நானும் சென்றேன் கடைசியாக மருத்துவமனை விரைவூர்தியில் செங்கற்பட்டு அரசாங்க
மருத்துவமனைக்கு என்னுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருவர் இறக்கி உள்ளே கொண்டு
செல்ல ஊழியர்கள் இல்லை மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை எனக்கு முன்னே சென்ற
பயணிகளில் பலரும் சடலங்களாய் சற்றுமுன் மரண வேதனையில் என்கண் முன்னே துடித்தவர்கள்
இறந்து விட்டார்கள் இல்லை இறக்கடிக்கப்பட்டார்கள் இப்போது செவிலித்தாய்கள் மட்டுமே
இறந்தவர்களை கணக்கு எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் இந்நிலையில் எனக்கு எங்கே ? கிடைக்கும்
சிகிச்சை நான் நியாயம் கேட்டேன் கத்தினேன் ஒன்றும் கிடைக்கவில்லை பிறகுதான் புரிந்தது
நான் நின்று கொண்டிருப்பது எனது இந்தியா வென்று வேதனையில் காறித்துப்பி விட்டு வாயிலிருந்த
எனது ரத்தத்தைத்தான்
எனது உடையை மாற்றிக்கொண்டு என்னை நானே
சுத்தப்படுத்திக் கொண்டு விமான நிலையம் வந்து விட்டேன் சிறிது நேரத்தில் நாடியில்
அடிபட்ட எனது முகம் தெற்கும் மேற்குமாய் இழுத்துக் கொண்டு எனக்கே என்னை அடையாளம்
காண்பதற்கு கஷ்டமாக இருந்தது பற்களுக்குள் சிக்கிய நாக்கு Cut ஆகி விட்டது பேச்சு குழறுபடியாகியது சுங்க அதிகாரிகள் என்னை சந்தேகமாகவே
பார்த்தார்கள் அவர்களை சமாளிக்க வாயில் கசிந்த ரத்தத்தை நானே கஷ்டப்பட்டு
குடித்துக்ரரரர கொண்டு இருந்தேன் ஒரு வழியாக விமானத்துக்குள் வந்ததும் பணிப்பெண்ணிடம்
சுகமில்லை என்று சொல்லி போர்வை வாங்கி முழுவதும் தலையைப் போர்த்திக் கொண்டு உணவு
கொண்டு வரும் போதுகூட தலையை மட்டும் அசைத்து வேண்டாம் என்றவன் வேதனையில் உறங்கி
விட்டேன் துபாய் விமான நிலையத்திலும் சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் முகம் ஏன் ? இப்படி
இருக்கிறது எனக்கேட்க சென்னை கழிவறையில் வழுக்கி விழுந்து விட்டேன் உடனடியாக
மருத்துவமனை போகவேண்டும் என்று சொல்லி துரிதமாக வெளியில் வந்தேன் சீருந்துடன்
நின்ற நண்பர்களுக்கு என்னை அடையாளம் தெரியாத நிலையில் எனது முகம் பிறகு அபுதாபி
வந்து முதல் வேளையாக எனது நீண்ட மீசையை சிறிதாக Cut செய்து விட்டு காரணம் மீசையே வேறு மாதிரியான கோணத்தில் இருந்தது மருத்துவமனை
செல்ல மருத்துவர்களுக்கு ஆச்சர்யம் காரணம் இவ்வளவு பெரிய அடியை வாங்கி கொண்டு எப்படி
சுமார் 12 மணி நேரம் சிகிச்சை எடுக்காமல் நாடு விட்டு நாடு வந்தாய் ? நாடி
எலும்பில் முறிவு தொடர்ந்து சிகிச்சை எடுத்தேன் இந்த மருத்துவர்களின் லட்சணம்
இரண்டு மாதங்கள் நாடியில் சீழ் படிந்து ஜலம் வந்தது பிறகு அதற்கும் சிகிச்சை
தொடர்ந்து இரண்டு வருடங்களாக பேச்சும் தெளிவாக வருவது கஷ்டமாக இருந்தது இன்னும்
கூட நாடியில் அடிபட்ட உணர்வு உண்டு.
