தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், டிசம்பர் 21, 2015

கிலி கிளி கிழி


இந்தப் பதிவுக்கு முதன் முதலாக வருபவர்கள் இதன் தொடர்பான கீழ்காணும் பதிவுகளை படித்த பிறகு தொடர்ந்தால் பதிவின் காரணங்கள் விளங்கும் இதில் கொக்கி போட்டு தொடர் பதிவாக்கிய அன்பின் ஜி குவைத் மன்னர் திரு. துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி.


சடையாண்டி, மந்தக்கட்டி, மொக்கைராசு மூவரும் வாழ்க்கையில் முதன் முறையாக மாருதி சொகுசு வேனில் போவதால் சந்தோஷமாக சிரித்துக் கொண்டு டாக்டர் K 7 ஐக் காண.... போய்க் கொண்டிருந்தனர் டிரைவிங் ஸீட்டிலும், முன்புற அடுத்த ஸீட்டிலும் இருவர் யாருமே பேசவில்லை ஸ்பீக்கரில் மறைந்த T.M.S. 
// யாரடா மனிதன் இங்கே கூட்டி வா அவனை இங்கே இறைவன் படைப்பில் குரங்குதான் நீ இங்கே // 
என்று ஆணையிட்டுக் கொண்டு இருந்தார் வேன் நகரை விட்டு ஒதுக்குப்புறமாய் பிரமாண்டமாய் கட்டியிருந்த கில்லிங் ஹோஸ்பிட்டலை நோக்கி சென்றது எமெர்சென்ஸி வழியாக போனது பார்க்கிங் செல்லாமல் பின்புறமுள்ள பிரத்யேகமான வழியில் சென்று நின்றதும் ஒருவன் இறங்கி வந்து.
ம் இறங்குங்க...
மந்தக்கட்டி கேட்டான்.

என்னங்க பின்னாலே கொண்டு வந்துட்டீங்க ?
இது முக்கியமானவங்களுக்கு நீங்க விஐபி இல்லையா... அதனாலதான், டேய் மாரி இவங்க மூணு பேரையும் மேலே டாக்டர் ரூமுக்கு கூட்டிப்போ.
வாங்க... ஸார்.
ஸாரா...  நம்மளையும் ஸார் ? மனம் விமலன் சாரின் சிட்டுக் குருவியாய் பறந்தது மூவரையும் கூட்டிப்போனவன் பக்கவாட்டில் இருந்த லிப்டில் நுழைந்து ஆறாவது தளத்தின் பொத்தானை அமுக்கவும் லிப்ட் விர்ர்ர்ர்ர்ர்ர் என்று மேலெழும்பவும் வாழ்வில் முதல் முறையாக லிப்டில் போனதும் மூவேந்தர்களுக்கும் மகிழ்ச்சி சில நொடிகளில் நின்று விட வெளியேறி பக்கவாட்டில் இருந்த மாடிப்படிகளின் வழியே மேலே அழைத்துப்போய் கதவைத் திறந்தான் கட்டடத்தின் ரூப் திறந்தவெளி காற்று உய்ய்ய்ய்ய் என்று வீசியது A/c in மிஷின்கள் ஓடிக்கொண்டு இருந்தன, தெற்கு மூலையில் ப்ளாஸ்டிக் வாட்டர் டாங்க் பிரமாண்டமாய் உட்கார்ந்து இருந்தது காம்பவுண்ட் சுவருக்கு மேல்ன அடிக்கு கனமான கம்பி வலையால் சுற்றுசுவர் சடையாண்டி கம்பிகளின் ஓட்டை வழியாக தூரத்தில் வலைப்பதிவர்கள் பகவான்ஜியும், கில்லர்ஜியும் பார்ட்னராக வாங்கிப்போட்ட கொங்காணி ஆறு ஓடிக்கொண்டிருக்க சரக்கு ரயில் வந்து கொண்டு இருந்தது பக்கக்தில் தனது வீட்டை கண்டதும் கத்தினான்..

