நண்பர்களே... நண்பிகளே...
இந்தமுறை நாட்டுக்கு வந்திருந்த பொழுது நானும் தொலைக்காட்சி நாடகத்தை கண்டே
தீரவேண்டும் என்ற துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டேன் இவைகளை வருடக்கணக்காக
இழுத்துக் கொண்டு போவதின் மர்மம் எனக்கு பிடிபட்டது அதாவது ஒரு பெண் அவள் வயது 28 இருக்கலாம் அந்த வீட்டின் மொட்டை மாடியில் இரு
ஆடவர்களுடன் அவர்களுக்கும் தலா
35 முதல் 37 வரை இருக்கலாம் அவள் தனது கடந்த காலத்தில் நடந்த
கோல்மால்களை இவர்கள் இருவருக்கும் எடுத்துச் சொல்கிறாள் அதொன்றும் நான் கண்டவரை
பெருமைப்படும் விடயங்கள் இல்லைதான் மகா கேவலமான விடயமே அதனால் அதைப்பற்றி நான்
விவரிக்க வேண்டாமென நினைக்கிறேன் பிறகு தொடரும் போட்டு விட்டார்கள் பிறகு மற்றொரு
நாடகம் ஆரம்பிக்கிறது எப்படியோ பொழுதைப் போக்கி...
மறுநாள் கோவை போனேன், பிறகு,
புதுக்கோட்டை, சென்னை, மதுரை, திண்டுக்கல், கீழக்கரை, பாம்பன், பரமக்குடி, இப்படி பதிவர்கள்
சந்திப்பு சொந்த பந்தங்கள் வீட்டுக்கு எல்லாம் போய்விட்டு மீண்டும் தேவகோட்டை
வந்து விட்டேன் மாலை வழக்கம் போல அம்மா நாடகம் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்
உள்ளே வந்து தொலைக் காட்சியைப் பார்த்த எனக்கு வந்ததே கோபம் சுமார் 12 நாட்கள் கடந்திருக்கும் அந்தக் கேடுகெட்ட சிறுக்கி
இன்னும் அதே மொட்டை மாடியில் நின்றுகொண்டு கதை சொல்லிக் கொண்டு இருக்கின்றாள் எனது
அம்மாவின் முகத்தைப் பார்த்தேன் எந்த சலனமும் இல்லாமல் கதையில் ஒன்றிப் போய்
பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்னையா ? இது ஒரு வரைமுறை வேண்டாமா ? அடராமா இவர்கள் ஒரு வாரமாக
மொட்டை மாடியில் நின்று கொண்டு இருந்தால் பார்க்கும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள்
என்ன நினைப்பார்கள் சரி ஒரு வாரமாக இவர்கள் சாப்பிட வில்லையா ? குளிக்க வில்லையா ? மற்ற காலைக்கடன்கள் தீர்க்க வில்லையா ? நல்ல குடும்பத்துப்
பெண்கள்கூட இந்த வகையான காட்சிகளை பார்த்துதான் நாமும் இதுபோல் மொட்டை மாடியில்
நின்று பேசலாம் தவறில்லை என்று நினைப்பதுடன் வெளியிடங்களுக்குப் போனால் நாமும்
இதுபோல் தங்கி விட்டு வரலாம் என்ற சிந்தனையை கொடுக்கிறது இவ்வகையான காட்சிகள் சமூக
நலனுக்கு கேடுகளை விளைவித்து எதிர்கால இளம் தலைமுறைகளை தவறான வழியில் இழுத்துச்
செல்கிறது.
ஆகவே இதற்கு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து எதிர்ப்பு தெரிவிக்கும்
வகையில் ஒரு மாபெரும் கண்டன பேரணியை இம்மாதம் பிப்ரவரி 31-ஆம் தேதி இந்தியாவின் தலைநகர் டெல்லி
பாராளுமன்றத்தின் முன்பு நமது வலைப்பூ நண்பர்களை ஒன்று திரட்டி நடத்தலாம் என
திட்டமிட்டு அதற்காக நமது டெல்லி வலைப்பதிவர் உயர்திரு. வெங்கட் நாகராஜ்
அவர்கள்
தலைமையில் நடக்கிறது பதிவர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு பணிவுடன்
கேட்டுக் கொல்கிறேன்.
அன்புடன்
தேவகோட்டை
கில்லர்ஜி அபுதாபி.
என் வருகையை குறித்துக் கொள்ளுங்கள் ,முதல் நாளே வந்து விடுகிறேன் :)
பதிலளிநீக்குவருக ஜி முதல் நபராக வந்து சொல்லி விட்டீர்களே...
