தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், டிசம்பர் 19, 2017

பிறந்தநாள்


பிறந்த நாளை நாம் வெகு விமரிசையாக கொண்டாடுகிறோம் அதிலும் சினிமா நட்சத்திரங்கள் என்று அறியாமைவாதிகளால் சொல்லப்படும் கூத்தாடிகள் அடிக்கடி கொண்டாடுகிறார்கள் ஆனால் எத்தனையாவது ? 16-ரில் தொடங்கி 61-வரை எப்பொழுதுமே குழப்பம் சரி போகட்டும் அது நமக்கு அவசியமில்லாத விசயம் வேண்டாம்

ஒரு வருடத்தை கடக்கும்போது நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய விசயங்கள் ஏராளம் உள்ளது கடந்த வருடத்தை விட இன்று நமது பொருளாதார நிலை உயந்துள்ளதா ? வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதா ? கடந்த வருடத்தை விட இந்த வருடம் நமது தவறுகளை குறைத்திருக்கிறோமா ? மனிதநேயம் எனச்சொல்வார்களே அது நம்மிடம் குறைந்துள்ளதா ? நிறைந்துள்ளதா ? என என்றாவது நாம் தேடிப் பார்த்திருக்கிறோமா ? உண்மையில் நாம் தொலைவைத் தேடி (தொலைந்து போகுதல், மரணித்தல்) ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை நிஜத்தை மறந்து விட்டு நிழலை கண்டு மகிழ்கிறோம்.

ஒரு குழந்தை பிறக்கிறது அதை உலகிற்கு வரவேற்று கொண்டாடுகிறோம் தனது சந்ததி தொடர்கிறது தான் ஆண்மகன் என சமூகத்திற்கு நம்மாலான ஒரு அறைகூவல், இன்னாரு மகன் மன்னாரு என்பதற்கு நம்மாலான ஒரு பட்டயம் நமது அஸ்தியை கரைத்து ஆஸ்தியை எடுத்து நாஸ்தியாக்க நம்மாலான ஒரு குஸ்தி வீரன்.

இப்படி ஏதாவது ஒரு காரணங்களுக்காக இந்த நாட்களை நமது குழந்தைகளின் பெரிய பருவம் வரை நாம் குழந்தைகள் அல்ல ! என நம் குழந்தைகள் நினைக்கும் காலம்வரை இதை கொண்டாடலாம் ஆனால் House Go go என, Cemetery Come come என சொல்லும் காலம் வரை கொண்டாடுவது எனக்கென்னவோ மாற்றுச் செயலென தோன்றுகிறது.

இன்று பலருக்கும் தனது தாய்-தந்தை பிறந்தநாள் எதுவென்று தெரியாது (நான் எனது தந்தையின் பிறந்தநாளை அறிய முயன்றும் முடியவில்லை) ஆனால் தனது அரசியல் தலைவனின் பிறந்தநாளை தொண்டனும், திரைப்பட நடிகனின் பிறந்தநாளை ரசிகனும் சரியாக அறிந்து வைத்து அதை சந்தோஷமாக கொண்டாடுகின்றான் இது தமிழ் நாட்டில்தான் அதிகம் என்பதை நினைக்கும் பொழுது வெட்கப்பட வேண்டியது இருக்கின்றது.

