தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, நவம்பர் 11, 2017

இது சிரிப்பதற்கு அல்ல !

 இனியாவது திருந்தணும் தலைவர்கள் அல்ல மக்கள்.
 பிரதமர் பதவி நாங்கள் உனக்கு கொடுத்த வேலை.

வியாழன், நவம்பர் 09, 2017

MONEY மண்டபம்


செவாலியே திரு. சிவாஜி கணேசன் அவர்கள் மீது எனக்கு விரோதம் கிடையாது அவர் இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் இதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது மேலும் அவர் பச்சைத்தமிழன் அதில் நாம் அனைவரும் இணைந்தே பெருமை கொள்வோம். அவருக்கு மணி மண்டபம் கட்டுவதற்கு பலரும் பல கருத்துகளை சொல்லி வருகின்றார்கள் அவருடைய ரசிகர்கள் இதற்கு மறுப்பு சொல்வார்களா ? மாட்டார்கள் காரணம் தமிழர்கள் ரசிகர் என்ற வட்டத்துக்குள் தன்னை சிறை படுத்திக்கொண்ட பிறகு திரைப்பட வசனகர்த்தாவின் சுய அறிவில் உதித்ததை தனது தலைவன் வாயசைத்து சொன்னதை வேதவாக்காக நினைக்கிறான். அதனால்தான் அவர்களை முதல்வர் ஆக்கவும் துடிக்கின்றான். பொதுநலத்துக்கு வருபவர்கள் ஒழுக்கமானவர்களாக இருக்க வேண்டுமென்பது தமிழகத்தைப் பொருத்தவரை அவசியமற்றுப் போய்விட்டது ஆகவே ரசிகர்களுக்கு அவன் நாலு மனைவிகளை திருமணம் செய்து ஏழு நபர்களை வைத்திருந்தாலும் அது தவறாக தோன்றுவதில்லை எல்லாம் சரி எதுவும் சரி இந்த வார்த்தைகள் திரு. சிவாஜி கணேசன் அவர்களை சொல்வதாக நினைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன் வேறு யார் ? நிறைய நபர்களை சொல்லலாம்.

சனி, நவம்பர் 04, 2017

My, Society


இந்த சமுதாயத்தில் எந்த ஒரு திறமைசாலியையும் தட்டிக் கொடுத்து உயர்த்தி விடுபவர்களை விட அவனை மட்டம் தட்டி கவுத்தி விடுபவர்கள்தான் அதிகம் பேர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை இந்த சமுதாயம் ஒரு குப்பைத் தொட்டி அதன் விளக்கம்.

ஒரு குப்பைத் தொட்டியில் சிறிதளவு மலம் கிடந்தாலும் சரி அதே குப்பைத் தொட்டியில் பெரிதளவு சந்தனம் கிடந்தாலும் சரி அதே நாற்றம்தான் வரும் இதைப் போலவே நல்லதோ கெட்டதோ எந்தக் காரியத்தை செய்தாலும் இந்த சமுதாயம் குறை சொல்லிக் கொண்டே.. இருக்கும் நம் மனதுக்கு நல்லது என்று மனசாட்சி சொல்வதை செய்து கொண்டே இருக்க வேண்டும் நியாயமான மனசாட்சிக்கு நிகரான நீதிபதி மட்டுமல்ல இறைவன்கூட வேறு யாருமில்லை ஆகவே என்னைப் பொருத்தவரை இந்த சமுதாயம் ஒரு குப்பைத்தொட்டி.

Chivas Regal சிவசம்போ-
குப்பைத்தொட்டி நாற்றம் வரும்னு கண்டு புடிச்சவரு இவருதான்.

புதன், நவம்பர் 01, 2017

எடப்பாடி, எத்தன் எல்லப்பன்


01. பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க
பதியும், சதியும் விதியோடு சாக.

02. கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கி நின்றான் இலங்கை வேந்தன்
கடன் வாங்கித் தின்ற பிரியாணியால் கழிவறையில் கலக்கி நின்றான் இலங்கேஸ்வரன்.