சனி, பிப்ரவரி 13, 2016

CRICKET கவலை


கார்க்கில் போரில் எத்தனையோ ராணுவ வீரர்கள் நமக்காக உயிர் நீத்தார்கள் அதைப்பற்றி நமக்கு கவலையில்லை அதுயேன் கார்க்கில் போரில் உயிர் நீத்த வீரர்களின் உடல்களை கொண்டு செல்லும் சவப்பெட்டிகளில் கூட ஊழல் நடந்தது அதைப்பற்றி நாம் கவலைப்படாமல் மீண்டும் அவர்களுக்கே வாக்களிக்கிறோம் காரணம் இதனைப்பற்றி எல்லாம் சிந்திக்க நமக்கு நேரமில்லை அதேநேரம் கிரிக்கெட்டில் கடுமையாக உழைத்து அதன் மூலம் சுலபமாக விளம்பரங்களிலும் பணம் உண்டாக்கி சோர்வடைந்து போதுமென ஒதுங்குபவர்களை நாம் விடக்கூடாது என கவலைப்படுகிறோம் ஏனெனில் நமக்கு கிரிக்கெட் முக்கியம் நன்றி கெட்ட மானிடா ? இன்று கிரிக்கெட் பார்த்து ரசிக்கின்ற உன்னை மட்டுமல்ல உனது குடும்பம் மட்டுமல்ல உனது அபிமான கிரிக்கெட் வீரருக்கு மட்டுமல்ல அவருடைய குடும்பத்தாருக்காகவும் தான் அந்த வீரர்கள் உயிர் துறந்தார்கள் என்பதை ஏன் மறந்து விட்டாய் ? விளம்பர பொருள்களில் மயங்குகிறாய் அரசியல்வாதிகளிடம் மயங்குகிறாய் சினிமாகாரர்களிடம் மயங்குகிறாய் கிரிக்கெட்காரர்களிடம் மயங்குகிறாய் என்றுதான் நீ விழித்தெழுவாய் ? 


மாணவச் செல்வங்களே நம் இந்தியாவின் வருங்காலத் தூண்களே அன்று படிக்காதவர்கள் அந்த வழியில் போனார்கள் சரி இன்றைக்கு அப்படியில்லையே எல்லோரும் பட்டதாரிகள்தானே ! விழி நண்பா விழி இல்லையேல் வழிமாறி குழியில் வீழ்ந்திடுவாய் ஏனெனில் நமது நாளைய சமூகமும் பலியாகி விடும்.


எனது இந்திய நாட்டுக்காகவும், அதில் துளியளவு எனது குடும்பத்திற்காகவும் உயிர் துறந்த மாவீரன் திரு. லேன்ஸ் நாயக் ஹனுமந்தப்பாவின் ஆத்மா சாந்தியடைய கில்லர்ஜியின் ஆத்மார்த்தமான பிரார்த்தனைகள்
ஜெய்ஹிந்த். 

48 கருத்துகள்:

 1. விழி,வழி,குழி ...உங்கள் எச்சரிக்கை சரிதான் :)

  பதிலளிநீக்கு
 2. விளையாட்டு வீரர்களும் நம் போன்றவர்கள்தான் வீண்காழ்ப்புணர்ச்சி தேவை இல்லை. சில விளையாட்டுகள் பிடிக்கவில்லை என்றால் அதை ரசிப்பவர்கள் எல்லோரையும் தூற்றுவது சரியல்ல. நாட்டுக்கு உயிர் விட்டவர்களுக்கு அஞ்சலி செய்யும் போது மற்றவர்களை ஏன் தூற்ற வேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஐயா நேற்று முன்தினம் தொலைக்காட்சியில் இராணுவ வீர்ர்கள் 10 நபர்கள் இறந்து விட்ட விபரத்தை சொல்லும் பொழுது அறையில் இருந்த நண்பர்கள் யாருக்குமே அதனைப்பற்றிய கவலை சிறுதுமின்றி கிரிக்கெட் ஸ்கோர் என்ன என்றுதான் அனைவரும் கேட்கின்றார்கள் நமக்காக உயிரைக் கொடுக்கும் மனிதர்களைப் பற்றிய நன்றி உணர்வு கொஞ்சம் கூட இல்லை ஆனால் பிரயோசனம் இல்லாத கிரிக்கெட்தான் முக்கியமா ? கிரிக்கெட் பார்ப்பது குற்றம் என்று நான் சொல்ல வரவில்லை நானும்கூட பார்த்து இருக்கிறேன் நமக்கு எது முக்கியம் என்பதை வலியுருத்தினேன் வேறொன்றுமில்லை.

