலும் இல்லை புல் தரையில் விழுந்தாலும் வலி உள்ளுக்கு இருக்கும் அதுவும் உடனே தெரியாது கழிச்சே உடம்பெறலாம் வலிக்கும் ..ஆனா அவர் அவதிப்படறதை பார்த்து அந்த நண்பர்கள் சிரிப்பது வேதனையா இருக்கு ..
பதிலளிநீக்குமுந்தி ஒருமுறை வடிவேலு காமெடியை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தோம் அப்போ மகளுக்கு 7 வயது இருக்கும் நானும் கணவரும் குலுங்கி சிரிப்பதை பார்த்து கேட்டாள் அந்த அங்கிள் பாவம் அவர் அடிவாங்குவது உங்களுக்கு சிரிப்பா இருக்கா அவருக்கு எவ்ளோ வலிக்கும் என்றாள் .எங்களுக்கு பளார்னு அடிச்சதுபோலிருந்து ..ஒரு சிறு குழந்தைக்கு தோணுவது கூட பெரியவங்களுக்கு தோணலை பாருங்க ..
உண்மை, காக்கையைக் காப்பாற்றிய காரிகையே! நான் அதனால் தான் இத்தகைய நகைச்சுவைக்காட்சிகளை எப்போதுமே ரசிப்பதில்லை. பலரும் உனக்கு ரசனைக்குறைவு, இதெல்லாம் விளையாட்டுத் தானே என்பார்கள். இதை விளையாட்டு என என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.
நீக்குகா.கா.கா.ஏஞ்சல் அவர்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி
நீக்குஉண்மைதான் தங்களது மகளின் கேள்வியில் நியாயம் உள்ளது இந்த வகையான தருணங்களை நாம் குழந்தைகளுக்காக இழக்க வேண்டும் இதில் தவறே இல்லை.
அந்த சம்பவம் அப்புறம் இளைய தஹ்லபாதி :) ஒரு படத்தில் லிப்ட் நடுவழியில் நின்னுடும் அப்புறம் அயன் படம் அந்த ட்ரக்ஸ் கடத்தல் கீறு ..இதெல்லாம் நாங்கள் முற்றிலும் தமிழ் படங்களை மகளுடன் பார்ப்பதை தவிர்த்து விட்டோம் .பவர் பாண்டி மட்டும் தீர விசாரித்து பார்த்தோம் அவளுடன் .
நீக்குபொதுவாகவே குழந்தைகள் நிறைய விஷயத்தில் நமக்கு ஆசான் ஆகிறார்கள் ..
எந்த ஒரு விஷயத்தையும் குழந்தைகள் அவர்களது மனதால் பார்க்கும் பார்வையே வேறு !
நல்லது குழந்தைகளுக்காக விட்டுக் கொடுப்பது நல்லது.
நீக்குசரி ஒரேநாளில் எத்தனை பட்டங்கள் உங்களுக்கு... இதெல்லாம் எந்த ஊர் சந்தையில் கிடைக்கிறது ?
ஹாஹ்ஹா :) ரெண்டும் ஒரே நேரத்தில் ஸ்ரீராமால் வழங்கப்பட்டது ..அதை சரிபாதியா பிரிச்சி ஒவ்வொரு நாளுக்கு ஒண்ணுன்னு அணிந்துகொண்டேன்
நீக்குஸ்ரீராமர் இப்படி ஓரவஞ்சனை செய்தது நன்றல்ல!
நீக்குஅதிராம்பட்டணம், அதிரடி அதிரா அவர்களுக்கு கொடுக்கவில்லையே...
இப்போ பேஸ்புக், ருவிட்டர் என வந்து அதனால்தான்.. உயிர் போகத் துடிக்கும் ஒருவரைக்கூட முதலுதவி செய்யாமல் வீடியோ எடுக்கும் காலமாகி விட்டது...
பதிலளிநீக்குஉலகில் எதைப்பற்றித்தான் கவலைப்படுவது? நாட்டையா மக்களையா.. மிருகங்களையா.. உடையையா உணவையா சினிமாவையா... எதைப் பார்த்தாலும் திருப்தியாக இல்லையே...
உலகம் அழியப்போகுது கில்லர்ஜி.. உலகம் அழியப்போகுது:)...
