தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜூலை 11, 2014

தாலி


திருமணமான பெண்கள் கழுத்தில், மஞ்சள் கயிறை காண்பது இப்பொழுது அரிதாகி விட்டது ஏன் ? தாலியை, பெண்கள் உயர்வாக நினைத்தது கடந்த காலம் என்ற பருவ நிலைக்கு மாறக் காரணம் என்ன ? போலி கௌரவம் மனதில் குடிகொண்டு விட்டது, இதன் விளைவு ? சில நேரங்களில் உயிர்ப்பலியில் வந்து கூட முடிகிறது பெண்களுக்கு பொன்ஆசை மண்ணுக்கு போகும்வரை விடாது கணவன் கட்டி விடும் மஞ்சள் கயிற்றை தனது வாழ்நாள்வரை, அல்லது கணவன் இறக்கும்வரை உயிராக நினைத்து வந்தார்கள், இப்பொழுது அப்படியில்லை தாலி என்பது தங்கச் செயினில் இருந்தால்தான் கௌரவம் என நினைத்து அதையும் 5 அல்லது 10 பவுனில் செய்தால்தான் மரியாதையென கருதுகின்றார்கள்.

கொள்ளையர்களும், வழிப்பறி திருடர்களும் அபகறிக்கும்போது தாலியென அதற்கு முதல் மரியாதை கொடுக்க, அவர்கள் என்ன பாரதிராஜாவா எதையும் செய்யத் துணிந்த கயவர்கள்.

சமீபத்தில் நடந்த உண்மைச் சம்பவம் கொள்ளையர்கள் கத்தி முனையில் குழந்தையை நிறுத்தி, வீட்டில் உள்ளவர்களிடம் பணமும். 225 பவுன் நகைகளை கொள்ளை அடிக்கும்போது, எல்லா பெண்களிடமும் தாலியையும் கழட்டி விட்டார்கள், 225 பவுன் நகை வைத்திருந்தவர்கள் வீட்டில் தாலிச்செயின் எத்தனை பவுனில் போட்டிருப்பார்கள் எனநீங்களே யூகித்துக் கொள்ளுங்கள், ஒரு வயதான அம்மையார் கொள்ளையர்களின் காலில் விழுந்து மன்றாடி இருக்கிறார் தாலியை மட்டும் விட்டு விடுங்கள் என்று...

பதியின் காலில் விழுந்து பழக்கப்பட்ட சதியை, சதிகாரர்களின் காலிலும் விழ வைத்தது விதி அதில் ஒரு நல்லதாய் பெற்ற மகன் தாலியை மட்டும் விட்டு விட்டா(ர்)ன்.

ஏன் அந்த மஞ்சள் கயிற்றை உங்கள் கழுத்தில் தொங்க விட்டால் கௌரவம் குறைந்து விடுமா ? அப்படி நினைத்தால் அந்த நஞ்சுக் கயிற்றை கட்ட வேண்டிய அவசியமென்ன ? மனம்போல வாழ்க்கை என்ற நிலைக்கு மாறி விடலாமே ! 

சினிமாக்களிலும், சீரியல்களிலும் வரும் தாலியை கழட்டி எறியும் காட்சிகள் சர்வ சாதாரணமாக பார்த்து வந்த, பெண்கள் தாலியையும் சாதாரண உடலில் இடும் ஆபரணம் போல கொண்டு வந்து விட்டீர்கள். 

இதற்கு மேல் கேள்வி கேட்டால் இத்தனை காலம் நாங்கள் தாலியை சுமந்தோம் இப்பொழுது நாங்கள் உங்களுக்கு கட்டி விடுகிறோம் எனச் சொன்னாலும் சொல்வீர்கள் ஏனென்றால் நீங்கள் பாரதி சொன்ன புதுமைப் பெண்கள்.

CHIVAS REGAL சிவசம்போ-
இதுகூட நல்லாத்தான் இருக்கு எவனாவது, தாலியறுக்க வந்தா ''ங்கொய்யால'' முட்டித் தூக்கிடலாம்.

52 கருத்துகள்:

 1. நண்பரே,

  ஒரு சிறிய பதிவில் தாலியை மட்டுமல்லாமல் அத்துடன் நம் சமூகத்தின் பல விசயங்களை பகடி வரிகளாக சேர்த்து... மிகவும் அருமையான நடை.

  இதனை படிக்கும் போது தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் பாரீசின் புறநகர் பகுதிகளில் பேசப்படும் ஒரு விசயத்தை பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்...

  இங்குள்ள பிக்பாக்கெட் திருடர்களுக்கு நம் சமூகத்தவர்கள் என்றாலே ஏக குஷி ! காரணம் அவர்களின் கொள்ளையடித்தால் நிச்சயமாய் சில பவுன்கள் தேரூம் என்பதுதான் !

  மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்ற காரணத்துக்காக நடமாடும் நகைக்கடையாய் நாம் வளையவரும்வரை இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியாது !

  இன்னொரு விசயம்... ஜீ வலைச்சரத்தில் உங்களின் பின்னூட்டம் படித்தேன் ! முகமறியாதவர் மீது நீங்களெல்லாம் காட்டும் அன்புக்கு என்னிடம் கைமாறு இல்லை தோழரே !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி நண்பரே,,, பிரான்ஸ் ஓபேரா, அன்வர் பகுதியில் தாங்கள் சொல்லும் விபரீதங்களை பார்த்திருக்கிறேன்... இதன் மாற்றம் பெண்கள் கையில்தான் இருக்கிறது...

   நீக்கு
 2. உண்மைதான் நண்பரே,
  தங்கத்தில் தாலி என்பது இன்றைக்கு ஆபத்தான பொருளாகிவிட்டது

  பதிலளிநீக்கு
 3. பதில்கள்
  1. இதை நாம் (ஆண்கள்) உணர்ந்து காரியமில்லை நண்பரே...

   நீக்கு
 4. தாலி என்பது இடையில் வந்தது என்று தமிழறிஞர்கள் கூறுகின்றார்கள்! மஞ்சள் கயிற்றில் அணிந்து கொண்டால் நல்லது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மஞ்சள் பூசியகயிறு உடல்ரீதியாய் பெண்களுக்கு நல்ல பலன்களை தருகிறது, இதை பெண்கள் உணரும் காலம் எப்போது வரும் ?

   நீக்கு
 5. இருக்கபட்ட மவராசிகதான் சாமி, மஞ்சள் தாலி கயிறுல இருந்த கௌவர குறைச்சல்லுன்னு தங்கத்துல அணியுறாங்க...... இல்லாதவுக..... அழுக்கேறிய மஞ்சள் கயிற மாத்துறதுக்குக்கூட வழியில்லாம இருக்குறாங்க....சாமி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் நண்பரே ஆனால் அவர்களும் இருக்கப்பட்ட நிலையை தொடும்போது ? ? ?

   நீக்கு
 6. தாலி பற்றிய
  சிறப்பான ஆய்வுக் கண்ணோட்டம்
  தொடருங்கள்!

  பதிலளிநீக்கு
 7. தாலியில் உள்ளது சம்பத்து தரும் ஆபத்தை மனைவிமார்கள் உணரும் நாள் எப்போதோ ?
  இதுக்குதான் முன்னோர்கள் வெறும் மஞ்சள் கயிறே போதும்னு நினைச்சுருப்பாங்க போலிருக்கே !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் பகவான்ஜி முன்னோர்கள் வாக்கு, நமக்கு எப்பொழுதுமே முற்போக்குதான்.

   நீக்கு
 8. வணக்கம் சகோதரரே!

  உண்மையைதான் சொல்லி இருக்கிறீர்கள்! “புனிதமான தாலியின் மதிப்பு வர வர உதாசீனபடுத்தப் பட்டு வருகிறதோ?” என்றுதான் எண்ண வைக்கிறது. பாரதியும், தான் குரல் கொடுத்தது இந்த அளவு புதுமைகளை ஏற்படுத்தும் என எண்ணியிருக்க மாட்டார்.!! (ஏனென்றால் அவர் அந்த கால மனிதர்) காலத்தின் மாறுதல்களுக்கு பாவம் அவர் என்ன செய்வார்?

  நட்புடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதற்கண் வணக்கம் சகோதரி காரணம் நான் இந்த பதிவிற்க்கு சகோதரிகளின் கருத்துரையை ஆவலுடன் எதிர்பார்த்தேன் தாங்கள் முதலாவதாக வந்து கருத்துரையிட்டுள்ளீர்கள் உள்ளதை உள்ளபடியே உளறியிருக்கிறேன் அதற்கு உண்மையான பாராட்டை தந்துள்ளீர்கள்.
   பாரதிமீது எனக்கு இரண்டு விதமான கருத்தும் உண்டு காரணம் காலத்தின் மாற்றமே...

   நீக்கு
 9. பொறுப்பினை உணரும்படியான பதிவு..
  ஆனாலும் நம் மக்கள் திருந்துவார்கள் என்கின்றீர்களா!?...
  வழி காட்டுவோம்.. வாழ்ந்து கொள்ளட்டும்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துரைக்கு நன்றி ஐயா ஆனால் இதற்கு தார்மீக பொருப்பாளிகள் நாம் தானே...