இங்கே வாங்கப்பா ய்யேன் வூடு தெரியுதுப்பா..
ஓடி வந்த மந்தக்கட்டியும், மொக்கைராசும் பார்த்து விட்டு...
அட ஆமாலே..
என்றனர் அழைத்து வந்தவன் சொன்னான் ஸார் அங்கேயெல்லாம் போகாதீங்க டாக்டர் ரூமுக்கு வாங்க மறுபுறத்தில் இருந்த கதவைத்திறக்க பிரமாண்டமான ஹால் பிறகு பக்கவாட்டில் இருந்த அறையைத் திறந்து உள்ளே போங்க ஸார் மொக்கைராசு கேட்டான்

டாக்டர் இங்கேயா...  இருக்காரு... ?
ஆமா உள்ளே உட்காருங்க... அவர்கள் உள்ளே போனதும் படக்கென்று கதவைப்பூட்டினான் பூட்டியதும் மூவருக்கும் மனதில் கிலியாகியது காரணம் அறைரையிருட்டு 0 வாட்ஸ் பல்பு அதுவும்கூட அரைக்கரண்டு என்பது போல் மூலை ஓரத்தில் நான்கு நபர்கள் உட்காரும் அளவில் நீண்ட சேர் பக்கத்தில் தண்ணீர்ப் பானையும், டம்ளரும் மூவருமே தண்ணீர் குடித்தனர் உட்கார்ந்து கொண்டு ஒருவரையெருவர் மாறி மாறிப் பார்த்தனர் பேசவில்லை சரியாக பனிரண்டு நிமிடம் கழித்து கதவு திறக்கப்பட்டது பின்புறமும் இருட்டு ஆஜாகு பாகுவான ஆறு பேர் நுழைந்தவுடன் மூடப்பட்டது ஒருகுரல் கேட்டது மூணுபேரும் ட்ரெஸ் எல்லாம் கழட்டி அந்தச் சேருல போடுங்கடா...
ய்....யேன்.. ?  
மந்தக்கட்டி கேட்க.. போடுங்கடாங்கறேன்... அடுத்த நொடி இருவரும் வேட்டி சட்டையை கழட்டிப்போட்டு சுடர்மணி ஜட்டியுடன்... சடையாண்டி வேட்டி மட்டுமே கழட்டி விட்டு வழக்கமான பின்புறம் ஜன்னல் வைத்த டவுசருடன்.. உங்கள்ல சடையாண்டி எவன்டா... ?  ந்....நான்தேன் சில நொடிகள்தான்... பிறகு... சுமார் 38 நிமிடங்கள், 47 நொடிகள்.... தொடர்ந்து.... இடி முழக்கமாய்....

 ‘’அய்யோ‘’ ‘’அம்மா’’ ‘’ஆத்தா’’ ‘’விட்ருங்க’’ ‘’ஐயய்யோ’’ ‘’கடவுளே’’ ‘’அம்...மா’’ ‘’மாரியாத்தா’’ தொடர்ந்து... மீண்டும் ‘’அய்யோ’’ ‘’அம்மா’’ ‘’ஆத்தா’’ ‘’விட்ருங்க’’ ‘’ஐயய்யோ’’ ‘’கடவுளே’’ ‘’அம்...மா’’ ‘’மாரியாத்தா’’ 