   நீக்கு
 3. நல்ல பதிவு. எனது அஞ்சலிகளும். அதே சமயம் இதே சியாச்சின் பனிச்சரிவில் இன்னும் சில வீரர்களும் உயிரிழந்தார்கள். இவர் ஆறு நாட்கள் கழித்தும் உயிருடன் மீட்கப்பட்டு உயிரிழந்ததால் இவர் பெயர் மக்கள் மத்தியில் பிரபலமானது. மற்றவர்களுக்கும் அதே அளவு அனுதாபத்தையும், மரியாதைகளையும், அஞ்சலிகளையும் கொடுக்க வேண்டியது நம் கடமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உண்மைதான் அதில் மறைந்தவர்கள் 10 நபரையும் இறந்து விட்டதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.

   நீக்கு
 4. எனது பிரார்த்தனைகளும்..... ஜெய்ஹிந்த்......

  பதிலளிநீக்கு
 5. உங்கள் கருத்தை நான் வழிமொழிகிறேன்...ஹனுமந்தப்பாவிற்கு என் வீர வணக்கங்கள்...

  பதிலளிநீக்கு
 6. அன்புள்ள ஜி,

  நாட்டிற்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த ஹனுமந்தப்பாவிற்கு வீர வணக்கம். அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்.

  த.ம.5

  பதிலளிநீக்கு
 7. கிரிகெட்தான் பெரும்பாலானவர்களுக்கு இன்று உயிர் மூச்சாகி விட்டது நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதெல்லாம் முடிவில் நாட்டை இன்னும் பொருளாதாரத் சீரழிவில் கொண்டு வந்து நிறுத்தும் நண்பரே காரணம் உழைப்பாளிகள் சோம்பேறியாகின்றான்.

   நீக்கு
 8. வீர மரணம் அடைந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்!
  நாட்டைக்காக்கும் பணியில் உயிரிழந்த மாவீரர்களை போற்றுவோம்.
  எனக்கும் கிரிக்கெட் பிடிக்காது,இளைஞர்களை முழுச்சோம்பேறி ஆக்கும் விளையாட்டு இது! என்னிடம் வேலை செய்த ஒரு பையன் ஞாயிறில் வேலை போட்டால் வர மாட்டான்,கேட்டால் கிரிக்கெட் மட்ச் இருக்கு என்பான்,இத்தனைக்கும் அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் பணத்தேவை அதிகம். கஷ்டமான சூழல்.

  ஆனாலும் கிரிகெட்டுக்கு அப்புறம் தான் வேலை எனும் அவன் நிலை பிடிக்காததால் வேலைக்கு அழைப்பதில்லை.
  அவன் மட்டும் அல்ல பலர் இப்படித்தான் இருக்கின்றார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிரிக்கெட் பிடிக்காது என்று வெளிப்படையாக சொல்வதுகூட தவறாகி விடும் நமக்காக தொண்டு செய்பவர்களை பின்னுக்கு தள்ளுவது நன்றி கெட்டதனம் என்பதே எமது கருத்து.

   நீக்கு
 9. யதார்த்தத்தை நெகிழ்ச்சியோடு பகிர்ந்தவிதம் அருமை.

  பதிலளிநீக்கு
 10. பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் வீரவணக்கத்துக்கு நன்றி

   நீக்கு
 11. விழி நண்பா விழி இல்லையேல் வழிமாறி குழியில் வீழ்ந்திடுவாய் 

  இதை உணராதவன்
  எப்போது இராணுவ வீரனின்
  தியாகத்தை உணர்வான்...???
  நானும் எனது ஆழ்ந்த இரங்கல்
  தெரிவித்துக்கொள்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பா நாட்டில் நன்றி மறந்தவனின் எண்ணிக்கை பெறுகி வருவதற்கு காரணம் மனித மனம் சுருங்கி வருவதே...

   நீக்கு
 12. அன்பின் ஜி..
  தங்களின் வருத்தம் நியாயமானதே..
  பாரதத்தின் தவப்புதல்வர்களுக்கு எமது அஞ்சலி..

  பதிலளிநீக்கு
 13. வீரர்களுக்கு எம் வணக்கங்கள்

  தங்கள் சமூக சாடல் சரிதான் சகோ,

  தொடருங்கள்,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சகோ நன்றியில்லாத ஜென்மங்கள் வருகைக்கு நன்றி

   நீக்கு
 14. நாட்டிற்காக உயிரை தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலிகள்.

  பதிலளிநீக்கு
 15. தாய் மண்ணுக்கா உயிரை துறந்த ஹனுமந்தப்பாவிற்கு எனது அஞ்சலிகள்....

  பதிலளிநீக்கு
 16. சியாச்சின் பற்றி ஏற்கனவே ஒருமுறை எழுதியிருக்கிறேன். இதுவரை 894 பேர் அங்கு இறந்து போயிருக்கிறார்கள். இதில் தற்கொலை செய்துகொண்டவர்களும் இருக்கிறார்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். அத்தனைக் கொடுமையான இடம். இங்கு செல்லும் வீரர்களின் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. உலகில் மிக உயர்ந்த போர்க்களம் இதுதான். இதற்கு மட்டும் இந்திய அரசு ஒரு நாளைக்கு 6.4 கோடி ரூபாய் செலவு செய்கிறது.
  கல்கத்தாவில் இருந்து சென்னைக்கு ரயிலில் வரும் போது என்னுடன் ஒரு ராணுவ வீரர் பயணித்தார். அவர் சியாச்சின் போய்வந்தவர். பிறகென்ன அவரின் அனுபவம் பகல் இரவு என்று பாராமல் 30 மணி நேரமும் கேட்டலிலே போனது.
  வீரமரணம் அடைந்த தியாக வீரர்களுக்கு நமது வீர வணக்கங்கள்!
  த ம வை காணவில்லை நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே விரிவான விளக்கவுரை தந்தமைக்கு நன்றி

   நீக்கு
 17. தங்களின் கருத்தில் எனக்கும் உடன்பாடுண்டு... வருங்கால சந்ததியினரிடம் பணம், லக்சரி லைஃப் பற்றிய சிந்தனையுடன், மனித நேயம், நாட்டுப்பற்று, நாட்டுக்காக உழைக்கும் வீரர்கள் மீதான அக்கறை, இவை விலகிச் செல்வதாகவே உணர்கிறேன்...
  பக்கத்து வீட்டுக்காரரும் மிலிட்டரியில் பணிபுரிவர்... விடுமுறைக்கு வரும்போது பல விடயங்கள் சொல்வார்... ஆச்சரியமாகவும் வியப்பாகவும் இருக்கும்... அப்போது நினைப்பேன்... நாம் ஏன் நாட்டிற்காக உழைக்க மறந்தோமென்று...  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே என்றுமே ஒவ்வொரு நாட்டின் ஒரிஜினல் ஹீரோ இராணுவ வீரர்கள்தான் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 18. சியாச்சின் மிக மிகப் பனி அடர்ந்த வாழ்வதற்கே உயிர் நடுங்கும் போர்க்களம் பனிக்களம். மிகவும் கடுமையானப் பனிப்ரதேசம் அங்கு நம் வீரர்கள் சென்று உயிருடன் மீள்வதே பெரிய விஷயம்தான். அங்கு நம் வீரர்கள் பலர் தற்போது மடிந்துள்ளனர் அதில் ஹனுமந்தப்பாவும் ஒருவர். மரணப்பிடியிலிருந்து தப்பிப்பது போல் தப்பித்து இறந்துவிட்டார். அவருக்கு மட்டுமில்லாமல் அனைத்து வீரர்களுக்கும் நம் சிரம் தாழ்ந்த வீர வணக்கங்கள்! அஞ்சலிகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களின் கருத்துப் பகிர்வுக்கு நன்றி

   நீக்கு
 19. தம +

  உண்மையில் அவசியமானா பதிவு தோழர்
  இப்படித் தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 20. இந்திய அணி என்பது இந்தியாவிற்காக விளையாடும் தனியார் நிறுவனம் அவ்வளவே! அனைவருக்கும் கட்டாய தேசிய சேவை கொண்டு வந்தால் தான் சிரமங்கள், துன்பங்களை யாவரும் உணர்வர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அருமையாக சொன்னீர்கள் தங்களின் வருகைக்கும் அற்புதமான கருத்துரைக்கும் நன்றி

   நீக்கு
 21. அவசியமான பகிர்வு அண்ணா...
  கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் மரியாதையை நாம் நம்மைக் காக்கும் வீரர்களுக்கு தருவதில்லை என்பது வெட்கக்கேடுதான்...

  பதிலளிநீக்கு
 22. உங்கள் பதிவு நியமானதே!

  பதிலளிநீக்கு
 23. வணக்கம்
  ஜி
  காலம் உணர்ந்து பதிவிட்டமைக்கு நன்றி ஜி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...