   நீக்கு
 10. தாங்கள் சொல்லும் தாலிக்காலம் எல்லாம் காலி! இப்போது இருக்கும் திருட்டுக்கலாத்தில் தாலியைப் பல பவுன்களில் அணிவதை விட மஞ்சள் கயிறு நல்லதே...தமிழ்நாட்டில்தான் தாலி சென்டிமென்ட் அதிகமோ? அட போங்கப்பா...லிவ்விங்க் டுகெதர் காலமப்பா இது....தாலியா??!!!

  பதிலளிநீக்கு
 11. இன்றைக்கு தங்கத்தில் தாலி கழுத்திற்கு பகட்டாக இருக்கிறது, அதே சமயம் கழுத்துக்கு எமனாகவும் அமைகிறது.

  பதிலளிநீக்கு
 12. உண்மையை உள்ளபடியே உரைத்தீர்கள் நன்றி.

  பதிலளிநீக்கு
 13. இன்றைக்கு முதலீடு இல்லாதா தொழில் நகைகள் பறிப்பதே. அதுவும் இப்போது பவுன் விற்கும் விலையில் தாலியை பறித்தால் இலட்ச ரூபாய்கள் கிடைக்கும் என்பதால் இதையே நகரங்களில் பலர் முழு நேரத் தொழிலாக செய்கின்றனர். சமீபகாலமாக பொறியியல் படித்து வேலையில்லா இளைஞர்கள் கூட இதை செய்யத் தொடங்கிவிட்டார்கள் என்ற செய்தி அதிர்ச்சியைத் தருகிறது. உயிருக்கும் உடமைக்கும் ஊறு விளைவிக்க ஏதுவாக இருப்பதால் பெண்கள் தாலி தங்கத்தில் தாலி அணிவதை தவிர்த்து மஞ்சள் கயிற்றிலோ அல்லது கருகமணியிலோ தாலி அணிந்து கொள்ளலாம்.

  தங்கள் பதிவில் உள்ள ஆதங்கமும் ஆலோசனையும் தற்கால சூழ்நிலையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 14. பெண்களுக்கு வந்த பொன் ஆசை. காலத்தின் கோலத்தால் வந்ததோ? சிந்திக்க வேண்டிய பதிவு. ஆமாங்க நமக்கு எத்தனை பவுனில் செய்யலாம்னு கேட்டா வேணாங்க மஞ்சள் கயிறு தான் உடலுக்கு நல்லது னு சொல்லுவாங்களோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நமக்கா இருந்தால் மஞ்சக்கயிறு எதற்கு ? சடம்பு போதும்னு சொல்வாங்க நண்பா...

   நீக்கு
 15. என்னுடைய ‘’ஆலோசனை’’ ஏற்றுக்கொண்டதற்க்கு நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 16. தாலியில் மட்டுமல்ல நண்பரே இன்னும் எத்தனையோ விஷயங்களில் பெண்கள் மாறித்தான் போனார்கள். எல்லாம் கலிகாலம்!!

  பதிலளிநீக்கு
 17. பண்பாடு நோக்கில் மட்டுமன்றி பாதுகாப்பு நோக்கிலும் தாங்கள் சிந்தித்த விதம் வித்தியாசமாக உள்ளது. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 18. ஏழையாக இருந்தாலும் கழுத்தில் தொங்கும் தாலி வெறும் மஞ்சள் கயிறாக இருந்தாலும் அதில் கோர்க்கும் பொட்டே ஆறு,அல்லது ஏழு கிராம்
  அளவு இருக்குமே அதன் விலை என்ன! திருடனுக்கு அது போதாதா! தாலி பற்றிய கருத்துகள் , (வயது எண்பதைத் தாண்டிய எனக்கு) பல அனுபவங்களும் கருத்துகளும் உள்ளன! ஆனால் அனத்தையும் எழுத இயலாத முதுமை தொல்லை தருகிறதே! என் செய்ய!

  பதிலளிநீக்கு
 19. வணக்கம்
  அண்ணா.

  இந்த காலத்துக்கு ஏற்றால்ப்போல் பதிவை மிக எழுதியுள்ளீர்கள்...காலம் மாறிப்போச்சு....ஜி...
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   போட்டி...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 20. அருமை! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 21. ஒரு நிமிஷம் குழம்பிப் போயிட்டேன். தேதியைப் பார்த்துத் தான் அப்பாடா என்றிருந்தது. இப்போதெல்லாம் மஞ்சள் கயிற்றில் திருமங்கல்யத்தைக் கோர்த்துக் கழுத்தில் கட்டுவதே இல்லை. நாத்தனார் மூன்றாவது முடிச்சு என்பதெல்லாமும் இல்லை. பெரும்பாலான மாப்பிள்ளைகளுக்கு சகோதரிகளே இல்லையே! அப்புறம் நாத்தனார் எங்கே வந்து முடிச்சுப்போடுவது? தாலிச் சங்கிலியிலேயே பெண் வீட்டுத் திருமங்கல்யம், பிள்ளை வீட்டுத் திருமங்கல்யம் இரண்டையும் கோர்த்துப் பெண்ணின் கழுத்தில் மாப்பிள்ளையை விட்டுப் போடச் செய்கிறார்கள். மாங்கல்ய தாரணம் என்பதெல்லாம் பழைய நிகழ்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது கருத்துரைக்கு நன்றி. இப்பழைய பதிவு தவறுதலாக வெளியாகி விட்டது மன்னிக்கவும்.

   நீக்கு
 22. இப்போ உள்ள இளம் ஜெனெரேஷன் (குறைந்தபட்சம் நகரத்துல) தங்கத்துல எதையும் அணிவதில்லை. நீங்க சொல்லியிருக்கிற பாயிண்ட் சிந்திக்கத் தகுந்தது. காலம் அவ்வளவு மோசமா இருக்கு.

  சமீபத்துல ஒரு உறவினர் வீட்டுல (இன்னொரு நகரத்துல) மேசை நிறைய அம்மனுக்குப் போடறதுமாதிரி தங்கத்துல நகை. பார்க்கவே அச்சமா இருந்தது. கேட்டா, இதெல்லாம் தங்கமே கிடையாது..பித்தளை அல்லது தங்க முலாம் என்றார்கள். அடப்பாவீ..இது திருடனுக்குத் தெரியணுமே. இல்லைனா பித்தளை நகைக்கும் தலையை வெட்டிவிடுவானே என்று தோன்றியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது கருத்துரைக்கு நன்றி. இப்பழைய பதிவு தவறுதலாக வெளியாகி விட்டது மன்னிக்கவும்.

   நீக்கு
  2. அதுனால என்ன. அப்போ படித்தமாதிரி தெரியலை. இப்போ படிச்சேன் அவ்ளோதான்.

   நீக்கு
 23. எனக்கும் பதிவைப் படித்தபோது முன்பே இதுபற்றி படித்தது நினைவுக்கு வந்தது. மேலே உள்ள தேதியைப் பார்த்ததும் நான் நினைத்தது சரிதான் என எண்ணிக்கொண்டேன். சில நல்ல தகவல்களை மீள்பதிவாக வெளியிடுவதுண்டு. அப்படி செய்திருக்கிறீர்களோ என்ற நினைத்துக்கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 24. நான் இன்னும் மஞ்சள் கயிற்றில் தான் தாலி அணிந்து இருக்கிறேன்.

  இப்போது பயமாய் தான் இருக்கிறது . நகை வேண்டாம் புன்னகை போதும் என்று கல்யாணத்தின் போது மணமகன் வீட்டார் சொன்னால் நல்லது. பெண்ணின் பேரில் வங்கியில் பணம் போட்டு வைத்தால் பின்னால் உதவும்.

  கல்யாணத்திற்கு நகை போட்டாலும் அணிந்து கொள்ள வீட்டில் வைத்து இருக்க பயந்து போய் வங்கி லாக்கரில் வைத்து பணம் கொடுத்து கொண்டு இருக்க வேண்டி உள்ளது.

  வித விதமாய் தங்கம் போல் மின்னும் நகை அணிந்து வலம் வருகிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

   நீக்கு
 25. உண்மையே. மஞ்சள் கயிறு மலையேறிக் காலம் நிறைய ஆகிவிட்டது.
  அன்பு தேவகோட்டைஜி
  மீள் பதிவானாலும், நல்ல பதிவு.
  பொய்யாக அணிவது தோலுக்குக் கெடுதி.

  காலம் மாறட்டும்.நன்றி ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா பதிவு தவறுதலாக மீண்டும் வெளியாகி விட்டது.

   நீக்கு
 26. நல்ல பகிர்வு.

  தங்கத்தின் மீது மோகம் - ஒன்றும் சொல்வதற்கில்லை.

  மீள் பதிவு என்றாலும் பரவாயில்லை. நல்ல விஷயத்தினை மீண்டும் சொல்வதில் தவறில்லை.

  பதிலளிநீக்கு
 27. சினிமாக்களிலும் சீரியல்கள்லும்தாலி செண்டிமெண்டால்பலகதைகள் நகர்த்தப்படுகின்றன என்பதையும் உங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறேன்

  பதிலளிநீக்கு