உண்மையே பல இடங்கில் உயிர் பிரியும் நேரத்தில் காணொளி எடுத்ததும் உண்டுதான் உலகம் அழியட்டும் மீண்டும் நல்ல மனிதர்கள் உதிக்கட்டும்..
நீக்குவிளையாட்டு என நினைத்து இப்படிச் செய்வது விபரீதத்தில் முடியலாம். புரிந்து கொள்ளாத இவர்களை என்ன சொல்வது.....
பதிலளிநீக்குவாங்க ஜி தானாய்பட்டு உணரும் காலம் வரும்.
நீக்குசொல்ல நினைத்து வந்ததை காக்கையைக் காப்பாற்றியக் காரிகை அவர்கள் சொல்லிவிட்டார்கள்.....!!!!
பதிலளிநீக்குஅதே....இப்போதெல்லாம் நகைச்சுவை என்ற பெயரில் பிறர் மனம் வேதனைப்படும்படி பேசுவதும், 2 அர்த்தத்தில் பேசுவதும், நல்ல தமிழ்வார்த்தைகளை நாம் நடைமுறையில் கூடப் பயன்படுத்தமுடியாத அளவு ஆக்கியிருப்பதும் மிகவும் வேதனைக்குரியதுதான்......
கீதா
ஆமாம் இதற்கு திரைப்படங்கள் மட்டுமல்ல, ஊடகங்களும் காரணமே...
நீக்குஇல்லை, கில்லர்ஜி.. அந்தக் காணொளியைப் பார்க்கும்போது சிரிப்பு வரவில்லை. முதுகு அல்லது கழுத்து போயிருந்தால் என்ன ஆகி இருக்கும் என்றுதான் தோன்றியது. காணொளி பார்த்துவிட்டுத்தான் பதிவைப் படிக்கிறேன். ஆனால் ஒன்று, அந்தக் காலத்தில் செய்யாதிருந்திருப்பார்களா என்று நிச்சயமாக சொல்ல முடியாது. ஏனென்றால் அப்போதெல்லாம் வெளிப்படுத்த செல்போன், யூ டியூப், ஊடகங்கள் இல்லையே...!!!
பதிலளிநீக்குஸ்ரீராம்ஜி அன்று செய்த்து சமூகத்திற்கோ, மனிதர்களுக்கு பெரிய அளவில் பிரச்சனையோ வந்ததில்லை சிறிய சந்தோஷத்துக்காக மட்டுமே இருந்தது.
நீக்குநரிக்குக் கொண்டாட்டம் நண்டுக்கு மரணாவஸ்தை என்னும்சொல் நினைவுக்கு வருகிறது
பதிலளிநீக்குவாங்க ஐயா சரியான சொல்லாடல் வருகைக்கு நன்றி
நீக்குஇன்றைய இளைஞர்கள் மற்றும் இளைஞிகளின் போக்கு வேதனைதான்
பதிலளிநீக்குதம+1
வருக நண்பரே உண்மையே இன்று இந்நிலைதான்.
நீக்குவாழ்க்கையையே விளையாட்டாக எடுத்துக்கொண்டுள்ள தற்போதைய சமுதாயத்தினரிடம் நீங்கள் இதுபோன்றனவற்றை எதிர்பார்க்கக்கூடாது.
பதிலளிநீக்குமுனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி இனி எதிர்பார்ப்பதே தவறுதானோ....
நீக்குகுரூர ரசனை! என்னத்தைச் சொல்வது? ஆனால் இப்படியான மனிதர்களைப் பார்த்திருக்கேன். அதோடு இல்லை வாசலில் உட்கார்ந்து கொண்டு மழை பெய்யும்போது வாழைப்பழத்தோலை நட்ட நடு வீதியில் போட்டுவிட்டு நடந்து செல்பவர்கள் வழுக்கி விழுவதைக் கண்டு கை தட்டி ரசித்துச் சிரித்தவர்களையும் பார்த்திருக்கேன். அவங்களே விழுந்தப்புறமாத் தான் புரிஞ்சிருக்கும். :(
பதிலளிநீக்குசிறிய வயதில் பெரியவர்கள் நடந்து போகும் பொழுது பொட்டணம் போல உள்ளே மண்ணை வைத்து சாலையில் போட்டு அவர்கள் எடுத்து பார்த்து ஏமாந்ததை மறைந்து இருந்து ரசித்தவர்கள்தான் நாம் ஆனால் இப்படி இல்லையே...