நண்பரே,
பதிலளிநீக்குபதிவு, கண்ணீரை வரவழைக்கிறது. எத்தனை சோகங்களை கண்முன்னே பார்த்து உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் அனுபவித்திருகின்றீர்கள்.அதுவும் உங்களின் வேதனையை பொருட்படுத்தாமல் அந்த நிலையிலும் அடுத்தவருக்கு உதவிய உங்கள் மனிதாபிமானத்திற்கு கண்டிப்பாக தலை வணங்குகிறேன்.
நீங்கள் (ரத்தத்தை) காரி துப்பியது சரிதான். இந்தியாவின் நிலைமைக்கு கண்டிப்பாக "செய்வினை" தான் காரணம். அதுவும் நமக்கு நாமே செய்துகொண்ட வினைதான்.
நண்பரே, உங்களுக்கு இன்னமும் அந்த வலி இருப்பதை எண்ணி வருந்துகின்றேன், எனினும் கெட்டதிலும் பல நன்மைகள் ஏற்பட்டதை எண்ணி ஆறுதல் அடைய முயலுங்கள்.
துணையை இழந்து, துணையின் மானசீக துணையுடன் அவரின் நினைவில் வாழும் உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் என்றென்றும் துணை இருப்பாராக.
கோ
வருக நண்பரே தங்களது விரிவான கருத்துரைக்கு முதற்க்கண் நன்றி செய்வினை ஆம் நமக்கு நாமே செய்த வினையே வேறு யாரை நோவது ? நினைவுகளில்தான் நான் காலம் கடத்துகிறேன் நண்பரே..
நீக்குபயங்கரமான அனுபவம். மிக வருத்தம் தந்தது உங்கள் நிலை. பிறர்க்கு உதவும் நல்லெண்ணத்துக்கு ஒரு சல்யுட்!
பதிலளிநீக்குநண்பர் Bandhu அவர்களின் முதல் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.
நீக்குகலங்கித்தான் போனேன்! "மரணத்தின் கொல்லைவாசல்"
பதிலளிநீக்குநேரடி அலைவரிசையாய் நேர்ந்ததை பிடித்துக் காட்டியபோது.
செய்வினை ஏதும் இல்லை நண்பா!
செயல்பாட்டு வினையில்தான் திருத்தம் தேவை!
பெயர்க் காரணம் மனதை சற்று நெருடுகிறது.
ஆறாம் அறிவுக்கு அறிவியல் என்றால் சரியாகி விடுமா?
நெஞ்சு பொறுக்குதில்லையே!
என்ன செய்வது? சொல்லைத் தேடி செல்கிறேன் .
த ம 1
நட்புடன்,
புதுவை வேலு
வாங்க நண்பா, எனது வாழ்வில் என்றுமே மறக்க முடியாத நிகழ்வு அது வருகைக்கு நன்றி.
நீக்குஇது உண்மையா...நம்ப முடியவில்லை...பேரூந்து விபத்து...காயங்களுடன் நீங்கள் சென்றது அதிர்ச்சியாக உள்ளது சகோ.உண்மைதான் கடைசிவரை வரும் துணை இல்லாத வாழ்க்கை வெறுமைதான்....
பதிலளிநீக்குவருக சகோ உண்மைதான் துணை கொடுத்துச்சென்ற துணைகளுக்காக வாழ வேண்டுமே வருகைக்கு நன்றி சகோ.
நீக்குபயங்கர மன உறுதி உங்களுக்கு. இல்லாவிட்டால் இவ்வளவு தெளிவாகச் சிந்தித்து இந்த மாதிரி நிலையிலும் இவ்வளவு தூரம் பயணித்து, முக்கியமாக விமான நிலையைப் பணியாலர்களுக்கோ, சுங்க அதிகாரிகள் கவனத்துக்கோ செல்லாமல் அங்கு சென்று சிகிச்சை தொடங்கி இருப்பீர்களா? ஆபீஸ் நடைமுறைகளுக்கு சான்றுகள் தேடும் சிரமத்துக்கு, சான்றாய் நாமே அங்கு சென்று விடுவது நலம் என்று முடிவெடுத்து.. பிரமிக்கிறேன் கில்லர்ஜி.
பதிலளிநீக்குவருக நண்பரே சரியாக புரிந்து கொண்டீர்கள் இங்கு எல்லாவற்றுக்குமே சான்றிதழ் அவசியம் அதைப்போலவே எல்லாமே சட்டப்படி நியாயப்படி கிடைத்தும் விடும் நமது நாட்டில் ? உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா ?
