தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, அக்டோபர் 18, 2015

தண்ணீரிலே உன் செருப்பு


1986 தேவகோட்டையில் ஒருநாள் நானும், எனது மாப்பிள்ளையும் (தூரத்து சொந்தம்தான்) அவனுக்கு செருப்பு வாங்கப் போனோம் அந்த நேரம் வால்க்கர் என்ற செருப்பு மிகவும் பிரபலம் கல்யாண மாப்பிள்ளைகள் எல்லாம் அதைத்தான் வாங்குவார்கள் செருப்பும் அழகாகவே இருக்கும் என்பது தங்களில் பலரும் அறிந்த விடயமே அதை வாங்கவும் பழைய செருப்பை அந்த இடத்திலேயே கழட்டிப்போட்டு விட்டு புதியதை மாட்டிக்கொண்டு வந்தான் பாதயாத்திரைதான் வீட்டுக்கு வரும் வழியிலேயே மழை வந்து விட்டது.

ஒரு வீட்டோரமாய் ஒதுங்கினோம் சிறிது நேரத்தில் பலத்த மழை பிடிக்க செருப்பு முற்றிலும் நனைந்து விட்டது மேலும் ஒதுங்கி போக முடியவில்லை அவனை செருப்பைக் கையில் எடுத்துக்கொள் என்றேன் முடியாது என்றான் காரணம் எனக்கு பிறகே புரிந்தது எனக்கு அவனைப் பார்க்கும்போது சிப்பு சிப்பா வந்து தாங்க முடியலை சிறிது நேரத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓட செருப்பு தண்ணீருக்குள் எனக்கு பாட்டு பாடவேண்டும்போல் இருந்தது அந்த நேரம் மைதிலி என்னை காதலி வெளியான தருணம் அதில் வரும் பாடலான தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யார் அறிவார் என்ற பாடல் மிகவும் பிரபலமாகிக் கொண்டு இருந்தது அதே மெட்டில்....

 தண்ணீரிலே உன் செருப்பு
நனைந்து விட்டால் யார் பொருப்பு
உன் செருப்பு அதன் நிறம் கருப்பு
மாப்ளே.... மாப்ளே... மாப்ளே...

என்று நான் பாட அவன் எனக்கு பின்னால் பார்த்துக் கொண்டு சிரிக்க மேலும் விழுந்து விழுந்து சிரிக்க நான் குழம்பி திரும்பி நோக்க... அப்புறத்தில் ஒரு பெண்ணும், இவனைப் பார்த்து சிரித்துக் கொண்டு நிற்க எனக்கு வெட்கமாகிப் போனது நான் அசடு வழிய இருவரும் மேலும், மேலும் சிரித்தார்கள் ‘’ச்சே’’ இவங்களுக்கு இன்றைக்கு நான் ஊறுகாயாகி விட்டேனே....

காலங்கள் உருண்டோட காட்சிகளும் மாறியது  சுமார் ஒரு வருடம் கழித்து மாப்பிள்ளை தனக்கு திருமணம் என பத்திரிக்கை வைத்தான் பெண்ணும் உள்ளூர்தான் என்றான் பரிசுப்பொருளுடன் போனேன். மணப்பெண்ணைப் பார்த்ததும் எனக்குள் மனக்குழப்பம் எங்கோ... பார்த்து இருக்கின்றோமே... மணப்பெண்ணை நான் பார்க்க, மணமேடையிலிருந்த மணப்பெண் என்னைப்பார்த்து ’’கொல்’’ என சிரிக்க சுற்றி நின்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை எனக்கு சட்டென புரிந்து விட்டது ஆஹா செருப்பு இதெப்படி முன்னாலேயே இவனுக்குத் தெரியுமா ? இல்லை அதன் பிறகா... பக்கத்தில் உட்கார்ந்திருந்த மாப்பிள்ளையைப் பார்த்தேன் அவன் சிரித்து விட்டு பெண்ணைப் பார்க்க இருவரும் மௌனமாய் சிரிப்பது எனக்கு புரிந்தது அவனை முறைத்துக் கொண்டே உட்கார்ந்திருந்து கல்யாணம் முடிந்ததும் அவனிடம் கேட்டேன்.