நீக்குடூவீலரில் போன நான் சாலையில் உடைந்து கிடந்த பாட்டிலை கண்டதும் நிறுத்தி அதை பொறுக்கி குப்பைத் தொட்டியில் போடும்போது என்னை ஏளனமாக பார்த்த மனிதர்களையும் கண்டவன் நான்.
>>> படிப்பதால் அறிவு வளர்ச்சி!?.. <<<
பதிலளிநீக்குகில்லர் ஜி..
அதெல்லாம் அந்தக் காலம்!..
பிட் அடித்து தேர்வு எழுதுவதற்கு ஆசியர்களே - நிர்வாகமே உதவி ஒத்தாசை செய்யும் கலி காலம் ஐயா இது!..
அன்பின் ஜி
நீக்குஉண்மையே எல்லாமே தலைகீழ் என்ற நிலைப்பாடு ஆகி கொண்டு இருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் 'லைக்' வாங்குவதற்காக எதையும் செய்யலாம் என்ற ஆபத்தான எண்ணம் பரவிவருகிறது. 'ஹிட்' வாங்குகிறேன்...வைரல் ஆச்சு என்று பேசுவதற்கு கண்டதையும் வீடியோவாக்கி பதிவு செய்கிறார்கள்...எங்கே போகிறோம்?!!
பதிலளிநீக்குவருக நண்பரே ஆமாம் அற்ப சந்தோஷத்துக்காக பலரும் ஊடகங்களில் இப்படி செய்வது உண்மை.,,,
நீக்குதுளசி: எங்கள் ஊரில் காமெடி என்பதற்கு நல்ல காமெடியாக இருந்தாலே மக்கள் சிரிப்பது அபூர்வம். இது மிகவும் மோசமாக அல்லவா இருக்கிறது. இதுவா காமெடி? பிறருக்கு மனம் நோகக் கேலி செய்வதோ இல்லை உடல் ஊனத்தை நகைச்சுவை என்ற பெயரில் கேலி செய்வதோ..ஏன் முட்டாளா என்று கேட்பதையஏ நகைச்சுவையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை..குண்டாக இருப்பவர்களை, காது கேட்காமல் இருப்பவர்கள் இவர்களை எல்லாம் நகைச்சுவை என்ற பெயரில் கேலி செய்வதை ஏற்க இயலவில்லை. நல்ல பதிவு.
பதிலளிநீக்குகீதா: காணொளி இப்பத்தான் பாக்க முடிந்தது. மிக மிகக் கொடூரம். இது நகைச்சுவையே அல்ல. நானும் பெரும்பாலான காமெடிக் காட்சிகளை அவ்வளவாக ரசிப்பதில்லை. பிறரை அடிப்பது, ஒரு மாதிரி வார்த்தைகளால் கேலி செய்வது தரக் குறைவாகப் பேசுவது, உடல் ஊனம், உருவம் இதெல்லாம் கமெடி என்பதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அதுவும் சமீபத்திய நகைச் சுவைக் காட்சிகள் பலவற்றை ரசிக்க இயலவில்லை...
உண்மை மலையாளிகள் அற்புதமான நகைச்சுவை உணர்வாளர்கள் என்பதை நான் நன்கு அறிந்தவன் அதேபோல காமெடி படங்களும் அருமையாக எடுப்பார்கள்.
நீக்குஇன்றும் சானல்களில் வரும் காமெடிகள் மலையாள காமெடிகளின் டப்பிங்கே என்பதை நான் பலமுறை கண்டு இருக்கிறேன்.
ஊனமுற்றோரை உதாசீனப்படுத்தி பேசும் வசனங்கள் கவுண்டமணிக்கு நிறைய படங்களில் கொடுத்து இருக்கின்றார்கள்.
ஐயோ என்றிருக்கிறது இவர்களின் விளையாட்டு..:(
பதிலளிநீக்குஒருவரின் வாழ்வே போய்விடுமளவிற்கு விளையாடி அப்படி என்ன குரூர ரசனையோ?...
இளைஞர் சமுதாயம் பல நல்ல செயல்களுடனும் இருக்கிறார்கள்.
சிலர் இப்படி நடை உடை பாவனை எல்லாவற்றாலும்
மிகவே கீழ்த்தரமாகவும் போய்க்கொண்டும் இருக்கிறார்கள்.