நீக்குநானே நேரடியாக வந்தவுடன் எனது நிலையை அவர்களே நேரடியாக பார்த்து விட்டார்கள் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்தது சம்பளத்துடன் இதே நாட்டிலிருந்தால் இதற்கு நான் தயாராவதற்கே சிலநாட்கள் வேண்டும் பிறருக்கும் சிரமத்தை கொடுக்க வேண்டியது வந்திருக்கும் ஆகவே இந்த முடிவு எடுத்தேன் நன்றி நண்பரே.
வணக்கம்
பதிலளிநீக்குஜி
பதிவை படித்த போது மனம் கனத்து விட்டது... மனிதபிமானம் எல்லாம் மர்ணித்து விட்டது.அது அப்போ ஒரு காலம் இருந்தது... ஜி த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன் என்ன செய்வது மனிதம் மரித்து மாமாங்கம் ஆகி விட்டதே... கருத்துரைக்கு நன்றி
நீக்குமனதை கலங்கடித்துவிட்டது நண்பரே தங்களின் பதிவு
பதிலளிநீக்குதங்களின் மன உறுதி போற்றுதலுக்கு உரியது
அடிபட்ட நிலையிலும் தெளிவாய் சிந்தித்து
முடிவெடுத்தது,அனைவராலும் இயலாத செயல்
உடல் நிலையினை கவனித்துக் கொள்ளுங்கள் நண்பரே
நன்றி
தம +1
வருக நண்பரே நான் படிக்காதவனாயினும் பாரதியின் பாடல் வரிகளில் ஈர்க்கப்பட்டவன் நண்பரே.. வருகைக்கு நன்றி.
நீக்குயதார்த்தத்தை அப்படியே எழுதியுள்ளீர்கள். மனிதம் குறைந்துகொண்டு இருக்கிறது என்பதையே இவை போன்ற நிகழ்வுகள் எடுத்துக்கூறுகின்றன. தங்களது அனுபவங்களைப் படிக்கும்போது உங்களது மன நிலையை உணரமுடிகிறது. துணைவியின் துணை பற்றிக் கூறியுள்ளீர்கள். உண்மையே. ஈடுசெய்யமுடியாத துணை. எழுத்து, வாசிப்பு என்ற நிலைகளில் கவனம் செலுத்துங்கள். நண்பர்களுடன் விவாதியுங்கள். மனதின் சுமை குறைய வாய்ப்பு உள்ளது. நாங்கள் இருக்கிறோம், உங்களது எழுத்தை வாசிக்க, கருத்து கூற.
பதிலளிநீக்குவருக முனைவரே தங்களது கருத்துரை மனதுக்கு மகிழ்ச்சியை, எழுச்சியைத் தருகின்றது கண்டிப்பாக இறுதி காலம்வரை தொடர்ந்து எழுதுவேன்.
நீக்குபேரதிர்ச்சி அடைந்தேன் நண்பரே! எப்படிப்பட்ட ஒரு விபத்தில் இருந்து தப்பித்து, அதிலும் மற்றவர்களுக்கு உதவி செய்து, அந்த காயத்தோடும் வேதனையோடும் 12 மணி நேரம் பயணித்து, அபுதாபியில் சிகிச்சை எடுத்தது என்று பல நம்பமுடியாத சம்பவங்கள் தங்கள் வாழ்வில் நடந்திருப்பதை எண்ணி வேதனை அடைந்தேன். தங்களின் மன உறுதியும் தன்னம்பிக்கையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. இன்றும் அந்த வேதனைகள் தொடர்வது வருத்தமாக இருக்கிறது. இந்த வேதனையும் விபத்தும் உங்கள் வாழ்வில் அதுவே கடைசியாக இருக்கட்டும். பூரண நலம் பெற வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குத ம 6
வருக நண்பரே தங்களின் விரிவான கருத்துரைக்கும், மன ஆறுதலைத் தந்த வேண்டுதலுக்கும் நன்றி நண்பரே...
நீக்குதங்களின் மன உறுதியையும் சேவை மனப்பான்மையையும் துணிச்சலையும் பாராட்ட சொற்கள் இல்லை. அந்த நேரத்தில் யாருமே தனக்கு ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை செய்யவே விரும்புவார்கள். ஆனால் நீங்களோ உங்களை கவனிக்காமல் மற்றவர்களை காப்பாற்ற உதவியிருக்கிறீர்கள். கடவுள் உங்களுக்கு எல்லா நன்மையையும் தர வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களின் விரிவான கருத்துரைக்கும் பாராட்டுகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி.
