தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, செப்டம்பர் 26, 2015

இயற்கையை காப்போம், இன்பமாய் வாழ்வோம்


 தினம் ஒரு மரம் வெட்டுவோம் ஆம் நண்பர்களே... வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்றுதான் கேள்விப்பட்டு இருப்பீர்கள் இதென்ன ? புதுசு ஆம் புதுசு கண்ணா புதுசு இயற்கையை காப்பாற்ற நாம் புதிதாக மரம் நடவேண்டாம் கீழ்காணும் காணொளியைக் கண்டு கேளுங்கள்.

சீமை கருவேல மரங்களால் நமக்கு பயன் என்ன ? என்பதை. ஆங்கிலேயர்களின் தொலை நோக்குப்பார்வை அன்றே அவர்கள் சிந்தித்துதான் காஷ்மீரைக்கூட தனி மாநிலமாக இந்தியாவுக்கு ஒரு நிரந்தர தலைவலி கொடுக்க கூடிய இடமாக ஒப்பந்தத்தைக் வைத்தும், பாண்டிச்சேரியை தனி மாநிலமாகவும் வைத்து விட்டு சென்று விட்டார்கள் இன்றைக்கும் காஷ்மீரியர்களைத் தவிர பிறர் அங்கு இடம் வாங்க முடியாது அதேபோல இன்றுவரை அங்கு விலைவாசிகளும் 1947லில் உள்ள விலையே இதற்காக மட்டும் இந்திய அரசாங்கம் வருடத்துக்கு பல கோடிகளை செலவு செய்து வருகிறது நான் இதை படித்ததற்கான இந்த ஆதார நூல்கள் முன்பு நான் தேவகோட்டையில் வைத்திருந்தேன் இந்தமுறை வரும் பொழுது தேடினேன் கிடைக்கவில்லை அது கிடைத்து இருந்தால் கூடுதல் விபரம் நான் எழுதியிருக்க முடியும் இந்தக்கட்டுரை அதனைக்குறித்து அல்ல ! சீமை கருவேல மரங்களைக் குறித்தே...


சரி இந்த கருவேலமரங்களை சராசரி அன்றாட உழைப்புகளுக்கு ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் மக்களாகிய நாமே ஒழிப்பது நடக்க கூடிய காரியமா ? என்று தோன்றலாம் இதற்கு அரசாங்கம்தான் முன் வரவேண்டும்.

அரசாங்க முன் வருமா ? 
வரவைப்பதே நமது வேலை ஏன் ? 
பக்கத்து மாநிலங்களில் எப்படி கொண்டு வந்தார்கள் ? 

நாம் அரசியல்வாதிகள் கொடுக்கும் இலவசங்களுக்கு மயங்கி விடுகிறோம் ஆகவே இந்த மயக்கமே நம்மை சிந்திக்க மறுக்க வைக்கிறது மேலும் பண ஆசையால் இருக்கின்ற விளை நிலங்களையும் விலைக்கு கொடுத்து விட்டு உலை வைக்க அரிசிக்கு அடுத்த மாநிலங்களை எதிர் பார்க்கும் நிலைக்கு வந்தும் விட்டோம் இது எங்கு போய் நிற்குமோ ? நமது சந்ததிகளுக்கு சொத்து சேர்த்து வைக்க ஆசைப்படும் நாம் அவர்கள் உண்டு களித்து அந்த சொத்துக்களை பராமரிக்க வேண்டும் என்ற சிந்தை இல்லாமல் வாழ்கிறோம் விவசாயம் என்றால் என்ன ? என்பதை நமது சந்திகளுக்கு தெரியாமல் போய்விடுமோ ? என்ற சூழலை உருவாக்கி விட்டோம் இதுவா நாம் நமது சந்ததிகளுக்கு கொடுப்பது நாளை இவர்களின் உணவுக்கு வழி என்ன ? மாடமாளிகைகள் கட்டி வீட்டில் பொன்னும், பொருளும் இருந்தாலும் உண்ணும் உணவு இல்லையெனில் வாழ முடியுமா ? உணவுக்காக வாழ்க்கையா ? வாழ்க்கைக்காக உணவா ? என்றால் இரண்டுமே அவசியமானதே... 

இயற்கையை மறந்து செயற்கையை நோக்கியே மக்களாகிய நாம் பயணிக்கிறோம் இது தொடர் வாழ்க்கை அல்ல இது முற்றுப்புள்ளியை கொடுத்து விடும் இயற்கை வாழ்க்கை நமக்கு தொடர்புள்ளியை அள்ளித்தரும்.

மக்களே மாற்றுச் சிந்தனைக்கு இனியெனும் வருவோம் நமக்காக அல்ல நாளைய நமது சந்ததிகளின் வாழ்வாதாரத்துக்காக இயற்கை தந்த வளங்களை அழிக்க நினைக்கிறோம் ஆளால் நம்மை அழிக்கும் கருவேல மரங்களை ஒழிக்க சலிக்கிறோம் ஒவ்வொரு மனிதனும் இது நம்நாடு, நம் மக்கள் நம் இனம் என்ற கோட்பாட்டுக்குள் நம்மை நாமே வரையறுத்துக் கொண்டு வாழ்ந்தால் நாம் நம்மை காக்கலாம் மக்களின் உணர்வை மழுங்கடிப்பது இன்றைய அரசியல்வாதிகளே இனியெனும் சிந்திப்போம் நாளைய சந்ததிகளை காப்போம்

இயற்கை காக்க இந்த ஒலியை கேட்டால் தங்களுக்கு விளங்கும் சீமை கருவேல மரங்களை வெட்டுவோம் மழை பெறுவோம் இயற்கையுடன் சேர்ந்து இன்பமாய் வாழ்வோம்.

 

தமிழ்நாடு சீமை கருவேலமர ஒழிப்பு இயக்கத்திற்க்கு அபுதாபியிலிருந்து எமது வாழ்த்துகள்.

புதுக்கோட்டை பதிவர் திருவிழா நடத்தும் மின் இலக்கிய போட்டிகள் 2015க்காக எழுதப்பட்டது (வகை 2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றிய கட்டுரைப் போட்டிக்கு...


பரிசு என அறிவித்து இருந்தார்கள் எனவே ‘’கட்டுரை’’ என்ற வகையில் நான் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரையை என்னுடையது என்று உறுதி தருவதோடு போட்டிகள் முடியும் வரை வேறு தளங்களில் வெளியிட மாட்டேன் என்றும் உறுதி தருகிறேன்.

நான் போட்டிக்கு அனுப்பிய பிற படைப்புகளை காண கீழே சொடுக்குக...




2015 புதுக்கோட்டை பதிவர் விழாவுக்கு அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கும்.

தேவகோட்டையான்
கில்லர்ஜி किल्लरजि കില്ലർജി  కిల్లర్ జి  Killergeeكـــيللرجــــي
ஒளி கண்டு ஒலி கேட்பீர்.

60 கருத்துகள்:

  1. வணக்கம் ஜி! இந்த மரம்தான் 100.200மீட்டர் தூரத்தில் நீரை உறிஞ்சிவிடும்! எவ்வளவு வரட்சியானாலும் இது வளரும்! O2இழுத்து Co2வெளியிடும்? சுற்றுச் சூழலை பாதிக்கும் இந்த மரத்தை வேருடன் அழிக்க வேண்டும்
    வாழ்த்துக்கள் ஜி!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மையே காணொளியில் அதை விபரமாக சொல்லப்படுகிறது வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  2. அருமையான ஆக்கம்,
    காணோளி உண்மையிலே அருமை சகோ,
    வாழ்த்துக்கள்,

    பதிலளிநீக்கு
  3. ஓட்டு போட முடியல சகோ,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை அடுத்த பதிவுக்கு 2 போடுங்கள்

      நீக்கு
  4. நல்லதொரு பணியினை எடுத்துக் காட்டுகின்றது - பதிவு!..

    பொற்காசுகள் அனைத்தையும் தாங்களே பெறுதற்கு நல்வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
  5. போட்டியில் எந்த வகையையும் விட்டு வைக்கவில்லை நீங்கள் சீமைக் கருவேலமரம் குறித்த மாற்றுக் கருத்துகளையும் வலையில் படித்தநினைவு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா வருகைக்கு நன்றி மரபுக்கவிதையை வரவு வைக்க முடியவில்லையே... ஐயா

      நீக்கு
  6. சிந்திப்போம் நாளை சந்ததிகளைக் காப்போம். நல்லா சொன்னிங்க சகோ. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. கவலைப்பட வேண்டிய விஷயம். உபயோகமான பதிவு. வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. போட்டிற்கு உரிய தங்களின் கட்டுரைகள் அணிவகுத்துக் கொண்டே இருக்கின்றன
    அருமை
    வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இன்னும் முடியவில்லையே வருகைக்கு நன்றி

      நீக்கு
  9. அன்புள்ள ஜி,

    சுற்றுச் சூழல் விழிப்புணர்வு கட்டுரை கண்டேன். நிறைய தகவல்களை விளக்கியிருப்பது கண்டு வியந்தேன். போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்.

    த.ம. 5

    பதிலளிநீக்கு
  10. நல்லதொரு விஷயத்தினை எடுத்துச் சொல்லும் பதிவு.

    வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. நாள் ஒரு மரம் வெட்டு
    வேண்டாம் ஐயா
    நாள் ஒரு மரம் நாட்டு
    வேண்டும் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நான் சொல்ல வந்த விடயம் சீமை கருவேல மரங்களைப்பற்றி வருகைக்கு நன்றி

      நீக்கு

  12. அருமையான பதிவு சகோ வாழ்த்துக்கள் ! நான் கோவில் திருவிழாவுக்கு பாவூர் சத்திரம் செல்கிறேன். உங்கள் அடுத்த பதிவுகளுக்கு இங்கு வந்த பிறகு கருத்துக்களை சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கு நன்றி சகோ தங்களின் கோவில் பயணம் சிறக்க வாழ்த்துகள்

      நீக்கு
  13. வாழ்த்துக்கள்!! நண்பரே........

    பதிலளிநீக்கு
  14. சீமைக் கருவேல முள் குத்தினால் வலிக்குமே ,அதைப் போல எல்லோர் மனதிலும் தைத்தால் அல்லவா வழி பிறக்கும் ?

    பதிலளிநீக்கு
  15. சிந்திக்க வைக்கும் பகிர்வு ஊர்கூடி மரம் வெட்டுவோம்.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜீ.

    பதிலளிநீக்கு
  16. அருமையான கட்டுரை அண்ணா...
    வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. அருமையான பதிவு! வெற்றி பெற புதுகை விழாக்குழுவின் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

  18. சீமை கருவேலமரம் அழிக்கப்படவேண்டிய ஒன்று. இது குறித்து தாங்கள் எழுதிய இந்த கட்டுரை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!


    ஒரு திருத்தம்:-பாண்டிச்சேரியை ஆங்கிலேயர்கள் தனி மாநிலமாக ஆக்கி சென்றார்கள் என்ற இடத்தில் காஷ்மீரை தனி மாநிலமாக ஆக்கி சென்றார்கள் என்றிருக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் ஊக்கப்படுத்தும் கருத்துரைக்கு நன்றி நண்பரே அனுமதியோடு திருத்தி விட்டேன் நன்றி வரலாறு முக்கியம்.

      நீக்கு
  19. விழிப்புணர்வோடு நல்ல விடயம் எடுத்து வந்துள்ளீர்கள் ஜி really great. இதுவரை நான் கேள்விப்படாதது மிக்க நன்றி இவ்விடயம் அனைவருக்கும் போய்ச் சேர வேண்டும். அனைத்தும் அழகான நடையில் பின்னி விட்டீர்கள் சகோ. வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜி.....!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  20. பெயரில்லா9/27/2015 12:11 PM

    மரம்.....ஆகா! ரெம்ப அருமை...வெற்றி பெற வாழ்த்துகள்
    இன்னும் என் நெருக்கடி நேரம் தொடருது
    ப்ளீஸ்! அடுத்த செவ்வாய் வரை.. பின்பு வந்து கருத்திடுவேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்கள் வரவு கண்டு மகிழ்ச்சி

      நீக்கு
  21. ஒழிக்க வேண்டிய மரம் தான்! நல்லதொரு கட்டுரை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  22. சூழல் பாதுகாப்பு குறித்த நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவு. பாராட்டுகள். வெற்றிபெற இனிய வாழ்த்துகள் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி சகோ.

      நீக்கு
  23. விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு. வெற்றிக்கு வாழ்த்துக்கள் நண்பரே!
    த ம 11

    பதிலளிநீக்கு
  24. உண்மை துணிச்சலான பதிவு வாழ்த்துக்கள் ....

    பதிலளிநீக்கு
  25. நல்லதொரு விழிப்புணார்வு கட்டுரை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.!!

    பதிலளிநீக்கு
  26. நல்லதொரு விழிப்புணர்வு கட்டுரை. வாழ்த்துக்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  27. நலம் தரும் பதிவு! வெற்றி பெற வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவின் வருகை கண்டு மகிழ்ச்சி நன்றி

      நீக்கு
  28. ....எதையும், துணிவாக முன் நிறுத்துவதில் சிறந்த திறமைப்படைத்தவர் நீங்கள் என்பதை ஒவொரு பதிவிலும் நிருபிக்கிறீர்கள்.... பதிவில் நீங்கள் குறிப்பிட்ட அந்த மரத்தைவிட அதிகம் மனித இனத்திற்கும், கால்நடைகளுக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் நச்சுத்தன்மை மிக்க பார்த்தீனியம் செடியை அழிப்பதுதான் மிக முக்கியம்... இன்னமும் அந்த செடியை முழுமையாக அகற்ற முடியவில்லை என்பது.... தாவரவியல் நிபுணர்களுக்கே ஒரு சவாலான நிலைமை இன்னமும் தொடர்கிறது .....நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் ஊக்கமான விரிவான கருத்துரைக்கு நன்றி உள்ளதைச் சொன்னேன்

      நீக்கு
  29. இளைதாக முள்மரம் களைக.
    முற்றிப்படர விட்டு விட்டோம
    முனைந்து அழிக்க முற்படுவோம்
    சுற்றுச் சூழல் காப்போம்.
    கட்டுரையினும் காணொலிப் பதிவு கூடுதல் சிறப்பு.
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  30. காட்டுக்கருவை மரத்தின் தீமைகளை விரிவாக எடுத்துச்சொல்லும் விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி. இம்மரத்தை முழுவதுமாக அழிக்க வேண்டும். போட்டியில் வெல்ல வாழ்த்துகிறேன் கில்லர்ஜி சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் விரிவான கருத்திற்க்கும் நன்றி சகோ

      நீக்கு