மனதிற்குக் கவலை தரும் விடயமே! அவர்களாகவே
உணர்ந்து திருந்த வேண்டும். வேறு வழி இல்லை!
உங்கள் உளக்கருத்தை உடைத்து அப்படியே கொட்டிவிட்டீர்கள் சகோ!
வாழ்த்துக்கள்!
வருக சகோ தங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி உண்மையை நான் பொதுப்படையாக சொல்வதால் எனக்கு கெட்டபெயரே கிடைத்து இருக்கிறது
நீக்குஇருப்பினும் எல்லா இடங்களிலும் உண்மையை உரக்க சொல்வதில் ஒரு தனிசுகம் உண்டு.
தாங்கள் சொல்வது உண்மைதான் நண்பரே..விளையாட்டுக்கு செய்தது விணையாக ஆகிவிடும்.. என் சிறு வயதில் என் நண்பர்கள் விளையாட்டுக்கு செய்தது. எனது இரண்டு கைகளும் முறி்ந்து விட்டது..சில வேளைகளில் எனது கைகளை தலைக்கு மேல் தூக்கமுடியாது...
பதிலளிநீக்குவருக நண்பரே அறியாமல் செய்வதால் பல நபர்கள் வாழ்வு முழுவதும் கஷ்டப்படுகின்றார்கள் உங்களைப்போல் பலரும் உண்டு நண்பரே.
நீக்குவீதி விடங்கனின் தேரில் உயிர் விடுவதற்காகவே காத்திருந்த இளங்கன்றை போல, பயம் அறியா விட்டில் பூச்சிகளுக்கும் வழி காட்ட வேண்டியது சமூகக் கடமை .....
பதிலளிநீக்குவருக நண்பரே உண்மையான வார்த்தை. அதை இயன்றவரை செய்வோம்.
நீக்குவணக்கம் ஜி !
பதிலளிநீக்குஅறியாது பிழைசெய்து அணைக்கின்ற மகவுக்கும்
அடிக்கின்ற சமூகத்தில் தாய்மை-முன்னோர்
நெறியாது முறையாது நினைக்காத படியால்தான்
நிகழ்கால மனத்தில்லை தூய்மை !
பெரும்வாதை கொடுக்கின்ற பிழையெல்லாம் தருவோரின்
பிறப்பிற்குள் தவறுண்டு போலும் - மது
தரும்போதை அறிந்திங்கு தடுமாறும் இளைஞோரால்
தருமங்கள் மறைந்திங்கு மாழும் !
நல்ல சிந்தனைகள் ஜி மனிதனுக்கு ஆறு அறிவோடு சிரித்தல் சிந்தித்தல் என்னும் இரு ஆற்றலையும் இறைவன் கொடுத்தான் ஆனால் மனிதன் எதற்கு சிரிப்பது எதை சிந்திப்பது என்று அறியாமல் தவறுகள் செய்கிறான் .... ஒரு மிருகம் அடிபட்டால் இன்னொரு மிருகம் அழுவதைக் கண்டிருக்கிறேன் ஆனால் சிரிக்கும் மிருகம் மனிதன் மட்டுமே !
பகிர்வுக்கு நன்றி ஜி
தம மேலும் ஒன்று
வருக பாவலரே அற்புதமான கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல!
நீக்குகில்லர்ஜி... இத்தகைய காணொளி பார்க்கமாட்டேன். கொஞ்சம் பிஸி. திரும்ப வந்து ஒரு நிகழ்ச்சி எழுதறேன். நீங்கள் எழுதிய இரண்டு விஷயங்களும் மனதைப் பாதித்தது. இந்தச் சம்பவம் 50 வருடத்துக்கு முன்னால் நிகழ்ந்தால், ஆசிரியர்களிடம், அதைத் தொடர்ந்து பெற்றோர்களிடம் எப்படி அடி விழும், முதுகுத்தோல் எப்படி உரியும் என்று கற்பனை செய்து சந்தோஷப்படவேண்டியதுதான்.
பதிலளிநீக்குவருக நண்பரே கற்பனையை நினைக்கும்போதே தண்டுவடம் சிலிர்க்கிறது நண்பரே திண்ணைப்பள்ளிக்கூட நினைவுகளும் வருகிறது.
நீக்குஅடுத்த நிகழ்வை எழுதுங்கள் வருகைக்கு நன்றி