தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, டிசம்பர் 12, 2015

பந்தை அடிக்க கோடரி எதற்கு ?


ஒருநாள் மாலை வேளையில் சிவபெருமானும், பார்வதியும் மேலோகத்தில் பால்கனியிலிருந்து... தேநீர் அருந்திக் கொண்டே உலக நடப்பைப்பற்றி விவாதித்துக் கொண்டு இருக்கும்போது... சிவபெருமான் கேட்டார்.

பாரு, என்ன... நீண்டநேரமாக, பூலோகத்தை அதுவும் தி கிரேட் தேவகோட்டை திசையை நோக்கி ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டு இருக்கின்றாய் ?
இல்லை பிரபு கீழே இரண்டு அணிகள் கூடைப்பந்து விளையாடுகிறார்கள்.

யார் அந்த அணிகள் ?
916 அணியில், ஜோக்காளி பகவான்ஜியும், கோடரி கில்லர்ஜியும், 420 அணியில் உண்மையானவன் சொக்கனும், தில்லைஅகத்து துளசிதரனும்,

சரி இதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது ?  வலைபதிவில் எழுதிக் கிழித்த அலுப்பை போக்க டைம்பாஸுக்காக விளையாடுவார்கள்.
மூவர் கையிலும், பேட்மேன் இருக்கிறது, ஆனால் கில்லர்ஜி கையில்...

என்ன இருக்கிறது ?
கோடரி.

அதை.... வைத்து ?
அதை வைத்துதான் அடிக்கின்றார்.

ஓஹோ இப்பொழுதுதான் புரிகிறது.
என்ன பிரபு ?

இதில் 916 பகவான்ஜி அணி வெற்றி பெறவேண்டும் என்பது விதி அதுதான் காரணம்.
எப்படி ?

அதாவது, விளையாடும்போது கோடரியை தவற விடுவதுபோல் வீசி துளசியையோ, சொக்கனையோ காயப்படுத்தி விட்டு விளையாட்டை பாதியிலேயே முடித்து தி கிரேட் 916 பகவான்ஜி அணி வெற்றி பெற்றதாக அறிவிப்பதற்காகவே இந்த திட்டம்.
நம்மிடம் கையேந்தினால் வெற்றிக் கனியை அவர்கள் கையில் நாம் இடமாட்டோமா  இந்த ஐயப்பாடு ஏன் பிரபு ?

எல்லோருமே எல்லாவற்றிலும் நம்பிக்கை வைக்க வேண்டுமென்ற ஒற்றுமையான இதயத்தை நாம் அவர்களுக்கு கொடுக்கவில்லையே அதுதான் குழப்பத்தின் ஆரம்பம் தேவி.
இது தவறில்லையா ?

எதில் தவறில்லை... கிரிக்கெட் விளையாடும்போது மழை வந்து விட்டது எனபதற்காக, வெற்றி பெறவேண்டிய அணியை தோற்று விட்டது என அறிவிக்கவில்லையா ? இந்த பாமர மானி(ட்)டர்கள்.
இருப்பினும், விளையாடும்போது கோடரியை எடுக்க எப்படி அனுமதி கொடுக்கலாம் ?

பாரு, முதலில் பார்த்துப்பேசு கில்லர்ஜிக்கு பாம்புக்காது அவ(ன்)ர் காதில் விழுந்து விடப்போகிறது.
வந்தால், தங்கள்மீது இருக்கும் நாகத்தை தூக்கி வீசுங்கள்.

கோடரியால் ஒரேபோடு போட்டு விடுவான் எத்தனை முறைதான் வெட்டு வாங்கி பாம்பாட்டிகளிடம் ஆர்டர் கொடுப்பது.
தாங்கள் இருக்கின்றீர்களே... பிரபு.

அப்படியென்றால் நான் இருப்பது பிடிக்கவில்லையா... தேவி ?
என்ன தாங்கள் கில்லர்ஜிக்கு பயப்படுகின்றீர்கள் ?

பாரு, அவனது பார்ட்னர் பகவான்ஜியைக்கூட ஒருமுறை கத்தி எடுத்துக் குத்தப்போனவன் ஞாபகம் இருக்கின்றதா ?
ஆனால் பகவான்ஜி அவனைக் கல்லாக்கி விட்டாரே...