நீக்குநானும் அவசியம் கலந்து கொள்கிறேன்.
பதிலளிநீக்குகண்டிப்பாக வாங்க ஐயா.
நீக்குபிப்ரவரி 30 ஆம் தேதியே வந்துவிடுகின்றோம் நண்பரே! அடுத்த போராட்ட அறிவிப்பினை 31 தேதி அறிவித்துவிடலாம் நண்பரே!
பதிலளிநீக்குவருக நண்பரே தேதியை மறந்து விடாதீர்கள்.
நீக்குநானும் அவசியம் வந்து கலந்து கொள்கின்றேன்..
பதிலளிநீக்குகோஷம் போடும் போது குரல் வற்றிப் போகுமே!.. குளிர் பானம் யாருடைய செலவு?..
ஏனென்றால் - தில்லிக்கு எப்போது தண்ணீர் வரும் என்பது யாருக்கும் தெரியாது!..
(அப்படியென்றால் - அடக்கடவுளே!?..)
வாங்க ஜி எல்லோருக்கும் ஜிகிர் தண்டா ரெடி.
நீக்குஎனக்கும் ஒரு டிக்கெட் போட்டுவிடுங்கள் நண்பரே
பதிலளிநீக்குதம +1
வருக நண்பரே டிக்கெட் ரெடி.
நீக்குஎன்கு அழைப்பு இல்லை! எனவே நான் வரமாட்டேன் என்பதை வருத்தமுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
பதிலளிநீக்குவாங்க ஐயா அழைப்பே இதுதானே ஐயா.
நீக்குசாதாரணமாக நான் பயணங்களிலோ, சந்திப்புகளிலோ கலந்து கொள்வதில்லை. இந்த பேரணியின் அவசியம் கருதி நானும் இந்த மாதம் 30 ஆம் தேதியே அங்கு வந்து விடுகிறேன். கலக்குவோம்.
பதிலளிநீக்குநல்லது தங்களை முதன் முதலாக சந்திப்பதில் மகிழ்ச்சி.
நீக்குஆஹா ஐயா.சூப்பர் ஓ சூப்பர்.ஆனா பிப்ரவரியில் ஏது ஐயா 31 தேதி.??மொத்தமே 29 நாட்கள் தானே ஐயா.
பதிலளிநீக்குஆனால் உண்மையை தான் சொல்லி உள்ளீர் இது போன்று ஊடகங்களில் வருவதை கண்டு தான் இன்றைய தலைமுறையினர் சீரழிந்து போகிறார்கள் ஐயா.சிந்திக்க வேண்டிய ஒன்று தான்.
வருக சகோ தீர்மானம் எடுக்கும் அவசரத்தில் தேதியை மறந்து விட்டேன்.
நீக்குபதிவர்களின் பொய் கருத்துரைகள் என்று அடுத்த பதிவு போட வேண்டும் ஜி...
பதிலளிநீக்குவாங்க ஜி அதென்ன ? பொய் கருத்துரைகள் விளங்க வில்லையே ஜி
நீக்குஇதுக்கெல்லாம் பேரணியா...? நல்லாயிருக்கே...?
பதிலளிநீக்குஇதைவச்சி எத்தனை பேர் பொழப்பு ஓடுது... நீங்க நல்லா கவனிக்கலை... அது ஒரு நாள் மாலை நேர நிகழ்வுதான்... ஒரு மாதம் வரைக்கும் கூட பேசுவாங்க... இதுக்கெல்லாம் பேரணி வச்சா சரியாகுமா?
இங்க ரூம்ல கூட சில பேர் நாடகம் பார்த்து அழுகிறாங்க... ரசிச்சிக்கிட்டு இருக்கேன்... அதையும் கெடுத்துடுவீங்க போலவே....
இந்தப் பேரணியை எங்கள் தானைத் தலைவன் தன்மானச் சிங்கம்... கிங்கா... கிங்மேங்கரான்னு யோசிச்சிக்கிட்டு இருக்க்க விஜயகாந்த் மாதிரி புறக்கணிக்கிறேன் மக்கழே....
பல பேர் பொழப்பைக் கெடுக்கும் இந்தப் பேரணி தேவையா மக்கழே...
சிந்தியுங்கள் மக்கழே...
இதற்கெல்லாம் பேரணியின்னு கிளம்புறதைப் பார்த்து எனக்கு சிரிப்புக்கள் வருது மக்கழே...
