தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், டிசம்பர் 17, 2015

செல்லூர், செவிடன் செங்கோடன்


ஏம்பா தம்பி, அரியலூரு வண்டி வருமா ?
ஆமா, இது அரியநாயகம் ஐயா வண்டிதான்.

நான், அரியலூரு வண்டி வருமானு கேட்டேன்
ஆமாங்கய்யா, நான் அரிசி மண்டிக்குத்தான் போறேன்.

சரியான செவிடு போலயே...
என்ன தவிடு வேணுமா ?

ஆளை விடுய்யா, நான் போறேன்.
ஆலங்குடியா போறீய, சரி போயிட்டு வாங்க.

(சரி வேறொருத்தன் வர்றான் அவன்ட்ட கேட்போம்)

ஏங்க, அரியலூரு வண்டி வருமா ?
அரிச்சுவடி எல்லாம், பாண்டியூரு போனா கிடைக்குமுங்க.

யோவ், அரியலூரு போகணும்னு சொன்னேன்யா.
என்ன அரியநாயகம் ஐயா போயிட்டாரா ? ஐயய்யோ...

(சரி, நடந்தே போவோம், அந்த ஸைக்கிள்காரன்ட்ட கேட்போம்)

தம்பி, ஸைக்கிள்ல கொஞ்சம் ஏறிக்கிடலாமா ?
ஸைத்தானெல்லாம் இந்த ஏரியாவுல கிடையாதுங்க.

செல்லூருக்காரன், பூராம் இப்படித்தானாடா...
செல்போணு, எங்கிட்ட இல்லைங்களே....

(சரி, அந்த மாட்டு வண்டியிலயாவது போவோம்)

ஐயா, மாட்டு வண்டியில கொஞ்சம் வரலாமா ?
ஆமா  நான்தான் மாயாண்டி என்ன விசயம் ?

ஐயா, நான் அரியலூரு போகணும் வண்டியில வரலாமா ?
ஆமா, நானும் கேள்விப்பட்டேன் அரியநாயகம் ஐயா போயிட்டாராம்.

சரி, போங்க... போங்க... நான் நடந்தே போறேன்.
என்ன செய்யிறது, நடக்க வேண்டியது நடந்து போச்சு.

சரி, சரி, போய்யா...
வண்டியில ஏறுங்களேன் நானும் கேதத்துக்குத்தான் போறேன்.

(ஐயய்யோ, இப்படியே திரும்பலைனா, நம்ம உயிருக்கு பிரச்சனை ஆயிடும் போலயே)

(திரும்பி வேகமாக ஓடுகிறார், திருவேகம்புத்தூரை நோக்கி)

49 கருத்துகள்:

 1. அருமையான நகைச்சுவை பதிவு. ஒவ்வொரு வரியிலும் நல்ல நகைச்சுவையை காண முடிந்தது. அருமை சகோ.

  பதிலளிநீக்கு
 2. ஹஹ்ஹஹ பாவம் நொந்து நூடுல்ஸ்!!

  பதிலளிநீக்கு
 3. அரியலூர் போகவேயில்லையா? ஆமா எதற்கு அந்த ஊர்,

  அருமையாக இருக்கு சகோ,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க, இந்த கேள்வி திருவேகம்புத்தூர்க்காரரிடம் கேட்கணும்

   நீக்கு
 4. நானும் கேதத்துக்குத்தான் போறேன். / கேதத்துக்கு.....?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா இது மக்கள் சொல்வதுதானே.... (மரண காரியத்துக்கு)

   நீக்கு

 5. கேதத்துக்கு என்றால் துக்கத்திற்கு என்று தானே பொருள்? அது சரி அரியலூர் போவதற்கு இரயில் நிலையம் அல்லது பேருந்து நிலையம் அல்லவா போகவேண்டும்? மாட்டுவண்டியில் ஏறிக்கொண்டு எப்போது போய்ச் சேருவது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே துக்கம் சரிதான்.
   இந்த ஆளு அரியலூருக்கு பக்கதிலிருக்கும் கிராமத்திலிருந்து போகிறார் ஊருக்கு புதிது ஆகவே வழி கேட்கின்றார்.

   (அப்பாடா சமாளிச்சுட்டேன்)

   நீக்கு
 6. ஹாஹா! உங்கள் டிரேட் மார்க் நகைச்சுவை பளீரிடுகிறது! வாழ்த்துக்கள்! இப்போதுதான் கணிணி சீரடைந்து இணையம் பக்கம் வர முடிந்தது! நண்பர்களின் பதிவுகளை பார்க்க வேண்டும். நேரம் கிடைக்கையில் பழைய பதிவுகளை வாசிக்கிறேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நலம்தானே ? மெதுவாக வாருங்கள் நன்றி

   நீக்கு
 7. இதை படிச்சதுனால என்னோட உயிருக்கும் பிரச்சனை ஆயிடுச்சு.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏங்குறேன் ? இதுக்கு கம்பெனி பொருப்பு இல்லை.

   நீக்கு
 8. எப்படி நண்பரே இப்படியெல்லாம்
  அருமை
  தம +1

  பதிலளிநீக்கு
 9. கேட்ட நேரத்திற்கு நடந்து போயிருக்கலாமோ,,,?பொதுவாக இது போல் புலன் ஊனமானவர்களை கேலி பண்ணும் போக்கு அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்.

  பதிலளிநீக்கு
 10. பதில்கள்
  1. நன்றி நண்பரே... தனிப்பட்ட ஒருவரை கேலி செய்வது தவறுதான் நண்பரே ஆனால் ஊரு மொத்தம் இப்படியிருந்தால் என்ன செய்வது...

   நீக்கு
 11. ஹா.... ஹா.... ஹா.....

  ரசித்துச் சிரித்தேன். கிரேஸி மோகன் ஆயிட்டீங்க.... இல்லை,இல்லை.... கிரேஸி கில்லர்ஜி ஆயிட்டீங்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே கிரேஸி மோகன் நகைச்சுவை கடல் அவரை என்னோடு இணைக்கலாமா ?

   நீக்கு
 12. ஹாஹா! அரியலூரும் வேண்டாம் அரசலாறும் வேண்டாம், கடைசியில் அரிய் நாயகமும் போய்ச்சேர்ந்திட்டார். ஹைய்யோ ஹைய்யோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வாங்க என்ன செய்வது எல்லாம் விதிப்படிதான் நடக்கும்

   நீக்கு
 13. சேதுராமன் கிட்ட ரகசியமா?!

  பதிலளிநீக்கு
 14. திரு வேகம் புத்தூர்காரரை இப்படி ஓட விட்டுடிங்களே...நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் ஒண்ணும் செய்யலை நண்பரே அது செங்கோடனோட வேலை.

   நீக்கு
 15. சிவனே..ன்னு சாலையில போய்க்கிட்டு இருந்தவனுக்கெல்லாம் பைத்தியம் பிடிச்சது தான் மிச்சம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஊதிவிட்டது ஒருவன் ஊரை விட்டு ஓடுனது மற்றவன்.

   நீக்கு
 16. வணக்கம்
  ஜி
  அட்டகாசமான நகைச்சுவை பதிவு படித்து படித்து சிரித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் த.ம 8
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் கில்லர் ஜி !

  ஒருத்தனுக்கும் காது கேளாத ஊரா அது அங்கெ எதுக்கு ஜி போனீங்க நீங்களும் செவிடாவதற்கா ! ஹா ஹா ஹா ரசித்தேன் ஜி தொடர வாழ்த்துக்கள்
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் போகவில்லை கவிஞரே திருவேகம்புத்தூர்காரர்தான் போனார்

   நீக்கு
 18. நகைச்சுவை நல்ல சுவையாய்...
  அருமை அண்ணா...

  பதிலளிநீக்கு
 19. பம்பரத்தை சுற்றி விடும் போது
  வேகமாக சுற்றும்போது கண்களை கட்டுமே
  அதுக்கு அர்த்தம் புரிந்து கொண்டேன்.
  வாங்க விசுவின் விசுவாசியே வாழ்க வளர்க!
  (ரசிக்கும்படியான வித்தை யை மெத்தையாக்கி உள்ளீர்கள்)
  நட்புடன்
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பா நலம்தானே... டூர் முடிந்து விட்டதா ?

   நீக்கு
 20. இப்படி அநியாயமாய் அரியநாயகத்தை கொன்னுட்டீங்களே,இந்த செய்தியாவது அவர் காதுக்கு போகுமா :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன ஜி என்னை சொல்றஈங்க ? சரியா காதுல வாங்கதவனின் குழப்பம் இது.

   நீக்கு
 21. கில்லர்ஜிக்கு நிகர் கில்லர்ஜியே. நகைச்சுவை ஊடாக செய்தி. செய்தி ஊடாக நகைச்சுவை. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

   நீக்கு
 22. பலமுறை சிரித்தேன்!

  பதிலளிநீக்கு
 23. ஆகா! அருமை!
  தங்கள்
  எழுத்து நடைக்குப் பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு