தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜூலை 03, 2017

என் காதல், உன் காதில் சொல்வேன்


என்னை அவளுக்கு பிடித்ததற்கு காரணம்
அவள் நிழலைக்கூட நான் தொடாதது...

அவளை எனக்கு பிடித்ததற்கு காரணம் 
அவள் தன் நிழலைக்கூட தொட விடாதது...

உன்னை எனக்கும், என்னை உனக்கும் பிடித்தென்ன லாபம் ரதியே இது விதி என்னும் சதியனுக்கு பிடிக்கவில்லையே... ? 

உம்மை ஒரு நாள் மறந்திருப்போம் அன்று நிச்சயம் யாம் இறந்திருப்போம்.

48 கருத்துகள்:

  1. அவளுக்கும் ஆசை வந்து அவனுக்கும் ஆசை வந்தா அரசாங்கம்கூட தடுக்காது....சதியன் யார்,வந்து தடுக்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இது ஜென்டில்மேன் ஆசையாக இருக்குமோ... ?

      நீக்கு
  2. விதி எனும் சதியன் செய்த வேலை இது தானோ?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விதியின் வசம் சிக்காதோர் யார் உண்டு ஜி

      நீக்கு
  3. ஆஹா ஆஹா அற்புதம் அற்புதம்..! அழகான நறுக்கென்ற கவிதை. கடைசி வரியில் நெஞ்சு வலித்தது.

    பதிலளிநீக்கு
  4. பச்சை நிறத்தில் ஜொலிக்கும் அந்த 2 வது வரி எனக்கு மிகவும் பிடித்துள்ளது கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பதிவின் முக்கிய வரிகளை சரியாக சொன்னது எனக்கும் பிடித்துள்ளது

      நீக்கு
  5. அபூர்வக் காதல். பார்க்காத காதல் போல தொடாத காதல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம் ஜி டி.ராஜேந்தர் ரசிகனாக இருப்பானோ ?

      நீக்கு
  6. நல்லாருக்கு ஜி...நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...

    கீதா

    பதிலளிநீக்கு
  7. ‘சதியனை மதியால் வெல்வோம்
    வாழ்வோம் வாழ்ந்துகாட்டுவோம்’ -கவிதையை இப்படியும் முடித்திருக்கலாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இது முடிந்து போன காதல் அவளின் நினைவலைகளின் ஓலம் வருகைக்கு நன்றி

      நீக்கு
  8. மனம் கனத்து போனது கவிதை படித்து.

    பதிலளிநீக்கு
  9. தொடாத காதல். எந்த யுகத்துல? நீங்க சொல்ற காலம்லாம் காலாவதியாகி ரொம்ப வருஷமாச்சு போலிருக்கே. வரிகளை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது பழமையான உண்மையான தெய்வீகக்காதல் நண்பரே...

      நீக்கு
  10. பிரிக்குறதையே முழு நேர தொழிலாய் கொண்டவன் இந்த சதியன்

    பதிலளிநீக்கு
  11. அருமையான வரிகள்! மனதைக் கனக்கச் செய்யும் காதல்! அரிதான காதல்! உண்மையான காதல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ உண்மையான காதலில் தொடுதல் கூடாது

      நீக்கு
  12. காதலின் பொன் வீதியில் விளைந்த கவிதை வரிகளா ? நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே நலம்தானே.....
      வருகைக்கு நன்றி

      நீக்கு
  13. இருவரும் மேல் சாதி என்றால் பிரச்சினை இல்லை. ஒருவர் ஆதிக்க சாதியாய் இருந்து மற்றவர்...சாதியாக இருந்தால் அங்கு சாதி வந்து ஆணவக் கொலை நடக்குமே..இந்நாட்டில.........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே காதலைவிட சாதீ பவர் ஃபுல்லானது.

      நீக்கு
  14. வயதாகும் போது அன்பு பெருகும் என்பது உண்மை தான் போலும், இருப்பவர்க்கு அருமை புரிவதில்லை, இல்லையென்றான பின்போ வலிகளுக்கு மருந்தும் இலலை, எல்லாம் காலம் செய்யும் கோலம் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இழந்த பின்னே பலருக்கும் அதன் அருமை தெரிவது உண்மை

      நீக்கு
  15. வணக்கம் ஜி !


    அள்ளிக் கொடுத்த கனவெல்லாம்
    ...அடிநெஞ் சத்தில் புதைந்தாலும்
    தள்ளிச் சென்ற சுகமெல்லாம்
    ...தன்னுள் தீயை வளர்த்தாலும்
    துள்ளித் திரிந்த காலங்கள்
    ...தொடர்ந்தே நினைவில் அசைபோட்டுத்
    உள்ளத் திருக்கும் காயத்தை
    ...ஒற்றிப் பார்த்தே உயிர்வாட்டும் !

    நல்ல உணர்வுகள் ஜி
    அழகிய நினைவுகள்
    காலங்கள் கடந்தும் ......
    கலையாமல் நெஞ்சில் ......!

    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே அழகிய கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  16. அந்த விதிதானே உங்களிடமிருந்து இத்தகைய கவிதையை வரவழைத்தது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே ஒன்றைப்பெற ஒன்றை இழந்தே தீரவேண்டும் என்பதும் விதிதானோ... ?

      நீக்கு
  17. ‘காதல்,காதல்,காதல்,
    காதல் போயிற் காதல் போயிற்
    சாதல்,சாதல்,சாதல்.’
    என்ற தேசியக்கவியின் பாடல் நினைவுக்கு வருகிறது.
    கவிதையை இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  18. இதுதான் தூய காதல் என்பதும்
    இதைத்தான் உண்மை கவிதைஎன்பதும்
    மனம் தொட்டப் பதிவு
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரின் கருத்துரை மகிழ்ச்சி தருகிறது.

      நீக்கு
  19. ஹும்ம்ம்ம்... அன்பும் வலியும் நிறைந்த வார்த்தைகள்...

    பதிலளிநீக்கு
  20. உண்மைக் காதல் - அவரவர்
    நிழலைக்கூடத் தொடாமலே மலரும் - அது
    அவரவர் உள்ளங்கள் உரசுவதால் மலருவதே!

    பதிலளிநீக்கு