மாப்ளே உன் கூடவே இருக்கேன் இது எப்படிடா ? நாளைக்குப் பேசுவோம் ஆமா ஆமா இனி என்கூட பேச உனக்கு நேரம் ஏது... மறுநாள் அவன் சொன்னான் மாப்ளே ரொம்ப நன்றிடா... எதுக்கு ? உன்னாலேதான் எனக்கு இவள் மனைவியா கிடைச்சா... எப்படி ? அன்றைக்கு நீ பாட்டு பாடினேலே சிரிச்சாள்லே அதுக்குப்பிறகு இவளைப் ஃபாலோ செய்தேன் எங்கிட்டே சொல்லவே இல்லை சஸ்பென்சா இருக்கட்டும் பின்னாலே சொல்வோம்னு நினைச்சேன் எப்ப... குழந்தை பிறந்த பிறகா ? நேற்றாவது நீ சொல்லி இருக்கலாமே... நேற்று சொல்லியிருந்தா ? உங்க ரெண்டு பேருக்கும் ஒரு ஜோடி செருப்பு பரிசு வாங்கி வந்து இருப்பேன் வித்தியாசமாகவும் இருந்திருக்கும் எவனுமே இதுவரை கொடுத்திருக்கமாட்டான் மாப்ளே இதுல சந்தோஷமான விசயம் அவுங்களும் நம்ம ஜாதிதான் அதனாலே பிரச்சனை இல்லாமல் சுலபமா போச்சு எப்படியோ உங்களுக்கு கல்யாணம் நடந்ததுக்கு முதல் காரணம் டி.ராஜேந்தர் அவருக்கும் நன்றி சொல்லுங்க... அடுத்த இரண்டு வருடம்1988 கழித்து நான்கு பேர் சினிமாவுக்குப் போனோம் படத்தின் பெயர் என் தங்கை கல்யாணி.

01. கில்லர்ஜி
02. மாப்பிள்ளை
03. தங்கை
04. குட்டி மாப்ஸ் (Now age 27)

நண்பர்களே இந்தப்பதிவு எதற்கு தெரியுமா ? கடந்த விடுமுறையில் அந்த குட்டி மாப்ஸ் திருமணத்தில் கலந்து கொண்டு வந்தேன்.

குறிப்பு நண்பர்களே... எனக்கு சிறுவயது முதலே (1 ¾ வயதிலிருந்து) பாட்டு பாடுவதில் விருப்பம் உண்டு பாட்டு கேட்பதிலும் விருப்பம் உண்டு அன்று நான் பாடிய பாடல் இருவர் சேர்வதற்கு காரணமாகி இருந்தது இதைப்போல 93 வயது நண்பர் ஒருவர் இறந்து போவதற்க்கும் காரணமாய் இருந்தது அந்தச்சம்பவம் வேண்டுமா... வேண்டாமா ? பயப்படாமல் சொல்லுங்கள் எழுதுகிறேன்.

அன்புடன் – தேவகோட்டை கில்லர்ஜி.

நண்பர் கவிஞர் ரூபன் நடத்தும் கவிதைப் போட்டியில் கலந்து வெல்வீரே என அன்புடன் அழைக்கின்றேன் - கில்லர்ஜி

68 கருத்துகள்:

  1. செருப்புக்குப் பின்னால் ஒரு கதையே உள்ளதே. நன்று. இருவர் சேர்வதற்கு பாடல் காரணமாக இருந்ததை அறிந்தோம். மற்ற பாடலுக்கான நிகழ்வை எதிர்பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி விரைவில் வரும்....

      நீக்கு
  2. மற்ற நிகழ்விற்கான பாடலை எதிர்பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
  3. 93 வயதில் நண்பரா? அடடா உங்க பாட்டைக் கேட்டு என்ன நினைத்தாரோ?(சும்மா)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன நினைத்தார் 80 விரைவில் தெரியும் சகோ.

      நீக்கு
  4. சுவாரஸ்யமான சம்பவம்.்காதல் ஸ்பெஷலிஸ்ட் டிஆர் பாடலல்லவா! அதுதான் காதலுக்கு உதவியிருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக சொன்னீர்கள் நண்பரே வருகைக்கு நன்றி

      நீக்கு
  5. வணக்கம் ஜி! உங்க பாடலுக்கு இம்புட்டு சக்தியா! சூப்பர் ஜி! சூப்பர் கதை! அந்த கதையும் சொல்லுங்க ஆவலுடன்....!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை இல்லை நண்பா உண்மைச் சம்பவம் விரைவில் வரும்...

      நீக்கு
  6. இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான் என்று பாடியே கிழவனைக் கொன்று விட்டீர்களா ?
    அது சரி ,த ம வோட்டில் மைனஸ் ஒன்று சென்ற பதிவில் இருந்தே தொடருதே ,என்ன மர்மம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி நான் கொல்லவில்லை அவராக இறந்து விட்டார்

      ஆமாம் ஜி யார் அந்த புண்ணியவான் தெரியவில்லை அவர் குடும்பத்துடன் நீடூழி வாழ இறைவன் துணை புரியட்டும்.

      நீக்கு
  7. பாட்டுப் பாடியதால் திருமணமா
    அருமை
    தம +1

    பதிலளிநீக்கு
  8. காதலை வாழ வைக்கும் கில்லர்ஜீக்கு ஜே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா நானும்......... காதலை ஆதரிப்பவன்தான்...

      நீக்கு
  9. அட! டி ஆர்!! அந்தக் காலத்துல காதல் படங்களா எடுத்துத் தள்ளி காதல் பாட்டுகளா அதுவும் சோசம் அப்ப பாடி...காதல்னாலே டி ஆர் நு ஃபேமஸ் ஆனவரு...அப்ப மட்டும் இல்ல இப்ப கொஞ்சம் வருஷம் முன்னாடி கூட காதல் பத்தின படம் தான் எடுத்தாரு....
    டி ஆர் மாதிரி ஒரு வசனம் எடுத்து விட்டுருக்கலாமோ உங்க மாப்ளைக்கு கல்யானப் பரிசா....

    உன்னை அவளோடு சேர்த்து வைச்சுது செருப்பு
    அவகிட்ட வேகாது உன் பருப்பு
    அவள் என் தங்க்ச்சி நெருப்பு
    அவகிட்ட காட்டக் கூடாது வெறுப்பு
    அவளக் காப்பாத்துவது உன் பொறுப்பு
    வாழ்த்துறேன் உங்களை அண்டாது காத்துக் கருப்பு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா ஸூப்பர் டயலாக் டி.ஆர் பார்த்தால் உபயோகப்படுத்திக் கொ''ல்''வார்

      நீக்கு
  10. ஆம் வெகு வெகு சுவாரஸ்யமான
    நிகழ்வுதான்
    உங்களுக்கு மட்டுமல்ல இனி
    எங்களுக்கும் இது மறக்காது
    வாழ்த்துக்களுடன்....

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே.

    தங்கள் அனுபவங்களை சுவையுடன் சொல்லியிருக்கிறீர்கள். தங்கள் பாட்டின் மூலம் ஒன்று சேர்ந்த அந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள். மற்றொரு பாட்டினால் சோக சம்பவம் உண்டாகி விட்டதா ? பாவந்தான்! சம்பந்தபட்டவரும், அவர் வீட்டில் உள்ளவர்களும். இருப்பினும், அந்த மாதிரியெல்லாம் இல்லாமல், அது சம்பந்தபட்ட தங்களின் பதிவு சோகத்திற்கு மாறாக நகைச்சுவையாக எழுதப்படும் பதிவாக இருக்கும் என நம்புகிறேன். பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் நம்பிக்கை வீண் போகாது பார்த்துக் கொள்(ல்)கிறேன்

      நீக்கு
  12. செருப்புக் கதை எ ன் ப து இதுதானா?

    பதிலளிநீக்கு
  13. ஆக, நீங்கள் பாடி கல்யாணமும் நடந்திருக்கிறது, கருமாதியும் நடந்திருக்கிறதா? 'எஜமான்' படத்தில் உரையாடல் ஒன்று வரும். "கல்யாண வீடா இருந்தா நாந்தான் மாப்பிள்ளையா இருக்கணும்! சாவு வீடா இருந்தா நாந்தான் பொணமா இருக்கணும்" என்று. உங்கள் கதையைக் கேட்டால் "கல்யாண வீட்டுக் கச்சேரியா இருந்தாலும் சரி, சாவு வீட்டுக் கானாவா இருந்தாலும் சரி, கில்லர்ஜியை மட்டும் பாடச் சொல்லக்கூடாது" என்று புது உரையாடல் ஒன்று எழுதத் தோன்றுகிறது. ஆனால், நீங்கள் அந்தச் சாவு பற்றிய பதிவை எழுத வேண்டா! ஏனெனில் அது, ஏற்கெனவே உங்கள் மருமகன் ஒருவர் சோற்றுப் பானை வெந்நீரில் கைவிட்டுக் கலக்கிய கதை போலத்தான் இருக்கும் என்பது எனக்குத் தெரியும்! :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே ஸூப்பராக காலை வாரிட்டீங்க... ஹாஹாஹாஹா
      அதில் மருமகன் யாரு ?

      நீக்கு
    2. //அதில் மருமகன் யாரு?// - நீங்கள் Unfit என்று ஒரு கதை எழுதினீர்களே? அதைச் சொல்கிறேன் ஐயா!

      நீக்கு
    3. தெரியும் நண்பரே அந்தக் கதையில் அக்கா கொடுத்த சாவியில் மச்சான் எடுத்த விசாவில் மச்சினன் துபாயில் போய் கையை விட்டான் மருமகன் என்று சொன்னதால் கேட்டேன் மீள் வருகைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  14. ஆதி முதல் அந்தம் வரை பாட்டுத்தான்..

    ஆனாலும், சில சமயங்களில் பாட்டுக்குள் அறம் இருக்கும் - நமக்குத் தெரியாது..

    ஆகையால் - இந்தப் பாட்டே போதும்!..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  15. வணக்கம்
    ஜி

    மறக்கமுடியாத நினைவுகள்... இருந்தலும் தங்களின் பாட்டுக்கு அவ்வளவு சக்தியா... நீங்கள் வாழவைத்த தெய்வங்கள்... ஜி.
    உலகம் தழுவிய கவிதைப்போட்டி சம்மந்தமான தகவலை பதிவில் சுட்டி காட்டியமைக்கு நன்றிஜி. போட்டியில் கலந்து கொள்ளும் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் என்று சொல்லாமல் நானும் போட்டிக்கு கவிதை எழுதுகிறேன் என்று சொல்லுங்கள்.
    நீங்களும் கவிதை எழுதுங்கள் போட்டிக்கு....
    த.ம 10
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரூபன் தெய்வமா ? ஏன் ? நல்லாத்தானே... போய்க்கிட்டு இருக்கு.... கவிதை எழுதி அனுப்பி இருக்கின்றேன் நண்பரே.... வருகைக்கு நன்றி

      நீக்கு
  16. உண்மைச் சம்பவம் ஒன்றை ஒரு சிறுகதையைப் போல அழகாகச் சொல்லிச் சென்றமைக்கு நன்றி. ’மாப்ளே இதுல சந்தோசமான விசயம் அவங்களும் நம்ம ஜாதிதான்” - என்ற ஒரு வரியில் தமிழ்நாட்டில் தற்போதுள்ள தமிழர் பண்பாட்டை அப்படியே படம் பிடித்து காட்டி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் விரிவான கருத்துரைக்கு நன்றி சாதிப் பிரட்சினையை எழுத தயங்கினேன் காரணம் நான் அதில் உடன்பாடு இல்லாதவன் ஆனால் அன்று அவன் சொன்ன வார்த்தை இது இன்றைய சூழலுக்கு பொருந்தியது ஆகவே எழுதினேன் அதை சரியாக சுட்டிக் காட்டியமைக்கு மீண்டும் நன்றி

      நீக்கு
  17. உங்கள் தளத்தில், தமிழ்மணத்தில் ஓட்டு போடும் முறையை அறியாத ஒருவர் (புதியவராக இருக்கலாம்) மைனஸ் ஓட்டு போட்டுக் கொண்டு இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அவர் புதிய நண்பரேதான் ஆனால் இது இனியும் தொடரும்... காரணம் எனக்கு தெரியும் கருத்துரையில் சொல்ல முடியவில்லை உங்களுக்கு ஒருநாள் சொல்வேன்

      நீக்கு
  18. உங்கள் பாட்டால் நல்ல விடயம் நடந்திருக்கே...வாழ்வில் மறக்கமுடியாது அவர்களால் உங்களை.!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ நானாக ‘’உல்டா’’ செய்து பாடியதை பாட்டு என்று ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி

      நீக்கு
  19. சில நினைவுகள் இப்படித்தான் நான் முன்னே என்று மோதி வரும் நல்ல அனுபவம் நீரில் செருப்பு இளித்து விட்டது என்று சொல்வீரோ என்று நினைத்தேன் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா செருப்பை வைத்து நிறைய விடயங்கள் இருக்கின்றது ஒரு கவிதைகூட எழுதி இருக்கின்றேன்

      நீக்கு
  20. செருப்புக்கு பின்னால் இப்படி ஒரு கதையா ? அருமை சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் கருத்துப்பதிவுக்கு நன்றி

      நீக்கு
  21. செருப்போடு சேர்ந்த சிரிப்புன்னு சொல்லியிருக்கலாம்!..:)

    வாழ்த்துக்கள் சகோதரரே!

    அடுத்த நண்பரின் கதையையும் தாருங்கள்.
    என்னவாயிற்று என அறிய நானும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே வருகைக்கு நன்றி விரைவில் தருவேன்.

      நீக்கு
  22. சகோ,
    எப்படியோ ஒரு காதல் உருவாக உங்கள் பாட்டு உதவியிருக்கு,
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ நான் எப்பவுமே பிறருக்குத்தான் உபயோகம் எனக்கில்லை.

      நீக்கு
  23. செருப்பும் சிரிப்பும் !
    சூப்பர்

    பதிலளிநீக்கு
  24. பதிவு நன்று!
    இன்று என் மருமகன் அபுதாபி வருகிறார் அலுவக வேலேயாக வருகிறார் அங்கு அவர் உங்ளோடு தொடர்பு கொள்ள உங்கள் தொலைபேசி எண்ணை பின் வரும் என் மின் அஞ்சலுக்கு உடன் அனுப்ப வேண்டுகிறேன்

    jram1932@gmail.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா மிக்க சந்தோஷம் மின்னஞ்சலில் உடன் காண்பீர்.

      நீக்கு
  25. அன்புள்ள ஜி,

    புது செருப்பு கடிக்கும்... இங்கு காதலை வளர்த்திருக்கு...அதுக்கு பாட்டும் படாதபாடு பட்டிருக்கு...! மாப்பிள்ளைக்கு அன்றைக்கு கொடுக்க முடியாதத தற்பொழுது தந்திருக்கிலாமே...!

    நல்லதுக்கு போக முடியலனாலும்... கெட்டதுக்கு கூப்பிடாம போயே ஆகணும்... சாவ சாவுகாசமா சொல்லலாமுன்னு நெனைக்காதிங்க... ? ஆவி துரத்திறதுக்கு முன்னால எடுத்து விடுங்க...!

    த.ம.16

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் மணவையாரே... மாப்பிள்ளைக்கு செருப்பு கொடுக்கலாம், மருமகனுக்கு கொடுக்க முடியாதே....
      இதோ ஆவி பறக்க வருகிறது....

      நீக்கு
  26. நகைச்சுவையோடு உண்மை சம்பவங்களை சொல்வதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான் ஜி!
    த ம 17

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  27. செருப்பும் உங்களது பாட்டும், இருவரின் மனம் ஒன்று சேர காரணமாக இருந்தது என்பதை பகிர்ந்து, திரையில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் இது போன்ற நல்ல நிகழ்வுகள் நடக்க வாய்ப்புண்டு என்பதை காட்டிவிட்டீர்கள். பாராட்டுக்கள்! அந்த ‘சோக’சம்பவத்தையும் தெரிவியுங்களேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நிறைய நண்பர்கள் கேட்பதால் கண்டிப்பாக சொல்லியே ஆக வேண்டும் விரைவில் வரும் வருகைக்கு நன்றி

      நீக்கு
  28. எமையெல்லாம் சுமக்கும் சுமைதாங்கிக்கு சோகக் கதை தான் அதிகம் இருக்கும் . இது நல்ல சுப செய்தி நன்றி ! அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ வித்தியாசமான கருத்துரையை தந்தமைக்கு நன்றி

      நீக்கு
  29. பாருங்க காதல் சாதி பாத்து வந்திருக்கு,..
    நமக்கெல்லாம் பாட்டுப்பாட ஆள் கிடைக்கலை...
    ம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நண்பரே அது யதார்த்தமாக அமைந்திருக்குமோ,,, இல்லையென்றால் கோடரியைத் தூக்கியிருப்பாங்கே....

      நீக்கு
  30. செருப்புக்கதை சிரிப்பு வெடி அடுத்த பாட்டை கேட்கும் ஆவலில்.

    பதிலளிநீக்கு