இந்த சமூகத்தில் பலரும் கஷ்டப்படுவதற்கு முக்கிய காரணம் தன்தகுதிக்கு மீறிய வாழ்க்கை
வாழ, ஆசைப்படுவது மட்டுமல்ல அதை நடைமுறைப்படுத்துவது, இதற்காக கடன் வாங்குவது,
வட்டிக்கு வாங்குவது இதன் விளைவு வாழ்வாதாரம் உயர்வில் நிரந்தர சறுக்கல்.
(சம்பாரிப்பன் எல்லோருமே பணக்காரன் ஆகமுடியாது சேமிப்பவனே
பணக்காரன் ஆகமுடியும். 1980-ல் நாட்காட்டியில் நான்கண்ட
பொன்மொழி)
பணக்காரன் ஆவது இன்றைய சூழ்நிலையில்
பெரியகஷ்டம் ஒன்றுமில்லை, ஆனால் அதற்கு முதலில் கொஞ்சம் பணம் வேண்டும், இதுதான்
மிகப்பெரிய கஷ்டம் ஏனெனில் அந்த கொஞ்ச பணத்தை சேமிப்பதற்குள் நமது ஆயுளின் பகுதி காலம்
முடிந்து விடும் காரணம் குடும்பச்சுமை, அன்றாட விலைவாசி உயர்வு, புதிது புதிதாய்
வியாதிகள், கல்விக்கட்டணம், தங்க விலை உயர்வு, தங்கம் நமது வாழ்க்கையில் ஒரு
முக்கிய அங்கமாகி விட்டது ஏனெனில் மகளுக்கு கட்டாயம் வரதட்சினை கொடுத்தாக வேண்டும்,
விஞ்ஞானத்தின் அபார வளர்ச்சியால் புதிது புதிதாய் எலக்ட்ரானிக்ஸ் பொருள்களின்
வரவுகள், அவைகளை நாம் வாங்காமல் வாழமுடியாது ஏனெனில் அப்பொழுதுதான் சமூகத்தில்
சமமரியாதை கிடைக்கும், அதனால் கூடுதலாய் மின்சார செலவுகள், இத்யாதி, இத்யாதிகள் இந்த
கஷ்டங்களுக்கு மூலகாரணம் ஒட்டுமொத்த சமூகமே ! ஆம் நல்ல ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்தலின் அறியாமை, காரணம் நாம் ஏணியாகவே
இருந்து ஏற்றிவிட்டு ஏமாறுவதில் சுகம் கண்டு விட்டோம், ஏணியில் ஏறிப்போக
ஆசையில்லை, காலம் மாறி விட்டது மானிடா ! இன்று ஏணியே தானியங்கியாக மேலே போய் விட்டு கீழே வருகிறது அந்த இரும்பு ஏணிகூட
காலப்போக்கில் தன்னை மாற்றிக் கொள்ளும்போது நாமேன் மாற்று சிந்தனைக்கு வரக்கூடாது ? அப்படி வரவில்லை எனில் இதற்க்கு மாற்றுத்தீர்வு
ஆசையை துறக்க வேண்டியதுதான் வேறு வழியில்லை.
ஆகவே புத்தரின் போதனைப்படி நாம் ஆசையை ஒழிக்க வேண்டாம் ஆசை
என்பதை பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் எடுத்துக் கொண்டால் போதுமானது,
ஆசையில்லாமல் வாழ்வதுகூட விரக்தியை கொடுத்து விடும் பேராசை, பெரிய ஆசைகளை
தவிர்த்து சிறிய ஆசைகளுடன் வாழ நினைத்தால் சீறான, சிறப்பான வாழ்வே !
பட்டும் படாமலும்,
பதிலளிநீக்குதொட்டும் தொடாமலும்,
கெட்டும் கெடாமலும்
விட்டும் விடாமலும்
நட்டும் நடாமலும்
கொட்டோ கொட்டென்று மனதில் தோன்றும்
ஆசைகளுக்கு அளவு கோல்தான்
வாழ்வாதாரம்.
அருமை அருமை அருமை
(அய்யா! சாலமன் பாப்பைய்யா குரலில்)
த ம 1
நட்புடன்,
புதுவை வேலு
திரு. குட்டி சாலமன் பாப்பையா அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
நீக்குஆசைகள் துறந்து வாழ்ந்தால் எல்லாம் சுகமே....
பதிலளிநீக்குஆனால் அப்படி வாழ்வது என்பதுதானே கஷ்டமா இருக்கு.
வருக நண்பரே அந்தக் கஷ்டத்தை ஜீரணிக்க முடியாததால்தான் நெடுநாளும் கஷ்டமாக இருக்கின்றது.
நீக்குஇன்றைக்கு அவசியத் தேவையான பதிவு! பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே!
பதிலளிநீக்குத ம 2
வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி.
நீக்குஎவ்வளவு சம்பாதித்தாலும், சம்பாதிக்கும் பணத்தில் பாதியில் தன்னுடைய செலவுகளை சமாளிப்பவனே வருத்தமில்லாமல் வாழலாம்.
பதிலளிநீக்குமுனைவர் ஐயாவின் மிகச்சரியான கருத்து கருத்துரைக்கு நன்றி.
நீக்குகையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமானன்.. கழுத்து வரையில் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்...
பதிலளிநீக்குபாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.
வருக நண்பரே பாடல் வரிகளுடனான கருத்துரைக்கு நன்றி
நீக்குநேற்றே சொல்லிவிட்டேன்..
பதிலளிநீக்குஆனாலும், வந்ததற்காக -
விஞ்ஞானத்தின் அபார வளர்ச்சியால் புதிது புதிதாய் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மட்டுமல்ல -
புதிது புதிதாய் வியாதிகளும் கூட விற்பனைக்கு வந்திருக்கின்றன..
அவைகளையும் கட்டாயமாக வாங்கியாக வேண்டும் போலிருக்கின்றது..
வாங்க ஜி கட்டாயம் வாங்கியாக வேண்டுமோ... ஹாஹாஹா.
நீக்கு‘சேமிப்பும் ஒரு செலவுதான்’ என்றெண்ணி வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு சிறப்பான வாழ்வே அமையும். பதிவுக்கு பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குவருக நண்பரே சரியான கருத்துரை கடந்த 3 வருடங்களாக என்னால் தாங்கள் சொன்ன இந்த செலவை செய்ய முடியவில்லை காரணம் ஆடம்பரமான வாழ்க்கை அல்ல நான் அமைத்துக் கொண்ட குடும்பச்சூழல் கருத்துரைக்கு நன்றி
நீக்குஆசையே அலை போலே
பதிலளிநீக்குநாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே
வாழ்நாளிலே
--
Jayakumar
வருக நண்பரே தாங்கள் பாடுவதுபோல பலரது வாழ்க்கை ஆட்டத்தில்தான் இருக்கின்றது (இதில் டாஸ்மாக் வேறு நிலை) வருகைக்கு நன்றி.
நீக்குஇன்றைய கால கட்டத்திற்கு ஏற்ற பதிவு சகோ.
பதிலளிநீக்குதங்களின் கருத்துரைக்கு நன்றி சகோ.
நீக்குஆசை என்பதை பட்டும்படாமல் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற கருத்து அனைவரும் கடைபிடிக்கவேண்டிய ஒன்றாகும்.
பதிலளிநீக்குமுனைவரின் கருத்துரைக்கு நன்றி
நீக்குமின்சார ஏணிகள் வந்துவிட்ட காலத்தில் மக்கள் மட்டும் மாறாமல் இருப்பது ...நல்ல கருத்து கில்லர்ஜி.
பதிலளிநீக்குஆசைகள் வேண்டும்தான். ஆனால் தாமரை இலையின் மீதுள்ள நீர் போல பட்டும் படாமலும் இருந்துவிட்டால்....பற்றற்ற வாழ்க்கை...ம்ம்ம் ஸ்ரீபூவு வந்துவிட்டார்...ஹஹஹ்
இதில் ஒன்றே ஒன்று....கற்றலில் மட்டும் பேராசை கொள்ளலாம் அதாவது நிறைய கற்க வேண்டும் என்று பொறாமை இல்லாத...அதற்காகச் செலவழிப்பதில் தவறு இல்லை..அதை அடைவதற்கு...சரிதானே ஜி?!!! நல்ல பதிவு.