இதில் அரசியல்வாதிகள் இறந்து போன தலைவர்களுக்கு நினைவு நாளில் மௌனஅஞ்சலி செலுத்துகின்றார்கள் இது தியாகத்துக்கு கொடுக்கும் மரியாதை சரி. ஆனால் பிறந்தநாள் விழா கொண்டாடுவது சரியா ? சமீபத்தில் அன்னை இந்திரா காந்தி, எம்ஜிஆர் போன்றவர்களுக்கும் பிறந்தநாள் விழா கொண்டாடினார்கள் என்றால் இறந்ததற்கு சந்தோஷப்படுவதாகத்தானே அர்த்தமாகிறது சரி இன்று தலைவர்கள் தினந்தோறும் பெருகி கொண்டு வருகின்றார்கள் நாளை அவர்களையும் எமன் வந்து அழைத்துப் போகத்தான் போகின்றான் பிறகு வருடத்தில் 365 நாட்களும் கொண்டாடினால் சாலைகளில் ப்ளக்ஸ் போர்டு வைப்பதால் மக்களுக்கு தினம் இடையூறுதானே... சமீபத்தில் கோவையில் அரசியல்வாதியின் ப்ளக்ஸ் ஃபோர்டு தலையில் விழுந்து ஒரு இளைஞர் மரணம் யாருக்கும் கவலை இல்லை அந்தக் குடும்பம் இன்று உணவளித்தவனை இழந்து நிற்கிறது. இதில் இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன மன்னர்கள் சிலருக்கும் கடந்த பத்து ஆண்டுகளாக ஜாதீயத்தை கையிலெடுத்துக் கொண்டு வெறித்தனமாக பிறந்தநாள் விழா கொண்டாடுவதைக் காணும் பொழுது இவ்வளவு நாட்களாக புடுங்கவா போனாங்க என்ற கேள்வியும் எமக்கல்ல சிலருக்கு எழக்கூடும். இன்னும் எவ்வளவு அட்டூழியங்கள் இந்த வாக்குரிமையின் தன்மையை அறியாத அறியாமை மக்களுக்கு நிகழப் போகின்றதோ.... யாரு.... கண்டா ?  


Sampasivam & Sivathomasali
Many many happy Returns of the Birthday to Mr. Killergee
Chivas Regal சிவசம்போ-
யாருய்யா இவங்கே சாவுகிராக்கி அவருக்கு புடிக்காத விசயத்தைச் சொல்லி சாயங்காலம் பார்ட்டிய மண் அள்ளி போட்ருவாங்கே போலயே...

கரட்டுவாத நண்பர் திரு. Chivas Regal சிவசம்போவுக்கு எமது பரிசு

75 கருத்துகள்:

  1. அஆவ் !! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
  2. விரிவான கருத்துக்கள் பின்னே வரும்

    பதிலளிநீக்கு
  3. நான் 1ஸ்ட்ட் இல்ல.. நான் இம்முறை 1ஸ்ட் இல்லை கர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் உண்மை இதற்காக ஜேம்ஸ் ஊரணிக்கு போகவேண்டாம்.

      நீக்கு
    2. சே..சே... இண்டைக்கு கில்லர்ஜி யின் பிறந்தநாள்... நான் குதிக்க மாட்டேன்ன்:).. நாளைக்குப் பார்த்துக்கலாம்:).[நண்பர்களின் பிறந்தநாட்களில் குதிக்கக்கூடாது என்பது என் “கொள்கை”]... ஹா ஹா ஹா அதாரது கல்லெடுக்கிறது:)

      நீக்கு
    3. நல்ல பாலிஸிதான்.
      (சமாளிப்புக்கு உதவும்)

      நீக்கு
  4. ஆஹா கில்லர்ஜி யின் பிறந்தநாள் 19 ஆ? அவ்வ்வ்வ்... 13 என நேசன் மாறிச் சொல்லிட்டார்ர்... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கில்லர்ஜி... பல்லாண்டு காலம் மகிழ்வோடும், நலமோடும் வாழ வாழ்த்துகிறோம்.

    எதுக்கு சுவீட் 16 லயே எல்லோரும் கை வைக்கினம்?:)))) ஹா ஹா ஹா...

    உங்கள் பிறந்ததினத்தை நடு ரோட்டில் வச்சு கேக் கட்பண்ணி ஆரும் கொண்டாடவில்லையே எனத்தானே இவ்ளோ புகை?:).. உங்கள் பிறந்த நாளுக்கு, நீங்களும் மிக்ஸி, கிரைண்டர், ஸ்மித்.. இப்பூடிக் குடுத்தால் கொண்டாடாமலா இருப்பாய்ங்க:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நாளை அப்படியொரு நிலை வந்தால் கண்டிப்பாக அவைகள் தடுக்கப்பட்டு, அவைகளுக்கு பகரமாக அனாதை ஆஸ்ரமங்களுக்கு உணவு வழங்கப்படும், கண்டிப்பாக கோவிலுக்கு ஒருசல்லிகூட செலவு செய்யப்பட மாட்டாது.

