தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், டிசம்பர் 10, 2015

கந்தவேலன்


உங்களை பார்த்தாலே, எனக்கு பத்திக்கிட்டு வருது...
அதனாலதானடி நீ ரெட்டைக் குழந்தை பெத்தே...

நான் என்ன சொல்றேன் நீங்க என்ன÷ பேசுறீங்க... ?
பத்திகிச்சு சொல்லவும், அதத்தான் சொல்றியோனு... நினைச்சேன்.

கந்தன் புத்தி கவட்டுக்குள்ளேனு சொல்றது சரியாத்தான் இருக்கு.
யேண்டி எவ்வளவு தைரியம் இருந்தா எம்பேரை சொல்லுவே ?

ஏங்க, பழமொழி சொன்னா உங்கபேரை சொன்னேனு சொல்றீங்க..
அதுக்கு கடம்பன் புத்தி கார்த்திகேயன் புத்தினு சொல்லக் கூடாதா ?

இதுக்கு ஏன் கடவுளையெல்லாம் இழுக்கிறீங்க ? கருமம், கருமம்.
ஏண்டி, கருமம் புடிச்ச விசயத்தை நீ சொல்லிப்புட்டு... தெய்வீகம் பேசுற என்னை கருமம்னு சொல்றே ?

இப்ப நீங்க, என்னத்த தெய்வீகம் பேசிட்டீங்க ?
முருகப்பெருமான் எங்கேயும் தன்னோட வாகனமான மயில் மேலதான் போவார், அவர் உட்காரும்போது குனிந்து பார்த்துக் கொண்டே... இருப்பார் இதுக்குத்தான் கந்தன் புத்தி கவட்டுக்குள்ளேனு சொல்றது.. நீ என்னடானா விசயத்தை ரெட்டைக் குழந்தைக்கு கொண்டு போயிட்டே...

எதுக்கெடுத்தாலும் கலைக்கானம் பேசுங்க ஒழுங்கா கோயிலுக்கு போயி சாமி கும்பிடுறது இல்லை பகவான்ஜிகூட சேரும்போதே நினைச்சேன்.
ஏண்டி கோயிலுக்கு போகாத நான், முருகப் பெருமானை பத்தி சரியாச் சொல்றேன், வாரத்துக்கு எட்டு விரதமிருக்கிற நீ ரெட்டை குழந்தைனு சொல்லவும் கவட்டுக்கு போயிட்டு என்னை குறை சொல்றே... ஹூம் காலக்கெரகமடா கந்தவேலா...

நீங்க மட்டும் பழமொழிக்கு கடவுளை இழுக்கலாமா ?
நான் கடவுளை இழுக்கலடி எம் முழுப்பேரை சொன்னேன்.

உங்களுக்கு இந்தப்பேரை வச்சாங்களே... அவங்களை சொல்லணும்.
பேரை மாத்திட்டா உன் பிரச்சனை தீர்ந்திடுமா ?

அப்பவாவது உங்களுக்கு தெய்வம் நல்ல புத்தியை கொடுக்குமே...
ஏண்டி நியாயமா பேசுடி எவனாவது பேரை மாத்திட்டு தெய்வத்து கிட்டேயிருந்து தட்டுல வச்சு புத்தியை வாங்கியிருக்கானா ?

இப்படி எல்லாம் பேசுறதுனாலதான், ஒண்ணும் நடக்க மாட்டுது.
இப்ப என்ன நடக்கலை, யாரு நடக்கலை, கெட்டிக்காரன் பிள்ளை எட்டு மாசத்துல நடக்கும்னு சொல்வாங்க நம்ம புள்ளைங்க ஏழு மாசத்துலயே ஓடுறாங்களேடி இதுக்கு மேலே என்னடி வேணும் வாழ்க்கையில..?.

இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை, நான் கேட்டது என்ன அதுக்கு நீங்க எங்கே கொண்டு வந்து விட்டீங்க... பேச்சை ?
ஏண்டி, உன்னோட தங்கச்சிக்கு சடங்குதானடி நடக்குது... அடுத்த மாசம் கல்யாணத்துக்கு பித்தளை அண்டா செஞ்சா என்ன ? பித்தளை பாத்திரமெல்லாம் தங்க விலை ஆகிப்போச்சு, அதனால சில்வர் குடத்தை வைப்போம்னு சொன்னது தப்பா ?

எங்க அக்கா புருஷன் என் தங்கச்சிக்கு மோதிரம் போடுறாரு...
அவரு மோதிரம் மட்டுமா போடுவாரு....?.

என்ன பேசுறிய ?
அடியே அவருக்கு லஞ்சம் வாங்க சான்ஸ் இருக்கு, எனக்கும் சான்ஸ் கெடைச்சா... நானும்கூட மோதிரம் என்ன செயினே போடுவேன்.

நாமலும், பெருசா செஞ்சாத்தானே நமக்கு மரியாதை.
அப்படி பார்த்தா மோதிரத்தை விட சில்வர் குடம் பெருசாதானடி இருக்கும்.

இப்படியே... பேசுக்கிட்டு இருங்க, விளங்கிப் போயிடும்.
இப்ப என்னை என்னதான்டி செய்யச் சொல்றே ?

சரி சடங்குக்கு சில்வர் குடம் வைப்போம், கல்யாணத்துக்கு எல்லாரும் என்னைப்பத்தி பெருமையா பேசனும் அந்த மாதிரி சிறப்பா என்ன செய்யலாம் ? 
சிறப்பாஇருக்கனும்னா கல்யாணப்பரிசா, உன் தங்கச்சிட்டே என்னை தூக்கி கொடு. வித்தியாசமாவும் இருக்கும், பெருந்தன்மைகாரினு எல்லோரும் உன்னைப்பத்தியே பெருமையா பேசுவாங்க.

வெளங்கிடும் நான் பட்டது போதாது, முதல்ல போயி ரயில் டிக்கெட்டை புக் பண்ணிட்டு வாங்க, அங்கே போயும் கிராக்கு மாதிரி பேசிக்கிட்டு இருக்காதீங்க இருந்தாலும் இல்லைனு சொல்லிடப் போறான்.
போறேன், போறேன் எனக்குப்போயி கந்தவேலன்னு பேர் வச்சாங்கே பாரு, என்னைக்கு உன்னை கல்யாணம் செஞ்சேனோ அன்னையிலேருந்து நொந்த வேலனாயிட்டேன்...

(தனக்குள் - ஹும் எவ்வளவு ஈசியா, கிராக்குனு சொல்றா) 
உச்சி வெயில் மண்டையை பிளக்க... ரயில்வே ஸ்டேஷனுக்கு மனைவியை மிதிப்பதாய் நினைத்துக் கொண்டே சைக்கிளை மிதித்தான், நொந்து போன கந்தவேலன்.

Chivas Regal சிவசம்போ-
இதுலருந்து... என்ன தெரியுதுனா... கொழுந்தியாள் கல்யாணத்துக்கு சிறப்பா சீர் செய்யணும்னா லஞ்சம் வாங்கணும்.

காணொளி

53 கருத்துகள்:

 1. கொழுந்தியா கதை சூப்பராதான் இருக்கு. த.ம +1

  பதிலளிநீக்கு
 2. கல்யாணப் பரிசா உன் தங்கச்சிக்கிட்ட என்னைத் தூக்கி கொடு,,,,

  இது கொஞ்சம் ஒவரா இல்ல,,,,,

  நல்லா இருக்கு சகோ,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பின்னே பெரிசா கொடுக்கனும் என்றால் என்னதான் செய்வது சகோ.

   நீக்கு
 3. கந்தன் புத்திக் கவட்டுக்குள்ளே என்பதற்கு இதுதான் அர்த்தமா/ தெரியலை சாமி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முன்னோர்கள் சொல்லி வைத்தது இப்படித்தானே... ஐயா

   நீக்கு

 4. மைத்துனி திருமணத்தில் சிறப்பாக சீர் வரிசை செய்ய கையூட்டு பெறவேண்டுமா? ஒழுங்காய் இருப்பவர்களையும் இந்த சிவசம்போ கெடுத்துவிடுவார் போல் இருக்கிறதே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குடிகாரன் பேச்சு இப்படித்தானே இருக்கும் நண்பரே...

   நீக்கு
 5. வணக்கம் கில்லர் ஜி !

  கதை நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்திச்சு கந்த வேலன் நொந்த வேலனா ஆனாலும் பரவால்லா ஜி ...ஆனால் கொழுந்தியாள் மேல லைட்டா ஒரு கண் இருந்த மாதிரி இருந்திச்சு ஆனாலும் அசத்தல்
  தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கவிஞரே, கந்தவேலன் அவரு கொழுந்தியாள் மேல கண் வைக்க அவருக்கு உரிமை இல்லையா ? நாம ஒதுங்கிடுவோம்

   நீக்கு
  2. ஒ அது அவர் கொழுந்தியாளா நான் வேறென்னமோ நெனச்சிட்டேன் ஜி

   நீக்கு
 6. கல்யாணச் செலவு கஷ்டம்தான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே கொழுந்தியாள் இல்லாத வீடுதான் நல்லது

   நீக்கு
 7. ஹலோ, ரொம்ப நாள் கழிச்சு, நானே இப்பத்தான் உங்க வலைப்பூ பக்கத்துக்கு வரேன். நீங்க என்னடான்னா. கொழுந்தியா , கல்யாணம் அது இதுன்னு சொல்லி வைத்தெரிச்சலை கிளப்புறீங்க.

  எனக்கு கொழுந்தியாவே கிடையாதே, அப்ப எனக்கு இந்த பதிவை படிச்சுட்டு, உங்க மேல கோபம் வருமா வராதா? நீங்களே சொல்லுங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க, வாங்க நல்லா இருக்கீகளா ? கோபம் ஏன் ? வருது இதுல வேற வயித்தெரிச்சலா ? நான் மட்டும் 12 கொழுந்தியாள் உள்ள வீட்டிலா ? திருமணம் செய்துட்டேன் ய்யேன் வயித்தெரிச்சலை கிளப்பாதீங்க சொல்லிட்டேன்.

   நீக்கு
  2. அட சொக்கன் வாங்க. எப்படி இருக்கீங்க? உங்க குட்டிப் பையன் நலமா? எவ்வளவு நாள் ஆகிடுச்சு...வருக வருக மீண்டும்

   நீக்கு
  3. உங்களுக்கு 12 கொழுந்தியாள் வேற கேட்குதா???

   நீக்கு
  4. நானும் குட்டி பையனும் நன்றாக இருக்கிறோம். கொஞ்ச நாள் தானே ஆச்சு!!

   நீக்கு
  5. 12 தானே கேட்டேன், என்னமோ 21 கொழுந்தியாள் கேட்டது போல கேட்குறீங்க ???

   நீக்கு
 8. விடுங்க ஜீ...சைக்கிளையாச்சும் மிதிக்கலாம்...//என்னை ரொம்ப உணர்ச்சிவசப்பட வைக்கிறீங்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே இதை நீங்க கந்தவேலனிடம்தான் சொல்லனும்

   நீக்கு
 9. ஆ...., கந்தன் புத்தி கவுட்டுகுள்ள என்பதற்கு இப்படிஒரு கதை இருக்கா....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதை இல்லை நண்பரே நாசா வெளியிட்ட தகவல்.

   நீக்கு
 10. கொழுந்தியாள் கதை சூப்பர் சகோ.

  பதிலளிநீக்கு
 11. அன்புள்ள ஜி,

  கந்தவேலனுக்கு இரண்டு மயில்தானே பிடிக்கும்...! பழைய தெய்வமயிலைவிட... புதிய வள்ளிய வெள்ளை மயில் நல்லாவே இருக்கு...! ரெண்டும் ஒன்ன ஒன்ன கொத்திக்காம இருந்தாச் சரி!

  த.ம.8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவுங்க இன்னைக்கு அடிச்சுகுவாங்க நாளைக்கு கூடிக்குவாங்க நமக்கு எதுக்கு ? வம்பு மணவையாரே...

   நீக்கு
 12. ஆகா
  கந்தன் கதை நாசா வரைக்கும் போய்விட்டதா
  தம+1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே நாசாவுக்கு மேலேயே அவன் ஆட்சி என்றால் நாசா எம்மாத்திரம்.

   நீக்கு
 13. இப்படியெல்லாம் கூட கதையா...ஒண்ணுமே புரியலை ஜி!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹலோ கதையில்லை வரலாறு கூகுளில் ''தேவகோட்டை வரலாறு'' என்று அடித்துப் பாருங்கள் தெரியும்.

   நீக்கு
 14. கந்த வேலன் நம்மாளு ஆகி விட்டதால் அவருக்கு ஆலோசனை ..கொளுந்தியாளை மற,காட்டுவள்ளியை நினை :)

  பதிலளிநீக்கு
 15. வணக்கம்
  ஜி

  இதிரும் புதிருமாக கலக்கியுள்ளீர்கள் அருமை ஜி வாழ்த்துக்கள்

  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  பதிலளிநீக்கு
 16. ஆஹா.... அது சரி.

  அவங்க சொல்லிட்டா அப்பீலே கிடையாது! :)

  பதிலளிநீக்கு
 17. சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 18. பதில்கள்
  1. வருக முனைவரே அதாவது ஒண்ணும் செய்ய வக்கில்லாத ஆளுக சும்மா பில்டப்பாக பேச மட்டும் செய்வார்கள் அந்த பேச்சைத்தான் ‘’கலைக்கானம்’’ என்று சொல்வது தேவகோட்டை பேச்சு வழக்கு வருகைக்கு நன்றி

   நீக்கு
 19. வணக்கம்

  ஜி
  த.ம 14
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 20. இப்படி எழுத உங்களால் மட்டுமே முடியும் நண்பரே!
  த ம 15

  பதிலளிநீக்கு
 21. உங்களுக்கு 21 கொழுந்தியாள் பார்சேல்...( கடவுள் கிட்ட சொல்லிட்டேன் அங்கிள்...தருவார்..) செமத்தியா...( ஆண்டி நம்பர் தாங்களேன்)( இதுல எங்கப்பா வேறையா? பாவம் அவருக்கும் இருக்கலாம் உங்க கஷ்டம்...)

  பதிலளிநீக்கு
 22. மருமகளே என்னமோ ஆனந்தபவனில் தோசை பார்சல் சொல்றது போல இருக்கே... பாவம் உங்க அப்பாவும் வந்து மாட்டிக்கிட்டாரு...

  பதிலளிநீக்கு
 23. அங்கிள் உங்களுக்கு 41 கொழுந்தியாள் பார்சல் போட சொல்லுவோம்...(ஆண்ட்டி..ஃபிரியா இருப்பாங்களாம் ரொம்ப ஜாலியாம்..சொல்லச் சொன்னாங்க) ஆனா நீங்க 41 பேர் ட்டயும் படுற பாட்டை இதே மாதிரி வீடியோ எடுத்து போடணும் டீலா? நோ டீலா?

  பதிலளிநீக்கு
 24. ஒரே வார்த்தையில் சொல்லிடுறேன் நோ டீல்

  பதிலளிநீக்கு