நீக்குஎத்துனை உணர்வுகளை எழுப்பிய பதிவு சகோ ...
பதிலளிநீக்குஇது எப்போது நடந்தது..
சான்சே இல்லாத மன உறுதி..
இருப்பினும் தவறு என்றே சொல்வேன்..
முகநூலில் பகிர்ந்திருக்கிறேன்
தம
வருக தோழரே.. இது நடந்த்து 2010-ல் இது தவறென்பதை ஒத்துக்கொள்கிறேன் இதிலும் நான் பாடம் கற்றேன் அதற்காக சந்தோஷப்படுகின்றேன்
நீக்குமுகநூலில் பகிர்ந்தமைக்கு நன்றி தோழரே...
அண்ணா...
பதிலளிநீக்குவாசித்ததும் அதிர்ந்தேன்...
கண்கள் குளமானது.
எத்தனை வலியோடு பயணித்திருக்கிறீர்கள்...
பயணிக்கிறீர்கள்...
வருக நண்பரே வாழ்க்கையே போர்களம் வாழ்ந்துதானே தீர்க்கனும் வருகைக்கு நன்றி.
நீக்குஅன்று நடந்தது நெஞ்சு துடித்தது ,சரி !இன்று நடப்பது கண்டு நெஞ்சு கொதிக்குதே ,ஏன் ? ரிலாக்ஸ் ,ரிலாக்ஸ்:)
பதிலளிநீக்குவாங்க ஜி இதற்கு மக்களாகிய நாம்தானே காரணம்.
நீக்குபடித்தேன் கண்ணீர் சிந்த உங்கள் மன உறுதிகண்டு வியக்கிறேன்!
பதிலளிநீக்குஉமக்கு நிகராக உலகில் யாருமில்லை ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒருவர் நீங்கள்
வாங்க ஐயா தங்களது கருத்துரையை கண்ணீர்த் துளிகளுடன் நன்றியோடு ஏற்றேன்.
நீக்கு>>> நியாயம் கேட்டேன்.. கத்தினேன்..
பதிலளிநீக்குஒன்றும் கிடைக்கவில்லை!.. <<<
வனவிலங்குகளும் செய்யாத செயலைச் செய்த வக்ரனுக்கும் -
வழிச் செலவுக்குப் பணம் கொடுத்து விடும் நாடல்லவா - இது!..
கிடைக்காத ஒன்றைத் தேடியிருக்கின்றீர்கள்..
ஆனாலும் -
தாள முடியாத வேதனையிலும் -
தங்களிடம் தழைத்து நின்ற மனித நேயத்திற்குத் தலைவணங்குகின்றேன்..
வாங்த ஜி உண்மையான வார்த்தை சொன்னீர்கள் டெல்லியில் ஒரு பெண்ணை கொடூரமாக கற்பழித்து கொன்றார்களே ஐவர் அவர்களில் வயதில் சிறியவனை விடுதலை செய்ய போகின்றார்களாம் காரணம் அவன் பாலகனாம்
நீக்குஅந்தச் சகோதரியின் மரணத்துக்கு இவன்தான் மூலகாரணம் இவன்தான் இரும்பு கம்பியை வைத்து பெண் உறுப்பில் குத்தினான் வெட்கமாக இருக்கின்றது நமது இந்திய சட்டங்களை நினைத்தால்...
சோகமான பதிவு. படிக்கும் போது தானாக கண்ணீர் வந்து விட்டது. இருந்தாலும் தங்களின் மனித நேயத்தை கண்டு பிரமித்தேன் சகோ.
பதிலளிநீக்குவருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி
நீக்குமிகவும் கனமான பதிவு. உண்மை தான் மரணத்தின் கொல்லை வாசலுக்கே சென்று வந்துள்ளீர்கள். அந்த விபத்திலும், எத்தனை விஷயங்களை மனதுக்குள் போட்டு அலசி முடிவு எடுத்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குவருக நண்பரே நான் எந்த முடிவையும் உடனடியாக எடுப்பதில்லை இது அவசர முடிவுதான் காரணம் சிறிது தாமதித்தாலும் விமானத்தை விட்டிருப்பேன் தங்களின் கருத்துரைக்கு நன்றி.