பாரு, அது உனது திடீர் உதவியால் நடந்தது இல்லையெனில், பகவான்ஜியோட நிலையை நினைச்சுப்பாரு...
சரி, விளையாட்டில் கோடரியை எடுப்பது தவறுதானே...

பாரு, இங்கே பாரு தேவகோட்டையிலே இதெல்லாம் சகஜம் கண்டுக்கிறாதே.
இதையெல்லாம் தடுக்க முடியாதா ?

சட்டத்திற்கு முன்னால் அனைவரும் சமம் அப்படினு சொல்றாங்க, வயிற்றுப்பசிக்காக பிட்பாக்கெட் அடிச்சவனை லாக்கப்புக்குள்ளே வச்சு கும்முறாங்க, ஆனா கோடிக்கணக்கா கொள்ளையடிச்ச அரசியல்வாதிக்கு போலீஸ் அதிகாரிங்களே சல்யூட் வைக்கிறதில்லையா ?
அதற்காக, துளசிதரனையும், சொக்கனையும் காயப்படுத்தறதை பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது.

பாரு, நீ வாக்கிங் போகும்போது ஸூட்டிங் ஸ்பாட்டுல சட்டத்துக்கு புறம்பா கடை வச்சுயிருக்கிற துளசி கொடுத்த ஓசி டீக்காக வக்காலத்து வாங்கி பேசுறே, நாளை நகராட்சி பிரச்சனைகள் வந்தால் உனது உதவி தேவைப்படுமென்ற லஞ்சம்தான் உனக்கு தரும் அந்த டீ, சொக்கன் என்ன சாதாரண ஆளா ? தளத்துல மட்டும் ‘’உண்மையானவன்’’ அப்படினு பேரை வச்சுக்கிட்டு, கில்லர்ஜி நம்ம போர்பந்தர் மோகன்தாஸைப்பற்றி தொடர் பதிவு எழுதச் சொன்னப்போ, கனவுல திரிஷா வர்றது நின்னு போச்சுனு எழுதலை...
இருந்தாலும்...

என்னடி இருந்தாலும்.. எல்லோருக்கும் ஒருநாளு இருக்குடி அப்ப வக்கிறேன்டி ஆப்பு கில்லர்ஜிக்கும் சேர்த்து.
அப்படினா, கில்லர்ஜியிடமிருந்து கோடரியை பறிக்க முடியாதா ?

இருந்துட்டுப் போகட்டுமே... எவ்வளவு நாளைக்கு ?
பந்தை அடிக்க கோடரி எதற்கு ?

அவனை இப்ப ஒண்ணும் செய்யமுடியாது.
ஏன் ?

அவன் உயிரோட இருக்கும்வரை ஒண்ணும் செய்யமுடியாது, கையிலே கோடரி வேற இருக்கு மனிதர்கள் பிணமானால்தானே நமது வீரத்தை காட்டமுடியும்.
இது தர்மம் இல்லை, நியாயம் இல்லை.

அப்படிப் பார்த்தால், அஞ்சு வயசுக் குழந்தையை ஆறறிவு மனுஷன் ஏழுபேரு கற்பழிக்கிறான் நம்ம டிபார்ட்மெண்ட்டால் தடுக்க முடியுதா ? ஒரு எட்டு தள்ளி நின்று பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம் எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரும்.
இப்படியே... போனால் சமூகத்தோட நிலை ?

போனவாரம்கூட விண் டிவியிலே பார்த்தோமே ஒரு படம் பேருகூட மறந்துபோச்சு, தம்பி பி.எஸ். வீரப்பாகூட சொல்வாரே... இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் அப்படினு அதுதான்டி நடக்கும்.
எனக்கு பகவான்ஜியைப்பற்றி கவலையில்லை துளசியும், சொக்கனும்தான்...

என்னடி பகவான்ஜி பேரு மட்டும் இப்படி வச்சுக்கிட்டு ஈரோட்டுக்காரர் மாதிரி எழுதலாமா ?
என்னமோ, போங்க.. நீங்களும் உங்க ஆக்டிவிட்டும்.

சரி நீ விளையாட்டை பார்த்துக்கொண்டு இரு, நேற்று துபாய் கோயில்ல கும்பாபிஷேகம் நடந்துருக்கு, தஞ்சையம்பதி தளத்தில் நம்ம குவைத் துரை செல்வராஜூ அதைப்பற்றி பதிவு போட்டு இருக்காரானு பார்க்கிறேன்.

