தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், மே 08, 2013

சவுக்கடி

 
எனது தளத்தில் நான் வெளியிடும் விசயங்களை சிலர் Copy அடித்து முகநூலில் தனது கருத்துக்கள்போல் வெளியிடுவதாக ஷார்ஜா நண்பர் கணேசன் காளீஸ்வரன், ( Working in CBD Dubai ) சொன்னதை கேட்டு என் மனம் வேதனையாக உள்ளது, 

1983 - 1989 ஆண்டுகளில் நான் சிலவார இதழ்களுக்கு எழுதி அனுப்பிய துணுக்குகள், சிறுகதைகள், பத்திரிக்கைகளில் வெளிவராமலும், எனக்கு திருப்பியனுப்பாத கதைகளும் சிறிதுகாலம் கழித்து மற்றவர்கள் பெயரில் எனது தலைப்பும், கதாபாத்திரங்களின் பெயர்களும் மாற்றப்பட்டு கதையில் சிறிய மாற்றங்கள் செய்து வெளியானது கண்டு மனம் துடித்திருக்கிறேன், அந்த வேதனை எப்படியானது தெரியுமா ? உனது குழந்தைக்கு மற்றவன் இன்ஷியல் போட்டால் உனக்கு எப்படி இருக்கும் ? அதைப் போலிருந்தது எனக்கும், இந்த வேதனையில் நாளடைவில் எழுதுவதையே நிறுத்தி விட்டேன், எனது தளத்தில்கூட பிறருடைய கருத்துக்களை நான் சொல்ல வேண்டிய நிலை வரும்போது...

(தலைப்புகள் குடியாட்சியாம், சாகாகலை, சந்தோஷம், காட்மண்டு கடவுள், வியத்தகு வில்லியம்ஸ், பே.பே.பேச்சிமுத்து, Sir Post,  வாழ்க்கை வாழ்வதற்கே, 1/2 கிலோ கவலை, இனி வரப்போகும் வாழ்வாதாரம்) 

இதில் சில வார்த்தைகள் யாருடையது என்பதை குறிப்பிட்டுள்ளேன்,  முகநூலில் வெளிவரும் பல புகைப்படங்களை பார்த்துக்கூட பல விஷயங்கள் நான் எழுதுகிறேன், அல்லது விஷயங்களுக்கு புகைப்படங்களை உருவாக்குகிறேன், ஆனால் கருத்துக்களை ஒருபோதும் நான் Copy அடித்ததில்லை, அது எதற்கு சமம் என்பதை கீழே கருப்பு நிறத்தில் எழுதியுள்ளேன், எழுத்தாளர் ராஜேஸ்குமார் அவர்கள் சொன்னதைப் போல பிஞ்சு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றா விட்டாலும் பரவாயில்லை வெண்ணீர் ஊற்றாதீர்.

நண்பா... இனியெனும்
மலம் கழித்து வாழ்   
மலம் களித்து வாழாதே   
இதற்குமேல் ஒரு சவுக்கடி வேண்டுமா ?
இதற்கு நீ கொடுக்க வேண்டுமா பதிலடி ?
Come to my, e-mail I.D.