நீக்குஅன்புள்ள ஜி,
பதிலளிநீக்குமரணத்தின் வாசல் வரை சென்று வந்த தங்களின் பேருந்து விபத்து அனுபவம் பற்றி அறிந்தேன். அந்தப் பெரியவர் உங்களைக் காப்பாற்றி விட்டு அவர் போய்ச் சேர்ந்து விட்டார். அந்த நேரத்தில் அதை அனுபவித்த அந்தக் கொடுமை அனுபவித்தவர்க்கே தெரியும்.
விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அல்லது உதவி செய்ய சட்டச்சிக்கல் இருந்தாலும்... தற்பொழுது அந்த நிலை கொஞ்சம் மாறி உள்ளது என்றே சொல்லலாம்.
அரசு மருத்துவமனை மட்டும் அல்லாமல் தனியார் மருத்துவமனைகளிலும் பாதிக்கப்பட்டவர் அனுமதிக்கப்படுகின்றனர் என்ற செய்தி ஆறுதல் இருக்கிறது.
‘நான் செத்துப் பொழச்சவன்டா !
எமனை பார்த்து சிரிச்சவன்டா !’
-என்ற வரிகள் தங்களுக்கும் பொருந்தும்...!
பெரும் துன்பம்தான்!
த.ம.9
வருக மணவையாரே உண்மையில் அந்தப் பெரியவர் எனக்கு விட்டுக் கொடுத்து போயிருந்தால் அவருடைய நிலையில்தான் நானிருப்பேன் அவரை வாழ்வில் என்றுமே மறக்க முடியாது அவர் யாரோ எவரோ ஆனால் அவரது ஊர் காரைக்குடி வருகைக்கு நன்றி.
நீக்குகஷ்டகாலங்களில்தான் ஒரு மனிதனின் நற்குணங்கள் வெளிப்படும் உங்கள் அனுபவங்கள் உங்களைச் செதுக்கி இருக்கிறது வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க ஐயா தங்களின் மனம் திறந்த வாழ்த்துகளுக்கு நன்றி
நீக்குஅடக்கடவுளே!
பதிலளிநீக்குஎப்படிங்க இப்படியெல்லாம் முடிந்தது என கேட்க மாட்டேன். கிட்டத்தட்ட நானும் உங்கள் மன நிலையில் தான் இருப்பேன். நம்மால் மற்றவர்களுக்கு உதவ முடியணுமே தவிர நமக்கு மற்றவர்கள உதவும் சூழலை உருவாக்கி சிரமம் கொடுக்க கூடாது என நினைப்பேன். ஆனாலும் விபத்தில் பதிப்போடு மீண்டும் தனி மனிதனாய் வெளி நாட்டுக்கு போய் அங்கேயே சிகிச்சையை மேற்கொள்ள எடுத்த முடிவு உங்கள் திடமனதின் உறுதியையும் சட்டென முடிவெடுக்கும் பக்குவத்தினையும் காட்டுகின்றது.
இறுதியில் தனித்து நோயில் தவித்திருக்கும் நேரம் உணர்ந்த உணர்வுகளை பகிந்த விதம் மனதை தொட்டது. இருப்போருக்கு தம்மிடம் இருப்பதன் அருமை புரிவதில்லை. இல்லையென்றாகும் போது தான் தேடுதல்களும் அதிகமாகின்றது.
எழுத்தில் நகைச்சுவையை கொண்டு வரும் பலர் வாழ்க்கையில் நகைக்க முடியாத சோகங்கள் இருக்கும் என்பதற்கு உங்கள் எழுத்தும் வாழ்க்கையும் எடுத்துக்காட்டாய் இருக்கின்றது.
ஆனாலும் மனமார பாராட்டுகின்றேன்.இதே திடமனம் வைராக்கியம்,தன்னம்பிக்கை வாழ்வின் கடைசி நொடி வரை கூட வரவேண்டும்.
எழுதுங்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருங்கள்.
சொந்தகஷ்டத்திலும் நாட்டின் அவல நிலையை உணர்ந்தும் கூட ஆபத்தில் இருந்தோருக்கு உதவியமன உறுதிக்கும் என் பாராட்டுகள்.
பதிலளிநீக்குசட்டங்கள் மக்களுக்காக என்பது போய் மக்கள் சட்டங்களுக்குள் எனும் நிலை மாற்றப்பட வேண்டும். சட்டமெனும் போர்வையின் விபத்தின் பின்னரான விசாரனைகள் உதவிடும் மனிதாபிமானத்தினை தடை செய்கின்றது.
சமீபத்தில் இலங்கையில் இது குறித்த சட்ட மாற்றம் அறிவிக்கப்ட்டதாக அறிந்தேன்.விபத்து நடந்ததை கண்டால் பாதிக்கப்பட்டவர்களை ஹாஸ்பிடல் கொண்டு சேர்ப்பதோடு ஹாஸ்பிடலில் டாக்டர்களும் பொலிஸா அறிக்கை அது இதுஎன ஆராய்து கொண்டு இருக்காமல் உயிர்களுக்கு மதிப்பு கொடுத்து உயிரைகாக்கும் பணியில் ஈடு பட வேண்டும் என அறிவித்தார்கள்.
எவ்வகையில் சாத்தியமாகும் என்பதை காலம் தான் முடிவு சொல்லும்.
வணக்கம்
நீக்குதங்களது குணாதிசயம் என்னோடு ஒத்துப்போவதை பல நேரங்களில் தங்களது எழுத்துக்களின் வாயிலாக நான் ஏற்கனவே அறிந்தவன்
உண்மையே சில விடயங்களை இழந்த பிறகே அதன் அருமையை புரிந்து கொள்ளும் பக்கவமும், அனுபவமும் பலருக்கும் கிடைத்து இருக்கின்றது அவ்வகையில் நானும் ஒருவனே...
தாங்கள் சொல்வதைப்போல வாழ்வின் கடைசி நிமிடம் வரை எழுத வேண்டும் என்பதே எனது கொள்கை, லட்சியம் வாழ்த்துகளுக்கு எனது நன்றிகள்.
சகோ இது உண்மையா, சினிமா கதையில் தான் இது போல்,,,
பதிலளிநீக்குஆனாலும் உங்களுக்கு அழுத்தம் அதிகம், எவ்வளவு வேதனைகளைத் தாங்கிக்கொண்டு, பயணித்து, அப்பப்பா,,,,,
மனித நேயம் உம்போன்றவர்களால் தான் இன்னும் கொஞ்சம் எச்சமிருப்பதாக உணர்கிறேன். மனம் கனக்கும் பதிவு. உடல் நலன் பார்த்துக்கொள்ளுங்கள் சகோ.
வருக சகோ தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி
நீக்குஉங்கள் பதிவோடு ஒத்திருப்பதால்.....
பதிலளிநீக்குஇந்தியாவிலுள்ள அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் ஒரு அறிவிப்பு...
சாலை விபத்தில் யாரேனும்உயிருக்கு போராடும் சூழ்நிலையில்,
தங்களின் பார்வையில் பட்டால், உடன்அவர்களை அருகில் உள்ள மருத்துவ மனையில்சேர்த்து, விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற
வேண்டியது நமது மற்றும் மருத்துவரின்மனிதாபிமானமான கடமை.இதற்கு மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்பாக
முதல் தகவல் அறிக்கை (F.I.R.)
கேட்கக்கூடாது என்று மாண்புமிகு உச்சநீதி மன்றம்
உத்தரவு பிறப்பித்துள்ளத....
முதலுதவி அளித்த பிறகு காவல்துறைக்கு தகவல்
தெரிவித்து கொள்ளலாம்...
தயவு செய்து இந்தசெய்தியை தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும்
பரப்புங்கள்....
அது அனைவருக்கும் உதவியாக இருக்கும்...ஏன்...நாளை நமக்கே கூட உதவியாக இருக்கலாம்
தாங்கள் மீள் வருகை தந்து நல்ல தகவலை தந்தமைக்கு நன்றி
நீக்குநண்பரே! ’மரணத்தின் பிடியில்’ என்பதுதான் இந்த அனுபவ பகிர்வினுக்கு சரியான தலைப்பு என்று நினைக்கிறேன். அவ்வளவு துன்ப நிகழ்வுகளை ஒரு சேர அனுபவித்து, மீண்டமை பெரிய அதிசயம்தான். வாழ்க்கை தொடரட்டும். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவருக நண்பரே தாங்கள் சொன்ன தலைப்பும் பொருத்தமானதே.... வருகைக்கு நன்றி
நீக்குதங்களின் நெஞ்சுறுதிக்கு வணக்கம் நண்பரே...
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி நண்பரே.
நீக்குதங்களின் மனவலிமையை நினைக்க பெருமையாக இருக்கு ஜீ!
பதிலளிநீக்குவருக நண்பரே நலம்தானே.... வருகைக்கு நன்றி
நீக்குசாவு வரும் வேளை யாரறிவார்
பதிலளிநீக்குஇப்படியான
துயர நிகழ்வை எவர் மறப்பார்
எப்படியோ
படைத்தவனும் பார்த்தாலும்
பாதிப்பு நம்மவருக்கே!
வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி
நீக்குவணக்கம் ஜி !
பதிலளிநீக்குஇன்றுதான் பதிவினைப் பார்த்தேன் மனம் கனத்துவிட்டது இது எல்லாம் இறைவன் தண்டனை அல்ல சோதனை உன்னை உன் தைரியத்தை அவன் சோதிக்கிறான் வெற்றி ஆன்மாவுக்கானது தோல்வி உடலுக்கானது நீ வென்றவன் ....ஆதலால் எப்பிறப்பும் உமக்கு தைரியம் கைகொடுக்கும் ...! வாசிக்கும் போதே எங்கேயும் எப்போதும் படம் கண்ணுக்குள் வந்து போனது ஒரே ஒரு வேதனை அடிபட்டவனை முதலில் காவல் நிலையத்துக்கு கொண்டு பதிவு செய்யணும் என்னும் சட்டம் உலகில் இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறது ( வருங்கால வல்லரசு ) ....மனிதர்கள் இயந்திரமாகிவிட்டார்கள் உணர்வுகள் இல்லை ஓட்டம் மட்டும் தொடர்கதையாய் ..............!
மீண்டும் இவ்வாறான ஒரு நிகழ்வு எவருக்கும் வேண்டாம்
தம +1
வருக கவிஞரே தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி
நீக்குஜி! உங்கள் விபத்து உங்களைக் காப்பாற்றியிருப்பது இது போன்ற பதிவுகளைத் தர வேண்டும் என்பதற்காகத்தானோ!!!?
பதிலளிநீக்குஉங்கள் மன உறுதியும் எனது மன உறுதியும் அதே என்பதால் கை கொடுங்கள். உங்கள் நிலையிலும் நானும் கடந்து வந்திருப்பதால், உங்கள் மன நிலையுடன் ஒத்துப் போவதால்...குடோஸ் உங்களுக்கு.
நம் இந்திய நிலை ரொம்ப மோசம் என்பதும் எனக்கும் அனுபவம் உண்டு. மனிதம் ஒரு பக்கம் மறுபுறம் அது இறந்து பிணமாய் நாறிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் அதுவும் குறிப்பாகச் சிறிய நகரங்களில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில். ட்யூட்டி மருத்துவர்கள் கூட இருக்க மாட்டார்கள்.
தற்போது எந்த பெரிய விபத்தும் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்கப்பட்டப் பிறகு எஃபை ஆர் போட்டால் போதும் போலீசுக்கு அறிவித்து. உயிர் தானே முக்கியம் சட்டம் வந்துவிட்டது. எனவே நாம் யாரேனும் அடிபட்டவரைப் பார்த்தால் உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்துவிடலாம். பயம் வேண்டாம். இதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
உங்கள் அனுபவம் பலருக்கும் பாடம். உங்கள் மனதிடம், வைராக்கியம், வில் பவர் அதுதான் உங்களைப் பல மணி நேரம் கடந்துவர உதவியிருக்கின்றது. எனக்கும் அதே மனதிடம்ம் வில்பவர் தான் பல சமயங்களில் கை கொடுத்துள்ளது.
வாழ்த்துகள் பாராட்டுகள் ஜி உங்கள் மனதிடத்திற்கு, உறுதிக்கும் வைராக்கியத்திற்கும்!!!!!
கீதா
விரிவான கருத்துரைக்கு மிக்க நன்றி
நீக்குகண்ணீரை வரவழைத்த பதிவு. மிச்சத்துக்குப் பின்னர் வருகிறேன். இப்போது கொஞ்சம் வீட்டில் வேலை!
பதிலளிநீக்குசகோவின் தங்களின் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.
நீக்கு