சிவபெருமான் கணினியில் மூழ்க, பார்வதி கீழே எட்டி தேவகோட்டையை பார்த்துக் கொண்டு இருக்க, 916 பகவான்ஜியும், கில்லர்ஜியும், லாவகமாக அடிக்கும் பந்தை, 420 எதிரணி துளசிதரனும், சொக்கனும் தட்டுத் தடுமாறி, முட்டிமோதி, பயந்து நடுங்கி, தடுத்துக் கொண்டிருக்க, திடீரென கில்லர்ஜியின் கோடரி கையை விட்டு (தற்செயலாக) உருவிக்கொண்டு எதிர்பாராத விதமாக எதிரணியினரை நோக்கி பறக்க... நடுவர்களாக உட்கார்ந்து மதிப்பெண்கள் எழுதிக்கொண்டு இருந்த, திரு.கரந்தை ஜெயக்குமார் அவர்களும், முனைவர்  திரு. B. ஜம்புலிங்கம் அவர்களும் திடுக்கிட்டு உட்கார்ந்திருந்த நாற்காலியை விட்டு எழுந்தார்கள்.

தமிழ் விளக்கம்.
916 சுத்தமான சொக்கத்தங்கம்.
420 விளக்கம் தேவையில்லையே.

சிறிது நேரத்தில் இந்த சப்தம் கேட்டது காணொளியை சொடுக்குக...

காணொளி

Chivas Regal சிவசம்போ-
அப்புறம் என்னாச்சு ?

சாம்பசிவம்-
கேம்ஸ் ஓவர்.

சிவாதாமஸ்அலி-
அப்ப, Mr. சிவபெருமான் சொன்னது சரிதான்.

நண்பர்களே... நண்பிகளே... இந்தப்பதிவை நகைச்சுவையாக எழுத முயற்சித்தேன் நகைச்சுவையா... இல்லையா ? என்பதை தாங்கள்தான் எழுத வேண்டும் மேலும் பல வகையான விடயங்களை புகுத்தியுள்ளேன் ஆன்மீகம், குறுக்கு சிந்தனை, நேர்மையின்மை, லஞ்சம், தவறான தீர்மானம், கொலை முயற்சி ஆகவே இதனைப்பற்றிய விரிவான தங்களின் கருத்துரையை காண ஆவலுடன் இருக்கிறேன் – கில்லர்ஜி.

60 கருத்துகள்:

 1. பரமசிவன் பார்வதி டிபார்ட்மெண்ட்டாலேயே ஒன்னும் செய்ய முடியவில்லை என்னும்போது, மதிப்பெண்களைக் குறித்துக் கொண்டிருக்கும் எங்களால் என்ன செய்ய முடியும்
  அருமை நண்பரே
  தம 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் முதல் கருத்தை பதிந்தமைக்கு நன்றி

   நீக்கு
 2. உங்களுக்கென்று ஒரு தனிப்பாணி வைத்திருக்கிறீர்கள் கில்லர்ஜி! தம வாக்கிட்டு ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 3. சென்னையில்
  துரைப்பாக்கம்,விருகம்பாக்கம் வளசரவாக்கம் போன்ற இடங்களில்,
  பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் போராடிக்கொண்டு தான்
  இருக்கிறார்கள் . தேங்கிய கழிவு நீர்,குப்பை அகற்ற
  இன்னமும் முழு முயற்சி இல்லை

  அத்தனைக்கும் நடுவிலே இதுமாதிரி ஆடுவது தொற்று நோய் வரும்
  அபாயம் இருப்பதால் அடுத்த மாதம் ஆட்டத்தை தொடரவும்.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க தாத்தா நலமா ? தங்களை பலமுறை முயன்றும் தொடர்பு கொள்ள முடியவில்லை தங்களின் வருகைக்கு நன்றி

   நீக்கு
 4. தங்களின் கற்பனா சக்தியையும், எழுத்துத் திறமையையும் பாராட்டுவதற்காகவே நாற்காலியைவிட்டு நாங்கள் எழுந்தோம். தெர்டரட்டும் தங்களது எழுத்து வீச்சும் கோடரி வீச்சும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனவரே தங்களின் ஊக்கமளிக்கும் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 5. சொக்கத் தங்க அணி உங்களுடையது தான் ,நேற்று ,கந்த வேலனைப் பார்க்க சொக்கன் ஜி உங்க பக்கம் வந்திருக்கிறாரே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர் வந்ததால்தானே இந்த விளையாட்டு
   அவரும் பதிவு போட்டு இருக்கின்றார் ஜி மணிகண்டன் வரவு