நல்ல பகிர்வு அண்ணா.... வெங்கட் அண்ணாவை ஏன் அண்ணா ஹசாரே ஆக்கப் பாக்குறீங்க.... (சும்மா கொழுத்திப் போடுவோம் மக்கழே)
என்ன வெசய காந்தூ மா3 பேசுறீங்க.... ?
நீக்குடெல்லியில் வெங்கட் ஜிதானே படா ஆத்மி
ஹஹஹஹ் நல்ல தேதி! சூப்பர் தேதி! மாயமான தேதி! கூட்டம் என்றாலே கொஞ்சம் அலர்ஜி! அதுவும் போராட்டப் பேரணி என்றால் ரொம்பவே அலர்ஜி. ஆனாலும் நல்ல ஒரு சமூகப் போராட்டம் என்பதாலும், இந்தத் தேதி மாயமான தேதி என்பதாலும், அப்படி ஒரு நாள் இருந்தால்தானே என்பதாலும்,கூட்டம் நடைபெறப்போவதில்லை/முடியாது என்பதாலும் நிச்சயமாகக் கலந்து கொள்ள வேண்டி, இரு நாட்கள் முன்னரே வந்து கில்லர்ஜிக்கும், வெங்கட்ஜிக்கும் உதவ வேண்டி பிப்ரவரி 29ஆம் தேதிக்கு தில்லிக்கு விமான டிக்கெட்டே புக் செய்தாயிற்று!!!!
பதிலளிநீக்குநல்லது பேரணிக்காக முன்கூட்டியே வருவதற்கு நன்றி
நீக்குசரிசரி நானும் வர்றேனுங்கோ..
பதிலளிநீக்குவாங்க, வாங்க போராடுவோம், வெற்றி பெறுவோம்.
நீக்குமாசி - 30
பதிலளிநீக்குமாசி - 31
எனக்கோ நெருக்கடி மிகுந்த நாள்கள்
எனினும் வர முயற்சி செய்கிறேன்
வருக நண்பரே நெருக்கடியான தருணத்திலும் வருவதற்கு முயற்சிக்கும் தங்களது ஆர்வத்திற்கு நன்றி
நீக்குநண்பரே எங்கள் நாள்காட்டியில்
பதிலளிநீக்குஇம்மாதத்தின் அதாவது பிப்ரவரி மாதத்தின்
இரண்டு தேதிகளை அதாவது 30,31
தேதிகளை யாரோ திருடி விட்டார்கள் போல....
தயவு செய்து கண்டு பிடித்து தருவீர்களா....
நான் நிச்சயம் வருகிறேன்......
மறக்க வேண்டாம் அன்பரே கண்டிப்பாக வருகிறேன்....
30,31 தேதிகளை கண்டு பிடித்து தந்தால்.....
பக்கத்து போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைண்ட் கொடுங்க நண்பரே....
நீக்குஎனக்கு முதலில் பிடிபடவில்லை. கில்லர்ஜி என்ன சொல்ல வருகின்றார் என்று ஒரே குழப்பம். வெங்கட் நாகராஜ் பெயரும் வந்ததில், அவர் இதற்கெல்லாம் ஒத்துக்க மாட்டாரே என்று இன்னும் குழப்பம். அப்புறம் பதிவை மீண்டும் படித்ததில் பிப்ரவரி – 31 என்று இருந்ததும், இது கில்லர்ஜியின் விளையாட்டு என்று கடைசியில் புரிந்து கொண்டேன். சந்தோஷம் தொடரட்டும்.
பதிலளிநீக்குவருக நண்பரே குழப்பி விட்டு தெளிவு படுத்துவதே நமது வேலை வருகைக்கு நன்றி.
நீக்குநான் வரவே இல்லைப்பா!போராடவும் பேரணி நடத்தவும் இதை விட ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் இந்த பேராட்டம் பேரணி என நேரத்தினை வேள்ட் செய்யும் படி எனக்கு நேரம் இல்லை!
பதிலளிநீக்குஇந்த சீரியல்களால் பல குடும்பங்களில் குழப்பங்கள் வருவது என்னமோ நிஜம!அதிலும் சொல்லி வைத்தால் போல் ஒருத்தனுக்கு இரண்டு மனைவிகள் கதையும், தவறான தொடர்புகள், மாமியார் மருமகள் சண்டைகளுமாய் தீயை கொழுத்துவதில் இவர்கள் வல்லவர்கள்.
