தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, டிசம்பர் 03, 2017

நீங்க அழகா இருக்கீங்க...

எனது ஐயா ஞானி ஸ்ரீபூவுவின் கொள்ளுப்பேத்தியின் மகள் எம்.விஷாலி

மரியாதை
தண்ணீர் எடுக்கும் பாவையிடம் சொன்னேன்
ரொம்ப அழகாக இருக்கீங்க என்று
செருப்பு பிஞ்சுடும் என்றாள்
நல்ல வார்த்தைதானே சொன்னேன் ?
* * * * * * * * * * 01

கணவன்
அவனைப் பார்த்து உங்கள்
மனைவியாக வர வேண்டும்
என்றேன் அவன் சொன்னான்
நீ வர-தட்சிணை வேண்டும் என்று.
* * * * * * * * * * 02

செழிப்பு
மரம் கேட்டது மேகத்தைப் பார்த்து
நான் செழித்து வளர மழை தா என்று
உடன் மேகம் மழையுடன் காற்றையும்
கொடுத்து மரத்தை வீழ்த்தியது.
* * * * * * * * * * 03

பருப்பு
ஐஸ்வர்யா அழகி அவளை அழைப்பது
போல் ஐஸ் வண்டியை அழைத்தேன்
ஐஸ் என்று ஐஸ் வாங்கி கொண்டிருந்தவள்
என்னிடம் சொன்னாள் இங்கே பருப்பு வேகாது.
* * * * * * * * * * 04

கண்ணீர்
மாப்ளே எம்மக கண்ணீர் வடிக்காமல்
பார்த்துக்கோங்க மாமனார் கலங்கிட,
மருமகன் சொன்னான் இனி குழம்புக்கு
வெங்காயம் வாங்க மாட்டேன் மாமா.
* * * * * * * * * * 05

அகம்பாவம்
இமை சொன்னது விழிகளிடம்
உனக்கு பாதுகாவலனே நான்தான் என்றதற்கு
வேல்விழியாள் என்று கில்லர்ஜி
வர்ணிப்பது உன்னையல்ல என்னையே
* * * * * * * * * * 06

சினம்
இரயில் கேட்டது தண்டவாளங்களை
செருப்புகளா சௌக்கியமா ? சினம் கொண்ட
தண்டவாளம் சொன்னது இரயிலை
நாங்க காலை விரிச்சோம் ? டப்பா கழன்றுமுடீ...
* * * * * * * * * * 07

எழுத்து
நான் ரொம்ப அழகாக எழுதுவேன் ஸார்
அவன் மேலாளரிடம் சொல்லும்போது
விரல் நினைத்தது நம்ம எழுத
மூதேவி வாய் பெருமை பேசுதே...
* * * * * * * * * * 08

பழிச்சொல்
இவன் லாரியால மொக்கைராசுவை
ஏத்திக் கொன்னதை நான் பார்த்தேன் ஐயா
பார்த்தசாரதி சாட்சி சொல்ல, எமன் நினைத்தான்
பிறகு என்னை எதுக்கு பழி சொல்றாங்கே ?  
* * * * * * * * * * 09

சிரிப்பு
குழந்தை அழுவதை இரசித்துப் பார்த்து
உறவுகளோடு சிரித்தனர் தாயும், தந்தையும்
யாருக்கும் கவலையில்லை காரணமென்ன ?
இதோ இப்பொழுதுதானே குழந்தை பிறந்தது.
* * * * * * * * * * 10

Chivas Regal சிவசம்போ-
ஹைக்கூவுல நம்ம ஐயிட்டத்தை பத்தி வரவேயில்லையே ?

50 கருத்துகள்:

 1. குட்டிப் பெண் ரொம்ப அழகா போஸ் குடுக்கிறா.

  அனைத்திலும் ரொம்ப ரசிச்சுச் சிரித்தது.. “பழிச்சொல்”...

  அதானே சிறீ சிவசம்போ அங்கிளை அம்போ என விட்டிட்டீங்களே:(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி
   உங்க அங்கிளுக்கு அடுத்த பதிவில் பார்க்கலாம்

   நீக்கு
 2. அந்த குட்டி பாப்பு அழகு .பார்த்திட்டெ இருக்கலாம் போலிருக்கு.மேகத்துக்கு மரத்தின் மேல் என்ன கோவம் .வளர கேட்டா வீழ்த்தி விட்டதே .எமன் வாங்கி வந்த வரம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குட்டி பாப்பு எனக்கு பேத்திதான். தங்களின் வருகைக்கு நன்றி

   நீக்கு
 3. குழந்தை அழகு.....