   நீக்கு
 6. பார்.....வதி.....உங்களை பார்க்கும்போதே நிணைத்தேன்.... பூவை பறிக்க கோடாறி..மாதிரி....பந்தை அடிக்க கோடறி.... பேஷ் பேஷ் ரெம்ப நல்லா இருக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா நரசுஸ் காஃபியோடு படித்தமைக்கு நன்றி

   நீக்கு
 7. ‘உண்மையானவன்’ சொக்கன் பேரிலும் தில்லைஅகத்து துளசிதரன் பேரில் உங்களுக்கு ஏன் இத்தனை ‘கோபம்’? பதிவை இரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே கோபமில்லை எல்லாம் பகவான்(ஜி) எழுதியபடிதானே நடக்கும் வருகைக்கு நன்றி

   நீக்கு
 8. ம்ம்...உங்கள் ஆட்டத்தில் நாங்கள் காலி....செம ஜாலி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி

   நீக்கு
 9. ஹஹஹஹஹஹ் செம! அது சரி! 916 சொக்கத் தங்கம்...420 என்னாதுப்பா வில்லங்கமா? சொக்கனும் அப்ப இந்த லிஸ்டா...ஹஹஹ்

  சிவன் டிபார்ட்மென்டே ஒண்ணும் செய்ய முடியவில்லை....ம்ம் நீங்கள் எங்குவருகின்றீர்கள் என்று தெரிகின்றதே...சொக்கன்.....தில்லையகம்...இரண்டுமே சிவன் டிபார்ட்மெண்டைச் சேர்ந்தது!!! என்பதாலா? ஹஹஹஹ் சரி அது இருக்கட்டும் எங்கள் ஏம்பா போட்டுத் தாக்கினீங்க!!!? "எங்கள் எல்லாரும் ரொம்ப நல்லவங்கனு சொல்லிட்டாய்ங்கநு அவ்வ்வ்வ்வ்வ்"!!!!

  நல்லாருக்குது ஜி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க, வாங்க 420 க்கு அர்த்தம் வேற சொல்லணுமோ...
   நீங்களும் சொக்கன்ஜியும் ஒரு ஜாதி
   நானும் பகவான்ஜியும் ஒரு ஜாதி

   நாங்க ஒண்ணும் வேணுமின்னு செய்யலை தற்செயலாக கோடரி உருவிக்கொண்டு பறந்தது இதுக்கு நாங்களா ? பொருப்பு.

   நீக்கு
 10. ஷூட்டிங்க் ஸ்பாட்ல ஓசி டீ!! ஹஹஹஹ் பெட்டிக்கடை இல்லை ஜி! வீட்டுல தயாரிக்கற டீ ஜி! ஒரிஜினல் அக்மார்க் டீ!! அப்ப லஞ்சம் இன்னும் நல்ல வொர்கவுட் ஆகும்ல?!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாங்க படத்துல பார்க்கும் பொழுது டீக்கடையிலிருந்து வந்தது மாதிரி இருந்தது

   நீக்கு
 11. அன்புள்ள ஜி,

  தங்கத்திலே(916) ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ?
  உங்கள் அங்கத்திலே ஒரு குறைவிருந்தாலும்(420) அன்பு குறைவதுண்டோ?

  ராம நாமத்துடன் இறைவனிடம் கையேந்தியது நன்றாக இருந்தது.

  த.ம.8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மணவையாரே அசத்தலான பாடலோடு வந்தமைக்கு நன்றி

   நீக்கு
 12. நான் மீண்டும் சொல்கிறேன். உங்களால் மட்டுமே இப்படி எழுத முடியும்.
  த ம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே..

   நீக்கு
 13. மழை வரும் அந்தப் பயல்களை தேவக் கோட்டை பக்கம் பார்க்க வைத்தது நீங்கள் தானா? (மாட்னீங்களா??/எல்லாரும் கொஞ்சம் உங்களைத் திட்டிக்கிட்டு கிடக்கட்டும் ..அப்புறம் வரேன்.(.நீங்கள் எவ்வளவு சாக்லேட் தந்தாலும் மசிய மாட்டேன்..)மக்களே நாட்டு மக்களே சென்னை வெள்ளத்துக்கு இவர் தான் காரணம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏத்தா, மருமகளே மாமாவை இப்படியா கூட்டத்துலே கோர்த்து விடுவது ?