இப்படியான அலறல் இல்லை கதறல் ஒலி ஒழிந்து ஒளி பிறந்தது அறையில் தரையில் சக்கையாக மொக்கைராசு, மந்தக்கட்டி, சடையாண்டி ஜன்னல் டவுடரில் பகுதி கீழே சிதறிக் கிடந்தது மஞ்சள் நிறத்தில் துணியிலான ஸ்டிக்கர் அதில் சுடர்மணி என்று எழுதி கீழே கிடந்தது... இத்தனைக்கும் மூவருக்குமே உடலில் சிறிய அளவில் நககீறலோ, ஒருதுளி ரத்தமோ வரவில்லை முகமும் சிதைக்கப் படவில்லை கிலி கிளி கிழித்து எடுத்து விட்டார்கள் ஒருவன் கதவைத்திறந்து விட நர்ஸிங் ட்ரெஸ்ஸில் பகுதி முகத்தை மூடிய இரண்டு ஆண்கள் வந்து அவர்களது வேலையை கவனிக்க மற்ற ஆறு பேரும் களைப்பு தீர தண்ணீர் குடித்தார்கள் நர்ஸெஸ் மூவருக்கும் முகத்தைத் தவிற உடலில் அங்கங்கு திட்டுத்திட்டாய் சிகப்பாய் இருந்த இடங்களில் மருந்து தடவினார்கள் ஆளுக்கொரு ஊசி இடுப்பில் போட்டார்கள் வெண்ணீர் டவலால் ஒற்றி எடுத்தார்கள் தலை முடியை சீவி விட்டார்கள் பிறகு கண்களால் ஜாடை காண்பித்து விட்டு வெளியேற... ஒருவன் சொன்னான்.

எந்திரிச்சு ட்ரெஸ்ஸை போடுங்கடா...
தட்டுத் தடுமாறி மூவரும் எழுந்து வேட்டி சட்டையை எடுத்துப் போட்டுக்கொள்ள சேரில் உட்காருங்கடா... ஒருவன் செல்லை எடுத்து.
ம்.. கொண்டு வா...

சிறிது நேரத்தில் கதவு திறக்க கம கம என்று பிரியாணி வாசம் திண்டுக்கல் தலைப்பாக்கட்டு போல.. ஒருவன் பெரிய தட்டில் அறையின் மையத்தில் கீழே வைத்து விட்டு போனான்.   
டேய் மூணு பேரும் சாப்புடுங்கடா... இப்போ திரும்பி வருவோம்.

சொல்லி விட்டு கதவைச்சாத்தி விட்டு வெளியேறினார்கள் ஆறு பேரும் அறையில் மூவேந்தர்கள் மட்டுமே அவர்களுக்கு இப்பொழுது என்ன  நடந்தது ?  என்பதை கணிக்கவே முடியவில்லை கண்மூடி கண் திறப்பதற்குள் எவ்வளவு வேகமாய் முடிந்து விட்டது வாழ்நாளில் எவ்வளவோ இடங்களில், எவ்வளவோ நபர்களிடம் ஏன்... போலீஸ் ஸ்டேஷனில் கூட அடி வாங்கி மூஞ்சி முகரைகளை பெயர்த்து விட்டு இருக்கின்றார்கள் ஆனால்  இவர்கள் காயமே இல்லாமல் அடிக்கின்றார்களே.... எப்படி ? நம்மூர்காரங்கே அடி மாதிரி இல்லையே... மந்தக்கட்டி கேட்டான்.

ஏலே, இவங்கே எந்த ஊருக்காரங்கெலே  இந்த அடி அடிக்கிறாங்கே... ?
மேல் விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் மொக்கைராசு தட்டில் இருக்கும் பிரியாணியை வாயில் எச்சில் ஒழுக பார்த்துக் கொண்டிருந்தான் சடையாண்டி.

ஏலே, கேட்டது காதுல விழலே ?
ஏப்பா, இவங்கே தேவகோட்டைக்காரங்களேதாம்பா.
எப்படிலே  சொல்லுதே சடையா ?
நான் கல்யாணத்தப்போ மதினியா வீட்டுக்கு நானும் யேம் பொஞ்சாதியும் போயிருந்தோம்பா... அப்ப, டாஸ்மாக்ல 7 ½ ஆயிடுச்சுப்பா அப்போ இதே மாதிரிதான் அஞ்சு பேரு என்னையும், யேம் சகலைப் பாடியையும் ரவுண்டு கட்டி அடிச்சாங்கே.. இவங்கே கட்டாயமா தேவகோட்டைதான் சாப்புடுவோம்பா பசிக்குது ராத்திரி வூட்டுக்கு போகலையா பொஞ்சாதி கஞ்சி ஊத்தலபா...
ஏலே, அதுலே வெசத்தை வச்சுருப்பாங்கலே...