வில்லங்கத்தாரின் விரிவான கருத்துரை நன்று கற்றலுக்காக செலவழிப்பது தவறு என்பவன் மூடனே அருமையாக சொன்னீர்கள் நன்றி.
நீக்குஉண்மை
பதிலளிநீக்குநண்பரின் வருகைக்கு நன்றி
நீக்குஅத்தனைக்கும் ஆசைப்படு என்று ஒரு சாமியார் சொல்வது நினைவுக்கு வருகிறது
பதிலளிநீக்குஆசை வேண்டும் ஐயா எல்லைக்கோடு வைத்துக்கொள்வது நன்றே..
நீக்குநல்லதொரு ஆராய்ச்சி!
பதிலளிநீக்குதேவைகளுக்கு என்றுமே முடிவில்லை எனும் போது தேடல்களும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். நம் வரவுக்கேற்ப தேவைகளை குறித்து சிந்திக்கணுமே தவிர அடுத்தவர்களை பார்த்து வரவை மீறி செலவிட தொடங்கிடும் ஆசை தான் அனைத்து துன்பத்தினையும் இழுத்து வரும்.
உலகம் வளரட்டும்,சமூகம் மாறட்டுமே.. நமக்கென்ன? நாம் நாமாயிருந்தல் நலம். போதும் எனும் மனமிருந்தால் நரகமும் சொர்க்கமாய் தெரியுமாம்.நமக்கு கீழே உள்ளவர் கோடி.. நினைத்து பார்த்து நிம்மதியாய் தூங்குவதுமாயிருந்தால் எந்த துன்பமும் வராது.என்னளவில் நான் இந்த வரையறைக்குள் தான் இருக்கின்றேன். திட்டமிட்ட வாழ்க்கை. எது எமக்கு அவசியம்,அதில் அத்தியாவசியமானது எவை? உடனடியாக தேவைப்படுமா? எனவெல்லாம் அலசி ஆராய்ந்து தான் எந்த செலவுக்கும் திட்டமிடுவேன்.
வெளி நாட்டில் வாழ்கின்றோம்.பணம் இருக்கின்றது என்பதற்காக மனம் போன போக்கில் நானும் வாழ்வதில்லை, என் பசங்களையும் விடுவதில்லை. இன்றைய இந்த உயரம் என்றும் நிலைக்கும் என தெரியாது என்பதால் பசியும் பட்டினியும், கஷ்டமும், நஷ்டமும் நாம் உணர வேண்டும்.
ஆசையே துன்பத்துக்கு காரணம் எனச்சொல்லி ஆசைப்படாமல் இருக்கவும் கூடாது. நம் வாழ்க்கைக்கு என சில ஆசைகளை உருவாக்கி அந்த இலக்கை அடையும் வரை போராடவும் வேண்டும்.அதே நேரம் அவை நம் வரவுக்குள் இருப்பதாகவும் திட்டமிட வேண்டும்.
முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படலாமா இல்லையா என கேட்டால் ஆசைப்படலாம் என தான் நான் சொல்வேன். அவனால் எட்டி பறிக்க முடியாவிட்டால் கையில் ஒரு கொழுகொம்பை வைத்து தட்டி பறிக்க முயற்சி செய்ய வேண்டும். அதனால் நீங்கள் சொல்வது போல்... பேராசையும்,அடுத்தவரை பார்த்து வரும் பொறாமைப்போட்டியும் இல்லாது அளவோடு ஆசைப்பட்டு வளமோடு வாழ்வோம்.
அழகான விளக்கவுரை தந்தீர்கள் அருமை
நீக்குபணக்கார நாடுகளில் சைக்கிள் ஒட்டுவது என்பதை, சுற்றுப்புற சூழலை காப்பதாக பெருமிதமும், பெட்ரோல் சேமிப்பால் நாட்டின் பொருளாதாரத்துக்கு உதவுதாகவும் பார்க்கிறார்கள். ஆனால் நம் நாட்டு முட்டாள்களே அதை கேவலமாகப் பார்க்கிறார்கள், சொந்த கார் வாங்கி ஓட்டுவதை வாழ்நாள் சாதனையாக நினைக்கிறார்கள்.
பதிலளிநீக்குதற்போதைய தமிழக நிலையானது மிகவும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது. ஒருபுறம் கருணாநிதியும் ஜெயலலிதாவும் தமிழக கனிம வளங்களை சூறையாடிக் கொண்டிருப்பதோடு, சாராயத்தை விற்று மனித வளத்தையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். பசுமையான வயல்கள், தூய நீர் நிறைந்த குளங்கள் ஆறுகள், பால் வளம், இரசாயன விஷமற்ற உணவு, பாரம்பரிய காய்கறிகள் தானியங்கள் இவைதான் உணமையான செல்வம். இவை அனைத்தையும் இழந்து நிற்கிறோம், விவசாயத்தை நம்பியிருந்த உழைப்பாளிகள் அனைவரும் நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் நிலங்களை புரோக்கர்களிடம் கொடுத்துவிட்டு நகர் புறங்களில் கட்டிட வேலைக்கு புலம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். மிக ஆபத்தான் சூழ்நிலையை நோக்கி அதல பாதாளத்திற்குள் விழுந்து கொண்டிருக்கிறோம். இது குறித்து எந்த பீப் அரசியல் வாதிக்கும் அக்கறையோ, கவலையோ இல்லை என்பது தான் வேதனைக்குரிய விஷயம்.
நீண்ட இடைவெளிக்குப்பிறகு வருகை தந்தமைக்கு நன்றி நண்பரே... இந்த இழி நிலையிலிருந்து மீள்வது நமது கையில்தானே இருக்கின்றது நண்பரே
நீக்குஉண்மைதான் மாற்றி யோசிப்போம்!அருமையான பதிவு! பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குவருக நண்பரே மாற்றம் ஒன்றே ஏற்றம் தரும்
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஜி
யாவரும் படிக்கவேண்டிய விடயத்தை மிக அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஜி த.ம 9
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருக நண்பரே வருகைக்கு நன்றி
நீக்குஆசைப் படு
பதிலளிநீக்குசிறிதாக ஆசைப்படு
உண்மையான சொல்
அப்படியானால் கவலையே இல்லை சகோதரா..
(வேதாவின் வலை)
தங்களின் கருத்துரைக்கு நன்றி சகோ.
நீக்குதேவையான செய்தி, ஆனால் முடியுமா? சகோ,
பதிலளிநீக்குமுடிந்தால் நலமே சகோ.
நீக்குஆசையைப் பற்றி நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க. ஆனால் நீங்கள் சொன்னபடி வாழ முடியுமா என்பது தான் கேள்வி. முயற்சித்து பார்த்தால் கண்டிப்பாக முடியாதது கிடையாது.
பதிலளிநீக்குநல்லதொரு சிந்தனையை தூண்டியதற்கு மிக்க நன்றி நண்பரே.
வருக நண்பரே நீங்களே சொல்லிட்டீங்க முயன்றால் முடியாதது இல்லை என்று வருகைக்கு நன்றி
நீக்குஇன்றைய காலகட்டத்திற்குத் தேவையான அவசியமான பதிவு நண்பரே
பதிலளிநீக்குநன்றி
தம+1
தாமதமானாலும் நண்பரின் உறுதியான வருகைக்கு நன்றி
நீக்குஆசை....வாழ்வினில் உயர ஆசை...
பதிலளிநீக்குஎதிலும் நெ1 ஆக ஆசை
இறை விஷயமாகட்டும்.... மறை விஷயமாகட்டும்...
வாழ்வாகட்டும் ஆசை இல்லையெனில் சுவாரசியமில்லை...
தேவையற்ற ஆசை...வீணான ஆசை என உணரும் பக்குவம் வந்துவிட்டால்....வரனும்...
வராதவங்களுங்கு...இந்த பதிவை 101 தடவை படிச்சு பார்க்கட்டும்...
வருக நண்பரே அதென்ன 101 நேர்த்தி கடனா ?
நீக்கு