   நீக்கு
 14. உமது எழுத்தே தனிதான்!

  பதிலளிநீக்கு
 15. பரமசிவனும் வேடிக்கை பார்க்க
  பார்வது பதற
  916-ம்
  420-ம்
  களத்தில் நிற்க...
  (தேவகோட்டையில் அருவாதானே எடுப்போம்... தாங்கள் கோடாரி எடுத்தது ஏனோ..?)
  உங்க கோடாரிக்குப் பயந்து தெய்வங்கள் விலகி நிற்க, ஐயாக்கள் உயிர் பயத்தோடு ஓடுவதுதானே தம்மைக் காத்துக் கொள்ளும் வழி...

  அருமை அண்ணா.

  காணொளிப் பாடல் நான் முன்பே கேட்டிருக்கிறேன்...
  ஆம்பூலன்ஸ் ஒலி... ஹா... ஹா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அருவா மற்ற வேலைகளுக்கு சரிதான் பந்து தட்டி விட கோடரியே உகந்தது நண்பரே...

   நீக்கு
 16. நண்பா,

  அசத்தல்!! கற்பனை விளையாட்டென்றாலும் அதிலும் சமூக அவலங்களை உங்கள் கோடரி கொண்டு வெட்டி வீழ்த்த நினைக்கும் உங்கள் பேராவல் பாராட்டுக்குரியது.

  காணொளி ஏற்கனவே பார்த்திருந்தாலும் மீண்டும் பார்க்கும்போது மனம் மகிழ்ந்தது.

  வாழ்த்துக்கள்.

  கோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் விரிவான கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 17. நல்ல விளையாட்டு இது/

  பதிலளிநீக்கு
 18. போட்டி விரிப்பு அழகு
  தாங்கள்
  ரவிசாத்திரி, கவாஸ்கர் போன்றோரை விட
  சிறப்பாகத் தொகுத்து வழங்குகிறீர்களே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா நண்பரே நமது வேலையை மாற்றி விடுவீர்கள் போலயே...

   நீக்கு
 19. வணக்கம் கில்லர் ஜி !

  எப்படி ஜி இப்படியெல்லாம் எழுத தோணுது !
  ஆமா இந்த உரையாடல் பலவிடயங்களை தெளிவு படுத்துகிறது
  நாட்டு நடப்பை நகைச் சுவையோடு சொன்ன விதம் அழகு ஆனாலும் கோடரி கரந்தையார் பக்கம் போனது சரி இல்லையே ஜி
  ம்ம் துபாயில் நேற்று கோவில் கும்பாவிசெகமா நல்ல விடயம் சென்று பார்க்கிறேன் பதிவினை மிக்க நன்றி ஜி !

  தங்கள் கலக்கல் பதிவுகள் தொடரவும் நலம் பெறவும் வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே திரு. கரந்தையாரும், முனைவரும், நடுவர்கள் கோடரி பாய்ந்தது 420 அணியை நோக்கி...

   நீக்கு
 20. 916 / 420 எனக்கு ஒன்றுமே புரியவில்லை. கொஞ்சம் இந்த மரமண்டைக்கு விளக்கவும்.

  பதிலளிநீக்கு
 21. வருக நண்பரே என்னையும், பகவான்ஜியைப் போன்ற நல்லவர்களும் 916 சொக்கத் தங்கம் இதற்க்கு எதிர் புறமானவர்கள் 420

  பதிலளிநீக்கு
 22. இது போங்கு நான் ஒத்துக்க மாட்டேன். என் அப்பா எழுதினால் அடுத்த நிமிடம் ஓடுகிறீர்கள். அதுவும் உங்கள் இளைய மருமகள் எழுதினால் முந்திக் கொண்டு வருகிறீர்கள்? ஏன் வரவில்லை. தேவக்கோட்டை பக்கம் போன கடவுள்களே..இந்த மீசையாருக்கு நச் நச் சென்று நாலு அடி கொடுங்கள்...( இனி என் பிளாக் வந்து பாக்கணும் இல்லைனா..? ஆமா சொல்லிபுட்டேன்.)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மருமகளே உனது அப்பா கவிஞர் அவரிடம் ஏதும் படித்துக்கொள்ளலாம் என்று சுயநலத்துடன் ஓடியிருப்பேன் இப்பொழுதுதான் உனது தளத்தில் இணைந்து கொண்டேன் இனி உன்னிடமும் நான் ஏதும் படிக்கலாம் என்ற நம்பிக்கை துளிர் விட்டது இனி தொடர்வேன் நிச்சயம்.

   நீக்கு
 23. வித்தியாசமான முயற்சி.
  காணொளி ஆச்சர்யம். பாடல்மட்டும் டப் செய்ப்பட்டதாக இருக்குமோ என்று நினைத்தேன். வாயசைப்பை உற்று நோக்கி நேரில் பாடப்பட்டதுதான் என்று அறிந்து கொண்டேன். நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 24. நகைச்சுவை பதிவென்றாலும் உங்கள் குமுறல்கள் வெளிப்படாமல் இல்லை. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 25. ஹாஹா சகோ..எப்படி யோசிக்கிறீர்கள்?!! சொக்கன் சகோ, துளசி அண்ணா, கீதா , ஜெயக்குமார் அண்ணா...ஆஹா எல்லோரையும் இப்படி இழுத்துவிட்டீர்களே! நகைச்சுவையில் நச் நச் என்று கருத்துகளும்!
  அந்த கோடாரியை பாட்டெழுதும் அதிமேதாவிகள் மீது போடுங்களேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நாளையே கோடரியை வீசுகிறேன் சகோ

   நீக்கு
 26. நல்ல சிந்தனை சகோ,

  பாரு,,,, நல்லா இருக்கு, தங்கள் கோடாரி வெட்டிவீழ்த்தட்டும்
  420 களை நிஜத்தில்,,,

  பதிலளிநீக்கு
 27. இப்படியெல்லாம் அழுகுணி ஆட்டம் இன்னொரு தடவை ஆடுனீங்க, அப்புறம் நான் என்னோட மூணாவது நெற்றிக்கண்ணை திறந்திட வேண்டியிருக்கும். ஆமா சொல்லிப்புட்டேன்...

  ஆனா நீங்க சொன்ன ஒரு விஷயம் மட்டும் 1000க்கு 1000 உண்மை.
  "//தேவகோட்டையில இதெல்லாம் சகஜம்னு//" சொன்னீங்க பாருங்க, இது தான் மறுக்க முடியாத உண்மை. தேவகோட்டை கல்லூரியில் நான் படித்துக்கொண்டிருந்த பொழுது, 1990ஆம் ஆண்டில், ஆசிரியரையே (என் வகுப்பு மாணவியின் தந்தை, கணித ஆசிரியர்) அரிவாளால் தாக்கிய ஊர் தானே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாங்க 916 நியாயமாகத்தான் விளையாடுவோம்
   ஹலோ அது நான் சொல்லவில்லை சிவபெருமான் சொன்னது.
   தி கிரேட் தேவகோட்டையைப்பற்றி தெரியுதா ?

   நீக்கு
 28. துபாய் கோயில் கும்பாபிஷேகம் பற்றி எதுவும் தெரியவில்லை..

  ஆயினும் -


  பன்முகத் திறமை என்பது - உங்களிடத்தின் மிளிர்கின்றது.. எந்தக் கருத்தையும் எடுத்துக் கொண்டு வளைத்துக் கட்டி அடிக்கின்றீர்கள்..

  சிறப்பாக செய்திருக்கின்றீர்கள்.. மேலும் கூறுவது என்றால் -

  கொல்லர் தெருவில் ஊசி விற்பது போலாகி விடும் -
  கில்லர்ஜி பதிவுக்குக் கருத்துரை கூறுவது..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா வாங்க ஜி தங்களைப் போன்றவர்களின் கருத்துரையே என்னை செதுக்கி கொண்டு இருக்கின்றது பழமொழியை மிகவும் ரசித்தேன் வருகைக்கு நன்றி ஜி

   நீக்கு
 29. ம்ம்ம்ம், டிசம்பர் பனிரண்டு அன்னிக்குத் தான் ரயிலில் அவஸ்தைப் பட்டுட்டு இருந்தோம். :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லவேளை நீங்க பந்து விளையாட்டில் கலந்து கொள்ளவில்லை.

   நீக்கு