      நீக்கு
    2. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கில்லர்ஜி வாய்க்குச் சம்போ... நொட் சிவசம்போ:) போட்டுக் கழுவுங்கோ:) தெய்வக் குத்தமாகிடப்போகுதூஊஊஊ:)).. உங்களுக்கு பணத்தைத்தந்ததே கடவுள்தான் தெரியுமோ?:) சிறீ சிவசம்போ அங்கிளா தந்தார்ர் கர்ர்ர்ர்:))... அப்ப்போ கடவுளுக்குக் கொடுக்க மாட்டேன் என அடம்புடிச்சால் எப்பூடி?:)... ஹையோ கல்லைக் கீழே போடுங்கோ.. இப்போ இது ஆருக்கு?:))

      சரி அதெல்லாம் வாணாம், நீங்க அரசியலில் குதிச்சால்:).. தேம்ஸ் கரைக்கு நல்ல ஸ்ரோங் சுவர் கட்டி விடுங்கோ.. யாரும் என்னைத் தள்ளி விழுத்திடாதபடி:) பயம்மாக்க்கிடக்கூஊ இருட்டில தள்ளிப்போடுவினமோ என:) நான் அஞ்சுவில சந்தேகப் படல்லே:)..

      நீக்கு
    3. காசு வாங்கிட்டு அருள் வழங்கினால் அவர் கடவுள் இல்லை கூலி என்று நான் சொல்லவில்லை உங்கள் அங்கிள் "கமால்ஹசன்" ஜொள்ளி இருக்கார்.

      நீக்கு
    4. கமல் அங்கிள் ஜொன்னா.. அது கரீட்டாத்தான் இருக்கும்:)) ஹா ஹா ஹா:)

      நீக்கு
  5. உங்கள் ஆதங்கம் நியாயமானதே ..தன் பெற்றோருக்கு ஒரு வாய் உணவு கூட தராதவங்க கட்டவுட்டுக்கு பாலையும் பியரையும் ஊற்றும் கொடுமையை பார்த்து நொந்திருக்கேன் ....ப்ளக்ஸ் போர்ட் மெட்டீரியல் பிளாஸ்டிக் அல்லது vinyl ..இது பயன்படுத்தியபின் எங்கே போடறாங்க ? அது பூமிக்கு போனாலும் அங்கேயே இருந்து நிலத்தை நாசப்படுத்தும் :( இதையெல்லாம் யோசிக்காம வைக்கிறாங்க வேதனை ..என்னைப்பொறுத்தவரை பிறந்தநாளில் ஏதாவது ஒரு நல்லது .,யாருடைய பசியாவாது தீர்த்தல் இதுநாள்வரை நோய்நொடியின்றி காத்த இறைவனுக்கு நன்றி ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இதுதான் எனது கருத்து பெற்றோருக்கு உணவளிக்காத ஜென்மங்கள் இப்படி செய்வதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

      இவைகளை தடுக்க இயலவில்லையே என்ற கவலையே என்னை வாட்டுகிறது.

      நீக்கு
    2. ம்ஹூம்... அதிராவுக்கு ஒரு அல்வா கூட அவ இன்னும் செய்து தரல்ல :) அதில இப்போ தத்துவம் பேசுறாவாம்ம் கர்:)).. கரப்பான் பூச்சி எல்லாம் கதை சொல்ல வெளிக்கிட்டு விட்டதே என நினைச்சாலே.. தேம்ஸ்ல குதிக்கலாம் போல வருதே வைரவா:)...

