செவ்வாய், அக்டோபர் 16, 2018

குடிகாரனின் வில்லுப்பாட்டு
      ட்பூக்களே... தொங்குணான்டி பாளையம் கோவில் திருவிழாவில் குலசை முத்தாரம்மன் முத்துலட்சுமி குழுவினரின் வில்லுப்பாட்டுக்கு ஏற்பாடு செய்யதிருந்தார்கள் அவர்கள் வந்த விமானம் டயர் பஞ்சரான காரணத்தால் தாமதமானதோடு தங்களால் வர இயலாது என்பதை வாட்ஸ்-அப்பில் தெரிவிக்க, வேறு வழியின்றி அவசரத்துக்கு உள்ளூர் வில்லுப் பாட்டுக்காரன் விடியாமூஞ்சி விருமாண்டியை அழைத்து வந்து பாடச் சொன்னார்கள் அது மாலையானாலே மலையேறி விடும் இதோ அது பாடிய வில்லுங்கப்பாட்டு... அவசரம் என்பதால் அவரது குழுவினர் கிடைக்காத காரணத்தால் பின்னணி நாமும் சேர்ந்தே பாடுவோம்.

சனி, அக்டோபர் 13, 2018

இந்தப்படை போதுமா ?


ட்பூக்களே... இனிவரும் காலங்களில் தமிழக மக்கள் இன்னும் பல இன்னல்களை சந்திக்க வேண்டியது வரும். ஆம் விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் பிள்ளையாரை கட்டிட அளவு உயரத்துக்கு வடிவமைத்து அதை தெருக்களில் கொண்டு சென்று மக்களுக்கு பல இடையூறுகளை கொடுக்கின்றனர். நண்டு முதல் சிண்டுவரை தலையில் ரிப்பன் போன்ற காவி துணிகளை கட்டிக்கொண்டு ஆட்டம் போடுகின்றனர் அந்த ஆட்டமும் நாக்கை துறுத்திக் கடித்துக்கொண்டு, இலவு வீட்டில் போடும் குத்தாட்டம் போலவே இருக்கிறது அனைவருமே ஃபுல் போதை இதுவா பக்தி ?

புதன், அக்டோபர் 10, 2018

சாத்தான்குளம், சாமியார் சாரங்கபாணி


இப்பதிவின் முந்தைய தொடர்ச்சிகளை படிக்க கீழே சொடுக்குக...

மராத் லைசென்ஸ் இண்டர்நேஷனல் லைசென்ஸுக்கு இணையானது இதை வைத்து நான் ஜெர்மனி, ஒமான் நாடுகளில் விசிட்டிங்கில் ஓட்டியிருக்கிறேன். அதன் பிறகு கார் வாங்குவதற்காக ஆறு மாதம் காத்திருந்தேன் காரணம் லைசென்ஸ் எடுத்து ஆறு மாதங்களுக்குள் ஏதாவது சிறிய விபத்து நடந்தாலும் லைசென்ஸ் மீண்டும் பறிக்கப்பட்டு ஸ்கூலில் போய் படித்து வா என்று அனுப்பி விடுவார்கள் பிறகு கார் வாங்கி ஓட்டிய பிறகுதான் நம்மிடமும் இவ்வளவு திறமை இருக்கின்றதே... என்ற நம்பிக்கை வந்தது காரணம் நான் சிறிய வயதில் நாற்பது K.M வேகத்தில் நடைவண்டி ஓட்டியவன்.

ஞாயிறு, அக்டோபர் 07, 2018

அந்த தருணங்கள்இப்பதிவின் முந்தைய தொடர்ச்சிகளை படிக்க கீழே சொடுக்குக...

ன்னை இவன் போலீஸ் டெஸ்டுக்கு ரெடியா ? என்ற டெஸ்டுக்கு அனுப்பி வைத்தார்கள் அதற்கு வந்த மாஸ்டர் பாக்கிஸ்தானி அடி வயிறுவரை தாடி வைத்திருந்த அவனைக் கண்டதுமே எனக்கு அடி வயிற்றைக் கலக்கியது பயமில்லை இருப்பினும் எனது குடுமி இன்று இவனது கையில்தானே இவன் என்ன நினைக்கின்றானோ ? அதுதானே நடக்கும்.

வியாழன், அக்டோபர் 04, 2018

உலகம் தோன்றியதிலிருந்து...
இப்பதிவின் முந்தைய தொடர்ச்சிகளை படிக்க கீழே சொடுக்குக...

றுநாள் முதல் எஜிப்திய மாஸ்டர் வந்தார் பொதுவாக எஜிப்தியர்கள் அதிகம் பேசுவார்கள் இது அவர்களின் ரத்தத்துடன் கலந்த பிறவிக்குணம காரணம் வாய் காதுவரை இருக்கும் ஏதாவது தவறுகளால் போலீஸார் காரைப்பிடித்து நிறுத்தினாலும் பேசிப் பேசியே அவர்களைக் கொன்று விடுவார்கள் இதன் காரணமாகவே பல போலீஸ்காரர்கள் அபராதம் எழுத வேண்டியவர்களைகூட என்னை விடுடா சாமி என போய் விடுவார்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...