சட்டென நினைவு தெளிந்த மொக்கைராசு...
ஏலே அப்படினா... பிரியாணியை திம்போம்லே..
என்னலே ... வெசமுன்னு சொல்லுதேன் திம்போம்முங்குறே ... புத்தி பெரண்டு போச்சாலே ?
ஆமாலே பாத்தியாலே ? ஊத்துக்குழிகாரங்கே மாதிரி ஊமைக்குத்தா... குத்துறாங்கெலே நம்மளைப்பாத்தா அடி வாங்குனவங்கே மாதிரியாலே இருக்கு மாப்புள்ளே மாதிரி ஜோவடிச்சுட்டு போறாங்கே.. வலி உசுரு போவுதுலே... அதுக்கு பிரியாணியத் துன்னுபுட்டு சாவோம்லே.. நான் வாழ்க்கையில பிரியாணியே இப்பத்தான் பாக்குறேன்லே.. அவங்கே வந்தா ஏன்டா திங்கலைனு... அடிப்பாங்கலே.. என்னலே சடையா ?

என்று கேட்டு முடிப்பதற்குள் சடையாண்டி பிரியாணியில் கிடந்த ஒரு கோழிக்காலை எடுத்து கடித்து விட்டான் இரண்டு நொடி தாமதித்து மொக்கைராசும் கை வைக்க மாற்றம் ஒன்றும் நிகழாததால் மந்தக்கட்டியும் நமக்கு கிடைக்காதென நினைத்து கை வைத்து முழுவதும் சாப்பிட்டு முடித்து தண்ணீர் குடித்து விட்டு தரையில் சாய்ந்தார்கள் சடையாண்டி ய்யேவ்வ்வ்வ்வ் என்றான்.
சிறிது நேரத்தில் கதவு திறக்கப்படும் ஓசை கேட்டது.

தொடரும்...

48 கருத்துகள்:

  1. அப்புறம் என்னாச்சு?இப்படித்தான் தீடிரென சஸ்பென்சில் விடுவதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது முதல் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  2. வணக்கம்
    ஜி
    பதிவை அசத்தி விட்டீங்கள்... சிரிப்பு வருகிறது... ஜி த.ம2
    எனக்கும் கிளி.கிலி.கிழி வந்து விட்டது.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரூபன் அவர்களுக்கு வந்த கிலியோடு நிறுத்திக் கொள்ளுங்கள் அடுத்து அவர்களுக்கு வரப்போவது கண்டிப்பாக தங்களுக்கு வரக்கூடாது Take Care வருகைக்கு நன்றி

      நீக்கு
  3. என்ன நடந்தது அங்கே? சஸ்பென்சாக உள்ளதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் காத்திருப்புக்கு நன்றி

      நீக்கு
  4. என்னதான் நடந்தது
    காத்திருக்கிறேன் நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே காத்திருங்கள் விரைவில் விடை.

      நீக்கு
  5. சொல்லாம கொள்ளாம இந்த சாத்து சாத்துனா....?...

    பாவம்.. என்னத்துக்கு ஆவானுங்க!....

    அந்தப் பயலுக்கே கையில ரொக்கமும் தையல் மெஷினும் பிரியாணி பொட்டலமும் கொடுத்து.. போய்ட்டு வாடா மவராசா!..ன்னு வெளியே அனுப்புறாவளாம்..

    இவனுங்க பாவம்.. விட்டுடச் சொல்லுகளேங்..

    ஏதோ ஒரு கலகலப்புக்கு சொன்னேன்..
    அதுக்காக அவனுங்களுக்குள்ளேயே கைகலப்பு ஆயிடப்போவுது!..