      நீக்கு
  6. ஹை கில்லர்ஜி நீங்களும் டிசம்பரா....மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!

    உங்கள் கருத்துகள் சரிதான் ஜி.

    கீதா: சினிமா நட்சத்திரங்கள்னு இல்லை ஜி...சாதாரண மக்களில் கூட நிறைய பேர் அதாவது பணம் உள்ளவர்கள் கொண்டாடும் பிறந்தநாள் விழாக்களைப் பார்க்கணும். அதற்காக ஈவென்ட் மேனேஜர்ஸ் கூட இருக்காங்க...10 ஆயிரம் வரை செலவு செய்பவர்கள் கூட இருக்காங்க...

    பதிலளிநீக்கு
  7. என் பள்ளியில் படிக்கும் போது பிறந்த நாள் விழா யாரும் கொண்டாடக் கூடாது. அன்றும் யூனிஃபார்ம் போட்டுத்தான் வரணும். சாக்லேட் மட்டும் கொடுக்கலாம். ஏனென்றால் பணக்கார மாணவிகள் கொண்டாடுவதைப் பார்த்து ஏழை மாணவிகளுக்கு அந்த ஏக்கம் வரக் கூடாது என்று...என் பள்ளி செயின்ட் ஜோசஃப், நாகர்கோவிலை நினையாத நாள் இல்லை. என் காட்மதர்கள் மேரி லீலா அண்ட் ஸ்டெல்லா மேரி டீச்சர்களையும் நினைவு கொள்ளாத நாளில்லை. என் வீட்டிலும் என் கஸின்ஸ் சிலர் நல்ல துணி உடுத்துவார்கள் எல்லோரும் சேர்ந்திருந்தாலும் ஒரே வீட்டில்....எனக்கு மிக மிக ஸாதாரண துணியாகத்தான் இருக்கும். அப்புறம் என் பாட்டி இனி எல்லோருக்கும் ஒரே துணிதான் வாங்கணும் என்று அவரே தான் வாங்குவார். அதனாலேயே நான் என் மகனுக்கும் அதை சிறு வயதிலேயே சொல்லிக் கொடுத்துவிட்டேன். அவனும் கொண்டாட மாட்டான். அவன் வகுப்பில் சிலர் கேண்டீன் போய் கொண்டாடினாலும் இவன் கேட்கவே மாட்டான்...என்னிடம் வந்து தன் பிறந்தநாள் கொண்டாடணும் என்று...கல்லூரியிலும் அப்படித்தான்...நண்பர்கள் வீட்டிற்கு வருவார்கள். முதல் முறை அவர்களே கேக் வாங்கிவந்தார்கள் அதன் பின் மகன் சொல்லிடவும் அவர்கள் புரிந்து கொண்டார்கள். அதன் பின் நான் வீட்டில் எல்லோருக்கும் சாப்பாடு கொடுப்பேன். வெளியில் சென்று கொண்டாடியதில்லை...

    ஆனால் என் வீட்டருகே வீட்டு வேலை செய்பவர்களின் குழந்தைகள் தங்கள் பிறந்த நாளை விமர்சையாகக் கொண்டாட வேண்டி அழுவதைப் பார்க்கிறேன். ஏனென்றால் தங்கள் நண்பர்கள் அது போல் கொண்டாடுவதால் தாங்களும் அப்படிச் செய்ய வேண்டும் என்று. அதற்காக இப்பெண்கள் 2000 வரை செலவழிக்கிறார்கள்....மனதிற்கு வேதனையாக இருக்கும். அதுவும் அந்த 2000 கடனாக வாங்கி...மனதிற்கு வேதனையாக இருக்கும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பள்ளியில் செய்த செயல் போற்றுதலுக்குறியது.

      பிறரின் மனதை புரிந்து கொள்ளாதவர்கள் மனிதப்பிறவியாக பிறந்ததில் அர்த்தமில்லை.

      பணக்கார பிள்ளைகள் ஆடம்பரமாக செலவு செய்வதை காணும் ஏழை குழந்தைகளும் தமது நிலையறியாமல் இப்படி கேட்கின்றார்கள்.

      அதேநேரம் பணக்கார குழந்தைகளை பெற்றோர்கள் அனாதை குழந்தைகளுக்கு உணவளிக்க வைத்து கொண்டாடினால் அவர்களுக்கு மனிதநேயம் வளரும், பணத்தின் அருமை தெரியும்.

      இப்படி செய்வதை ஏழையின் குழந்தைகள் கண்டால் ஆடம்பர செலவு இழுத்து விடாது.

      மேலும் அந்த குழந்தைகள் நம்மால் இவர்களுக்கு உணவளிக்கும் அளவுக்கு பணமில்லாத காரணத்தால் இறைவனிடம் பிரார்த்திக்கும் பழக்கம் உண்டாகும்.

      நீக்கு
    2. உண்மையில் இங்கும் கீதா, ஸ்கூல் யூனிஃபோம் தானே, ஆனா பிறந்தநாளில்.. ஸ்கூலில் கட்டாயம் பாட்டுப் பாடி மகிழ்விப்பார்கள்.. மற்றும்படி உடுப்பு அப்படி எதுவும் இல்லை.. சொக்கலேட் கூட பெரிதாக கொடுக்கும் பழக்கம் இல்லை...

      அப்படியாயின் தனிப்பட்ட முறையில் பெற்றோர் பார்ட்டி வைப்பினம்.. ஸ்கூலுக்குள் எந்தக் கொண்டாட்டமும் இருப்பதில்லை.

      நீக்கு
    3. இதில் இன்னொன்று சொல்ல மறந்திட்டேன்ன்.. நம்மவர்கள்தானாம் இப்பழக்கத்தை சில இடங்களில் புகுத்துகிறார்கள்.. அதாவது இது நம்ம ஊர்க் கல்ச்சர்.. நம் நாட்டில் இப்படித்தான் செய்வோம் எனக்கூறிச் சிலர் தன் குழந்தையை மேக்கப் பண்ணி சொக்கலேட் கொடுத்து அனுப்புவது, இங்கு வெள்ளையர்களில் ஒரு குணம்.. நம் கல்ச்சர், நம் நாட்டு வழக்கம் எனச் சொல்வதை பெரும்பாலும் சந்தோசமாக ஏற்றுக் கொள்வார்கள் ஹா ஹா ஹா..

      நீக்கு
    4. நாம் என்ன சொன்னாலும் அவர்கள் நம்பி விடுவதற்கு காரணம் நம்மீது உள்ள நம்பிக்கையே.

      நீக்கு
  8. பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஆடம்பரமாக, விளம்பரமாக மாறி விட்டன. அதுவும், நடிகர்கள், அரசியல்வாதிகளின் பிறந்த நாளுக்கு அல்லக்கைகள் செய்யும் அலப்பறைகள் அப்பப்பா....

    அவர்கள் எப்படியோ போகட்டும்....

    பிறந்த நாள் அன்று வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வதில் தவறில்லை!

    மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் கில்லர்ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி இப்பொழுது தினம் ஒருவனுக்கு பிறந்தநாள் வருகிறது சாலையில் நடந்து செல்ல முடியவில்லை.

      வாழ்த்துகளுக்கு நன்றி ஜி

      நீக்கு
  9. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே
    தம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அழைத்து வாழ்த்து சொன்னமைக்கும் மனமார்ந்த நன்றி.

      நீக்கு
  10. பிறந்தநாள் வாழ்த்துகள் கில்லர்ஜி. வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஸ்ரீராம்ஜி வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  11. வாழும் கடைசி நாள் வரைக்கும் உங்கள் ஆரோக்கியம் உங்களுக்கு மனநலம் உடல்நலத்தைத் தந்து உங்கள் வாழ்க்கையை என்றும் இனிய வாழ்க்கையாக மாற்ற வேண்டும் என்று தேவியர் இல்லத்தின் சார்பாக எங்கள் வாழ்த்துகளை இங்கே எழுதி வைக்கின்றேன்.