  எல்லாம் சூப்பர்....வர தட்சிணை செம...ரயில் தண்டவாளம், செரு ப்பு வித்தியாசமான சிந்தனை.....ஐஸ், வெங்காயம், எமன்
  ரொம்ப நல்லாருக்கு....ரசித்தோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முழுமையாக ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி

   நீக்கு
 4. சாம்பசிவம் சிவாசிடம் கேட்கிறார்..என்னாது ஹைக்கூவா....ஏலே உன்ன்ன்அ எனக்கு வர கோவத்துல கூவ த்துல தள்ளிப்புடுவேன்.....

  கீதா

  பதிலளிநீக்கு
 5. இங்கே தண்ணி எடுத்து கொண்டிருக்கும் பெண்ணிடம்
  நீங்கள் அழகு என்றேன்..
  அதற்கு அவள் யூ ஆர் சோ ஸ்வீட் என்று சொல்லி
  அவள் அருகில் உட்கார அழைத்தாள்.
  இப்ப அவ அடித்த தண்ணிக்கும் சேர்த்து நான் பணம்
  கொடுக்க வேண்டியதாயிற்று..

  ஹும்ம் அவ அழகாக இருந்தா நமக்கு என்ன இல்லாட்ட நமக்கு என்ன
  வாயை வைச்சுகிட்டு சும்மா இருந்திருக்கலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சந்தர்ப்பம் பார்த்து பேசணும் நண்பரே

   நீக்கு

 6. வர தட்சனை வேண்டுமென்று நானும் கேட்டேன்
  இப்ப பாருங்க கல்யாணம் ஆகி பல ஆண்டுகள் ஆன பின்பும்
  எனக்கு பூரிக்கட்டையால் தட்சனை விடாமல் கொடுத்து கொண்டு இருக்கிறாள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் கேட்கும் வரதட்சிணை டூ லேட்.

   நீக்கு
 7. மாமா சொல்லி இருப்பாரே மருமகனே வெங்காயம் உடம்புக்கு நல்லது அதை வாங்குவதை நிப்பாட்டிவிடாதீங்க மற்ற காய்கறிகளை நீங்க நறுக்கதானே போகிறீர்கள் அதனால் அதையும் நீங்களே நறுக்கி கொடுத்துவிடுவீர்கள் முடிந்தால் அவளை தமிழ் சீரியல் பார்க்காமல் இருக்க செய்தாளே போதும் அவள் அழுகவே மாட்டாள் என்று சொல்லி இருப்பார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தமிழரே தமிழ் சீரியலால் எல்லா வீடுகளிலும் மாலையில் கண்ணீரும், கம்பலையுமாக போகிறது.

   நீக்கு
 8. அழகாக எழுதுவேன் என்று மேலாளரிடம் சொன்னால் அடேய் நீ எப்படி எழுதினால் எனக்கென்ன கணணியில் மெயில் அனுப்பும் போது தப்பு தப்பா எழுதாமல் ஒழுங்காக ஸ்பெலிங்க் மிஸ்டேக் இல்லாமல் எழுதுடா என்று சொல்லி இருப்பாரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தக்கவிதை பழைய காலமாக இருக்குமோ....

   நீக்கு
 9. 2. வரதட்சிணை இல்லாமல் மணம் செய்ய நினைத்தாலும் பெண் கிடைக்க மாட்டேன் என்கிறதே...!

  3 அது வெளிநாட்டு மரமாக இருக்கும் பாஸ்!

  9 'நான்' எனும் அகந்தை!

  அனைத்தையும் ரசித்தேன் ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஸ்ரீராம்ஜி உண்மைதான் இன்று பெண் கிடைப்பது சாதாரண விடயமில்லை ரசித்தமைக்கு நன்றி

   நீக்கு
  2. ஸ்ரீராம் - 'இல்லாமல் மணம் செய்துவைக்க நினைத்தாலும்' - இல்லைனா அர்த்தமே மாறிடறது. உங்களுக்கு எதுக்கு இப்போ பெண்ணுன்னு நினைத்தேன்... :-)

   நீக்கு
  3. ஹா ஹா ஹா நெ தமிழன்... அது அனுக்காவை:) சொல்கிறார் ஸ்ரீராம்:)...

   நீக்கு
 10. கவுஜ மழை பொழிஞ்சிருக்கு போல!
  பாப்பா கொள்ளை அழகு. சுத்திப் போடச் சொல்லுங்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குட்டி பாப்பு எனக்கு பேத்திதான். தங்களின் வருகைக்கு நன்றி சகோ

   நீக்கு
 11. அனைத்தையும் ரசித்தேன் நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
 12. குழந்தையின் முகத்தில் அருமையான, அழகான சிரிப்பு படர்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி்

   நீக்கு
 13. அனைத்தையும் ரசித்தேன். அகம்பாவம், சினம் இரண்டும் கூடுதல் கவனத்தைக் கவர்ந்தன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் விரிவான கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 14. கவிதை என்பது
  ஒன்றின் மீது பார்வை படப் படருவது தான்...
  எ.கா.
  பேருந்தில் பயணித்தவர்கள்
  மூக்கைப் பொத்திக்கொண்டனர்
  அக்கம் பக்கம் பார்த்தேன் - அது
  நம்ம கூவம் ஆறு தான்!

  இப்பதிவில நீங்க இப்படி கவிதை எழுதியிருக்கிறீர்களெனப் படித்தவேளை "செருப்படி" போன்று ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குண்டு போட்டு சாதித்துள்ளீர்கள்.
  பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே கவிதையைக் குறித்து விரிவாக கருத்துரை தந்தமைக்கு நன்றி இனி நானும் கவிதை எழுத முயல்வேன்

   நீக்கு
 15. பாப்பு அழகு..
  குண்டானை எடுத்துக்கிட்டு குழாயடியில தண்ணி புடிக்கப் போறாங்களாமா!?.. சீக்கிரம் போய்ட்டு வரச் சொல்லுங்க...
  மழ வர்ற மாதிரி இருக்கு!..

  அப்புறம்..

  அந்தப் பொண்ணு செருப்பு பிஞ்சிடும்.. சொன்னது சரி!..
  ஆனா யார் செருப்பு ..ன்னு தெரியலையே!..

  பழய செருப்பைப் போட்டுக்கிட்டு சுத்தாதே..
  சீக்கிரமா செருப்பு பிஞ்சிடும்!..

  - அப்படி..ன்னு கரிசனத்தோட சொல்லி இருக்கலாம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி குட்டி பாப்பு நமது பேத்திதான்.
   தாங்கள் சொல்வது போலவும் நினைக்கலாமோ.... வருகைக்கு நன்றி ஜி

   நீக்கு
 16. இது கவிதையில் வருதா அப்படினு யோசிக்கும் போது சிவ சம்போ சொல்லிட்டாரு இது ஹைக்கூ என்று நல்ல போகுது கற்பனை ஊர்வலம் 10 0 குழந்தை சிரிப்பு உண்மை அழகு, மேலே உள்ள பட்டு குட்டி செம அழகு என்ன நேர்த்தியா போஸ் கொடுத்திருக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக இது எதுல வருதுன்னு எமக்கு தெரியாது ஆனால் இப்போ எனது தளத்தில் வருது மேலே வில்லங்கத்தார் இது ஹைக்கூ இல்லை என்று சொல்லி இருக்கின்றார்கள்.

   நீக்கு
  2. அப்படியா ஜென் குரு சொன்னா மட்டும்தான் ஹைக்கூ வா?? ஜென் சிஷ்யர் சொன்னா ஹைக்கூ இல்லையா சரிவிடுங்க ஜி -க்கூ வைத்துவிடலாம் நோ பிராப்லம் இது புதுசு

   நீக்கு
  3. ஜென் குரு ?
   இது யாரு புதுசா கீது ?

   நீக்கு
 17. செழிப்பு...

  மிக சிறப்பு...

  பதிலளிநீக்கு
 18. பாப்பு ரொம்பவே அழகு.

  கவிதைகள் நச்!

  பதிலளிநீக்கு
 19. ஐஸ்... ஐஸ்....

  ஆனா நீங்க வச்ச ஐஸ் வேலை செய்யல போல

  பதிலளிநீக்கு
 20. நேரம் பார்த்துச் சொல்லும் முகஸ்துதிக்கு மயங்காதவர் உண்டோ

  பதிலளிநீக்கு
 21. சிரிப்பு!நன்று!

  பதிலளிநீக்கு
 22. சிரிப்பு கவிதை அருமை.

  பதிலளிநீக்கு
 23. ஆகா..அழகை பற்றி தெரிந்து கொண்டேன்..

  பதிலளிநீக்கு