முக்கியமான குறிப்பு, நான் தொலைக்காட்சி பார்ப்பதில்லை,இணையத்தில் வாசிப்பதும் பதிவதும் மட்டும் தானே தவிர இணையத்திலும் சினிமாப்படங்களோ,சீரியல்களோ தரவிறக்கிப்பார்ப்பதில்லை,அதற்கு எனக்கு நேரமும் இல்லை,
த.ம
சீரியலைப்பற்றி மிகத்தெளிவாக சொன்னது அருமை ஆனால் நான் பார்ப்பது இல்லை என்பதுதான்..........
நீக்குஎல்லாம் பார்த்து,கேட்டும் உணர்ந்து தான் எழுத வேண்டும் எனில் நான் எதையும் எழுத முடியாது சார்! நான் நிஜமாகவே சீரியல்,சினிமா என என் பொழுதினை வேஸ்ட் செய்வதில்லை.
நீக்குவேலை அதிகமாகி மனசுக்கு ரிலாக்ஸ் தேவையென உணரும் போது பேஸ்புக்கில் அரட்டை சிரட்டை அடிப்பேன். சினிமா,சிரியல் பார்க்கவே மாட்டேன். குமார் கூட சில படங்கள் நல்லா இருக்கு பாருக்கா என சொல்வார்.எனக்கு தான் நேரம் கிடைக்கவே இல்லை!
நாங்க மட்டும் அபுதாபியில சீரியலா பார்த்துக்கிட்டு இருக்கோம்.
நீக்குநீங்க பார்த்திட்டிருக்கிங்க என சொன்னேனா!?
நீக்குசொன்னது மா......3 இருந்துச்சு.
நீக்குஅன்புள்ள ஜி,
பதிலளிநீக்குதாய்க்குலங்களின் கண்ணீரில்தான் இந்தத் தொலைக்காட்சிக் கப்பல் மிதந்து செல்கிறது...!
தாங்கள் குறித்த நாளில் அவசியம் புதுதில்லியில் சந்திப்போம்!
த.ம. 12
வருக மணவையாரே சந்திப்போம் கோட்டையில்....
நீக்குஏரோபிளேன“ ஹவுஸபுல்லு ஆகிவிட்டது.. பஸ்ஸில இடம் கிடைக்கவில்லை புகைவண்டியை தவறவிட்டுட்டேன். மாட்டு வண்டியிலாவது பேரணி முடிவதற்குள் வந்து சேர்ந்து ஆஜர் ஆகிவிடுகிறேன் நண்பரே..
பதிலளிநீக்குதங்களது கடமை உணர்ச்சிக்கு நன்றி நண்பரே.
நீக்கு
பதிலளிநீக்குபிப்ரவரிக்கு ஏது 31 தேதி என குழம்பவேண்டாம்.கர்நாடகாவில் உள்ள உடுப்பியில் உள்ள The Udupi Co-op.Town Bank Ltd., வெளியிட்டுள்ள இந்த ஆண்டு வெளியிட்டுள்ள நாள் காட்டியில் பிப்ரவரி 30 ஆம் தேதியை அச்சிட்டிருக்கிறார்கள்! எனவே நீங்கள் சொல்லும் 31 ஆம் தேதியும் பிப்ரவரியில் இருக்கலாம். ஆனால் எனக்கு இங்கு வேலை இருப்பதால் பேரணியில் கலந்து கொள்ள இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
வருக நண்பரே புதுமையான தகவல் தந்து இருக்கின்றீர்கள் இருப்பினும் தாங்கள் கலந்து கொள்ளாததில் வருத்தமே.
நீக்குஅடடா ..என்ன சிந்தனை ......வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநாங்களும் வருகிறோம் ..டெல்லி பார்க்கணுமே ..!
வாங்க, வாங்க போராடுவோம்.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஜி.
சிங் காரன் அடிக்காமல் விட்டால் சரி.. நாங்களும் வருகிறோம். வாழ்த்துக்கள் ஜி த.ம 15
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆஹாஅது வேற இருக்கோ மறந்துட்டேனே.... நீங்க வாங்க பார்த்துக் கொள்வோம்.
நீக்குநமது வலைப்பூ நண்பர்கள் ஒன்று கூடி ஒரு 'திரட்டி'வேண்டுமானால் நடத்தலாம்.பதிவையாவது பகிரலாம்
பதிலளிநீக்குவருக நண்பரே அதுதான் புதுக்கோட்டையில் உருவாக்கி வருகின்றார்களே...
நீக்குடெல்லி பேரணியில் கலந்துகொள்ள டிக்கெட் ரிசர்வ் செய்துவிட்டேன் நண்பரே! நீங்கள் முன்பதிவு செய்துவிட்டீர்களா??
பதிலளிநீக்குத ம 17
நல்லது நண்பரே சந்திப்போம்.
நீக்குநாளை மாசிமகம்....
பதிலளிநீக்குநல்லதாப் போச்சு.
நீக்குதினமும் 4 மணி நேரம் எட்டு சீரியல்களை பார்த்து, ஒவ்வொரு கதையையும் இன்னொனோட மிக்ஸ் ஆகி கன்பியூஸ் ஆகம பார்க்கிறாங்களே, அது தான் சாமர்த்தியம்.
பதிலளிநீக்குஎப்பவாச்சும் ஏதாவது ஒரு சீரியலை வைச்சா, அடுத்த ஓரிரு நிமிடத்தில், "உன்னை நிம்மதியா இருக்க விட மாட்டேன், உன் குடும்பத்தை பிரிச்சு உன்னை நடுத்தேர்வில நிக்க வைப்பேன்" மாதிரியான டயலாக் கண்டிப்பா வந்துடும். இதெல்லாம் பெண்கள் தலைக்கு உள்ளே போனா அதே புத்தி அவங்களுக்கும் வந்தால் நாடு தாங்குமா?
உண்மைதான் நண்பரே டயலாக் கேட்டாலே எனக்கு பத்திக்கிட்டு வருது.
நீக்குஆஹா நான் கடைசியாக வந்துவிட்டேனே..கருத்து எழுத. நான் சீரியலோ,சினிமாவோ பார்ப்பதில்லை என கூறமாட்டேன். நல்ல சினிமா எனில் பார்ப்பேன்.சீரியல் கடந்து போகும்.ஆனா அவைகளை அந்த இடத்தில் விட்டுவிடுவேன்.சின்னதா டைம் பாசிங். அவ்வளவே. (இங்கேயும் சீரியல் ஜேர்மனி டிவியில் 2000 எபிசோட் தாண்டி நடக்குது. உங்க ப்ரெண்ட்ஸ் கேட்டுப்பாருங்க.)சிலபேர் இதுவே வாழ்க்கையாக வழக்கமாக்கிவிட்டார்கள்.டிவி கார்ட் முடிந்து ரினியூ செய்யாவிட்டாலோ அல்லது ஒரு எபிசோட் பார்க்காவிட்டாலோ அன்றைய பொழுதுவிடியாது. அதுக்கு அடிமை ஆனவர்கள் அனேகம். என்ன செய்வது...இதனால் வீட்டுக்கு சென்றால் கூட சரியான கவனிப்பு இல்லை. பேசமாட்டார்கள். டிவியில் சீரியல் போய்க்கொண்டிருக்கும்.சீரியல் பற்றி பேச்சா இருக்கும். இதில் ஆண்களும் விதிவிலக்கல்ல.இங்கு நடப்பவைதான் இது.
பதிலளிநீக்குமன்னிக்கவும். நாங்க 31 திகதி வேறு இடத்துக்கு போகின்றோம்.வர இயலாது என்பதை வருத்துடன் தெரிவிக்கின்றேன்.
மிகவும் நகைச்சுவையாக எழுதியிருக்கிறீங்க அண்ணா ஜி.
நீக்கு(எ.ம.வி)
வருக சகோ அங்கும் சீரியல் தொடர் இருக்கின்றதா ? அதுவும் 20000 எபிசோட்டா ? இதுக்கெல்லாம் காரணம் மக்கள் உழைப்பாளி இல்லை என்பதுதான்
நீக்குசரி அன்றைக்கு வேறு வேலை இருக்கிறது என்றால் ஏதும் சீரியல் இருக்கோ ?
தம 19
பதிலளிநீக்குபடிக்க பிறகு வருகிறேன் சகோ
நன்றி சகோ வருகைக்கு.
நீக்குஏன் பிப்ரவரி 30ஆம் நாள் கூட நடத்தலாமே! நல்ல மகூர்த்த நாள் அன்றைக்கு. படிக்க வரும் நண்பர்கள் நேரத்தை இப்படியெல்லாம் வீணாக்கலாமா தோழரே?
பதிலளிநீக்குஅன்றைக்கு எனக்கு வேறு வேலை இருந்தது நண்பரே.. ஆகவே மாற்றினேன் எல்லாம் சுயநலம்தான்.
நீக்குசகோ இந்த டெல்லி பாராளுமன்ற கட்டிடம் விடமாட்டீங்களா????, ஏதோ உள்செய்தி இருக்கு போல,,,,சரி சரி,,
பதிலளிநீக்குபுரிஞ்சுக்கிட்டால் சரிதான். ஹி ஹி ஹி
நீக்கு