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தேவியர் இல்லத்தின் விரிவான வாழ்த்துகளுக்கு எமது நன்றி.

      நீக்கு
  12. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி

      நீக்கு
  13. அன்பின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி ஜி

      நீக்கு
  14. நூறாண்டு காலம் வாழ்க
    நோய் நொடி இல்லாமல் வளர்க
    ஊராண்ட மன்னர் புகழ் போலே...
    உலகாண்ட புலவர் தமிழ் போலே
    நூறாண்டு காலம் வாழ்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பாடலோடு வாழ்த்தியமைக்கு நன்றி

      நீக்கு
  15. வருங்காலம நாட்கள மேலும் மேலும் மிக மகிழ்வான நாட்களாக ஆக எனது வாழ்த்துக்கள் கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி

      நீக்கு
  16. இடுகையின் ஆரம்பத்தில் போட்டுள்ள, கண்ணாடியைத் துடைத்து சரியாக்கும் படம், மிக அருமையாக செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    என் தனிப்பட்ட எண்ணம், 'பிறந்த நாள் கொண்டாடுவது' - அது தன்னால வருது, அதில் நம்ம ACHIEVEMENT இல்லை என்பது என் எண்ணம். நான் என் குழந்தைகளுக்குப் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடத்தியதே இல்லை (சும்மா.. நானும் செலவழிக்கறேன்னு யாருக்குக் காண்பிக்கணும்னு)

    கடைசியில் போட்டுள்ள '16வது பிறந்த நாள் வாழ்த்து' போஸ்டரை கடந்த 30 வருடங்களுக்குமே போட்டுக்கொள்கிறீர்கள் போலிருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஆம் பிறந்தநாள் வரும் போகும் அதை பெரிது படுத்துதல் அவசியமில்லைதான் பாராட்டுகளுக்கு நன்றி

      ///கடைசியில் போட்டுள்ள 16 வது பிறந்த நாள் வாழ்த்து போஸ்டரை கடந்த 30 வருடங்களுக்குமே போட்டுக் கொள்கிறீர்கள் போலிருக்கு///

      இப்படியா கூட்டத்தில் கட்டிச்சோற்று பொட்டணத்தை அவிழ்ப்பது ?

      நீக்கு
    2. கூட்டத்தில் கட்டுச் சோற்றுப் பொட்டணத்தை அவிழ்ப்பது - இதை ரொம்ப வருடங்கள் கழித்து மீண்டும் கேள்விப்படறேன். முகத்தில் சிரிப்பை வரவழைத்தது.

      நீக்கு
    3. மீள் வருகைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  17. வாழ்த்துகள் கில்லர்ஜி! உண்மையில் அர்த்தமுள்ள பதிவு!

    பதிலளிநீக்கு
  18. நெ.த. சொன்னதும் தான் கவனிச்சேன். முகப்புப் படம் அருமை!

    பதிலளிநீக்கு
  19. பிறந்த நாளில் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து திருத்திக் கொள்ள வேண்டும் நான் அப்படித்தான் செய்ய முயற்சிக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா எனது கொள்கையும் இதுவே வருகைக்கு நன்றி

      நீக்கு
  20. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்ண்ணே

    பதிலளிநீக்கு
  21. அன்புள்ளம் கொண்ட சகோதரரே!
    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

    வாழ்வில் நன் நலமும் நிறை வளமும் கிடைப்பெற்று
    நீடூழி வாழ்க!

    பதிவினைப் படிக்கவில்லை. உடனே வந்து வாழ்த்தினை மட்டும் இப்போ சொல்கிறேன். பின்னர் வந்து பதிவிற்குக் கருத்திடுகிறேன்.

    என்றென்றும் எனது நன்றியும் வாழ்த்தும் உங்களுக்கும் இருக்கும் சகோதரரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் வருகையும், வாழ்த்தும் கண்டு அகமகிழ்ந்தேன்.

      நடந்தவைகளை மறந்து கவிமழை பொழியுங்கள். புதிய வருடம் தங்களுக்கு புத்துணர்வை தரட்டும்.

      நீக்கு
  22. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
  23. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் お誕生日おめでとうございます。

    பதிலளி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஆஹா இந்த ജപ്പാൻ மொழி பழகிடத்தான் எனக்கும் ஆசை.
      வாழ்த்துகளுக்கு...سكرا

      நீக்கு
  24. எனது வாழ்த்துக்களும் ...

    உங்கள் நாட்கள் மகிழ்வாகவும்...மன நிறைவுடனும் அமையட்டும் அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி

      நீக்கு
  25. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கில்லர்ஜி! பிறந்த நாளை வெகு ஆடம்பரமாகக் கொண்டாடுவதில் எனக்கும் உடன்பாடு இல்லை ! ஆனாலும் வாழ்த்து சொல்வதற்குத் தடையில்லையல்லவா? பிறந்த நாள் வாழ்த்தோடு, ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ வாழ்த்துவதில் தவறென்ன இருக்கிறது ?
      தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளும், நன்றியும்.

      நீக்கு
  26. கில்லர்ஜி
    இணையத்தில்
    ஒரு
    இணையற்ற‌
    சொல்லர்ஜி!
    என் அன்பான
    பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    அன்புடன் ருத்ரா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா கவிதை நன்று, நன்றி.
      அவ்வப்பொழுது வருகை மகிழ்ச்சி தருகிறது மீண்டும் நன்றி.

      நீக்கு
  27. வணக்கம் ஜி !

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்ஜி என்றும் மகிழ்வான தருணங்கள் உமதாக நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளத்துடன் !

    தங்கள் பிறந்தநாளுக்கு தாமதமாக வாழ்த்து சொல்லியமைக்குப் பொறுத்தருள்க ஜி நாளை மீண்டும் சந்திக்கிறேன்

    ஏதாவது பார்ட்டிக்கு ஒழுங்கு பண்ணுங்க சேர்ந்து ஜமாய்க்கலாம்
    வாழ்க நலம் ஜி வாழட்டும் தங்கள் தலைமுறை வளத்துடனும் நலத்துடனும் !

    தமன்னாவ டச்சுப் பண்ணிட்டேன் அப்படியே ஷாக் ஆகிட்டா .....ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  28. வருக பாவலரே...
    தங்களது வாழ்த்து கண்டு மகிழ்ச்சி.

    தமன்னாவை டச் செய்ததும் ஷாக் ஆகிட்டா என்பது நம்பும்படி இல்லையே...
    அப்படியானால் தினம் மேக்கப்மேன் டச்சப் செய்வது எப்படி ?

    பதிலளிநீக்கு
  29. வாழ்க! வளர்க!! வாழ்த்துகள்!!! தங்கள் பிறந்த நாள் பதிவு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் மகிழ்ச்சி கண்டு நானும் மகிழ்கிறேன் நண்பரே...

      நீக்கு
  30. காடு வா வா, வீடு போ போ என்பதை ஆங்கிலத்தில் மிகவும் அருமையாகக் கூறியுள்ளீர்கள். பிறந்த நாளிலும்கூட பொருத்தமான, பயனுள்ள செய்தியைப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  31. ஜி லேட் ஆகிவிட்டதே உங்கள் பிறந்தால் நாள் இனிய நாளாய் அமைந்திருக்கும் இனியும் அமைய வேண்டும் பல
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தாமதமானால் என்ன... வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  32. எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் பதிவின் ஆரம்பத்தில் இருக்கும் படத்தை துடைப்பது போல் துடைத்து எறிந்துவிட்டு வாழ்வில் வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள் அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மிக்க நன்றி வாழ்த்துகளுக்கு..

      நீக்கு
  33. பிறந்த நாளுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு