தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, டிசம்பர் 15, 2017

அவை மரபு


நண்பர்களே... எனக்கு வெகுகாலமாகவே ஒரு சந்தேகம் மனதில் தோன்றி இருக்கின்றது தீர்த்து வைப்பார் யாருமில்லை அறிந்தவர் அறியத்தருக... அதாவது தமிழக முதல்வர் போலவே தமிழக மந்திரிகளும், இந்த நாட்டை ஆளப்பிறந்தவர்களே அதாவது முதல்வரைவிட அதிகாரம் சற்றுக் குறைவனவர்கள் இவர்களுக்கு முதல்வர் பதவியில் இருப்பவர் முதலாளி அல்ல ! அதேநேரம் இவர்களை வழி நடத்திச் செல்லும் முன்னவர் என்பது உண்மையே இவருக்கு மேலாளர் என்ற வகையில் மரியாதை கொடுக்க வேண்டும் என்பது அவை மரபு மற்றும் சட்டநியதி அதேபோல் இவருக்கு பாதுகாவலுக்கு நியமிக்கப்பட்டு இருக்கும் பாதுகாவலர்களும் இதே நிலைப்பாடுதான் ஆனால் தனிப்பட்ட வகையில் யானைப்படை, பூனைப்படை என்றும் சொல்கின்றார்களே... அதாவது சொந்தமாக சம்பளம் கொடுத்து அவர்களுக்கு முதல்வர் பதவியில் இருப்பவர் முதலாளிதான் இவர்கள் முதல்வருக்கு மரியாதையோடு பயந்தும் வேலை செய்தல் அவசியமாகின்றது இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது நான் மட்டுமல்ல ! நண்பர் திரு. வலிப்போக்கன் அவர்கள் உள்பட.

இதில் எனது சந்தேகம் என்னவென்றால் தொகுதி மக்கள் ஓட்டுப்போட்டு அங்கீகரித்து சட்டமன்றத்துக்கு அனுப்பி எங்களுக்கு உள்ள குறைகளை முதல்வரிடம் விவரித்து நிதியுதவி பெற்று எங்கள் வாழ்வு வளம் பெறச்செய்யுங்கள் என்று அனுப்பி வைக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் நாமும் இந்த நாட்டை ஆளப்பிறந்தவர்களில் ஒருவனே என்ற சிந்தையை மறந்து குறிப்பாக தான் ஒரு ஆண் (?) என்பதை மறந்து சட்டத்துக்கு புறம்பாக, மனுதர்ம சாஸ்த்திரத்துக்கு எதிராக இப்படி கும்பலி சாசனமும், குடலி சாசனமும் செய்து கொண்டு இருக்கின்றார்கள் இப்படி இருப்பவர்கள் எப்படி மக்கள் பிரச்சனைகளை பேசி ஆணித்தரமாக வாதாடி மக்கள் நலனைப்பெற முடியும் என்பது மட்டுமல்ல ! மற்றொன்றும் உள்ளது சம்பளத்துக்கு வேலை செய்யும் யானைப்படையினரோ, பூனைப்படையினரோ ஒருவர்கூட இப்படி காலில் விழாமல் முதல்வரை அவமதிப்பது தொழில் தர்மம் அல்ல ! என்பதே எமது குற்றச்சாட்டு சரிதானே நண்பர்களே இதுக்கு நீங்கள்தான் விளக்கம் தரணும் தாங்கோ..... பார்ப்போம்.

சிவாதாமஸ்அஸி-
தொகுதி மக்கள் ஓட்டுக்கு ஆயிரம் ஓவா வாங்குனதோட அவுக வேலை முடிஞ்சு போச்சு பிறகென்ன பேச்சு ?
Chivas Regal சிவசம்போ-
ஆயிரமா ? நம்ம தொகுதியில முன்னூறு கொடுத்து ஏமாத்திட்டாங்களே....

காணொளி

39 கருத்துகள்:

  1. ஆஆஆஆவ்வ்வ்வ் மீதான் 1ஸ்ட்டூஊஊஊ:)... நீங்க எது வேணுமெண்டாலும் என்ன வேணுமெண்டாலும் பேசுங்கோ ஆனா இந்தப் பூனைப்படையில மட்டும் கை வச்சிடக்கூடா கர்ர்ர்ர்ர்:)...

    ஆஹா அப்போ சிறீ சிவசம்போ அங்கிளை ஏமாத்திப்போட்டினமோ... விடமாட்டேன்ன்ன் .. காண்ட்கோட் படி ஏறியாவது மிகுதி 700 ஐ வாங்கிக் கொடுப்பேன்ன்ன்ன்... இது அந்த தேம்ஸ்ல மிதக்கும் பச்சைத் தோணி மேல் சத்தியம்:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கட சத்தியம் ஓடுற தண்ணியில எழுதலாமாமே... உண்மையா ?

      நீக்கு
  2. நியாயமான குற்றச்சாட்டுதான் நண்பரே
    தம+1

    பதிலளிநீக்கு
  3. ஜெ மறைந்து இவ்வளவு நாட்களுக்குப் பிறகு உங்களுக்கு இந்தச் சந்தேகம் வந்திருக்க வேண்டாம் கில்லர்ஜி!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெகு நாட்களாக ட்ராப்டில் கிடந்தது மறந்து விட்டேன் ஸ்ரீராம்ஜி

      நீக்கு
  4. இவர்கள் எல்லாம் மந்திரிப் பதவியை ஒரு சமூகப்பணியாக, ஆட்சிப்பணியாகவா கருதுகிறார்கள்? தங்களுக்கு சொத்து சுருட்டக் கிடைத்த ஒரு வாய்ப்பாகக் கருதுகிறார்கள். எங்கே நம் அந்த வாய்ப்பு பறிபோய் விடுமோ என்கிற அச்சத்தில் காலில் விழுந்து மன்றாடுகிறார்கள்.

    இனி நம் வாழ்நாளில் நேர்மையான, எதிர்பார்ப்பில்லாத, கடமையை மட்டுமே செய்யும் ஒரு ஆட்சியாளரைக் காண்போமா? சந்தேகமே. வோட்டுக்கு மக்களே அல்ப அளவான பணத்துக்கு விலைபோகும்போது இதை எப்படி எதிர்பார்க்க முடியும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஸ்ரீராம்ஜி தவறுகளின் தொடக்கமே மக்கள்தான் இதையே நான் என்றுமே சொல்கிறேன் நன்றி ஜி

      நீக்கு
  5. மக்கள் ஒரு டீல் போட்டுக்கொள்ளவேண்டும். வேட்பாளர் போட்டியிடும்போது அவர் (உண்மையான) சொத்துமதிப்பைத் தெரிந்துகொள்ள வேண்டும். எவ்வளவு அதிகமாக சம்பாதிக்கிறாரோ அதில் 75 சதவிகிதத்தை அந்தத் தொகுதி மக்களின் கணக்கில் பிரித்துச் செலுத்த வேண்டும். மிச்சம் அவர் எடுத்துக் கொள்ளட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது கேரள மக்களுக்கு சரியாகும் அவர்கள் தேர்ந்தெடுப்பதில் மிகவும் தெளிவானவர்கள்.
      அவர்களுக்குள் ஆலோசனை உண்டு

      நீக்கு
  6. ஜி அவங்க யார் கால்ல வேணாலும் விழுந்து தொலைக்கட்டும். பொதுமக்களை அவங்க கால்ல விழ வைக்காம இருந்தா சரி! இல்லை ஓட்டுக்காக பொதுமக்கள் கால்ல விழறேன்னு பொதுமக்கள் காலை வாரிவிடாம இருந்தா சரி...

    என்ன சொல்லறீங்க??!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலமு முழுவதும் வாறி விட்டுக்கொண்டேதானே இருக்கின்றார்கள்

      நீக்கு

  7. கில்லர்ஜி நாம் சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கிறோம் என்று சொல்லுவதே தவறு அவர்களை தேர்ந்தெடுப்பது அந்தந்த கட்சி தலைவர்களே அதனால்தான் அவர்கள் காலில் இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் விழுகிறார்கள். இந்த தொகுதியில் இந்த சட்டமன்ற உறுப்பினர் மிகவும் நல்லவர் என்று கருதி வோட்டு போடுவத்தில்லை அப்படித்தான் தேதெடுக்கிறோம் என்று சொன்னால் அது மிகவும் பொய்.... நாம் தேர்தலில் எந்த முதல்வர் வேண்டுமென்று கருதி வோட்டு போடுகிறோமே தவிர சட்டமன்ற உருப்பினரை கருத்தில் கொண்டு வோட்டு போடுவது இல்லை... அதுதான் நிஜம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை மதுரை. அந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிக்காமல் இருக்க உரிமை உண்டு நமக்கு. ஆனால் 250 ரூபாய்க்கு விலை போய்விடுவோம்! அந்த வெற்றியுமே சதவிகிதக் கணக்கில் பார்த்தோமானால் எதிர்ப்பு சரிசமமாகவோ, கூடுதலாகவோ கூட இருக்கும்.

      நீக்கு
    2. தமிழா மிகவும் சரியாக சொன்னீர்கள் தொலைக்காட்சியில் நேற்று முன்தினம் பார்த்தேன் மக்களிடம் கேட்கின்றார்கள் சேனல்காரர்கள்.

      யாருக்கு ஒட்டு போடுவீர்கள் ?
      இரட்டை இலைக்குத்தான்.
      அதுல நிற்கிற வேட்பாளர் யாரு ?
      தினகரன்தான்.

      மக்களின் தெளிவு நிலையை பார்த்தீர்களா ? இந்த நாட்டை காப்பாற்ற முடியுமா தமிழரே ?

      நீக்கு
  8. சட்டமன்ற உறுப்பினர்கள் காலில் விழுகிறார்களா இல்லையா என்று கவலைப்படுவதைவிட அவர்கள் நம்மை குழியில் தள்ளிவிடுவார்களா இல்லையா என்றுதான் கவலைப்படவேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மைத்தான் குழியில் தள்ளித்தானே அவர்கள் வாழ்கின்றார்கள்.

      கன்னியாகுமரியில் மக்கள் கண்ணீர் வடிக்க, சென்னையில் தொண்டர்கள் தேர்தல் ஆட்டம் போடுகின்றார்கள்.

      பிறகு அரசியல்வாதிகளை குறை சொல்ல என்ன் இருக்கு ?

      நீக்கு
  9. கில்லர்ஜி... உங்களுக்கு இந்தச் சந்தேகம் வந்தது எனக்கு ஆச்சர்யம். ஏதிலிகளுக்கு பிச்சை இட்டால், அவர்கள் கைகூப்பி, ஐயா..சாமீ... நல்லா இருங்க என்று நன்றி தெரிவிப்பதில்லையா? 5 ரூபாய் அவர்கள் சம்பாதிக்க வழி செய்பவர்களுக்கே அப்படி என்றால்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மைதான் கோடிகள் சம்பாரிக்க எவ்வளவும் தாழ்ந்து போகலாம் என்று முடிவு செய்கின்றார்கள்.

      நீக்கு
  10. உங்களுக்கே புரியாம எங்ககிட்ட கேட்பது நியாயமே இல்லை ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே தெரியாத விடயத்தை தெரிந்து கொள்ள ஆசைப்படுவது தவறா ?

      நீக்கு
  11. சம்போ.. மகாதேவா!.. சமூகத்தை நாடி நற்செய்தி ஒன்றைக் கொண்டு வந்துள்ளேன்..

    வேண்டாம்.. நாரதரே.. வேண்டாம்.. ஏற்கனவே நீர் கொண்டு வந்த நற்செய்திகள் இங்கே குவிந்து கிடக்கின்றன.. வேறு ஏதாவது இருந்தால் சொல்லும்!...

    மகா பிரபோ!.. எல்லாம் தெரிந்திருந்தும் ஏதும் தெரியாதவர் போல் ஏனிந்த நாடகம்?...

    லஞ்சம் இல்லையேல் ஊழல் இல்லை.. ஊழல் இல்லையேல் லஞ்சம் இல்லை.. இரண்டும் சேர்ந்தது தானே மக்களாட்சி.. இவை இரண்டும் இல்லையேல் கும்பலாண்டி ஆசனமும் குடலாண்டி ஆசனமும் ஏது?..

    ஆகவே சினம் விடுத்து சாந்தம் அடைவீர்களாக!..

    ( நாரதர் மனதிற்குள் -
    அப்பவே முதுகுல இரும்பு வெச்சிருக்கணும்.. இப்போ புலம்பி என்ன பிரயோசனம்!?..)

    ஓய்.. நாரதரே.. முதுகுல வைச்சது இரும்பு தான்.. நாளாவட்டத்துல இரும்பு இளகி இத்துப் போச்சு!..

    ஓ.. அங்கேயும் ஊழலா!.. அரோகரா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா.. ஸூப்பர் ஜி
      கருத்தை மிகவும் இரசித்தேன்.

      ஜி நமது அரசியல்வாதிகளுக்கு முதுகெலும்பில் கால்சியம் குறைவு ஹார்லிக்ஸ் சாப்பிட்டால் சரியாகுமா ?

      நீக்கு
    2. >>> அரசியல்வாதிகளுக்கு முதுகெலும்பில் கால்சியம் குறைவு.. ஹார்லிக்ஸ் சாப்பிட்டால் சரியாகுமா!..<<<

      ஜி..
      அதுக்கும் கமிஷன் கேட்பார்களே!..

      நீக்கு
    3. ஹார்லிக்ஸ் கம்பெனிக்காரன் அரசியல்வாதிகளுக்கு கமிஷன் கொடுத்தாலும் விலையை நம்ம தலையில் வைத்து சம்பாரித்து விடுவார்கள் ஜி

      நீக்கு
  12. செலவுசெய்யும் பணத்தை மீட்கவும் லாபம்பெறவும் குனிந்து வீழ்வதுதவறில்லை என்பதே எழுதப்படாத நியாயம் இதுபற்றிக்கேட்டால் அரசியலில் இதெல்லாம்சகஜம் என் பார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா உண்மையான வார்த்தை வருகைக்கு நன்றி ஐயா.

      நீக்கு
  13. தமிழ்நாட்டின் வாக்காளர்கள் நிலை கவலைக்குரியது தான். ஆனால் கேரளாவில் ஒண்ணும் நல்ல ஆட்சி நடப்பதாகத் தெரியவில்லை. அங்கிருந்து வரும் செய்திகள் மனக்கலக்கத்தையே உண்டு பண்ணுகிறது. மொத்தத்தில் தென்னிந்திய அரசியலே கொஞ்சம் அசட்டுத் தனமாகத் தான் இருக்கு!

    பதிலளிநீக்கு
  14. மக்கள் தேர்தல் வரும்போது கட்சியை, நடிகரை, சாதியை ஓரங்கட்டி விட்டு வேட்பாளர் நமது தொகுதியில் பிறந்தவரா ? இந்த ஏரியாவை அறிந்தவரா ? என்பதை வைத்து பிரச்சாரக் கூட்டங்களுக்கு செல்லாமல் அந்தநாளில் மட்டும் விடுமுறை எடுத்தாவது ஓட்டுப்போட்டு விட்டு வழக்கமான வாழ்க்கைக்கு திரும்பினால் இனியாவது நாடு உருப்படும்.

    ஆனால் மக்கள் எப்பொழுது தேர்தல் வரும் எல்லா வேட்பாளர்களிடமும் பணம் வாங்கலாம் என்று இருந்தால் ???

    அடுத்த சந்ததி சோத்துக்கு மண்ணைத் திங்கிற நிலைதான் வரும்.

    பதிலளிநீக்கு
  15. கேள்வி சரிதான்!

    பதிலளிநீக்கு
  16. காசுக்கு.. ஹ்ம்ம் இவங்க காலில் விழறாங்களா காலை பிடிச்சி இழுத்துப்போட பிராக்டிஸ் செய்றாங்களான்னு குழம்பி போனேன் ..
    சிவசம்போ சொல்றது உண்மையா ? 300 ரூபாய்க்கா ஓட்டு போட்டாங்க :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க 300 ரூபாயாவது பரவாயில்லை பிறகு தருகிறேன் என்று கடன் சொல்லி ஏமாற்றியவர்களும் உண்டு.

      நீக்கு
  17. மாதம் ஆயிரம் ஓவா கொடுத்து மாதம் ரெண்டாயிரம் லாபம் சம்பாதிப்பவர் முதலாளி......ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டும் ஆயிர ஓவா மட்டும் கொடுத்து ஆயிரம் கோடி அடிப்பவன்.. முதலாளி என்ற வரையறுக்குள் வரமுடியாது..அவன் கொள்ளைக்காரன்... நம்பிக்கை மோசடிக்காரன்...ஒரு தொழிலாளி..முதலாளியின் காலில் விழுவது கிடையாது... கொள்ளைக்காரன் கொள்ளையடிக்க வழிகாட்டிய கொள்ளைக்காரியின் காலில் விழுவது அவர்கள் மொழியில் வாழ(கொள்ளையடிக்க) வைத்த தெய்வம். அதற்குதான் காலில் விழுவது...இப்படியே.....நீளமாக போய்கிட்டே இருக்கும் நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே விரிவான விளக்கவுரை தங்களது பாணியில் நன்று.

      நீக்கு
  18. காலில் விழுந்து காலை வாரியவர்கள்

    பதிலளிநீக்கு
  19. அருமையான தகவல்
    சிறந்த வழிகாட்டல்

    பதிலளிநீக்கு