    அடுத்தாற்போல = வீட்டில் பானுமிதிகளின் விளக்குமாறு விசாரணை தொடங்கும் என நினைக்கின்றேன்..

    அந்த சாத்துப்படியையும் காண ஆவல்!..

    ஆனாலும், ஆசாமிங்க.. அடி வாங்கும் காட்சி மிகவும் ரசனையாக இருந்தது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி கோர்த்து விட்டுப்புட்டு இப்படி டக்காலடி வேலை செய்யிறியளே... இது சரியா ? இதுல வேற அவங்கே அடி வாங்குறது ரசனையாக இருந்ததா ?

      நீக்கு
  6. கொங்காணி ஆறு வாங்கியதை ரகசியமா வச்சுக்கச் சொன்னேன் ,இப்படி பொதுவிலே சொல்லி மாட்டிவிட்டுட்டீங்களே ! சரி ,அந்த புர்ஜ் கலிபா டவரை வாங்கியதை சொல்லாம இருங்க போதும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sorry ஜி ஒரு ஃப்ளோவுல உளறிட்டேன் ஆனாலும் போனமாசம் தாஜ்மஹாலை விலை பேசுனோமே அந்த விசயத்தை வெளியிடலில்லை பார்த்தேளா ?

      நீக்கு
  7. கிளி பறந்து வந்து கிலி இல்லாமல் கிழியாமல் எடுத்துத் தந்த சீட்டில்
    இப்படியும் எழுத முடியுமா?
    கில்லர்ஜியை பார்த்தால் கிலி வராமல் என்ன செய்யும்?
    தொடருங்கள் நண்பா!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா எதற்கும் சோலந்தூர் சோசியர் சோனைமுத்துவிடம் பார்த்து வந்திருக்கலாம்.

      நீக்கு
  8. என்ன நடந்தது என்று தெரியவில்லையே தொடர்கிறேன் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ விரைவில் தெரியலாம் வருகைக்கு நன்றி

      நீக்கு
  9. அன்புள்ள ஜி,

    கிலியாகிப் பயத்துடன் கிளி இருக்கையில்... மருத்துவமனையிலும் மருத்துவர்கள் கிழியா...? போடுறதுதான் போடுறீங்க... ‘திண்டுக்கல் வேணூஸ்’ பிரியாணியா போடலாமில்ல...!

    த.ம.7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே...
      என்னமோ என்னுடைய செலவுல பிரியாணி வாங்கி கொடுத்தது போல சொல்றீங்க இது Dr. 7 மலை வகையறாக்கள் வேலை தயவு செய்து என்னை சிக்கலில் மாட்டி விடாதீர்கள்.

      நீக்கு
  10. பகவான்ஜியும் கில்லர்ஜியும் எங்கேயோ்....போயிட்டாங்க..... நான்தான்...ஒரு தெருவையே சுத்திகிட்டு இருக்கேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே வெளியே உலகம் ரொம்ப பெருசு மோ(ச)டி செய்தால் உலகம் சுற்றலாம்

      நீக்கு
  11. யப்பா எப்பப்பா ரெண்டு ஜிக்களும் சேர்ந்து ஆத்தங்கரை எல்லாம் வாங்கிப் போட்டுருக்கீங்க?!!!! இன்னும் என்னல்லாம் வாங்கிப்போட்டுருக்கீங்க..அப்போ சென்னைய சுத்தி இருக்கற ஏரி, குளம், கால்வாய் எல்லாம் உங்க கையிலதானா....அட! ஜிக்களா...அப்போ சென்னைல போட் விட்டது கூட நீங்கதானா...முழு பூஷணிக்காய இப்படிச் சோத்துக்குள்ள மறைச்சுட்டீங்களே ஜிக்களே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐய்யய்யோ தேவையில்லாமல் வில்லங்கத்தாரிடம் உளறி விட்டேனே... ஆஸ்திரேலியாக்காரர் வந்தால் கண்ணேறு வேற பட்டு விடுமே...

      நீக்கு
  12. சிலநகைச்சுவைகளை ரசிக்கத் தெரியவில்லை இவனுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இவனுக்கு என்பது புரியவில்லையே.... ஐயா.

      நீக்கு
    2. இவன் இப்படித்தான் என்னும் பதிவு எழுதி இருந்தேனே. அதில் இவன் என்று யாரைக் குறிப்பிட்டேன் என்பது தெளிவாக இருக்குமேஇஅவன் என்று என்னைத்தான் குறிப்பிட்டேன் சந்தேகம் தீர்ந்ததா?

      நீக்கு
    3. மீள் வருகைகு நன்றி ஐயா

      நீக்கு
  13. அடுத்து என்னாச்சு சகோ,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் தெரியும் சகோ வருகைக்கு நன்றி

      நீக்கு
  14. அடுத்து என்ன கவனிப்போ? ஹாஹாஹா! ரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் ஜி !

    ஆனாலும் உங்க ஊருக்காறங்க ஊமைக்குத்தா குத்துறதில கில்லாடிதான் ஹா ஹா ஹா அருமை ஜி அடுத்த பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன் தொடர வாழ்த்துக்கள் ஜி
    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மையை சொன்னேன் தங்களின் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  16. என்னதான் கோபம் என்றாலும் இப்படியா அடிப்பாங்க ஆனாலும் பிரியாணி கொடுத்த மகாராசனுக்கு ஒரு நன்றியை சொல்லிக் கொள்ளலாம் .....விறுவிறுப்பான தொடர் கில்லர் ஜி விரைவில் அடுத்த தொடரையும் எதிர்பார்க்கிறேன் நன்றி
    வாழ்க வளமுடன்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே சாப்பாடு கொடுக்காமல் பூசையைப் போட்டால் செத்தாலும் செத்துடுவாங்கே முன்னெச்சரிக்கையோடுதான் செய்பாடு இருக்கனும்

      நீக்கு
  17. நகைச் சுவை நன்று இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  18. என்ன திரும்பவும் மண்டகப்படியா? தொடர்கிறேன் அடுத்து நடந்ததை அறிய.

    பதிலளிநீக்கு
  19. இப்படியெல்லாம் சஸ்பன்ஸ் வைக்க கூடாது. முதல்ல நீங்க கடைசி பகுதியை எழுதுங்க, அதை படிச்சுட்டு, மிச்ச பகுதி எல்லாம் படிக்கிறேன்.
    ஏன்னா, அடுத்து என்னன்னு தெரிஞ்சுக்கலைன்ன சின்ன மண்டை வெடிச்சிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி கிரேட் தேவகோட்டையில, ஒண்ணாப்புலருந்துதான் தொடங்குவோம் நாங்களெல்லாம் அப்படி பரம்பரையில் வந்தவங்க...

      நீக்கு
  20. கிழி கிழின்னு கிழிச்சீட்டீங்க!
    சூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா கலா மாஸ்டர் மா3யே சொல்லிட்டீங்க...

      நீக்கு
  21. சஸ்பென்ஸ்....
    கிழி கிலி கிளியின்னு கிழிச்சீட்டீங்க...
    அருமை அண்ணா...

    பதிலளிநீக்கு
  22. நண்பரே "KILLERGEE" காலை 8 மணி ஆகுது இன்னுமா தூக்கம்... ஏனுங்க ஏதாவது கேட்ட கனவா? .... சீக்கிரம் விழித்துக்கொள்ளுங்கள் ஆபிசுக்கு போகணும்.... பல்லை தேய்த்துவிட்டு காப்பி குடியுங்கள் ... காப்பி ஆறிடப்போகுது.....

    பதிலளிநீக்கு
  23. மற்றப் பதிவுகளைப் படிக்கணும். :(

    பதிலளிநீக்கு